இந்த ஒரு வாரமும் சும்மா கலகலன்னு போச்சு. வந்தவங்கல்லாம் திரும்பி வந்தாங்க, வராதவங்கல்லாம் விரும்பி வந்தாங்க. ஒரே நேரத்துலே ஆன்லைன்லே 20 பேர் முதல் தடவையா பார்த்துருக்கேன். எப்போ பார்த்தாலும் ஒரே ஜே ஜேன்னு இருந்தது...
சரி நாமளும் "ஒரு வாரத்துக்கு ஷ்டாராயிட்டோம்லே"ன்னு பெருமையா பதிவே போடலாம்.
இதே மாதிரியான பதிவாலேதான் என் வலைப்பூவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க! அதனோட மலரும் நினைவுகள்.
அன்னிக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே !
அன்னிக்கு ஒருநாள் எங்க வீட்டுக்கு முதலை வந்துச்சே!
அன்னிக்கு ஒருநாள் பூசாரியாகிட்டோமில்லே!
இந்த வரிசையிலே கதாநாயகி, திருடன், முட்டாள், வில்லி(வில்லன் பெண்பால்) இப்படி நிறைய எழுதிருக்கேன்!
என் கவிதையில் பிடித்தது
கை விரித்துச் சிரித்தது மரம்!
உணர்வு பூர்வமான இடுகையில்
என் வீட்டுக் கதையிது
நகைச்சுவையில்
அதுவா??இதுவா??
என் கதையில்
குலோப்ஜாமுனும், சாமியும், எறும்பும்
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்
உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....
கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....
ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...
எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.
என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.
கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!!
சரி நாமளும் "ஒரு வாரத்துக்கு ஷ்டாராயிட்டோம்லே"ன்னு பெருமையா பதிவே போடலாம்.
இதே மாதிரியான பதிவாலேதான் என் வலைப்பூவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க! அதனோட மலரும் நினைவுகள்.
அன்னிக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே !
அன்னிக்கு ஒருநாள் எங்க வீட்டுக்கு முதலை வந்துச்சே!
அன்னிக்கு ஒருநாள் பூசாரியாகிட்டோமில்லே!
இந்த வரிசையிலே கதாநாயகி, திருடன், முட்டாள், வில்லி(வில்லன் பெண்பால்) இப்படி நிறைய எழுதிருக்கேன்!
என் கவிதையில் பிடித்தது
கை விரித்துச் சிரித்தது மரம்!
உணர்வு பூர்வமான இடுகையில்
என் வீட்டுக் கதையிது
நகைச்சுவையில்
அதுவா??இதுவா??
என் கதையில்
குலோப்ஜாமுனும், சாமியும், எறும்பும்
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்
உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....
கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....
ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...
எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.
என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.
கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!!
25 comments:
//கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....
கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....
ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்..//
அருமை அருணா. இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம். நிறைவான வாரம். மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சி வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்!!
vaalththukkal
இந்த வாரம் உங்க நட்சத்திர வாரம் ரொம்ப நல்லா இருந்துச்சு அருணா! வாழ்த்துக்கள். இப்ப பிடிங்க பூங்கொத்து!
CONGRATS
அருணா மேடம் இப்போதான் ஒருவார பதிவையும் படிச்சேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். பிடித்திருக்கின்றது, ஆக பூங்கொத்தைப் பிடியுங்கள்.
:-)
எல்லாமே ரசிக்கும்படியான பதிவுகள். எவ்வளவு பெரியவரானாலும், அன்றொருநாள்.. என்று ஆரம்பித்துச் சொல்வதில் சுவாரசியம் அதிகம்தான்!! :-)))
அழகான செய்தியுடன்...அருமையான பிரிவுரை! பிரிவோம்...சிந்திப்போம்...சந்திப்போம் !
பெரிய்ய்ய்ய பூங்கொத்து!
பறவைகளைப்போல விதைகள் சுமக்கிற கவிதை அழகு மேடம்.
அருமையான பதிவு...
எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
பூங்கொத்து!
ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...//
என்ன ஒரு அழகான வார்த்தைகள்.. அருணா நெகிழவைத்தீர்கள்.
-\\இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம். //
உண்மை ராமலக்ஷ்மியின் இந்தவார்த்தைகளைப்போல உலகம் துளிர்க்கட்டும்..
வாழ்த்துக்களோடு நன்றிகள் அருணா..
வாழ்த்துக்கள் அருணா! :)
வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!//
என்ன போறிங்களா? ஐ ஆம் வெயிற்றிங். உங்களின் அடுத்த பதிவிற்காக. ஆமாம் உங்களின் நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்துமே எங்களைக் கவர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை. இன்னும் நிறையப் பதிவுகளை நீங்கள் எங்களோ பகிர்ந்து கொள்ள வேண்டும் சகோதரம்.
நிறைவான வாரமாக இருந்தது அருணாமேடம்.
தமிழ்மண வாரம் ரொம்ப சிறப்பாக இருந்தது
வாழ்த்துக்களும் பூங்கொத்தும் :)
என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.//
வாழ்த்துக்கள்!
கொட்டிய பூவில் பூங்கொத்து செய்து கொடுத்து விட்டேன் அருணா.
சொல்றேன்.. சொல்றேன்..வாழ்த்துக்கள்..! பிரமாதம் நல்லா இருக்கு..!
உங்கள் பதிவை பாராட்டி ஒரு வியட்நாம் கவிதையை பரிசாக வழங்குகிறேன்.
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13
வாழ்த்துகள் அருணா...ஜொலித்தது நட்சத்திர வாரம்...
பதிவுக்கு நன்றி அருணா
உங்களுக்கு பூங்கொத்து
உங்களில் பூங்கொத்துக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் மை டியர் பிரின்சி!
சகோ,தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தொடரவும்.
//ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...
எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.//
அருணா மேடம்...
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
கவிதை நெஞ்சை வருடியது.. மிகவும் அருமை..
பிடியுங்கள் பூங்கொத்து... இன்னமும் நிறைய பூக்கள் மலரட்டும்..அவற்றை எடுத்து, தொடுத்து உங்களுக்கு பூங்கொத்து ஆக ஆக்கி தர!!!
அடுத்த பதிவு எப்போது வரும்?
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா