Wednesday, November 21, 2007
எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்
வீடில்லை என்றேன்........
விரிந்து கிடக்குது உலகம் என்றாய்!
உடுத்த உடையில்லைஎன்றேன்.....
உடுத்தியிருப்பது போதாதா என்றாய்!
உண்ண உணவில்லை என்றேன்.....
உணவேதான் வாழ்வா என்றாய்!
காலுக்கு செருப்பு இல்லையென்றேன்....
காலில்லையா என்றாய்!
பொன் நகை ஏதும் இல்லையென்றேன்.....
உன் புன்னகை போதுமே என்றாய்!
வேலை இல்லையென்றேன்.....
வேலை தேடுவதே வேலை என்றாய்!
நல்ல நட்பில்லையென்றேன்....
நானில்லையா உனக்கு? என்றாய்!
கனவுக் காதல் இல்லை என்றேன்....
காதல்தான் வாழ்வா என்றாய்!
வாழ்வே இல்லை என்றேன்....
வாழ்ந்தது போதாதா?என்றாய்!
கவிதையே இல்லை என்றேன்....
கலங்கிப் போய் நின்றாயே!!!!!!!!!!
Posted by aruna at 3:40 AM 0 comment
2 comments:
போகிற போக்கில் இந்தப் பக்கம் வந்தேன் குழந்தே...
கலங்கிப் போனேன்.
அதென்னது எப்போப் பார்த்தாலும், என் வாழ்க்கையை நினைவு படுத்தற மாதிரியே எழுதறே?
எனக்கு மட்டும்தான் இப்படியா.. இல்லை எல்லாருக்கும் இதேபோல தோன்றுகிறதா?
எழுத்தா... இல்லை பலவர்ணம் காட்டும் Kelaidoscope...ஆ.
இந்த வேகம் இப்படியே தொடர வேண்டும்...
எதனாலும் உன் எழுத்து தடைபடக் கூடாது.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
SAM தாத்தா
//எழுத்தா... இல்லை பலவர்ணம் காட்டும் Kelaidoscope...ஆ//
நன்றி,
நன்றி,
அப்பிடியா? உங்கள் வாழ்க்கையை நினைவு படுத்துகிறதா?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அருணா
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா