நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 3, 2009

ஒற்றைச் செருப்புடன் ஒரு பயணம்.......



அதிகாலையில்
நெடுஞ்சாலையில்
ஒரு குட்டி ஒற்றைச் செருப்பும்
சில துளி ரத்தமும்..................

தனியே ஓடிச் சிக்கியிருக்குமோ?
அம்மாவுடன் வரும் போதா???
சைக்கிளில் சிக்கியதா?
பைக்கில் சிக்கியதா??

நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது

பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........

அன்று
அந்தக் குட்டி
 ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது.....

45 comments:

நட்புடன் ஜமால் said...

நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது
]]

தூள் ...

சி தயாளன் said...

:-((

நட்புடன் ஜமால் said...

மனமும் மூளையும் இப்படித்தாங்க

எல்லா விடயத்திலும் போட்டி போடும்,

மூளை சொல்வதே சரியானதாக இருக்கும், இருப்பினும் நாம் மனம் சொல்வதையே கேட்ப்போம்.

குடந்தை அன்புமணி said...

மூளைக்கு என்னங்க... அதுபாட்டுக்கு ஆயிரம் கேள்விகளை கேட்டுவிட்டு கம்முன்னு இருக்கும். நம்ம மனசு படற அவஸ்தைகளை அறியாமல்... நம்ம மனசு சொல்றதைக் கேட்போம்.

இதைப் படித்ததும் மனசு கிடந்து அடிச்சிக்கிது. அப்படி எதுவும் நடந்திருக்கக்கூடாதுன்னு... (நிஜத்தில் நடந்ததா...?)

கோபிநாத் said...

:((

Admin said...

//பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........

அன்று
அந்தக் குட்டி
ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது..... //


அசத்திட்டிங்க...

Anonymous said...

பூங்கொத்து....rjn radhamanalan

தமிழ் said...

:((

பாசகி said...

நல்லாருந்துச்சு... கவிதையா மட்டுமே இருந்துட்டா

கார்க்கிபவா said...

:((((

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

//நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது///

அழகு...

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற ஒரு கவிதையை சமீபத்தில் படித்த ஞாபகம்.. ஆனாலும் கவிதை சூப்பர் :-)

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//மூளை சொல்வதே சரியானதாக இருக்கும், இருப்பினும் நாம் மனம் சொல்வதையே கேட்ப்போம்.//
உண்மைதான் ஜமால்!

அன்புடன் அருணா said...

குடந்தை அன்புமணி said...
//இதைப் படித்ததும் மனசு கிடந்து அடிச்சிக்கிது. அப்படி எதுவும் நடந்திருக்கக்கூடாதுன்னு... (நிஜத்தில் நடந்ததா...?)//
நிஜத்தில் பார்த்ததுதான்.....யாரிட்ம் கேட்டுத் தெரிந்து கொள்வது?

அன்புடன் அருணா said...

பாசகி said...
//நல்லாருந்துச்சு... கவிதையா மட்டுமே இருந்துட்டா//
கவிதை மட்டுமில்லே ...பாசகி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது..அருமை

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரொம்ப ரசித்து வாசித்தேன்.....

அருமையாக இருந்தது....

வாழ்த்துக்கள்...

Karthik said...

superb one still :(((

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
//உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்//
ஆஹா...பரிசா!!! வந்துட்டேன்!!!

kamaraj said...

இந்த உலகின் கடைசிச்சொட்டு
மனிதாபிமானமிருக்கிறவரை, பங்ரியாட்சைப்போல,
இயற்கையைப்போல, எல்லாச்சீரழிவுகளிலிருந்தும்
தன்னை சுத்திகரித்துக்கொள்ளும்.
கலைஞர்களும், கவிஞர்களும் அதை அடைகாப்பார்கள்.

அசத்தல் கவிதை அருணா மேடம்.

அன்பேசிவம் said...

இன்னொரு பூங்கொத்து, பிடியுங்கள்

தாரணி பிரியா said...

நிஜத்தில் நடந்ததா :(. அந்த குட்டி குழந்தைகாக வேண்டி கொள்வதை தவிர வேறு வழி :(

அன்புடன் அருணா said...

நன்றி டோன்'லீ,திகழ்மிளிர்,கார்க்கி,வசந்த்!!!

Btc Guider said...

கவிதை நன்றாக இருக்கிறது
உக்கார்ந்து யோசிப்பீங்களோ

அன்புடன் அருணா said...

Anonymous said...
/பூங்கொத்து....rjn radhamanalan//
நன்றிப்பா!

அன்புடன் அருணா said...

" உழவன் " " Uzhavan " said...
//இதுபோன்ற ஒரு கவிதையை சமீபத்தில் படித்த ஞாபகம்.. ஆனாலும் கவிதை சூப்பர் :-)//
அச்சோ...மண்டபத்துலே யாரும் எழுதித் தரலைங்க!!! என்னுடையதேதான்!!!

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது..அருமை//
நன்றிங்க T.V.Radhakrishnan !

அன்புடன் அருணா said...

Karthik said...
//superb one still :(((//
THANKS karthik...

அன்புடன் அருணா said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
//ரொம்ப ரசித்து வாசித்தேன்.....//
ரசித்துப் படிக்கணுமேன்னுதானே எழுதுகிறோம்...

அன்புடன் அருணா said...

kamaraj said...
//இந்த உலகின் கடைசிச்சொட்டு
மனிதாபிமானமிருக்கிறவரை, பங்ரியாட்சைப்போல,
இயற்கையைப்போல, எல்லாச்சீரழிவுகளிலிருந்தும்
தன்னை சுத்திகரித்துக்கொள்ளும்.
கலைஞர்களும், கவிஞர்களும் அதை அடைகாப்பார்கள்.//
ஒரு பின்னூட்டமே இவ்வ்ளோ அழகா???நல்லா எழுதுறீங்க!

அன்புடன் அருணா said...

முரளிகுமார் பத்மநாபன் said...
//இன்னொரு பூங்கொத்து, பிடியுங்கள்/
கொடுங்க...கொடுங்க!

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
//நிஜத்தில் நடந்ததா :(. அந்த குட்டி குழந்தைகாக வேண்டி கொள்வதை தவிர வேறு வழி :(//
அதே! அதே!

அன்புடன் அருணா said...

share market tips said...
//கவிதை நன்றாக இருக்கிறது
உக்கார்ந்து யோசிப்பீங்களோ//
share market படிக்கிறவங்க கவிதையெல்லாம் படிப்பாங்களா??

Unknown said...

யதார்தமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளீர்கள்.அந்த ஒற்றைச் செருப்பு தந்த தவிப்பை இப்போது என்னாலும் உணர முடிகிறது....

சத்ரியன் said...

//பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........//

அருணா,

உயிர் "ஒற்றைச் செருப்பிடமே நின்று கொண்டது". வெறும் உடல் மட்டும் பயணித்திருக்கிறது.

மனதைப் பிழியும் (கருப்பொருள்) கவிதை.

Anonymous said...

inniki antha otrai serppu en manadhudanum bayanikkum.......ninaivukaludan.....

Nalla kavithai Aruna!!Otrai seruppuku pooo,kavithaiku poongothu...

சி.கருணாகரசு said...

மனதில் பதிந்த எதுவும் அன்றைய நாள் முழுதும் நம்முடனேத்தான் பயனிக்கும் ந‌ல்லக்கவிதை... இந்தாங்க பூ...காடு.

ராமலக்ஷ்மி said...

//அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது//

ஆமாங்க, அதுவா இருந்திருக்கவே கூடாதென இறைஞ்சுவோம்.

//அன்று
அந்தக் குட்டி
ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது..... //

சில நினைவுகள் இப்படித்தான்!

அன்புடன் அருணா said...

anto said...
//அந்த ஒற்றைச் செருப்பு தந்த தவிப்பை இப்போது என்னாலும் உணர முடிகிறது....//
புரிதலுக்கு நன்றி ஆன்டொ!

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
//உயிர் "ஒற்றைச் செருப்பிடமே நின்று கொண்டது". வெறும் உடல் மட்டும் பயணித்திருக்கிறது.
மனதைப் பிழியும் (கருப்பொருள்) கவிதை.//
நன்றி ஷத்ரியன்!

அன்புடன் அருணா said...

பூவுக்கும் பூங்கொத்துக்கும் நன்றி ஆதிவாஸ்!

அன்புடன் அருணா said...

சி.கருணாகரசு said...
// ந‌ல்லக்கவிதை... இந்தாங்க பூ...காடு.//
அப்பாடா...இனிப் பூங்கொத்துக்களுக்காக...பூக்களுக்குப் பஞ்சமில்லை!அதுதான் பூக்காடே கொடுத்துவிட்டீர்களே!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//ஆமாங்க, அதுவா இருந்திருக்கவே கூடாதென இறைஞ்சுவோம்.//
அதே!..அதே!

அன்புடன் அருணா said...

நனறி தமிழ் மலர்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா