நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, March 20, 2009

சிகரெட் பிடிக்கலாமா கூடாதா???? சொல்லுங்கடி....


அந்த பஸ் ஸ்டாண்டில் வெட்டியாய் நின்று கொண்டிருந்தேன்....ரெண்டு சின்னப் பொண்ணுங்க வந்துச்சு....அவங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்மார்ட்டான இளைஞன் சிகரெட்டை ஊதிக் கொண்டே பல் வித்தைகள் செய்து கொண்டிருந்தான்...ம்ம்ம் அந்தப் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணத்தான்.....


அதுலெ ஒரு பொண்ணு கொஞ்சம் சத்தமாகவே சொன்னது..."பையனுங்க சிகரெட் பிடிச்சா எனக்கு ரொம்பப் பிடிக்கும்....ரொம்ப மேன்லியா இருக்கும்" அப்படீன்னு ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கிளுக்கென்று சிரித்தது.....

உடனே வாங்கிட்டோம்லே...சிகரெட்....சின்னூண்டுப் பையனா இருந்தப்போ எங்க ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடச் சந்துக்குள்ளே நுழைஞ்சு கொஞ்ச நாள் ட்ரெயினிங் எடுத்துருக்கோமே....ஆனா ரொம்ப நாளாச்சே....அஞ்சாறு விதமா சிகரெட்டைப் பிடிக்க தனியா ஒருநாளுக்குள்ளே செல்ஃப் ட்ரெயினிங் எடுத்தாச்சு.....அப்புறமென்ன இதுக்கெல்லாம் கோச்சிங் க்ளாஸா போகமுடியும்??


கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் மறுநாள் அதே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அந்தப் பொண்ணுங்களுக்காகக் காத்திருந்தேன்....சரி....அதுங்க இல்லைன்னா வேற யாராவது பொண்ணுங்க வராமலா போய்விடுவார்கள்?? என ங்கே என்ற பார்வையுடன்...நின்றிருந்தேன்...


ம்ம்ம் ஜீன்ஸ் குர்த்தா போட்டுக் கொண்டு அழகா ஒண்ணு வந்தது.....நன் சிகரெட்டை ஸ்டைலாக உருவிப் பற்ற வைத்துக் கொண்டேன்....வித விதமாக புகையை வெளியே விட்டேன்....ஊஹும்...அது திரும்பியே பார்க்கவில்லை...அப்போ ஒரு பையன் பைக்கில் வந்தான்....இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசினார்கள்...எனக்கு ஒரு சிகரெட் வேஸ்ட்டாகிறதே என்று கவலையாயிருந்தது.......


அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயில் வைத்தான்....அவள் விருட்டென அதை பிடுங்கி...."சிகரெட் பிடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்வது???" சிகரெட் பிடிக்கிறவங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு ...?" என்று அதைத் தூக்கி எறிந்தாள்....


இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???..........

54 comments:

நட்புடன் ஜமால் said...

இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???.\\

அதான் நிறுத்தி வச்சிருக்கீங்களே

நட்புடன் ஜமால் said...

இப்போ நான் குழம்பிப் போயிருந்தேன்.......பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???.\\

அதான் நிறுத்தி வச்சிருக்கீங்களே

Anonymous said...

தயவு செய்து சிகரெட் பிடிக்காதிங்க.. அது உங்கலுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நல்லது.

நாகை சிவா said...

:))))

அய்யோ பாவம்!

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//சிகரெட்டை நிறுத்திவிடவா???.\\

//அதான் நிறுத்தி வச்சிருக்கீங்களே//

அட கண்டுபுடிச்சுட்டீங்களா???அதுக்குத்தானே அந்தக் கடைசி பன்ச் லைன்......

Poornima Saravana kumar said...

எனக்கு பிடிக்காதுங்க:)

அன்புடன் அருணா said...

Anonymous said...
//தயவு செய்து சிகரெட் பிடிக்காதிங்க.. அது உங்கலுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நல்லது.//

நல்ல அறிவுரைதானே சொல்றீங்க??? பேரைப் போட்டே சொல்லலாமே???

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...
//எனக்கு பிடிக்காதுங்க:)//

சிகரெட் பிடிக்கிறவங்களைப் பிடிக்காதா???அல்லது சிகரெட் பிடிக்கப் பிடிக்காதா??...குழப்புறேனா???

reena said...

அருணா... அந்த பொண்ணுங்க சொன்னதுமே சிகரெட்டா உங்க பதிவில சூப்பரா நிறுத்தினீங்க பாருங்க!! அங்க தான் நீங்க நிக்கிறீங்க!! பல பேர் டாக்டர்ஸ் படிச்சு படிச்சு சொன்னாலும் கேக்கறதில்ல!

’டொன்’ லீ said...

ச்சூப்பர்ப் பஞ்ச்...முன்னூட்டம் இட்ட ஜமால் பதிலையும் அழகாக கண்டு பிடித்து விட்டார்

அன்புடன் அருணா said...

reena said...
//அருணா... அந்த பொண்ணுங்க சொன்னதுமே சிகரெட்டா உங்க பதிவில சூப்பரா நிறுத்தினீங்க பாருங்க!! அங்க தான் நீங்க நிக்கிறீங்க!!//

ok ok... நிக்கிறேனா....!!!
நன்றி ரீனா

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//ச்சூப்பர்ப் பஞ்ச்...முன்னூட்டம் இட்ட ஜமால் பதிலையும் அழகாக கண்டு பிடித்து விட்டார்//

ம்ம்ம் நன்றி டொன்'லீ.....ஜமாலுக்கு ஒரு ஜே!

Anonymous said...

அருணா!

நல்ல வேளை அந்தப் பெண்ணுக்கு கொலை பன்றவங்களை பிடிக்கும்னு சொல்லல :)

ரசிக்கும்படியான பகிர்வு!

கோபிநாத் said...

;-))))))

kartin said...

எங்க புடிச்சீங்க... அந்த ஜீன்ஸ் குர்தாவை...
அருமையான காம்பிநேஷன் !!
நல்லவேளையாய் இந்த பொண்ணுக்கு
சிகரெட் பிடிக்கல!!!

thevanmayam said...

சிகரெட் சில பெண்களுக்கு இந்த வாடையே பிடிக்காது!!!

thevanmayam said...

நல்ல பதிவு!!! எப்படியோ குழப்பிட்டீங்க!

புதுகைத் தென்றல் said...

அதான் நிறுத்தி வச்சிருக்கீங்களே//

:)))))))))))

புதுகைத் தென்றல் said...

எனக்கும் பிடிக்காதுப்பா...

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

அன்புடன் அருணா said...

March 23, 2009 6:53 PM
ஷீ-நிசி said...
//அருணா!
நல்ல வேளை அந்தப் பெண்ணுக்கு கொலை பன்றவங்களை பிடிக்கும்னு சொல்லல :)
ரசிக்கும்படியான பகிர்வு!//

அச்சச்சோ....???
நன்றிங்க....

அன்புடன் அருணா said...

Tank U கோபிநாத்
;-))))))

அன்புடன் அருணா said...

kartin said...
//எங்க புடிச்சீங்க... அந்த ஜீன்ஸ் குர்தாவை...
அருமையான காம்பிநேஷன் !!//

இங்கேதான்...ஜெய்ப்பூரில்தான்.....

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//நல்ல பதிவு!!! எப்படியோ குழப்பிட்டீங்க!//

அதுதானே முக்கியமான objective of this post!!!!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//எனக்கும் பிடிக்காதுப்பா...அதான் நிறுத்தி வச்சிருக்கீங்களே//

அப்பிடியா புதுகை???
வருகைக்கு நன்றி...

கிரி said...

ஜமால் கபால் னு விஷயத்தை பிடித்து விட்டார் :-)

ஆ.ஞானசேகரன் said...

சிகரெட் பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ இல்லையொ, உங்க உடம்புக்கு பிடிக்காதுங்க....... "புகை பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" அரசாங்கத்தின் அறிவுரை

தமிழ் பிரியன் said...

எனக்கும் பிடிக்காதுங்க..:)

அன்புடன் அருணா said...

கிரி said...
//ஜமால் கபால் னு விஷயத்தை பிடித்து விட்டார் :-)//

அதான் ஜமாலுக்கு ஒரு ஜே போட்டாச்சேப்பா!!!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
//சிகரெட் பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ இல்லையொ, உங்க உடம்புக்கு பிடிக்காதுங்க....... //
ரொம்ப சரிங்க....

pulampal said...

வணக்கமுங்க! சிகரெட் பிடிக்கலாமா? கூடாதா? என்பத்ல்லாம் அப்புறம் வச்சுகூங்க. என்பிரச்சணைக்கு பதில் சொல்லுங்க.நான் பிளாக் ஆரம்பிச்சு இருக்கெனுங்க! http:// kaamedian.blogspot.com. என் புலம்பலை யாரும் படிப்பாங்களா?

Tuesday, March 24, 2009
புத்தரும் நானும்..................! என்னடா இவனுக்கு கிறுக்கு கிறுக்கு புடிச்சு போச்சான்னு நினைக்காதீங்க!. ரெம்ப தெளிவான ஆளுதாங்க. ( ஆனா இத யாரும் நம்பலீங்க. நம்ம கெட்ட நேரம்ங்க. ). ஆனா பாருங்க வயசு குறைய குறைய, ஞாபக சக்தியும் ரெம்ப குறைஞ்சுட்டு வருதுங்க. நான் யாருன்னு அறிமுகம் பண்ணாமல் பேசிட்டேயிருக்கேன். விஷயத்துக்கு வாரேங்க.நான் செங்கோட்டைகாரனுங்க. அதான் மலையிலிருந்து தண்ணி ஜோராவிழும், மரத்துக்கு மரம் குரங்கு தாவிக்கிட்டுருக்குமே, அதாங்க குற்றாலம் அருவி. அதுக்கு பக்கத்திலுள்ள ஊருதானுங்க. நான் உங்களவிட எல்லாம் ரெம்ப சின்னவன். நான் பிறந்தது 1952ல். என்னங்க இப்படி பாக்கிறீங்க? விஞ்ஞானத்தால் இப்ப எல்லாமே மாறிப்போச்சு இல்லையாங்க? பத்துக்கு அடுத்தது ஒன்பது தானுங்க? என்னை சிறுசுன்னு ஓரங்கட்டீராதீங்க. பிளீ............ஸ்.ஒரு நிமிச்ம் வெயிட் பண்ணுங்க, தம் அடுச்சுட்டு வந்துறன்.
Posted by மன்சாட்சியுள்ள மனிதன் at 9:10 AM 0 comments
Labels: அனுபவம்

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
//எனக்கும் பிடிக்காதுஙக//
good boy!!! தமிழ் பிரியன்

அன்புடன் அருணா said...

pulampal said...
//என்பிரச்சணைக்கு பதில் சொல்லுங்க.நான் பிளாக் ஆரம்பிச்சு இருக்கெனுங்க! http:// kaamedian.blogspot.com. என் புலம்பலை யாரும் படிப்பாங்களா?//

யாரும் படிப்பாங்களான்னு எனக்குத் தெரியாது....நான் படிச்சுட்டேன்...

Suresh said...

@ அன்புடன் அருணா
//hahahaha lol....கொஞ்சம் சரி பண்ணிருங்க.... //

பாத்திங்களா அருணா நான் மட்டும் சரியாய் எழுதி இருந்த நீங்க பாட்டுக்கு படிச்சிட்டு சிரிச்சிட்டு போய் இருப்பிங்க .. எப்போ ஒரு சிரிப்போட ஒரு பின்னோட்டம் வேற :-)
அதன் சொன்னால பொண்ணுங்களுக்கு எல்லாம் சரியாய் செஞ்ச புடிக்காது .. அப்பரும் அவங்க எப்படி திருத்துறது ..

சும்மா சாக்கு சொல்ல விரும்புல , கண்டிபா அன்புடன் அருணா சொன்னதை ஏத்துக்கிட்டு
இந்த தட்சு பெரிய சதி பண்ணுது... அடுத்த பதிவுல தப்ப எழுதாம இருக்க பாக்குரேன்...
அது சரியானு நீங்க டீச்சர் கணக்கா வந்து பார்த்து மார்க் போடுங்க ...
இப்போவே தெரிஞ்சு போச்சு முட்ட தான் :-)

தமிழ்நெஞ்சம் said...

இந்தக் கதைக்கு பின்னூட்டம் போடவா? இல்லை வேண்டாமா?//.பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???......

தமிழ்நெஞ்சம் said...

அதானே...

//.பொண்ணுங்களுக்கு சிகரெட் பிடிச்சாப் பிடிக்குமா? சிகரெட் பிடிக்கலைன்னா பிடிக்குமா???....சிகரெட்டை நிறுத்திவிடவா???......

தமிழ்நெஞ்சம் said...

இதோ பிடிங்க ஒரு பூங்கொத்து..

ஒருத்திக்கு தம்மடிப்பது பிடிக்குது.
ஒருத்திக்கு தம்மடிப்பது பிடிக்கலை
இந்தப் பெண்களின் சைக்காலஜியை புரிஞ்சுக்கவே முடியாது போல!

T.V.Radhakrishnan said...

:-))))

SUREஷ் said...


ப்
போ

நா
ன்


ன்


செ
ய்


து
?

சந்தனமுல்லை said...

:-))

அன்புடன் அருணா said...

Sursesh said....
//அடுத்த பதிவுல தப்ப எழுதாம இருக்க பாக்குரேன்...
அது சரியானு நீங்க டீச்சர் கணக்கா வந்து பார்த்து மார்க் போடுங்க ...
இப்போவே தெரிஞ்சு போச்சு முட்ட தான் :-)//

அடுத்த பதிவு என்னா? இந்தப் பின்னூட்டத்திலேயே தெரியுது.....முட்டைதான்...

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//இந்தக் கதைக்கு பின்னூட்டம் போடவா? இல்லை வேண்டாமா?
பின்னூட்டம் யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா???

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//இதோ பிடிங்க ஒரு பூங்கொத்து..
இந்தப் பெண்களின் சைக்காலஜியை புரிஞ்சுக்கவே முடியாது போல!//
இந்தப் பெண்களின் சைக்காலஜியை புரிஞ்சுக்கிட்டா உலகத்திலெ பிரச்னையே இருக்காதே தமிழ்நெஞ்சம்....?

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
//:-))))//
ம்ம்ம்....அவ்வ்ளோதானா??? :((

அன்புடன் அருணா said...

SUREஷ் said...

ப்
போ

நா
ன்


ன்


செ
ய்


து
?
இப்பொ நீங்க கீழே இறங்கிட்டீங்க...மேல ஏறுங்க!!!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
//:-))//
என்ன சந்தன முல்லை வெறும் :)) தானா???
:((

Anonymous said...

aiyo aiyo

மந்திரன் said...

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ் ....
ஆழ கடல் ஆழம் இல்லை .
ஆழம் இது அய்யா ..
இந்த பொண்ணுங்க மனசு தான்யா ...
--புலம்பி திரிவோர் சங்கம்

அன்புடன் அருணா said...

Sure said...
//aiyo aiyo//

அப்பிடின்னா??? வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவா????

அன்புடன் அருணா said...

மந்திரன் said...
//இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ் ....
ஆழ கடல் ஆழம் இல்லை .
ஆழம் இது அய்யா ..
இந்த பொண்ணுங்க மனசு தான்யா ...
--புலம்பி திரிவோர் சங்கம்//

சங்கத்துலே எத்தனை பேர் இருக்கீங்க மொத்தம்??

மந்திரன் said...

//சங்கத்துலே எத்தனை பேர் இருக்கீங்க மொத்தம்??//
இதற்க்கு எங்கள் பொதுக் குழு பதில் சொல்லும் ..
எங்க பதில் ஒன் வே ...திருப்பி கேள்வி வரக் கூடாது ....அய்யோ ஐயோ

அன்புடன் அருணா said...

//எங்கள் பொதுக் குழு பதில் சொல்லும்//

அட அதைத்தான் சொல்லுங்கன்னு சொல்றேம்ப்பா
சங்கத்துலே எத்தனை பேர் இருக்கீங்க மொத்தம்??????

மந்திரன் said...

//சங்கத்துலே எத்தனை பேர் இருக்கீங்க மொத்தம்??????//
அட இன்னுமா இந்த உலகம் நம்பளை நம்புது ?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா