நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, February 27, 2009

பத்து பேர்தான் தமிழ்மண விருதுக்கு அனுப்பியிருப்பாங்கப்பா!!!!!


தமிழ்மண விருதுகள் பதிவுக்கு அனுப்பி விட்டு மறந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்விட்டேன்.......நமக்குத் தெரியாதா நம்ம திறமையைப் பற்றின்னு....அட இன்னிக்கு ஸ்கூலில் இருந்து வந்தவுடன் பார்த்தா நம்ம அமிர்தவர்ஷிணி அம்மாகிட்டே இருந்து ஒரு பின்னூட்டம்....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்னு....அட.....நமக்கு விருதா? அதுவும் தமிழ்மணத்திலான்னு...சந்தோஷ உற்சாகத்தோடு தேடோ தேடுன்னு தேடினால் ....ஒண்ணையும் காணோம்......அட அப்புறம் பார்த்தாம் நம்ம ஓவியப் பதிவுக்குப் பத்தாவது இடம் கிடைச்சுருக்கு......உடனே நம்ம தோழர் சமுதாயத்துக்குத் தொலைபேசித் தெரிவித்தால்.....மொத்தம் பத்து பேர்தான் அனுப்பியிருப்பாங்கன்னு நிதானமா சொல்றாங்கப்பா...என்னவோ....பத்தாவதிலாவது வந்திருக்கேன்னு நானே எப்பவும் சொல்றாப்புலே வெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்....ம்ம்ம்ம்.......வேறென்ன பண்ணச் சொல்றீங்க??
அந்த ஓவியம் இங்கே........

Saturday, February 14, 2009

காதலினால் தோற்கப் போகும் காதல்...........


அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................