நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, September 4, 2009

சில பள்ளிகளும்.. சில ஆசிரியர்களும்.. சில பெற்றோர்களும்....சில குழந்தைகளும்...

இதில் சொல்லியிருக்கும் அனைத்தும் ஒரு சில பள்ளிகளையும்,ஒரு சில ஆசிரியர்களையும் சில பெற்றோர்களையும் சில குழந்தைளைப் பற்றி மட்டுமே....

ஆசிரியப் பணி முன்பு போல வெறும் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை...அவர்களின் ஒரு நாளைய வேலைப்பளுவின் அளவைப் பார்த்தால் மலைத்து விடுவீர்கள்...எட்டு வகுப்புகளில் ஏழு வகுப்புகள் பாடம் நடத்த வேண்டும்..ஏழு வகுப்புகளும் நின்று கொணடேதான் பாடம் நடத்தவேண்டும்.....ஏழு வகுப்பின் நோட்டுப் புத்தகங்களைத் திருத்த வேண்டும். பரீட்சைக்க்குக் கேள்வித்தாள்கள் தயார் செய்யவேண்டும்...திருத்தவேண்டும்...தினமும் வித விதமாக காலை அசெம்பிளிக்குப் பிள்ளைகளைத் தயார் படுத்தவேண்டும்.....ஆண்டுவிழாவிற்குத் தயார்ப் படுத்தவேண்டும்..இடையிடையே விதவிதமாக அவ்வப்போது நடத்தப்படும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளுக்குத் தயார்ப் படுத்தவேண்டும்....இதற்கிடையில் குற்றம் சொல்வதற்கென்றே உள்ள பெற்றோரையும் சமாளிக்க வேண்டும்.....இன்னும் எததனையோ வேண்டும்கள்....

பள்ளிகளில்.........

மேற்கூறிய அனைத்தையும் செய்தாலும் மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பதும், 10,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை இரவு பகல் பாராமல் பள்ளிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தச் சொலவது,ஆசிரியர்களின் வார்த்தைகளை விடப் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது,குழந்தைகளின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்,பெற்றோரைத் திருப்திப்படுத்த பெற்றோரின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்......சிலபஸ் என்ற வட்டத்துககுள்ளேயே சுற்றச் சொல்வதும், இன்னும்
மெமோ ,ரெமைண்டர்,வார்னிங்க் இப்படி எத்தனையோ காகிதக் கட்டுப்பாடுகளில் ஆசிரியர்களைச் சிக்க வைத்திருப்பதும்.............

பெற்றோர்களில்.........

பணம் கட்டுவதாலேயே அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவது...ஒரு நோட்புக்கில் ஒரு இடத்தில் ஒரு எழுத்துப் பிழைக்குக் கூட காரை எடுத்துக் கொண்டு புகார் சொல்ல பள்ளிக்கு வருவது...குழந்தைகளை கண்டிப்பதற்குத் தடை.குழந்தைகளை அடிக்கக் கூடாது.குழந்தைகளிடம் கோபப் படக்கூடாது.தவறைச் சுட்டிக் காட்டக் கூடாது...............இப்படி நெறிமுறைப் படுத்தும் அத்தனை வழிகளையும் அடைத்து விட்டு இப்போ குழந்தைகளிடம் ஒழுங்குமுறைகள் பறிபோய் விட்டதாக அலறுவதில் என்ன லாபம்? இதையெலலாம் செய்யாதீர்கள் என்று இப்படியெல்லாம் கோபப் படும் பெற்றோர்கள்தான் எப்போதும் 90 மார்க் வாங்கும் குழந்தை ஒருமுறை 70 மார்க் வாங்கினால் தூக்கிப் போட்டு உதைக்கிறார்கள். நம் குழந்தையிடம் கூட 24 மணி நேரமும் அன்புடனேயே இருப்பதில்லை...அக்கறையிருப்பதனால்தான் அவ்வப்போது கண்டிப்பதோடு அடித்தும் திருத்துகிறோம்....அதே அக்கறையில்தான் ஆசிரியர்களும் கோபிப்பதோ கண்டிப்பதோ அடிப்பதோ....நான் இரக்கமில்லாமல் அடித்து விளாசும் ஆசிரியர்களைப் பற்றிப் பேசவில்லை

ஆசிரியர்களில்...........

ஒரு சில ஆசிரியர்கள் பாடங்களைக் குழப்புதிலேயே குறியாயிருக்கிறார்கள்...காரணம் அப்போதுதானே டியூஷனுக்கு வருவார்கள் என்ற நல்லெண்ணாத்தோடதான்......வகுப்றையில் எப்போதும் டியூனுக்கு ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பது.....அது போக டியூஷனுக்கு வராத குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது....சந்தேகம் கேட்டால் சொல்லித் தராமல் இருப்பது இவையெல்லாம் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது...கோபத்தில் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைப்பது....குழந்தைகளை அவர்களின் பலவீனத்தை வகுப்பறையில் கிண்டல் கேலி செய்வது....

