மறக்க முடியாத தருணங்கள்.........மறக்கபபடவேண்டிய தருணங்கள்....எல்லோர் வாழ்விலும் அவ்வப்போது இப்படிப்ப்பட்ட தருணங்கள்...நிகழ்ந்திருக்கும்..சில சம்பவங்கள் அப்படியே மனதோடு ஒட்டிக் கொண்டுவிடும் விரும்பியும் விரும்பாமலும்.......
மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.அது போல மனம் கவ்விக் கொண்ட தருணங்கள்...நான் மறக்க நினைக்கும் தருணங்கள் இவை..சிலநேரங்களில் என்னை நினைத்து நானே வெட்கித் தலைகுனியும் தருணங்கள் இவை.
ஒரு இரவு நேரம்....அப்பாவுக்கு நேரம் கிடைக்காததால் அப்பா ராத்திரி இரண்டாவது ஷோ படத்துக்குத்தான் கூட்டிட்டுப் போவாங்க..அப்படி ஒரு தடவை படம் முடிந்து வரும்போது....ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது....எந்த கதாநாயகனும் காப்பாற்ற வரவில்லை...எங்களில் யாரும் கதாநாயகர்களாகவும் ஆகவில்லை...அவள் என்ன ஆனாள் என்றும் தெரியவில்லை.....
மற்றொன்று நாங்கள் திருமணமாகி தனியாக ஜெய்ப்பூரில் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டுத் திரும்பும்போது ஒருவர் ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து கிடந்தார்.....இன்னும் ஓரிரு வண்டிகளும் பார்த்தும் பார்க்காதது போலக் கடந்து போயின.....ஒரு முடிவெடுக்கமுடியாமல்...சிறிது நேரம் தயங்கிவிட்டு குடிச்சுட்டு விழுந்திருப்பாரோ...என்று எங்களுக்கே கேட்காத குரலில் முணு முணுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போயே விட்டோம்...இன்னும் அந்த சாலையைக் கடக்கும் போது....அந்த ஒருவரின் நினைப்பு வந்து மனதை அரிக்கிறது....
சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....
30 comments:
//மறக்க முடியாத தருணங்கள்.........மறக்கபபடவேண்டிய தருணங்கள்....எல்லோர் வாழ்விலும் அவ்வப்போது இப்படிப்ப்பட்ட தருணங்கள்...நிகழ்ந்திருக்கும்.//
இது இல்லாத ஒருத்தர் கூட இருக்க முடியாது...
//சில சம்பவங்கள் அப்படியே மனதோடு ஒட்டிக் கொண்டுவிடும் விரும்பியும் விரும்பாமலும்....... //
மிக சரியே... எனக்கும் இது மாதிரி நெறைய இருக்கு....
//எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.//
நான் இதால ரொம்ப அவஸ்தை படறேன் அருணா மேடம்.... (விலகாதோஃபோபியாவா??)
//ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.//
அயோக்கியர்கள் இல்லாத ஊர் எதுங்க.... அவங்களுக்கு அந்த ஆண்டவன்தான் தண்டனை தரணும்...
//குடிச்சுட்டு விழுந்திருப்பாரோ //
இது பொதுவாக எல்லாருமே நினைப்பதுதான்...
//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு.... //
நிழலில் நடப்பது எதுவும் நிஜத்தில் நடப்பது எளிதல்ல... சொல்லுங்க... யாராவது போய், பக்கத்துல இருக்கற பார்க்ல 50/100 பேரோட டூயட் பாட முடியுமா?? நிஜத்தில் நடக்காத ஒன்று நிழலில் நடப்பதால்தான், எல்லோரும் நிழலையே விரும்புகிறார்கள்...
நிஜத்தில், நாம் நம் ஏரியா கவுன்சிலர்களை கூட ஒன்றும் கேட்டு விட முடியாது... ஆனால், நிழலில், கவர்னர் பெண்ணை கூட காதலித்து கல்யாணம் செய்து கொள்ளலாம்...
நாட்டில், நல்லவையே நடக்க வேண்டும் என்று குறைந்தபட்சம் எண்ணுவோம்... அதற்காக பிரார்த்தனை செய்வோம்...
.ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்]]
நெஞ்சு பட படன்னு அடிச்சிக்குதுங்க இந்த வரியை பார்த்தவுடன் ...
:( :( :(
நல்ல பதிவு அருணா..எல்லோருக்கும் இப்படிப் பல நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
என்ன சொல்றதுன்னு தெரியலை மேம். :(
அந்த பொண்ணு என்ன ஆனாலோங்குற கவலை இப்ப எனக்குள்ளும் அடித்துக் கொ(ல்)ள்கிறது.
:(
//மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.அது போல மனம் கவ்விக் கொண்ட தருணங்கள்...//
மனித மனதை படம்பிடித்து காட்டிய வரிகள்.
நீங்கள் சொன்ன இரண்டு தருணங்களும், தன் உரிமையைக் காத்திடவும், உலகில் மக்களுக்கு இல்லாத நம்பிக்கையையும் காட்டுகிறது. உதவப்போகிறேன் என உபத்திரவத்தில் மாட்டும் நிலைதான் பலருக்கு. என்ன செய்வது? மன வலியே நமக்கு மிச்சம்.
மிக்க நன்றி.
hmmmm...:((
rendu samabhavume manadhai romabavum sangada padutthugiradhu.Oru kshanam andha penninin nilayail irundhu paarthaal aval udhavi varum engira edhir paarppugalil evvalavu irundhiruppal adhu kidaikkadhapodhu nenjam eppadi veditthu poi irukkum enbadhai ninaitthaal ayyago endru kadhara thaan thonrugiradhu. manadhai migavum kalakki vitteergal
ஜெஸ்வந்தி said...
//நல்ல பதிவு அருணா//
நன்றி ஜெஸ்வந்தி
Karthik said...
//என்ன சொல்றதுன்னு தெரியலை மேம். :(//
I can understand karthik.
நன்றி....கார்க்கி
நன்றி....சந்தனமுல்லை
நட்புடன் ஜமால் said...
//நெஞ்சு பட படன்னு அடிச்சிக்குதுங்க இந்த வரியை பார்த்தவுடன் ...
:( :( :(//
பட படக்க வேண்டிய விஷயம்தான் ஜமால்...
வெ.இராதாகிருஷ்ணன் said...
//உதவப்போகிறேன் என உபத்திரவத்தில் மாட்டும் நிலைதான் பலருக்கு. என்ன செய்வது? மன வலியே நமக்கு மிச்சம்.//
ரொம்ப சரி.
KParthasarathi said...
// manadhai migavum kalakki vitteergal//
நன்றி சார்...
R.Gopi said...
/நான் இதால ரொம்ப அவஸ்தை படறேன் அருணா மேடம்.... (விலகாதோஃபோபியாவா??)/
ஓ இதுக்கு இப்பிடி ஒரு பேர் இருக்கோ???
//நிஜத்தில் நடக்காத ஒன்று நிழலில் நடப்பதால்தான், எல்லோரும் நிழலையே விரும்புகிறார்கள்...//
உண்மைதான் கோபி.
ஒரு பின்னூட்டத்தையே பதிவு போல எழுதுறீங்க...நன்றி!
எம்.எம்.அப்துல்லா said...
//அந்த பொண்ணு என்ன ஆனாலோங்குற கவலை இப்ப எனக்குள்ளும் அடித்துக் கொ(ல்)ள்கிறது.//
எனக்கும்....
மண் அரிப்பைத்தடுக்க மரம் வளர்ப்போம்.
அறுக்கிற நினைவைத்தடுக்க மனிதம் போதும்.
பூ.......ங்கொத்து.
ஆமா பிரின்ஸ்
ஆனால் சில நேரங்களில் தைரியம் வந்துவிடுகிறது...
:(
//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று //
சரியாய் சொன்னீங்க...
நான் ஸ்கூல் படிக்கும் போது (10th)... ஒரு தடவை திருடன் ஒருத்தன எல்லோரும் துரத்திக் கிட்டு வராங்க...திருடன் எங்கள கிராஸ் பண்ணி ஓடறான்
எங்க அம்மா என்னை பார்த்து டே அவன புடி புடின்னு கத்தராங்க..
நான் அப்படியே முழிச்சிட்டு இருந்தேன்.. அவன் எஸ்கேப்... எனக்கு சரியான திட்டு
//ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும்//
நினைத்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு...
அமெரிக்காவில் 911 பண்ணினா போலீஸ் உடனடியா வர மாதரி நம்ப ஊருலயும் அவசர போலீஸ் நம்பர் தெரிஞ்சு இருக்குனும்...அவங்களும் டைம்க்கு வரணும்...
//அவங்களுக்கு அந்த ஆண்டவன்தான் தண்டனை தரணும்...//
-அண்ணா, இதெல்லாம் பேசுறதுக்கு தான் நல்லா இருக்கும்.. கண்ணுக்கு முன்னாடி இப்படி நடக்குறப்ப எப்படிண்ணா சாமிய கும்பிட்டுட்டு போக முடியும்? நிஜத்துல நாம தான் இவனுங்கள எல்லாம் 'கவனிக்கனும்'.. இத மாதிரி நான் கூட ரெண்டு தடவ 'கவனிச்சிருக்கேன்'.. ஒரு தடவ இங்க 'U.K'ல வேற.. ஆனா இங்க கூட கடைசி வரைக்கும் ஒருத்தன் கூட எனக்கு Support'ஆ வரல.. :(
:-(((
:(
//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//
உண்மைதான்
நானும்......................
//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//
உண்மைதான்
நானும்......................
//சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....//
உண்மைதான்
நானும்......................
நன்றி....Kanchana Radhakrishnan !
நன்றி....சின்ன அம்மிணி !
நன்றி....அமிர்தவர்ஷினி அம்மா !
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
தெரியவில்லை. பல சமயங்களில் மனம் இதுபோன்ற தருணங்களில் பயம் கொள்ளத்தான் செய்கிறது.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா