நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, October 9, 2009

அதுவா??????இதுவா??????


"என்னாங்க தோசை ஊத்தவா? இட்லியா?"
"தோசை"
மாவு நல்லா பொஙகி வந்துருக்குங்க...இட்லி ஊத்தவா?"
"ம்"
"தேங்காய்ச் சட்னியா? தக்காளிச் சட்னியா???"
"தேங்காய்ச் சட்னி"
தேங்காய் முத்திப் போயிருககு.....தக்காளிச் சட்னி வச்சுடவா?
"ம்"
காபியா ,டீயா???
"காபி"
"டீ காலைலேயே போட்டது இருக்கு தரவா?"
"ம்"
பையனை நீங்க ஸகூல்ல விட்டுர்றீங்களா? நான் விடட்டுமா???
"நீ விட்டுரும்மா...."
"ஏற்கெனவே லேட்டு............அந்த டேமேஜர் கத்துவார்....நீஙகளே விட்டுருங்க!"
"ம்"
"இன்னிக்கு தீபாவளி ஷாப்பிங் முடிச்சுரலாமா????????நாளைக்கா????
"இன்னிக்கு வேலை நிறைய.............நாளைக்கு பார்க்கலாம்"
அட வேலையோட வேலையா இன்னிக்கே முடிச்சுடலாம்...."
"ம்"
"அப்புறம் மதியம் என்ன வைக்க?"
"ஏதாவது வைம்மா.........."
"உங்களைப் போய்க் கேட்டேன் பாருங்க?
ஏங்க இப்பிடி இருக்கீங்க?
எதுலேயாவது முடிவெடுக்கிற தன்மை இருக்கா???
எல்லாம் என் நேரம்!!! எல்லாம் நானே முடிவு பண்ண வேண்டியிருக்கு!"

எப்பவும் போல நான் ஙே!!!!!

அட! இது விகடன் குட் ப்லாக்லெ!!! அவ்வ்ளோ நல்லாருக்கா??

51 comments:

ராமலக்ஷ்மி said...

சூப்பரு:))!

Bala said...

கலக்கல் போஸ்ட்...

கல்யாணமான ஆண் மகன்களின் பரிதாப நிலையை இந்த உலகத்துக்கு சொன்ன்னதுக்கு ரொம்ப நன்றி....

மொத்தத்துல ஆண்களுக்கு குடுக்க chance oh, choice oh குடுத்திடக்கூடாந்துங்கிரதுல ரொம்ப கவனமா இருக்கீங்க....

Anonymous said...

கலக்கல் போஸ்ட்...

கல்யாணமான ஆண் மகன்களின் பரிதாப நிலையை இந்த உலகத்துக்கு சொன்ன்னதுக்கு ரொம்ப நன்றி....

மொத்தத்துல ஆண்களுக்கு குடுக்க chance oh, choice oh குடுத்திடக்கூடாந்துங்கிரதுல ரொம்ப கவனமா இருக்கீங்க....

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா ஹா ரியலி ரொம்பா சிரித்தேன் அருனா. நீங்க மட்டும் இல்லை நிறைய வீட்டுல இந்த நிலைமைதான் எல்லாம் சொல்லிட்டு கடைசில ஔர் வார்த்தை சொன்னிங்க பாருங்க அதான் சிரிப்பை வரவழைத்தது. நல்ல தீபாவளி பதிவு.

Karthik said...

hehe.. sema post ma'am.. :D :D

Anonymous said...

aaha, Aruna? :(

AAna kadaisi varikal nadakrathu thaan ;)

Kirukkan said...

நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.....வீட்டின் ஜனாதிபதிகளை...

-
முடிவெடுத்த முடிவுகளுக்கு ம்ம்ம் கொட்டியே
மழுங்கி போனோர் சங்கம்.

-
கிறுக்கன்.

எம்.எம்.அப்துல்லா said...

யக்கா, இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :))))

கார்க்கி said...

ஹாஹாஹாஹா

கல்யாணி சுரேஷ் said...

உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. எல்லா வீட்டிலேயுமா இப்படி நடக்குது?

வால்பையன் said...

ஓ எல்லார் வீட்லயும் இப்படித்தானா!?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Rajakamal said...

எதனால் கல்யாணத்திற்கு பிறகு பெரும்பாலன ஆண்கள் இப்படி ஆகிவிடுகிறார்கள் மனைவி மேல் உள்ள பிரியமா? எல்லாம் அவள் பார்த்துப்பாள் என்ற நம்பிக்கையா இல்லை அடிவிழும் என்ற பயமா? அடுத்த பதிவில் தெளிவா எழுதுங்க அருணா.

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா

அது ஒரு ஃபார்மலிட்டிக்காக கேக்குறது

மற்றபடி மனைவிகள்தானே ராஜ்யம் நடத்துவது

எது செய்து கொடுத்தாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்..

சதங்கா (Sathanga) said...

//எது செய்து கொடுத்தாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்..//

எது சொன்னாலும் 'சரி'ன்னும் சொல்லப் பழகிக்கணும் :))) இப்படி பழகிட்டாலும் ...

//"உங்களைப் போய்க் கேட்டேன் பாருங்க?
ஏங்க இப்பிடி இருக்கீங்க?
எதுலேயாவது முடிவெடுக்கிற தன்மை இருக்கா???//

இப்பிடி 'நச்'னு ஒரு கொட்டு கட்சீல ... :)))

யாழினி said...

ஹா...ஹா...ஹா... கலக்கல்! :))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

செம செம செம

டீச்சர் ...

ஆரூரன் விசுவநாதன் said...

அட.....அட...அட.....


சரியாச் சொன்னீங்க போங்க........தென்னமோங் அம்முணி.....வாயத் தொறந்து எங்களால சொல்லமுடியலீங்....நீங்க சொல்லிபோட்டீங்.....

வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

ஏற்கனவே ஒரு பக்கம் ஆதி பயமுறுத்துறாரு... இந்தப் பக்கம் நீங்களா?
கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா?...

ஆனா காமெடியா இருக்கு, நம்மள வச்சு என்னைக்கு காமெடி பண்ணப் போறாங்களோ தெரியல?

ஆ.ஞானசேகரன் said...

///எப்பவும் போல நான் ஙே!!!!!///

ஙே!!...........

எல்லார் வீட்டிலேயும் இதேதானா????????????

Anonymous said...

அருணாஜி, எங்க வீட்லயும் இப்படித்தான் நடக்குது. கூடவே என் இல்லத்தரசி இன்னொன்னும் சொல்றாங்க, "எல்லாத்தையுமே உங்க கிட்டே டிஸ்கஸ் பண்ணிதான் பண்றேன். அப்படியும் நான் டாமினேட் பண்றதா சொல்றாங்க... ஹூம் என்ன பண்றது"

http://kgjawarlal.wordpress.com

R.Gopi said...

//ஏற்கெனவே லேட்டு............அந்த டேமேஜர் கத்துவார்....நீஙகளே விட்டுருங்க!"//

அட‌... நாங்க‌ கூட‌ இப்ப‌டிதான் அன்போடு கூப்பிடுவோம்...அதான் டேமேஜ‌ர்... ஹா...ஹா...ஹா....

//எல்லாம் என் நேரம்!!! எல்லாம் நானே முடிவு பண்ண வேண்டியிருக்கு!"

எப்பவும் போல நான் ஙே!!!!! //

ஹா...ஹா...ஹா...

இது ஒரு ந‌ல்ல‌ ஹாஸ்ய‌மான‌ ப‌திவு... கூட‌வே சுவார‌சியாமான‌தும் கூட‌...

அதெல்லாம் ச‌ரி... தீபாவ‌ளி ப‌ர்சேஸ் முடிஞ்சுதா, இல்லையா?? என்ன‌ ஸ்பெஷ‌ல்??

பிடியுங்கள் பூங்கொத்து, ஒரு அட்டகாசமான ஹாஸ்ய பதிவிற்கு....

கோபிநாத் said...

;))) குட் குட் ;)

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி,கார்த்திக்,கார்க்கி!

அன்புடன் அருணா said...

balasrini said...

/கல்யாணமான ஆண் மகன்களின் பரிதாப நிலையை இந்த உலகத்துக்கு சொன்ன்னதுக்கு ரொம்ப நன்றி..../
அது என் கடமைங்க!

/மொத்தத்துல ஆண்களுக்கு குடுக்க chance oh, choice oh குடுத்திடக்கூடாந்துங்கிரதுல ரொம்ப கவனமா இருக்கீங்க..../
அதே...அதே!

அன்புடன் அருணா said...

அட..பித்தனின் வாக்கு said...
/நல்ல தீபாவளி பதிவு./
அட? தீபாவளிக்கு வேற பதிவு வச்சிருக்கொம்லே!

Srivats said...

haha romba supera erukku, thambadhigal mathiyila epdi ellam nadaradha swarasayama ezudha ungalukku nalla varudhu :) deepavali pathivukku waiting :)

அன்புடன் அருணா said...

athivas said.../ AAna kadaisi varikal nadakrathu thaan ;)/
அப்பாடா.....ஒத்துக்கிட்டீங்களே!

அன்புடன் அருணா said...

Kirukkan said...