குழந்தைகளில்.....

வகுப்பறைக்குள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது......எடுத்தெறிந்து பேசுவது....கொஞ்சம் கடிந்து கொண்டால் கூட ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டுட வேண்டியதுதான்னு சொல்கிற ஜம்பமும், நாளைககு நீ பள்ளியிலேயே இருக்கமாட்டே அப்படீன்னு மிரட்டலும், யாராவது ஆசிரியர் வராவிட்டால் எங்கப்பா போட்ட போடுலே "தூக்கிட்டாங்க அவரை"ன்னு காலரை உயர்த்திக் கொள்வதும்......


இதற்கெல்லாம் தீர்வு சொல்வதல்ல இந்தப் பதிவு....எங்கே தவறுன்னு அலசுவதற்கு ஒரு வாய்ப்பாக வரும் ஆசிரியர் தினத்தை உபயோகித்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை....

41 comments:

குடந்தை அன்புமணி said...

நல்ல அலசியிருக்கீங்க தோழி. டியூசன் விவகாரம்... நீங்க சொல்வது உண்மைதான். நானும் அனுபவித்து இருக்கிறேன். தீர்வு யார் கையில்...?

(என் வலையிலும் ‘குருவே சரணம்’ என்று ஆசிரியர்கள் பற்றி இடுகை போட்டிருக்கிறேன்.)

பிரியமுடன்...வசந்த் said...

//.அக்கறையிருப்பதனால்தான் அவ்வப்போது கண்டிப்பதோடு அடித்தும் திருத்துகிறோம்//

சரிதான்...

பிரியமுடன்...வசந்த் said...

பிரின்ஸ்க்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

//ஆசிரியப் பணி முன்பு போல வெறும் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை...அவர்களின் ஒரு நாளைய வேலைப்பளுவின் அளவைப் பார்த்தால் மலைத்து விடுவீர்கள்//
உண்மைதான்... எனது தாயார் சொல்லுகிறார்... இப்போதெல்லாம் சனி ஞாயிறு கூட வீட்டில் இருப்பதில்லை, மீட்டிங்காம்.
பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது ஆட வேண்டுமாம், 50 வயசு பாட்டிகளெல்லாம் கஷ்டப்படுறாங்களாம்.
டாக்குமெண்டெல்லாம் கரெக்டா இருக்கனுமாம், காலைல டைமுக்கு பள்ளியில் இருக்கனுமாம். பறக்கும் படை வருதாம் (தேர்வு எழுதும் பசங்களை விட இவங்கதான் இப்ப பயப்படுறாங்க).

அரசுப்பணி எல்லாம் சுகமான வேலை என்று வெளியிலிருப்பவர்கள் சொல்லலாம், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள கஷ்டங்கள் தெரியும்.
---
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

kamaraj said...

இப்படி இருதய சுத்தியோடு சுய விமர்சனம் செய்கிறவர்களின்
சதமானம் அணைத்து துறையிலும் வளரவேண்டும், அரசியல் உட்பட.
ஆசிரியர்களுக்கு அதில் கூடுதல் பொறுப்பு உண்டு. நிலைமை அப்படி
மாறவேண்டும். ஆனால், நல்லவைகள் specimen களாக மட்டுமே தொடர்கிறது.
அருணா மேடத்தைப்போல.

கதிரவன் said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

சில ஆசிரியர்கள், சில குழந்தைகள், சில பெற்றோர்களிடம் இருக்கும் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியத் தொழிலில் இருக்கும் சவால்களையும் சலிப்புகளையும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆசிரியர் தொழிலில் இருக்கிற ஒருவர் இதை விட நடு நிலையோடு எழுத முடியாது. ரொம்ப சிறப்பாக இருக்கிறது.

எனக்கிருக்கிற ஒரு கருத்தைச் சொல்கிறேன்.

பள்ளிக்கூடங்கள், தெரியாதவர்களுக்கு தெரிய வைக்கிற தொழிலிலிருந்து மாறி, நன்றாகத் தெரிந்தவர்களை ரொம்ப நன்றாகத் தெரிய வைக்கிற எந்ஹெந்ஸ்மென்ட் செண்டர்களாக மாறி வருகின்றனவோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

எல்.கே.ஜி.க்கே என்ட்ரன்ஸ் டெஸ்ட், இடையில் சேர்கிறவர்களுக்கு குறைந்த பட்சம் எண்பது மார்க் இருக்க வேண்டும் என்பது, அப்பா அம்மா பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பது இதெல்லாம் ஆசிரியர்களின் பளுவை வெகுவாகக் குறைக்கிறது என்பதே என் கருத்து.

