நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 20, 2007

நானும் இயந்திரங்களும்

Tuesday, November 20, 2007
நானும் இயந்திரங்களும்

காலையில் காஃபி.......... காஃபி மேக்கரில்
சப்பாத்தி மாவு........... ஆட்டா நீடரில்
சப்பாத்தி.............. சப்பாத்தி மேக்கரில்
மைக்ரோ வேவ் அலறலில்....... பொறியல்.
வாட்டர் heater-ல் சுடு தண்ணீர் குளியல்.
வாஷிங்க் மெசினில் துணிகள் குளித்தன.
வேக்கும் க்ளீனரில் வீடு குளித்தது.
ஏர் கண்டிசனரில் வீடு குளிர்ந்தது.
எத்தனை பட்டன்கள்....எத்தனை வேலைகள்
அப்பாடா......
அத்தனை வேலையும் முடித்து
கொஞ்சம் கம்ப்யுட்டரில் கவிதை எழுத எண்ணி
கம்ப்யுட்டர் பட்டனைத் தட்டினால்......
ம்கூம்........ஒன்றும் தேறவில்லை....
மனக் கதவைத் திறக்க எந்த பட்டனைத் தட்டுவது?

Posted by aruna at 4:45 AM 0 comments

2 comments:

Anonymous said...

ரொமச் சுலபம்... குழந்தே...

எதையாவது எழுதத் துவங்கு.
சரியா வருதோ இல்லையோ எதையாவது தொடங்கிவிடு.
ஏனென்றால் எழுதுவதை எல்லாம் அப்படியே நீ Post பண்ணப் போவதில்லை.
பல பெரிய எழுத்தாளர்களுக்கும் இதே பிரச்சினை வந்துள்ளது.

பெரும்பாலும் அவர்கள் இந்த வழி முறையைத் தான் கையாண்டார்கள்.

நீ நிறைய்ய எழுதணும்.

சரியா..?

அன்புடன்
SAM தாத்தா

Aruna said...

ரொம்ப சரி சாம் தாத்தா! வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி
அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா