நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, March 29, 2009

ஐயய்யோ...ஐயய்யோ...பிடிச்சுருக்கு!!!!! ரொம்பப் பிடிச்சுருக்கு!!!!


ரொம்ப நாஆஆஆஆஆஆஆஆஅளைக்கு முன்னாலே ராஜேஸ்வரி என்னைக் கவர்ந்தவர்கள் பதிவுலே கோர்த்து விட்டிருந்தாங்க....யாரை விடறது யாரைச் சேர்த்துக்கறதுன்னு ஒரே டென்ஷன் போங்க..வர்றது வரட்டும்னு போட்டாச்சு....சரி இப்போ இவங்களையெல்லாம் பற்றி நான் என்ன சொல்றது? உங்களுக்கே நல்லாத் தெரியுமே!!! அதனாலே இத்தோட விட்டுடறேன்...

இவங்களை எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்....இவங்க எல்லாம் முதல் வரிசையில் பிடிக்கும்....ஆனால் என்னைக் கவர்ந்தவர்கள் வரிசையில் நிறைய பேர் இருக்காங்களே!!!!....ஒரு நூறு பதிவாவது போட வேண்டியதிருக்கும்...நீங்க பாவமில்லையா??? எவ்வ்ளோதான் தாங்குவீங்க???

அதனாலே....இன்னிக்கு இவ்வ்ளோதான்!!!!

Wednesday, March 25, 2009

நாம நினைக்கிற மாதிரி இல்லைங்க கடவுள்.......


அவன் செத்துவிட்டான்...ரெண்டு எமதூதர்கள் வந்தாங்க.....கையோட அவனைக் கூட்டிக் கொண்டு போனாங்க...எப்போதுமே உலகத்தைவிட்டுக் கிளம்புற நேரம் முரண்டு பிடிக்கும் இறந்தவர்களைப் போலல்லாமல் அவன் சிரித்துக் கொண்டெ கிளம்பினான்....

எமதூதர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்ததால் "என்னப்பா உனக்கு வருத்தமா இல்லையான்னு" கேட்டார்கள்....

அதுக்கு அவன் சொன்னான்"இல்லை..."என் உயிரின் மேலான அம்மாவைப் பார்க்கப் போகிறேன் அதனால் சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்றான்

அவனை சொர்க்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்...அங்கே தேடோ தேடென்று தேடினான்.அவன் அம்மாவைக் காணவில்லை.....அவன் கடவுளைக் கூப்பிட்டு "என் அம்மா எங்கே????" எனக் கேட்டான்.

அதற்கு கடவுள் "உங்க அம்மா நரகத்தில் இருக்கிறார்கள்"
என்றார்....................

அவனோ "ப்ளீஸ் என் அம்மா ரொம்ப நல்லவங்க...அவங்களையும் சொர்க்கத்திற்கு அனுப்புங்க..அப்படியில்லைன்னா என்னை நரகத்துக்கு அனுப்பிடுங்க."அப்படின்னு அழுதான்

அதற்குக் கடவுள் உங்க அம்மாவுக்கு சொர்க்கத்திற்கு வரத் தகுதியில்லை.....உனக்கு நரகத்துக்குப் போகிற தகுதியில்லை" அப்படீன்னு சொன்னார்...........

அவன் ரொம்பத் தொல்லை கொடுக்கவும்...கடவுள் சொன்னார்" சரி ஒரு தடவை உங்க அம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்....இந்த நூலேணியைப் போடுகிறேன்....உங்க அம்மா இதைப் பிடித்து மேலேறி சொர்க்கத்துக்கு வந்துவிடுவார்கள் " என்றார்.

கடவுள் நூலேணியை எடுத்து வீசினார்.....

"அட அம்மா"....அவனுக்கு சந்தோஷத்தில் அழுகையாய் வந்தது...
அவன் கத்தினான்.."பார்த்தும்மா....சீக்கிரமா வாம்மா"
அவன் அம்மாவும் சந்தோஷமாக அதைப் பிடித்து ஏறினாள்...அம்மாவுக்கும் சொர்க்கத்துக்கும் இரண்டடி தூரம்தான் இருந்தது........

அம்மா திரும்பிப் பார்த்தாள்....இன்னுமொரு பெண்மணியும் நூலேணியைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள்....அம்மா இங்கிருந்தே கேட்டாள்......."நீங்க ஏன் இதில் ஏறி வர்றீங்க?"

அதுக்கு அவங்க "என் மகனும் அங்கே சொர்க்கத்துலேதான் இருக்கான்.....நானும் அங்கே வந்துடறேன்" என்றார்கள்..

அம்மா மெதுவாகத் திரும்பி "என் மகன் எனக்கு அனுப்பிய ஏணியில் நீங்க எப்பிடி வரலாம்?????" என்றவாறு அந்தப் பெண்மணியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளி விட்டாள்.....

கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....

டிஸ்கி:1.சொந்தமா எழுதினதில்லீங்கோ......
டிஸ்கி:2எப்பவோ சின்ன வயசில எங்கேயோ கேட்ட கதைங்க....

Friday, March 20, 2009

சிகரெட் பிடிக்கலாமா கூடாதா???? சொல்லுங்கடி....


அந்த பஸ் ஸ்டாண்டில் வெட்டியாய் நின்று கொண்டிருந்தேன்....ரெண்டு சின்னப் பொண்ணுங்க வந்துச்சு....அவங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்மார்ட்டான இளைஞன் சிகரெட்டை ஊதிக் கொண்டே பல் வித்தைகள் செய்து கொண்டிருந்தான்...ம்ம்ம் அந்தப் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணத்தான்.....


அதுலெ ஒரு பொண்ணு கொஞ்சம் சத்தமாகவே சொன்னது..."பையனுங்க சிகரெட் பிடிச்சா எனக்கு ரொம்பப் பிடிக்கும்....ரொம்ப மேன்லியா இருக்கும்" அப்படீன்னு ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கிளுக்கென்று சிரித்தது.....

உடனே வாங்கிட்டோம்லே...சிகரெட்....சின்னூண்டுப் பையனா இருந்தப்போ எங்க ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடச் சந்துக்குள்ளே நுழைஞ்சு கொஞ்ச நாள் ட்ரெயினிங் எடுத்துருக்கோமே....ஆனா ரொம்ப நாளாச்சே....அஞ்சாறு விதமா சிகரெட்டைப் பிடிக்க தனியா ஒருநாளுக்குள்ளே செல்ஃப் ட்ரெயினிங் எடுத்தாச்சு.....அப்புறமென்ன இதுக்கெல்லாம் கோச்சிங் க்ளாஸா போகமுடியும்??


கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் மறுநாள் அதே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அந்தப் பொண்ணுங்களுக்காகக் காத்திருந்தேன்....சரி....அதுங்க இல்லைன்னா வேற யாராவது பொண்ணுங்க வராமலா போய்விடுவார்கள்?? என ங்கே என்ற பார்வையுடன்...நின்றிருந்தேன்...


ம்ம்ம் ஜீன்ஸ் குர்த்தா போட்டுக் கொண்டு அழகா ஒண்ணு வந்தது.....நன் சிகரெட்டை ஸ்டைலாக உருவிப் பற்ற வைத்துக் கொண்டேன்....வித விதமாக புகையை வெளியே விட்டேன்....ஊஹும்...அது திரும்பியே பார்க்கவில்லை...அப்போ ஒரு பையன் பைக்கில் வந்தான்....இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசினார்கள்...எனக்கு ஒரு சிகரெட் வேஸ்ட்டாகிறதே என்று கவலையாயிருந்தது.......


அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயில் வைத்தான்....அவள் விருட்டென அதை பிடுங்கி...."சிகரெட் பிடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்வது???" சிகரெட் பிடிக்கிறவங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு ...?" என்று அதைத் தூக்கி எறிந்தாள்....


இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???..........

Thursday, March 19, 2009

JUST A THANK YOU NOTE TO YOU!!!!!!ஆனந்த விகடனுக்கான பதிவு இது!!!!
GOOD BLOGS வரிசையில் வைத்ததற்காகவும்,
மூன்று கவிதைகளைப் பிரசுரித்ததற்காகவும்....நன்றி....நன்றி...நன்றி....

GOOD BLOGS .........

எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்.....

உதிர்ந்த ஒற்றைச் சிறகு......

காதலினால் தோற்றுப் போகும் காதல்.....

Saturday, March 14, 2009

எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்கப்பா........


அவன் விர்ரென பைக்கைத் திருப்பினான்....அரை வட்டமடித்து என்னைக் கடந்து போகும் முன்.....

"ஹெல்மெட் செக் பண்றாங்க.....பாத்து" என்று காற்றில் கத்திவிட்டுப் போனான்.....

கொஞ்சம் ஆனந்தமாகவும் அந்த முகம் தெரியா மனிதனின் மேல் எல்லையில்லா அன்பும் ஒரு நிமிடம் வந்தது... நான் ரொம்ப அவசரத்தில் இருந்தேன்...திரும்பிப் போகவா....அல்லது தப்பிச்சுரலாமா என்ற நினைப்போடு...மேலும் என் பைக்கை ஓட்டினேன்......

மற்றுமொருவன் ......."அடத் திரும்புங்க....ஹெல்மெட் போடலையா? காக்கிச் சட்டை நிக்குது" என்று கத்திவிட்டுப் போனான்.....

இன்னும் ஆனந்தமாக இருந்தது......சக மனிதன்மேல் மனிதர்களுக்கு எவ்வ்ளோ அக்கறைன்னு.....சந்தோஷமாகவே இருந்தது........மனிதநேயம் இல்லை...இல்லைன்னு சும்மா எல்லோரும் பாட்டுப் பாடுறாங்கன்னு.....மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.....

நானும் தூரத்தில் காக்கிச் சட்டையைப் பார்த்ததும்...பைக்கைத் திருப்பினேன்........என் பங்குக்கு ரெண்டு மூணு பேருக்கு காக்கிச் சட்டையைப் பற்றித் தகவல் கொடுத்தேன்.....(ஏதோ என்னாலான உதவி!!!)

எம்.ஐ ரோடைப் பிடித்து கட் ரோட்டில் புகுந்து போய் விடலாம் என நினைத்துத் திரும்பினால் ஒரே கூட்டம்.....அடப் பாவமே ஆக்ஸிடென்ட்......பைக் பக்கத்தில் ஒரு இளைஞன் ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.......அதே வயதுடைய பெண் கை கால்களில் பெருங்காயத்துடன் முகமெல்லாம் ரத்தத் தீற்றல்களினுடனும்....உயிருடன்.....துடித்துக் கொண்டிருந்தாள்....

"போலீஸ் வரட்டும்."
"போலீஸ் கேஸ்..."
"பைக் கையில் கிடைத்தால் கண்மண் தெரிவதில்லை........"
"அட உயிர் இருக்குப்பா...."
".எங்கே பிழைக்கப் போவுது?...."
"யாராவது ஆட்டோ கூப்பிடுங்கப்பா..."என்றெல்லாம் பல குரல்கள்....
யாரும் அசையவில்லை...............
காக்கிச் சட்டை பற்றித் தகவல் சொன்னவர்களும் கூட அசையவில்லை.....
நானும்தான்....
தற்செயலாக அவன் தலையைப் பார்த்தேன் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.....

Saturday, March 7, 2009

என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்........
என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள் மார்ச் -8....எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....

.மார்ச் 9 குட்டி தேவதைக்குப் பரீட்சை அதனாலெ மார்ச் 8 பார்ட்டி எப்படி வைக்க?...
மார்ச் 9 பரீட்சை முடிஞ்சப்புறம் பஞ்சாபி ரசோயி கார்டன்லே வைத்து பார்ட்டி ...
எல்லோரும் வரீங்களா????