நிஜமான சவால் கார்பரேஷன்/முனிசிபல்/பஞ்சாயத் பள்ளி ஆசிரியர்களுக்குத்தான்.

என்ன சொல்கிறீர்கள்?

http://kgjawarlal.wordpress.com

அன்புடன் அருணா said...

குடந்தை அன்புமணி said...
/தீர்வு யார் கையில்.../
அதுதானே கேள்வி!!

(என் வலையிலும் ‘குருவே சரணம்’ என்று ஆசிரியர்கள் பற்றி இடுகை போட்டிருக்கிறேன்.)
வர்றேன்...பார்க்கறேன்!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

/அரசுப்பணி எல்லாம் சுகமான வேலை என்று வெளியிலிருப்பவர்கள் சொல்லலாம்/
ஆசிரியர்கள் எல்லோரும் அரசுப் பணியிலிருப்பவர்களல்ல....!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் மிகச்சிறிய சதவீத நிகழ்வுகளாகவே இருக்கக்கூடும்..

ஆ.ஞானசேகரன் said...

//காரணம் அப்போதுதானே டியூஷனுக்கு வருவார்கள் என்ற நல்லெண்ணாத்தோடதான்.....//

ம்ம்ம் நடக்கதான் செய்கின்றது

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கட்டுரை.

வயிற்றுப் பிழைப்புக்காகவா கல்வி! ஏணியாய் என்றும் இருந்திடுவார் ஆசிரியர் என்றே சொல்வார்கள். இன்றெல்லாம் ஏணியை எட்டி உதைத்துவிட்டுத் தாவிச் செல்லும் மனநிலையில்தான் இருக்கிறோம் பலர்.

கல்வித்துறையில் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் போய்விட்டது. இங்கெல்லாம் (லண்டனில்) அதே பள்ளி ஆசிரியர் அவருடைய மாணவர்களுக்கு டியூசன் சொல்லித்தர தடைபோட்டு இருக்கிறார்கள்.

அடித்துச் சொல்லித் தரவேண்டிய அவசியமே இல்லை. நல்லொழுக்கம் கற்றுக்கொள்ளாத மானிடம் இருக்கும் வரை கற்றுக்கொடுப்பது என்பது கவலைக்குரிய விசயமே. அவரவர் பிரச்சினை அவரவருக்கு என்கிற நிலையே பெரிய பிரச்சினைகளுக்குக் காரணம்.

ஆசிரியர் தின வாழ்த்துகள்.

’டொன்’ லீ said...

:-(( ஆசிரியர்கள் பணியே இப்படித்தான். எல்லா பக்கத்தாலும் இடிவாங்கவேண்டி இருக்கும்

Anonymous said...

Pathivuku poonguthu,Aruna!! Thelivaana eluthukkal....

Ungal aasiraiyai sevaiku oru poo koodai!! Vaazhthukkal

gils said...

super points..ethaiyum justify pannama irukara prachanaigala matum teliva solirukeenga..ella pakathu prachanaiyum solirukeenga :) aana ithana prachana sila varushathuku minna irunthucha? pasangala adichi thiruthara porupu irunthapo ozhunga irunthangannu solreengala? ilati..panam neria puzhanga aarambicha parentsoda imsai adigam aadicihi sollavareengala? ilaati..panathaasaila ipolaam teachers paadatha vida panatha kuria irukaangannu solreengala? oh..ithu ellataiyumay solreengalo? :))

gils said...

oru sila serviceslam romba naala monetary benefit ignore aanathala egapatta disparity vanthiruku. ipothaan makkal realise panraanga..teaching profession evlo mukkiamnu..pazha cinemalam kuda parunga..oru karupu coat and vella turban katikitu vayasaana ezhai vaathiyar thaan symbol for teachers..ipo odukapata makkal pongaraangala..athaan paadam businessa maaritu varuthu. koodia sekram virtual classrooms will take over..apo pudusa pala prachanaigal varum..athaiyum post podunga :) alasuvom

அன்புடன் அருணா said...

kamaraj said...
/ஆனால், நல்லவைகள் specimen களாக மட்டுமே தொடர்கிறது./
இதுதான் நிதர்சனமான உண்மை!

அன்புடன் அருணா said...

kgjawarlal said..

/ நிஜமான சவால் கார்பரேஷன்/முனிசிபல்/பஞ்சாயத் பள்ளி ஆசிரியர்களுக்குத்தான்.
என்ன சொல்கிறீர்கள்?/
இப்பிடிப் புரியாதராக இருக்கிறீர்களே என்றிருக்கிறது...

புதுகைத் தென்றல் said...

ஆசிரிய தின வாழ்த்துக்கள் அருணா.

