நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, July 28, 2009

களவு போகத்தான் செய்கிறது மனம்!!!

இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில்......நன்றி விகடன்!!!!

கையருகே நட்சத்திரம் என்றும்
குடத்தில் கடல் என்றும்
குவளையில் நதியென்றும்
கைப்பிடிக்குள் வானம் என்றும்
வளையலில் வானவில் என்றும்
தூக்கக் கலக்கக் கனவுகள் விடாமல்
நிஜங்களைத் துரத்தத்தான் செய்கின்றன.....

நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............

இருந்தாலும்

குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!
என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!

Friday, July 17, 2009

எங்க ஊரு பசங்க!!

              ஒரு நாள் பசங்க பரீட்சை எழுதும்போது மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த போது கன்னத்தில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டிருந்தேன்.
                  
                 ஒரு பையன் எழுந்து நின்றான்..ஏதோ சந்தேகம்தான் கேட்கப் போகிறான் என நினைத்து விரைந்து அவனருகில் சென்றேன்..


"மேடம்...நீங்க விடை சொல்லி உதவுறீங்கன்னு தெரியுது....ஆனால் எந்தக் கேள்விக்கு விடைக் குறிப்பு தர்றீங்கன்னுதான் தெரியல""ன்னான்


நான் புரியாமல் "What do you say?"அப்படீன்னேன்.....


"இல்லே மேடம்......விடைகளைத் தேர்ந்தெடு,பொருத்துக...இதுக்கெல்லாம் கன்னத்தில் ஒரு விரல் வைத்தால் பதில் A, இரு விரல் வைத்தால் பதில் B.....அப்படீன்னு விடைக் குறிப்பு வச்சிருக்கோம் மேடம்...........நீங்க  கன்னத்தில் ஒரு விரல் வைத்திருந்ததால் கேட்டேன் என்றான் ரொம்ப சின்சியராக!!!!...............
நான் ஙே!!!!!!!!!!

Monday, July 13, 2009

இன்னும் எதையெல்லாம் பத்திரப் படுத்த?

அந்தக் கிணறு......
என்றேனும் நிரம்பி வழிந்திருக்கலாம்...
அந்த வற்றிய நதி
என்றேனும் சல சலத்து ஓடியிருக்கும்

அந்த ஆற்றுப் படுகையில்
என்றேனும் ஊத்துத் தோண்டித்
தண்ணீர் ஊறியிருக்கலாம்

ப்ளாஸ்டிக்  பாட்டில்
தண்ணீருக்குக் காசு கொடுத்துவிட்டு
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து
பெய்ய ஆரம்பித்த மழையின்

முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!

Tuesday, July 7, 2009

போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!

 
வணக்கம் அருணா,
      தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்,  இது குறித்த விவரங்கள் இங்கே http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php

ரூ 250 மதிப்புள்ள புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது மற்றும் அவைகளை தங்களுக்கு அனுப்புவது குறித்து அடுத்த சில நாட்களில் மின் மடலிடுகிறோம்.
தமிழ்வெளி விரைகணை போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றதற்கு நன்றி...
இப்படிக்க
நிர்வாகி
தமிழ்வெளி.காம்
www.tamilveli.com

  போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!  தமிழ்வெளிக்கு நன்றி!!!! நன்றி!!!! நன்றி!!!!

Thursday, July 2, 2009

சாரு நீயா இப்படி?????

வாசிக்க ஆரம்பித்த நாளில் இருந்து நானும் எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு உணர்வு என்னைப் போட்டு உலுக்கவெல்லாம் இல்லை....எழுத்து ஒரு போதை அப்படீன்னுல்லாம் சொல்லப் போவதில்லை...சும்மா கிடைத்த நேரத்தில் சீரியல் பார்த்து நேரத்தை வீணாகுவதில்லை, அந்த நேரத்தில் வலைப்பூ எழுதுகிறேன் என்பதில் எனக்குப் பெருமையே!

வலைப்பூ இல்லாத காலத்திலும் மக்கள் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள்..கவிதை எழுதாத இளைஞர்கள் உண்டா என்ன?....முன்பு காகிதத்தில் எழுதினார்கள்...இப்போ கணினியில் எழுதுகிறார்கள்...முன்பு எழுதினவங்க மட்டுமே படித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்..இப்போ பிடித்தவர்கள் எல்லாரும் படிக்கிறார்கள்.நாம எழுதினது பத்திரிகைகளில் வெளிவராதா என ஏங்கிக் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில்...இப்போ நாமே வெளியிட்டுக் கொள்ளாலாம்...
சும்மா இருக்கும் நேரத்தில் ....எழுதுவதில் ஒன்றும் தவறில்லை.......வேலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டு எழுதுவது சரியில்லைதான்...வலைப்பூ தவிர எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் நேரத்தைத் தொலைப்பதுவும் தவறுதான்!
எதுவுமே எழுதாமலிருப்பது,இப்போதெல்லாம் என்னை நானே தொலைத்து விடுவதைப் போலத் தோன்றுகிறது.......... சும்மா காமெடியா எழுதிகிட்டிருக்கும் போது திடீர்னு இப்படி எழுதத் தோன்றியது.............
சாரிங்க....அருணா நீயா இப்பிடி? அப்பிடி எழுதுவதற்குப் பதிலாக சாரு நீயா இப்படி? அப்படின்னு எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க.......