நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, August 13, 2009

புரியவில்லயே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

வறுமைக்கும் பசிக்கும்,
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......

இந்தியா எதையெல்லாம் என்னிடம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதென்று?
எனக்கே தெரியவில்லை....
உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......
உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........

யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
 உயிரையும்.....

காதலர்தினம்,
நண்பர்கள் தினம்
அப்பாக்கள் தினம்,
அம்மாக்கள் தினம் போல
"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........

பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே  இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

46 comments:

நட்புடன் ஜமால் said...

இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????]]

சரியான கேள்விதாங்க

நம் உதயத்திற்கு ...

Sundari said...

//பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று//

Last few lines were simply superb...

R.Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க அருணா.....

//பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...???? //

இது விடை தெரியா கேள்வி..

நான் கூட சுதந்திர தினத்திற்கென்று ஒரு பதிவு போட்டுள்ளேன்... நேரமிருப்பின் வந்து பார்க்கவும்.

http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post.html

ந‌ன்றி.........

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
// சரியான கேள்விதாங்க
நம் உதயத்திற்கு ...//
ரொம்ப சரி!நன்றி ஜமால்.

Kirukkan said...

வாழ்த்துக்கள் அருணா!!!!


//உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......//


மந்திரம் தந்திரம் யந்திரம் இல்லாது
அறத்தால் அடைந்ததே சுதந்திரம்.


//உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........//


மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.


-
கிறுக்கன்

சி.கருணாகரசு said...

அருணா கவிதை நல்லாயிருக்கு.
ஊழல் என்ற ஒற்றைச் சொல் இல்லையேல், இந்தியா நல்லாயிருக்கும். எனவே இங்கிருந்துதான் ஆரம்பிக்கணும் சரியா?...தவறா?

சத்ரியன் said...

//பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு ...//

அருணா,

அம்சம் போங்க.

எத்தனைப்பேர் புரிந்திருப்பர் இந்த வரிகளை...?

சரி,எங்கிருந்து ஆரம்பிக்கலாம்...? ஏதோவொரு காரணம் காட்டி வருடத்திற்கொரு தேர்தல் நடத்தும் அரசியல்வாதிகளின் உயிரிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.உங்களுக்குச் சம்மதமா?

கார்க்கி said...

டீச்சர்.. வாழ்த்துகள்

athivas said...

arumaiyaana suthanthira thina vaazhthu,Aruna!! Poongothu!!
"Enna vendum Indhiya,en uyira?uthirama?yaar yaarin uyarvuko uzhaithu madiya pohum uyir thaaney???"---romba baathicha varikal!!

SanjaiGandhi said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் அக்கா..

Srivats said...

Wow enna arumaya ezudhirukeenga, varthai podhala adhai paraata, ammanga engey arambikkaradhunnu naanum nerya thdavai yosichu erukken.Words romba nalla form panni erukeenga :) kavidhai ellam segarichu book podunga aruna

வால்பையன் said...

//பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....//

காவலில்லைங்க!
காத்திருக்கிறது!
நாம தான் கண்டுகிறதுல்ல!

Karthik said...

Superb one!

கே.பாலமுருகன் said...

இந்தாங்க பூங்கொத்து. வச்சிக்குங்க. காசா பணமா.

//யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
உயிரையும்.....//
வாழ்த்துகள்

sakthi said...

"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........

அருமை நச் வரிகள் அருணா

KParthasarathi said...

உங்கள் ஏக்கம் புரிகிரது.ஏல்லொருக்கும் அப்படிதான் இன்னும் ஒரு சுதன்திர போராட்டம் தேவை

அன்புடன் அருணா said...

Sundari said...
//Last few lines were simply superb...//
Thanx for the first visit and the comments!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
//நான் கூட சுதந்திர தினத்திற்கென்று ஒரு பதிவு போட்டுள்ளேன்... நேரமிருப்பின் வந்து பார்க்கவும்.//
நன்றி...வந்து பார்த்துட்டேனெ!

அன்புடன் அருணா said...

Kirukkan said...
//மந்திரம் தந்திரம் யந்திரம் இல்லாது
அறத்தால் அடைந்ததே சுதந்திரம்.
மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.//
ஒரு பின்னூட்டத்துக்கு இவ்வ்ளொ ழகான வரிகளா???

அன்புடன் அருணா said...

சி.கருணாகரசு said...
//ஊழல் என்ற ஒற்றைச் சொல் இல்லையேல், இந்தியா நல்லாயிருக்கும். எனவே இங்கிருந்துதான் ஆரம்பிக்கணும் சரியா?...தவறா?//
ரொம்ப சரி கருணாகரசு!

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
//அரசியல்வாதிகளின் உயிரிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்//
.உங்களுக்குச் சம்மதமா?//
அச்சச்சோ வன்முறையா???

அன்புடன் அருணா said...

நன்றி..கார்க்கி & சஞ்சய்!

அன்புடன் அருணா said...

athivas said...
//Poongothu!!//
வாங்கிட்டேன்!!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//காவலில்லைங்க!
காத்திருக்கிறது!
நாம தான் கண்டுகிறதுல்ல!//
அப்பிடி ஒட்டு மொத்தமா சொல்லிடாதீங்க...

அன்புடன் அருணா said...

Srivats said...
//kavidhai ellam segarichu book podunga aruna//
போட்டுடலாம் ஸ்ரீ! யார் வாங்குவாங்கன்னுதான் கவலை!:)

federrer said...

யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்

simply superb.. i dropped tears for these lines..
Love you India..

பிரியமுடன்.........வசந்த் said...

//நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......//

உண்மைதான்.....

SK said...

அதே குழப்பத்துடன்..

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

குறிப்பு : நீங்க டீச்சர் அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன். இந்த பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்சத்தில்..

http://enippadigal.blogspot.com/

அன்புடன் அருணா said...

கே.பாலமுருகன் said...
//இந்தாங்க பூங்கொத்து. வச்சிக்குங்க. காசா பணமா.//
சில விஷயங்களுக்கு காசு பணம் பார்க்கக் கூடாது பாலமுருகன் சார்!

அன்புடன் அருணா said...

sakthi said...
//அருமை நச் வரிகள் அருணா//
நன்றி சக்தி!

அன்புடன் அருணா said...

நன்றி பார்த்தசாரதி சார்!

அன்புடன் அருணா said...

federrer said...
// simply superb.. i dropped tears for these lines..Love you India..//
thanx federrer for the nice comment!

கலகலப்ரியா said...

//http://naanirakkappokiraen-aruna.blogspot.com///

ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன்.. இது என்ன தலைப்பு.. நாம எல்லாரும்தான் இறக்க போறோம்.. ஒரு நாள்.. :>

//சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......//

வாவ் உலவ விடுறாங்களா.. =)) சொல்லவே இல்ல..

அழகா எழுதி இருக்கீங்க..

Mojo Arasu said...

நம் மனதில் எழும் கேள்விகளை கவிதையில் நன்றாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

அன்புடன் அருணா said...

கலகலப்ரியா said...
//http://naanirakkappokiraen-aruna.blogspot.com///
// இது என்ன தலைப்பு.. நாம எல்லாரும்தான் இறக்க போறோம்.. ஒரு நாள்.. :>//
இதுதான்னு இல்லாம ஏதோ ஒரு உணர்வுடன் வைத்துவிட்டேன்...தவிர அதற்குள் நாம் என்னென்ன செய்யணும்னு நினைசசிருந்தோம்னு அடிக்கடி நினைவு படுத்துவதற்கு வசதியாக இருக்கிறது

அன்புடன் அருணா said...

நன்றி...Mojo Arasu

கலகலப்ரியா said...

oho.. daily.. innaikkuthaan last daynnu ninaichindu vaazhanumbaanga.. athukkaaga naan sagaporennu sollindaa.. :> .. seri seri.. ungalukku athu motivation na serithen.. hihi..

அன்புடன் அருணா said...

கலகலப்ரியா said...
//. seri seri.. ungalukku athu motivation na serithen.. hihi..//
அதே...அதே!!!

kgjawarlal said...

//சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......//

நல்லா சிந்திக்கிறீங்க. எனக்கு மூக்கை மட்டும்தான் சிந்திக்கத் தெரியும்.

http://kgjawarlal.wordpress.com

பா.ராஜாராம் said...

பூங்கொத்து,நீங்கள் தந்த அதே பூங்கொத்து!

Ammu Madhu said...

//வறுமைக்கும் பசிக்கும்,
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......
//

எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது...

அன்புடன்,
அம்மு.

சந்தான சங்கர் said...

மாலை நேரம்,
ஆலமரத்தில் ஆயிரம் மைனாக்கள்
கூடின குலவின...
மனிதன் சளித்துகொண்டான்
ஒரே சப்தமென்று.
சிறிது நேரத்தில் ஒரே நிசப்தம், அமைதி..
மைனாக்கள் உறங்கின
மனிதனின் சலசலப்பிலும்....

க. பாலாஜி said...

நல்ல அருமையான வரிகள் கொண்ட கவிதை... சகோதரியே...

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்காண செய்தி என் பக்கம் வந்துவிட்டு செல்லுங்களேன்

வினையூக்கி said...

vaalthukkal madam

Sivaji Sankar said...

வாழ்த்துக்கள் அருணா!!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா