நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, January 31, 2010

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 1

இந்தத் தொடர் யூத்ஃபுல் விகடனில்..................


Friday, January 22, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்!!----1

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாமோ புகுந்து வெளி வருகிறது.அன்று எனக்கும் புதுமாதிரியாகப் புகுந்து வெளிவந்தது.

ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்தேன்.பச்சை விளக்குக்காக நின்றிருந்தேன்.....விர்ரென்று வேகமாக வந்து சடக்கென்று ப்ரேக் அடித்து கோட்டைத் தாண்டி நிறுத்தியது ஒரு இன்னோவா....." கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாத ஜென்மங்கள்.....ஏன்தான் இப்படி எல்லாவற்றிலும் அவசரமோ?" என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தேன்.ஜன்னலுக்கு வெளியே எட்டிப்ப்பார்த்த ஒரு இளைஞன் "ஷிட்"என்றவாறே பொறுமையிழந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

எங்கிருந்தோ ஓடி வந்தது அந்தக் குட்டிப் பொண்ணு......உடம்புக்குப் பொருந்தாத ஒரு ஸ்வெட்டர்.ஒரு அழுக்குக் குல்லா......பெரிய வால் போன்ற ஒரு குடுமியுடைய குல்லா அணிந்திருந்தது.ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் வேறு.முகம் முழுவதும் கருப்பாக அழுக்குத் திட்டு.....
ஒரு பெரிய இரும்பு வளையத்தை முன்னால் போட்டு தன் உடம்பை அதனுள் விட்டு எடுத்து,ஒரு கையை உள் நுழைத்து மீண்டும் உடம்பை வெளியில் எடுத்துன்னு விதவிதமான விததை காட்டி விட்டு உடனே காசுக்காக கையேந்தியது........

அந்த இன்னோவா இளைஞன் அழகாக பல்வரிசையைக் காட்டி அந்தக் குட்டிப் பொண்ணைப் பார்த்து ரொம்ப ஸ்நேஹத்துடன் சிரித்தான்.ஏதோ பணம் கொடுக்கப் போகிறான் என நினைத்தேன்.ஊஹும் கொடுக்கவில்லை.

நான் காசு கொடுக்கவா வேண்டாமா......ஸ்கூட்டியை ஆஃப் செய்து பர்ஸைத் திறந்து எடுப்பதற்குள் பச்சை விழுந்து விடுமோ...என்று நினைப்பதற்குள் பச்சை விழுந்தே விட்டது..............

நான் ரோட்டைக் கடந்து பழங்கள் வாங்க ஸ்கூட்டியை நிறுத்தினேன்
இன்னோவா அதே வேகமான குலுக்கலுடன் நின்றது.....அவசரமாக ஆப்பிள் ஒருகிலோவை வாங்கி விறு விறுவென ரோட்டுக்கு மறுபக்கம் கடந்து அந்தக் குட்டிப் பொண்ணு கையில் கொடுத்து விட்டு தலையை லேசாகத் தட்டிவிட்டு மீண்டும் பளிச் சிரிப்புடன் நடந்தான்..........

அடடா....நிமிடத்தில் கடவுளாகும் வித்தை எனக்கு வரவில்லையே????

Wednesday, January 13, 2010

நம்பிக்கையளிக்கிறது சிற்சில நிகழ்வுகள்......

கொஞ்சம் ஆயாசமாக இருந்தது...எழுதுவதற்கு எதுவும் இல்லாதது போல ஒரு வெறுமை.அல்லது எழுதப் பிடிக்காமல்போனது.............

காரணங்கள்........"பிரபலம் ஆகவேண்டும் என்றும், வித்தியாசமாக எழுதுகிறேன் என்றும்,அடுத்தவரை நோகடிக்கும் எழுத்துக்கள், திருட்டு போகும் எழுத்துக்கள்,திணிக்கப் படும் கருத்துக்கள், சபை நாகரீகம் மீறி எழுதுவது, பொதுவில் படிக்க முடியாதவை என இவற்றுள் எதுவாகவும், இவை எல்லாமாகவுமாகவும் கூட இருக்கலாம். இவை எழுத்து மீது ஒரு எல்லையில்லா வெறுப்பை ஏற்படுத்தி விட்டது போல......


கொஞ்ச நாள் எழுதாமலிருக்கலாம்.........நான் என்ன செய்கிறேன் என்பதை விட....
நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதே என்னை நிறைக்கும் அதிர்வுகளாகிப் போனதில் மெல்லிய அதிர்ச்சிதான். அதுவே நானென்ற அகங்காரத்தின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் அல்லது அதுவே சாதாரண சம்பிரதாயங்களின் ....ஆரம்பமாக இருந்திருக்கலாம்

மனதிற்குள்ளேயான எனக்கும் எழுத்துக்கும் இடையே நடந்த விரிசல்களில் யார் ஜெயிக்கப் போவது?
அல்லது இந்தப் பிணக்கு தொடருமா தெரியாது.......எவ்வளவு நாள்......????அதுவும் தெரியாது.

புத்தகக் கண்காட்சி பற்றிப் படித்துப் படித்து போக முடியாத வெறுப்பினாலோ என்னவோ கோபமாக வருகிறது.இங்கே போக முடிந்த புத்தக நிலையத்தில் பார்த்த ஆங்கில,ஹிந்தி புத்தகங்களின் மீது எரிச்சலாக வந்தது.


எதற்கும் இருக்கட்டும் படிக்கலாம் என்று எடுத்து வைத்த புத்தகம் திறக்கப்படாமல் கிடந்தது...........
தேநீர் தொடப்படாமல் ஆறிக் கொண்டிருந்தது......மனதும்தான்.

தாங்க முடியாத குளிரின் அதிகாலை கண்ட வெயில் போல் நம்பிக்கையளிக்கிறது சிற்சில நிகழ்வுகள்.............இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!