Wednesday, March 4, 2009

ம்ம்ம் இனி எப்பவும் என்னால் டைரி எழுத முடியாது....நீல நிற டைரி....அது சேமித்து வைத்த மயிலிறகுகளையும் மழைக் காலங்களையும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் சிலு சிலுவென்று போகும்....

மீண்டும் மீண்டும் வாசித்துச் சுவாசித்த பக்கங்கள் அவை...அப்பாவிடம் அதிகம் பேசியதில்லை ...அம்மாவிடமும்தான்......தங்கையிடமும் அதிகம் பகிர்ந்ததில்லை....நீல டைரிதான் அப்பாவிடமும்,அம்மாவிடமும்,தங்கையிடமும் அதிகம் பேசியிருக்கிறது...

எனக்கும் அப்பாவுக்குமான பிணக்குகளில் நான் அதிகமாக மனம் விட்டுப் பேசுவது ,அழுவது எல்லாம் நீல டைரியிடம்தான்..கண்ணீர் தூரிகை சமயங்களில் எழுத்துக்களைக் கலைத்து அழகிய ஓவியமாக்கிவிட்டுப் போய்விடும் நீல டைரியின் பக்கங்களை...அழுது முடித்து எழுதி முடித்து மேசை மேல் வைத்து விட்டுப் போனால்....எனக்குத் தெரியும் அப்பா அதைப் படிப்பார் என்று......பிணக்குகளைத் தீர்க்கும் மந்திரக் கோலாகயிருந்திருக்கிறது நீல டைரி.......

நீல டைரி எனக்கும் அப்பாவுக்கும்,எனக்கும் அம்மாவுக்கும்,எனக்கும் தங்கைக்கும் ஒரு உணர்வுப் பாலமாகவேயிருந்திருக்கிறது. ஒவ்வொரு சண்டைக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டிருக்கும்.....ஒவ்வொரு சண்டை முடிவின் சந்தோஷச் சிலிர்ப்புக்கும் கூட பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.......என் ரகசியங்கள் குடும்பத்துக்குத் தெரிய வருவது கூட நீல டைரியினால்தான்.....

இவ்வ்ளோ ஏன்? சரண்யாவைக் குடும்பத்துக்கு அறிமுகப் படுத்தியது கூட நீல டைரிதான்...
சரண்யா பற்றிப் படித்து அம்மாவும் தங்கையும் நமட்டுச் சிரிப்புடன் கலாய்த்தது கூட நீல டைரியைப் படித்துத்தான்.....நான் தூங்குவது போல நடிக்கையில் "எப்படி எழுதிருக்கான் பாரு என் பிள்ளை ? ஒருநாள் பெரிய எழுத்தாளரா ஆகப் போறான் பாரு....."என்று சிலாகித்துப் பேசுவார்.அவருக்கென்ன தெரியும் நான் நீல டைரி தவிர வேறெதுவும் எழுதுவதில்லையென்று???

அந்த நீல டைரியைக் கையில் வைத்துத்தான் கத்திக் கொண்டிருந்தாள் சரண்யா....
"என்னங்க உங்க அப்பாவுக்கு விவஸ்தையே கிடையாதா???உங்க டைரியை எடுத்துப் படிச்சுட்டிருந்தார் இன்னிக்கு...நான் வாங்கி வச்சுட்டேன்....நமக்குள்ளே ஆயிரம் இருக்கும்.....இதை எல்லாமா படிக்கிறது?.....இந்த பேசிக் மேனர்ஸ் கூடக் கிடையாதா அடுத்தவங்க டைரியைப் படிக்கக் கூடாதுன்னு??? எனப் பட்டாசு வெடித்தாள்....
அவளுக்கென்ன தெரியும் என் உணர்வுப் பாலம் உடைந்து சுக்கு நூறாகியது????

நீல டைரி மேசை மேல் அநாதையாகக் கிடந்தது........ம்ம்ம் இனி எப்பவும் என்னால் டைரி எழுத முடியாது....