/ முடிவெடுத்த முடிவுகளுக்கு ம்ம்ம் கொட்டியே
மழுங்கி போனோர் சங்கம்./
முடிவெடுத்த முடிவுகளுக்கு ம்ம்ம் கொட்டியே
மழுங்கி போனோர் சங்கத் தலைவரே வருக!

அன்புடன் அருணா said...

கல்யாணி சுரேஷ் said...
/ உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. எல்லா வீட்டிலேயுமா இப்படி நடக்குது?/
ஹஹிஹி....எனக்குத் தெரியாதுங்க....
வால்பையன் said...
/ஓ எல்லார் வீட்லயும் இப்படித்தானா!?/
ஓ உங்க வீட்லயும் இப்படித்தானா வால்?!

அன்புடன் அருணா said...

Rajakamal said...

/Rajakamal said...

/ எதனால் கல்யாணத்திற்கு பிறகு பெரும்பாலன ஆண்கள் இப்படி ஆகிவிடுகிறார்கள் மனைவி மேல் உள்ள பிரியமா? எல்லாம் அவள் பார்த்துப்பாள் என்ற நம்பிக்கையா இல்லை அடிவிழும் என்ற பயமா? அடுத்த பதிவில் தெளிவா எழுதுங்க அருணா./
எழுதிடலாம்!

இன்றைய கவிதை said...

என்ன தனக்கு தானே சிரிக்கிறீங்க...?
இல்லம்மா...அன்புடன் அருணா ஏதோ எழுதிருக்காங்க...
முடிச்சிட்டீங்களா?
இல்லம்மா..சொல்லு அப்புறமா படிக்கறேன்...
பரவால்ல...நீங்க கண்டின்யூ பண்ணுங்க...
சரிம்மா!

அன்புடன் அருணா said...

ஆமாமா ஃபார்மாலிட்டிககுத்தான் வசந்த்!

அன்புடன் அருணா said...

எவனோ ஒருவன் said...
/ஆனா காமெடியா இருக்கு, நம்மள வச்சு என்னைக்கு காமெடி பண்ணப் போறாங்களோ தெரியல?/
சீக்கிரம் கல்யாணம் பணணிக்கிட்டா காமெடி பணணிடலாம்!!!

அன்புடன் அருணா said...

சிரிக்கத்தானே பதிவு அப்துல்லா, யாழினி,ஜமால்!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன் கோபி!

JACK and JILLU said...

சூப்பரு.....!

இய‌ற்கை said...

super akka....ithu unga veetla nadakaratha..:-))

அன்புடன் அருணா said...

சதங்கா (Sathanga) said..
/ இப்பிடி 'நச்'னு ஒரு கொட்டு கட்சீல ... :)))/
அச்சோ கொட்டெல்லாம் இல்லீங்கோ சதங்கா!

அன்புடன் அருணா said...

நன்றிங்க........kgjawarlal ,JACK and JILLU,ஆரூரன் விசுவநாதன் !

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
/ super akka....ithu unga veetla nadakaratha..:-))/
எங்க வீட்டுலே மட்டுமா??ஹிஹி!

அன்புடன் அருணா said...

நன்றி..கோபிநாத்!

Anonymous said...

ம்ம்ம்ம்ம் கொடுத்து வச்சவங்க எனக்குத் தான் இந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை...செம காமெடிங்க...

செந்தழல் ரவி said...

கலக்கல் !!!!!!!!

செந்தழல் ரவி said...

ஓட்டு போட்டாச்சு

அன்புடன் அருணா said...

Srivats said...
/ deepavali pathivukku waiting :)/
thanx Sri,தீபாவளி பதிவு போட்டுடலாம்!!!!!

அன்புடன் அருணா said...

தமிழரசி said...
/ ம்ம்ம்ம்ம் கொடுத்து வச்சவங்க எனக்குத் தான் இந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை/
சீக்கிரம் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

ஓட்டுக்கும் கருத்துக்கும் நன்றி ரவி.

பின்னோக்கி said...

எங்க வீட்டுல இன்னைக்கு காலைல கூட இதே தான் நடந்தது. நல்ல பதிவுங்க

T.V.Radhakrishnan said...

கலக்கல்

புலவன் புலிகேசி said...

//ஏங்க இப்பிடி இருக்கீங்க?
எதுலேயாவது முடிவெடுக்கிற தன்மை இருக்கா???
எல்லாம் என் நேரம்!!! எல்லாம் நானே முடிவு பண்ண வேண்டியிருக்கு!"//

முடிவு பண்ணிட்டுதான கேள்வியே???எங்கேந்து யோசிக்கறது???

psb said...

nice one..
Particularly for City man's life..

Bala

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா