நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, September 27, 2009

எப்பவோ மாட்டிக்கினேன்!!!!

எப்பவோ மாட்டிக்கினேன்.. இபபோதான் முடிஞ்சுது! மாட்டிவிட்டவர் இயற்கை.....

1. A – Avatar (Blogger) Name / Original Name : Anbudan Aruna/Aruna Devi
2. B – Best friend? : Susan Anto
3. C – Cake or Pie? pastries
4. D – Drink of choice? Rose milk
5. E – Essential item you use every day? Tooth Brush
6. F – Favorite color? Blue
7. G – Gummy Bears Or Worm? : Dairy Milk
8. H – Hometown? Tuticorin
9. I – Indulgence? ‍ Education
10. J – January or February? - September
11. K – Kids & their names? Janani...Vaishnavi
12. L – Life is incomplete without? friends
13. M – Marriage date? - 19-th August
14. N – Number of siblings? Solve this Equation....2s+2b+2s=X
15. O – Oranges or Apples? grapes
16. P – Phobias/Fears? Heights
17. Q – Quote for today? My alltime quote!
No one plans to fail :but fails to plan!
18. R – Reason to smile? So many!!!!!
19. S – Season? Drizzling rainy season
20. T – Tag 4 People?- Any four who are interested to carry on!!!
21. U – Unknown fact about me? Yet to find out! அதைக் கண்டுபிடிப்பதுதானே சுவாரசியம்..
22. V – Vegetable you don't like? Beetroot
23. W – Worst habit? Screaming when annoyed
24. X – X-rays you've had? Any insurance plans?????
25. Y – Your favorite food? Anything not cooked by me!
26. Z – Zodiac sign? Virgo

1. அன்புக்குரியவர்கள் : என் ஆசைக்குரியவர்கள்
2. ஆசைக்குரியவர் : என் அன்புக்குரியவர்கள்
3. இலவசமாய் கிடைப்பது : அன்பு
4. ஈதலில் சிறந்தது : கல்வி
5. உலகத்தில் பயப்படுவது : நம்பிக்கைத் துரோகம்
6. ஊமை கண்ட கனவு : டாக்டராக......பாடகியாக வேண்டுமென
7. எப்போதும் உடனிருப்பது : பேனா
8. ஏன் இந்த பதிவு ? இயற்கை கோபித்துக் கொள்ளக்கூடாதுன்னுதான்
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கல்வி
10.ஒரு ரகசியம் : .................
11.ஓசையில் பிடித்தது : குருவியின் கீச்கீச்
12.ஔவை மொழி ஒன்று : தமிழ்!!!???(ஔவைக்கு எத்தனை மொழி தெரியும்??)ஹி..ஹி.....
13.(அ)ஃறிணையில் பிடித்தது: கம்ப்யூட்டர்.
கொஞ்சம் லேட்டானதால இநத வீட்டுப் பாடம் இன்னும் செய்யாத
யாராவது நாலு பேர் தொடரலாமே!!!!

Friday, September 25, 2009

நானென்ன அறிவுரை சொல்வது???


கண்ணாடித்தொட்டி மீனுக்கு
கடல் கனவாகவே வருகிறது

காலைக் கட்டிப் போட்டு மாலையாயிருக்கும்
மலருக்குச் செடிக் கனவுகள்

கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்

உதிர்ந்த சிறகிற்குக் கூட
பறவைக் கனவுகள்தான்

என் தோட்டத்தைத் தாண்டிப் போகப்
பிடிவாதம் பிடிக்கும் ஒற்றைக்
கிளைப்பூவுக்கு நானென்ன
அறிவுரை சொல்வது???

இருக்குமிடம் எதுவும்
நிரந்தரமில்லை தானே???????

Sunday, September 20, 2009

பாம்புகளும்....ஏணிகளும்....


பரமபதம் விளையாடும் போது பாம்புக் கடிக்குப் பயந்து நடுங்குவதும் ஏணி ஏற்றத்துக்கு குஷியாகுவதும் அந்த விளையாட்டு ஒருவிதமான போதை தருவதும் உண்டு.

அது விளையாட்டு என்பதைக் கூட மறந்து கண்ணீர் மல்க அழுது புரண்டு...ஒரு தாயம் போட்டால் பாம்பு...இரண்டு போட்டால் சொர்க்கம்......என்ற நிலையில் கடவுளே ரெண்டு ரெண்டு....ரெண்டு ரெண்டு........கடவுளே...தாயம் வேண்டாம்.....தாயம் வேண்டாம்.....என்று இப்பிடிச் சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கடவுளை அவர் வேலையை விட்டுவிட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க அழைத்துத் துன்புறுத்தியதுண்டு....தாயம் விழுந்து பாம்பு கடித்துவிட்டால் அதிர்ஷ்டக் கட்டை எனறும் ரெண்டுவிழுந்து சொர்ககம் அடைந்தால் அதிர்ஷ்டக்காரி என்றும் மயங்கியதுண்டு...............

இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் அது வாழ்க்கை விளையாட்டுன்னு புரிய ஆரம்பிச்சிருக்கு...பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்....எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான்
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......

பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்....
வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....

Sunday, September 13, 2009

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது ஞானசேகரன்.....

காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................புத்தக இடுக்கில் மயிலிறகு.
புரட்டும் போதெல்லாம் இனிமை.................
வாழ்வு இனிமையாக இருக்கவேண்டாமா?
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு................மயில் தோகையில் மயிலிறகு.
பார்க்கும் போதெல்லாம் அருமை.......................

உதிர்ந்துவிட்டால்?????
பணம் அவசியமா?
பணம்..........காதுக் குடைச்சலில் காதுக்குள் மயிலிறகு.
தேவைப் படும் போது ஆஹா!!!!
ஆஹா!!!!
கடவுள் உண்டா?
கடவுள்............மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........

பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................

அழகு,காதல்,பணம், கடவுள்?

இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
எல்லோரும் ஒழுங்கா வீடடுப் பாடம் எழுதி முடிங்கப்பா!

Tuesday, September 8, 2009

நாம்தான் எவ்வளவு சுயநலவாதிகள்????


அந்தப் பறவையின் பெயர் தெரியவில்லை.....ரொம்பச் சின்னூண்டாய் இறக்கைகளை நிமிடம் விடாமல் பட படவென்று அடித்துக் கொள்வதாய் இருந்தது...இரண்டு மூன்று நாட்களாய்த்தான் எனக்குப் பழக்கம்..என் பயணத்தில் என் கூடவே நெடுந்தூரம் வந்து என்னை வழியனுப்புவது போல வந்து திரும்பும்....இலக்கில்லாமல் தானே பறவைகள் பறக்கும்?...இது ஏன் என் கூடவே வருகிறது...........????????

ஒரே பறவைதானா? நேற்றும் அதற்கு முன்தினமும் கூட இந்தப் பறவையேதான் வந்ததா?நான் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ...குட்டிப் பறவையே...நீயும் என்னைப் பற்றி யோசிக்கிறாயா???

நாம்தான் எவ்வளவு சுயநல வாதிகள்?ஒரு பறவையிடம் கூட எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்க் முடிவதில்லை.இந்தக் கொடுக்கல் வாங்கல் இல்லையென்றால் உலகமே நின்று விடுமோ?

அந்தப் பறவையும் கூட என்னிடம் எதையோ எதிர்பார்த்துத்தான் வருகிறதோ?....ம்ம்ம் சே! இந்த மனித புத்தி...! அந்தப் பறவை மெல்ல என்னருகில் வந்து திடுக்கென சிறகுகளை ஒரு உதறு உதறிச் சென்றதில் சில இறகுகளை என்னருகில் உதிர்த்துவிட்டு எதுவும் எதிர்பார்க்காமல் பறந்து சென்றது.....

சுருக்கிவைத்த உலகத்தை நானும் ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன்...........

Friday, September 4, 2009

சில பள்ளிகளும்.. சில ஆசிரியர்களும்.. சில பெற்றோர்களும்....சில குழந்தைகளும்...

இதில் சொல்லியிருக்கும் அனைத்தும் ஒரு சில பள்ளிகளையும்,ஒரு சில ஆசிரியர்களையும் சில பெற்றோர்களையும் சில குழந்தைளைப் பற்றி மட்டுமே....

ஆசிரியப் பணி முன்பு போல வெறும் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை...அவர்களின் ஒரு நாளைய வேலைப்பளுவின் அளவைப் பார்த்தால் மலைத்து விடுவீர்கள்...எட்டு வகுப்புகளில் ஏழு வகுப்புகள் பாடம் நடத்த வேண்டும்..ஏழு வகுப்புகளும் நின்று கொணடேதான் பாடம் நடத்தவேண்டும்.....ஏழு வகுப்பின் நோட்டுப் புத்தகங்களைத் திருத்த வேண்டும். பரீட்சைக்க்குக் கேள்வித்தாள்கள் தயார் செய்யவேண்டும்...திருத்தவேண்டும்...தினமும் வித விதமாக காலை அசெம்பிளிக்குப் பிள்ளைகளைத் தயார் படுத்தவேண்டும்.....ஆண்டுவிழாவிற்குத் தயார்ப் படுத்தவேண்டும்..இடையிடையே விதவிதமாக அவ்வப்போது நடத்தப்படும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளுக்குத் தயார்ப் படுத்தவேண்டும்....இதற்கிடையில் குற்றம் சொல்வதற்கென்றே உள்ள பெற்றோரையும் சமாளிக்க வேண்டும்.....இன்னும் எததனையோ வேண்டும்கள்....

பள்ளிகளில்.........

மேற்கூறிய அனைத்தையும் செய்தாலும் மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பதும், 10,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை இரவு பகல் பாராமல் பள்ளிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தச் சொலவது,ஆசிரியர்களின் வார்த்தைகளை விடப் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது,குழந்தைகளின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்,பெற்றோரைத் திருப்திப்படுத்த பெற்றோரின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்......சிலபஸ் என்ற வட்டத்துககுள்ளேயே சுற்றச் சொல்வதும், இன்னும்
மெமோ ,ரெமைண்டர்,வார்னிங்க் இப்படி எத்தனையோ காகிதக் கட்டுப்பாடுகளில் ஆசிரியர்களைச் சிக்க வைத்திருப்பதும்.............

பெற்றோர்களில்.........

பணம் கட்டுவதாலேயே அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவது...ஒரு நோட்புக்கில் ஒரு இடத்தில் ஒரு எழுத்துப் பிழைக்குக் கூட காரை எடுத்துக் கொண்டு புகார் சொல்ல பள்ளிக்கு வருவது...குழந்தைகளை கண்டிப்பதற்குத் தடை.குழந்தைகளை அடிக்கக் கூடாது.குழந்தைகளிடம் கோபப் படக்கூடாது.தவறைச் சுட்டிக் காட்டக் கூடாது...............இப்படி நெறிமுறைப் படுத்தும் அத்தனை வழிகளையும் அடைத்து விட்டு இப்போ குழந்தைகளிடம் ஒழுங்குமுறைகள் பறிபோய் விட்டதாக அலறுவதில் என்ன லாபம்? இதையெலலாம் செய்யாதீர்கள் என்று இப்படியெல்லாம் கோபப் படும் பெற்றோர்கள்தான் எப்போதும் 90 மார்க் வாங்கும் குழந்தை ஒருமுறை 70 மார்க் வாங்கினால் தூக்கிப் போட்டு உதைக்கிறார்கள். நம் குழந்தையிடம் கூட 24 மணி நேரமும் அன்புடனேயே இருப்பதில்லை...அக்கறையிருப்பதனால்தான் அவ்வப்போது கண்டிப்பதோடு அடித்தும் திருத்துகிறோம்....அதே அக்கறையில்தான் ஆசிரியர்களும் கோபிப்பதோ கண்டிப்பதோ அடிப்பதோ....நான் இரக்கமில்லாமல் அடித்து விளாசும் ஆசிரியர்களைப் பற்றிப் பேசவில்லை

ஆசிரியர்களில்...........

ஒரு சில ஆசிரியர்கள் பாடங்களைக் குழப்புதிலேயே குறியாயிருக்கிறார்கள்...காரணம் அப்போதுதானே டியூஷனுக்கு வருவார்கள் என்ற நல்லெண்ணாத்தோடதான்......வகுப்றையில் எப்போதும் டியூனுக்கு ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பது.....அது போக டியூஷனுக்கு வராத குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது....சந்தேகம் கேட்டால் சொல்லித் தராமல் இருப்பது இவையெல்லாம் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது...கோபத்தில் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைப்பது....குழந்தைகளை அவர்களின் பலவீனத்தை வகுப்பறையில் கிண்டல் கேலி செய்வது....

குழந்தைகளில்.....

வகுப்பறைக்குள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது......எடுத்தெறிந்து பேசுவது....கொஞ்சம் கடிந்து கொண்டால் கூட ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டுட வேண்டியதுதான்னு சொல்கிற ஜம்பமும், நாளைககு நீ பள்ளியிலேயே இருக்கமாட்டே அப்படீன்னு மிரட்டலும், யாராவது ஆசிரியர் வராவிட்டால் எங்கப்பா போட்ட போடுலே "தூக்கிட்டாங்க அவரை"ன்னு காலரை உயர்த்திக் கொள்வதும்......


இதற்கெல்லாம் தீர்வு சொல்வதல்ல இந்தப் பதிவு....எங்கே தவறுன்னு அலசுவதற்கு ஒரு வாய்ப்பாக வரும் ஆசிரியர் தினத்தை உபயோகித்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை....

Tuesday, September 1, 2009

அதுக்குப் பதிலா....இது....(எங்க ஊரு பசங்க-2)

அரசாங்கம் என்னென்ன இன்னும் பண்ணலாம்னு நம்ம பசங்களைக் கேடட போது...............நம்ம பசங்க கொட்டிய முததுக்கள்!!!!!

சிகரெட் பிடிக்காதேன்னு சொல்றதை விட்டு.......சிகரெட்டைத் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.......

பாலித்தீன் பைகள் உபயோகிக்காதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு பாலித்தீன் பைகள் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றதை விட்டுவிட்டுக் குடியை ஒழிக்கலாம்......

"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............

பான்பராக் சாப்பிடாதேன்னு சொல்றதை விட்டுவிட்டு பான்பராக் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

நோ பார்க்கிங்னு போர்ட் வைக்கிறதுக்குப் பதிலா பார்க் பண்ண இடம் தரலாம்......

முத்துக்கள் இன்னும் கொட்டலாம்............