நல்ல அலசல்தான். ஆசிரியரின் இடத்தில் பெற்றோர்களை இரண்டு நாள் வேலை பார்க்கச் சொன்னால் தெரியும் ஆசிரியரின் அவஸ்தை. ஆசிரியர் பெற்றோராக இருப்பதால் அவருக்கு பெற்றோரின் நிலை புரியும்

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா!ஆசிரியர்தின வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் மிகச்சிறிய சதவீத நிகழ்வுகளாகவே இருக்கக்கூடும்../
அதான் சில..சில...சிலன்னு போட்டாச்சே!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
/ ம்ம்ம் நடக்கதான் செய்கின்றது/
புரிதலுக்கு நன்றி ஆ.ஞானசேகரன்....

அன்புடன் அருணா said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

/இங்கெல்லாம் (லண்டனில்) அதே பள்ளி ஆசிரியர் அவருடைய மாணவர்களுக்கு டியூசன் சொல்லித்தர தடைபோட்டு இருக்கிறார்கள். /
இங்கேயும் உண்டு...கேட்டால்தானே!

அன்புடன் அருணா said...

நிஜம்தான் டோன்'லீ!

அன்புடன் அருணா said...

athivas said...
/Pathivuku poonguthu,Aruna/
வாங்கிட்டேன்....
Ungal aasiraiyai sevaiku oru poo koodai!!
வாங்கிட்டேன்....ரொம்ப நன்றி....athivas

Anonymous said...

//இப்பிடிப் புரியாதராக இருக்கிறீர்களே என்றிருக்கிறது...//

புரிய வைக்கிறது ஒரு ஆசிரியரின் கடமைங்க!! அதிருக்கட்டும், இரிடேட் பண்ணிட்டேனோ?

அன்புடன் அருணா said...

/புரிய வைக்கிறது ஒரு ஆசிரியரின் கடமைங்க!!/
உண்மைதான் கண்டிப்பா புரிய வைக்கிறேன்...ஒரு பதிவே போடலாம்...
/அதிருக்கட்டும், இரிடேட் பண்ணிட்டேனோ?/
அடடா...இல்லைப்பா...

நட்புடன் ஜமால் said...

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.

-----------------

எனது அக்கவுண்ட்ஸ் வாத்தியார் முதல் நாள் முதல் பாடம் தொடங்குகையில் சொன்னது

”டியூஷன் யாரும் வைத்து கொள்ளக்கூடாது”

கோபிநாத் said...

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.

இன்று நாங்களும் இப்படி வெளிநாடுகளில் வேலை செய்கிறோம் என்றால் அதற்க்கு முக்கிய காரணங்களில் எங்கள் ஆசியர்களின் எங்களுக்கு நடத்திய முறையும் அவர்கள் சொல்லி கொடுத்த படிப்பும் மிக முக்கிய பங்குவகிக்கிறது.

இன்றைய நாளில் உங்களுக்கும் உங்களை போல இருக்கும் அனைத்து ஆசியர்களும் ஒரு மாணவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

மாதேவி said...

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

Karthik said...

வாழ்த்துக்கள் மேம். :)))

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/”டியூஷன் யாரும் வைத்து கொள்ளக்கூடாது”/
அருமை!!!அருமை!!!

Kirukkan said...

வாழ்த்துக்கள் அருணா.
// தீர்வு யார் கையில்...?\\
ஆசிரியரின் அன்பும் பெற்றோரின் பொறுப்பும்
மாணவரின் மரியாதையுமே மாற்றியமைக்கும்.

-
கிறுக்கன்.

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களை மனமார ஏற்றுக் கொண்டேன் கோபி!

அன்புடன் அருணா said...

நன்றி மாதேவி, கார்த்திக்.

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி கிறுக்கன்.

R.Gopi said...

இந்த முழு கட்டுரைக்குமான என் ஒரு வரி பதில்....

"எழுத்தறிவித்தவன் இறைவனாகும்"

நல்ல ஆசிரியர்களால் நல்ல இளைஞர்களை கண்டறிய முடியும்.

அவ்வாறு கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் ஒரு நல்ல‌ சமுதாயத்தை உருவாக்க முடியும்... ஆகவே தான், மாதா, பிதாவிற்கு பின் "குரு" என்ற ஸ்தானம் வருகிறது... அதுவும், இறைவனுக்கு முன்னால்...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அருணா மேடம்...

பிடியுங்கள் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து....

அன்புடன் அருணா said...

நன்றி கோபி! வாஙகீட்டேன் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து....

அன்புடன் அருணா said...

gils said...
// koodia sekram virtual classrooms will take over..apo pudusa pala prachanaigal varum..athaiyum post podunga :) alasuvom//
கண்டிப்பா அலசுவோம் கில்ஸ்!

Suresh S R said...

சரியாக சொன்னீர்கள் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா