நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, August 27, 2009

பகிரப்படாத அன்பென்பது...........

நகம் கடித்துத் துப்பும்
மணித்துளிகளில்
எதுவும் சொல்லாமல் நீ
எழுந்து போன நிமிடங்களில்
தேநீர் அருந்த ஆளில்லாமல்
ஆறிப் போயிருந்தது..........


பகிரப்படாத அன்பென்பதும்
சொல்லாத காதலென்பதும்
சேர்ந்தருந்தாத தேநீரும்
நேரம் கடந்த பின் உபயோகமில்லை.....


இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்போல
வெளியே முகம் காட்டும்
நேரமெல்லாம் கண்ணீர் விட்டு
அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......


அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது.........

24 comments:

Positive Anthony Muthu said...

//இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்போல
வெளியே முகம் காட்டும்
நேரமெல்லாம் கண்ணீர் விட்டு
அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......
//

அனேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்றதொரு சந்தர்ப்பம் நிகழ்ந்திருக்கலாம்.

வார்த்தைகளற்று... :-(

கவிதை மிக மிக அருமை.

வனம் said...

வணக்கம் அருணா.

மிக நல்ல அழகான கவிதை.
சோகங்களை வரிகளாக்குவது என்பது பெரும்பாலானவர்களுக்கு இயலுகின்றது என்றாலும் உங்களின் இந்த
\\நேரம் கடந்த பின் உபயோகமில்லை....\\
வரி மிக அழகாக தெரிவிக்கின்றது.

சரி எப்பொது கையறுநிலையிலிருந்து வெளியே வர போகின்றீர்கள்
இராஜராஜன்

jerry eshananda. said...

கலக்கல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாவரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது

நட்புடன் ஜமால் said...

உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது........]]

அருமை அருமை ...

ஆ.ஞானசேகரன் said...

//பகிரப்படாத அன்பென்பதும்
சொல்லாத காதலென்பதும்
சேர்ந்தருந்தாத தேநீரும்
நேரம் கடந்த பின் உபயோகமில்லை.....//

ரசித்த வரிகள்,...
வாழ்த்துகள்

sakthi said...

அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது.........

Excellent!!!!!!!!!

Karthik said...

கலக்கல்ஸ் மேம்!! :)

அன்புடன் அருணா said...

Positive Anthony Muthu said...
//அனேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்றதொரு சந்தர்ப்பம் நிகழ்ந்திருக்கலாம்.
வார்த்தைகளற்று... :-(/
நிஜம்தான் Antony...

அன்புடன் அருணா said...

வனம் said...
/சரி எப்பொது கையறுநிலையிலிருந்து வெளியே வர போகின்றீர்கள்
இராஜராஜன்//
கருத்துக்கு நன்றி இராஜராஜன்..
ஆனால் இது புரியவில்லையே!!!

அன்புடன் அருணா said...

jerry eshananda. said...
/கலக்கல்./
முதல் வருகைக்கு நன்றி ஜெர்ரி!

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
/எல்லாவரிகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது/
நன்றி அமித்து அம்மா!

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//அருமை அருமை ...//
நன்றி ஜமால்!

வால்பையன் said...

//அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்//

சொல்லாத காதலுக்கு
சொர்க்கத்தில் இடமில்லைன்னு
இத வச்சு தான் சொன்னாங்களா?

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அக்கா ;))

புனிதா||Punitha said...

:-) nice

skaamaraj said...

பருகப்படாத தேநீருக்கு
ஒருவேளை உபயோகமின்றிப்போகலாம்.
ஜன்னலோரம் காத்திருக்கவைப்பது
அன்பின் வலிமயைக்கூட்டுகிறதல்லவே.

இதற்குப் பூந்தோட்டம்.

சி.கருணாகரசு said...

கவிதை நல்லா இருக்கு நண்பா... பராட்டுக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

excellent prince......

KParthasarathi said...

இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்போல
வெளியே முகம் காட்டும்
நேரமெல்லாம் கண்ணீர் விட்டு
அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......
Manadhil appadiye nirkaradhu indha aazhndha vaarthaigal.Migavum arumaiyaana kavidhai,Aruna

" உழவன் " " Uzhavan " said...

இந்த மனசு எப்பவுமே இப்படித்தாங்க :-)
நல்ல கவிதை

Anitha.M said...

அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது.........

Migavum arumai.. paaratta vaarthaigal illai mam..

வெ.இராதாகிருஷ்ணன் said...

எல்லாம் ஒரு நம்பிக்கைதான், எல்லாம் கைகூடி வருமென. அன்பு, காதல் நம்மை நன்றாக வைத்திருக்கும், எப்போதும் அது உபயோகமில்லாமல் போகாது.

உண்மையான அன்பு, காதல் ஒருபோதும் உறங்குவதில்லை, நேரம் கடக்கச் செய்வதும் இல்லை. தேநீர் சூடுபண்ணி சேர்ந்து அருந்திவிடலாம்.

மிக்க நன்றி அருணா அவர்களே.

மதன் said...

அழகான கவிதை அருணா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா