நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, July 28, 2009

களவு போகத்தான் செய்கிறது மனம்!!!

இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில்......நன்றி விகடன்!!!!

கையருகே நட்சத்திரம் என்றும்
குடத்தில் கடல் என்றும்
குவளையில் நதியென்றும்
கைப்பிடிக்குள் வானம் என்றும்
வளையலில் வானவில் என்றும்
தூக்கக் கலக்கக் கனவுகள் விடாமல்
நிஜங்களைத் துரத்தத்தான் செய்கின்றன.....

நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............

இருந்தாலும்

குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!
என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!

65 comments:

Positive Anthony Muthu said...

Really a heart touching poem. Hats off again.
Great.

Best wishes.

Positive Anthony Muthu said...

//நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............
//

ஆம்.

நட்புடன் ஜமால் said...

குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!]]

அசந்துட்டங்க!

அருமை.

புனிதா||Punitha said...

super aruna :-)

Suresh Kumar said...

Kalakakl

KParthasarathi said...

Eppadi ippadi yellam ore asatthalaaga kalavu pogiradhu ungal manam.Vaarthaigalaal vivarikka mudiyaadha alavu azhagaana oru ennam eppadi thonrugiradhu? Sollungalen rahasiyatthai
mikka santhosham

sakthi said...

நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்..........

அருமை

தமிழ் பிரியன் said...

அழகா இருக்கு!

நாடோடி இலக்கியன் said...

கவிதையின் கடைசி வரிகள் அசத்தல்.
மிகவும் ரசித்தேன்.

பாசகி said...

கரெக்ட்டுதான், களவுபோயிடுச்சு :)

சூப்பர்

Karthik said...

nice one!

கடையம் ஆனந்த் said...

அருமை.

ஜெகநாதன் said...

இந்தாங்க பூங்கொத்து!! உங்கள் தூக்கக் கலக்கக் கனவுகள் ​தொடர ​வாழ்த்துக்கள் + ​கொசுவர்த்தி!!

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது. கனவு வார்த்தைகளுக்கு மனம் களவு போகிறது, கனவு எண்ணங்களுக்கு வாழ்க்கையே களவு போகிறது. மிக்க நன்றி.

இய‌ற்கை said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

T.V.Radhakrishnan said...

அருமை.

Mojo Arasu said...

கவிதை நன்றாக இருந்தது .

சத்ரியன் said...

//குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது‍
மழை !!!என்னும்

உங்கள் கவிதைச் சொல்லுக்கு
நிஜமாகவே களவு தான் போய்விட்டது என் மனம்.//

ரசனை மிகுந்தச் சொற்கள் அருணா.

அன்புடன் அருணா said...

Positive Anthony Muthu said...
//Really a heart touching poem. Hats off again.
Great.//
thanx Antony!....You visit my blog very rarely.Come often...I value your comments.

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//அசந்துட்டங்க!//
உங்களை அசத்துறது கஷ்டமாச்சேப்பா!

அன்புடன் அருணா said...

நன்றி ....புனிதா||Punitha
நன்றி ....Suresh Kumar
நன்றி ....sakthi

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//Eppadi ippadi yellam ore asatthalaaga kalavu pogiradhu ungal manam.Vaarthaigalaal vivarikka mudiyaadha alavu azhagaana oru ennam eppadi thonrugiradhu? Sollungalen rahasiyatthai
mikka santhosham//
உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சந்தோஷம்!
அழகி என்னாச்சு?

பிரியமுடன்.........வசந்த் said...

அசத்தல் மழை......

ஆ.ஞானசேகரன் said...

அருமையான் வரிகள் தோழி

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

nila said...

//நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............//
அந்த நினைவுகளும் கனவுகளும் தான் இன்று பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன....

nila said...

என் பக்கமும் கொஞ்சம் வந்து பாருங்களேன்...
nilamagal-nila.blogspot.com

ஷைலஜா said...

ரசித்தேன் மிகவும் பாராட்டுக்கள் அருணா

அன்புடன் அருணா said...

நன்றி ....Karthik
நன்றி ....கடையம் ஆனந்த்
நன்றி .... தமிழ் பிரியன்

அன்புடன் அருணா said...

ஜெகநாதன் said...
//இந்தாங்க பூங்கொத்து!! உங்கள் தூக்கக் கலக்கக் கனவுகள் ​தொடர ​வாழ்த்துக்கள் + ​கொசுவர்த்தி!!//
பூங்கொத்தோட கொசுவர்த்தியா???அருமையான காம்பினேஷன்!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//அசத்தல் மழை......//
நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌//
வந்துட்டேன்....வாங்கிட்டேன் !!!ok va?

அன்புடன் அருணா said...

பாசகி said...
//கரெக்ட்டுதான், களவுபோயிடுச்சு :)
சூப்பர்//
நன்றி பாசகி!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
//அருமையான் வரிகள் தோழி//
நன்றி ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//நல்லாயிருக்கு ;)//
அடிக்கடி வாங்க கோபிநாத்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு அருணா மேடம்

அபி அப்பா said...

அருமையா இருக்கு கவிதை அருணா!!!

அன்புடன் அருணா said...

nila said...
//அந்த நினைவுகளும் கனவுகளும் தான் இன்று பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன....//
உண்மைதான் நிலா!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! Mojo Arasu ..
.

அன்புடன் அருணா said...

nila said...
//என் பக்கமும் கொஞ்சம் வந்து பாருங்களேன்..//
வந்துட்டேனே!.

அன்புடன் அருணா said...

ஷைலஜா said...
//ரசித்தேன் மிகவும் //
நன்றி ஷைலஜா!

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//கடைசி வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு அருணா மேடம்//
நன்றி அமித்து அம்மா!அடிக்கடி வாங்க!

நேசமித்ரன் said...

இறுதி வரிகள் அருமை
வாழ்த்துக்கள்

பாச மலர் said...

//குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!

என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!//

அழகிய வரிகளில் களவு போய்விட்டது மனம்...மிகவும் அழகிய கவிதை..வாழ்த்துகள்.

gils said...

//கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மன//

nachu..nice to read poemsla inonu :)

அன்புடன் அருணா said...

நேசமித்ரன் said...
//இறுதி வரிகள் அருமை
வாழ்த்துக்கள்//
வாங்க நேசமித்ரன்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்குங்க... உங்க கனவுகள்...

" உழவன் " " Uzhavan " said...

//குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!//
 
:-))

athivas said...

Poongothu from me....Nachchu kavithai!

அன்புடன் அருணா said...

பாச மலர் said...
/அழகிய வரிகளில் களவு போய்விட்டது மனம்...மிகவும் அழகிய கவிதை..வாழ்த்துகள்./
வாங்க பாசமலர்...ரொம்ப நாளாச்சே!

அன்புடன் அருணா said...

gils said...
//nachu..nice to read poemsla inonu :)//
thanx gills!

அன்புடன் அருணா said...

athivas said...
//Poongothu from me....Nachchu kavithai!//
முதல் வருகை athivas !! நன்றி!

Raghavendran D said...

//குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை//

அற்புதமான சிந்தனை..!

கவிதை அழகு.. :-)

Annam said...

super:)))

விக்னேஷ்வரி said...

அழகு.

அன்புடன் அருணா said...

ஷைலஜா said...
/ரசித்தேன் மிகவும் பாராட்டுக்கள் அருணா/
நன்றி ஷைலஜா!

அன்புடன் அருணா said...

நன்றி Annam முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

நன்றி விக்னேஷ்வரி

அன்புடன் அருணா said...

Raghavendran D said...
//அற்புதமான சிந்தனை..!/
நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

dharshini said...

வாழ்த்துக்கள் அருனா மேடம்...

அன்புடன் அருணா said...

நன்றி dharshini !

அக்பர் said...

அழகா இருக்கு

அன்புடன் அருணா said...

நன்றி அக்பர்!

சந்ரு said...

//குளத்தில் விழும் முன்

கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!

என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!//அருமை ............

சந்ரு said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

tamilcinema said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா