நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, October 16, 2009

பத்தே நிமிடத்தில் தீபாவளி ஷாப்பிங்!

இன்னுமா முடியலை? சீக்கிரம்மா........" கொஞ்சம் அன்பைக் குழைத்துச் சொன்னாலாவது கேட்பாள் என்று...........ம்ம்மா என்று சொன்னேன்..
ஊஹும்....அவள் அசையக் காணோம்.

காலையில் 11 மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங்........மணி 5 இன்னும் முடியலை.அலைஞ்சு பார்த்தாதாங்க புரியும்.
இது பத்தாவது கடை.

"ஏங்க மூணாவது கடையில் பார்த்தோமே அந்தக் கலர் நல்லாருக்கா? இல்லே ஏழாவது கடையிலே பார்த்தோமே அந்த பச்சையா...இல்லே இது எடுத்துக்கவா??"

ஐயோ இன்னொரு தடவை மூணாவது கடைக்கும் ஏழாவது கடைக்குமா?
தாங்காதுப்பா.......அனிச்சையாய் "இது ரொம்ம்ப நல்லாருக்குமா" என்றேன்.

சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.
"ஏதுக்கும் மூணாவது கடைலே இன்னொரு தடவை பார்த்துடலாம்"என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்...

மூணாவது கடையிலும் என்னைச் சந்தேகமாவே பார்த்துவிட்டு ஏழாவது கடையில் ஒரு வழியாக அந்தப் பச்சைச் சேலையை எடுத்தாள்.........இன்னும் அந்தப் பச்சைக்கு மேச்சிங்காக இன்னும் பல ஐட்டம்களைத் தேர்ந்தெடுத்து முடிக்க மணி 9.

அப்பாடா ஒரு வழியாக முடிததாள்...
சாப்பிட்டுட்டே போயிடலாங்க ................ ரொம்ப டையர்டா இருக்கு........ " வேண்டாமென்றால் விடவா போகிறாள்.

"சரி வா....சாப்பிடப் போகலாம்"
"உங்களுக்கு இன்னும் ட்ரெஸ் எடுக்கலியே........."
ம்ம்ம்ம்....அந்த நினவாவது இருக்கேன்னு சந்தோஷப் படறதுக்குள்ளே

"அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!!

அனைருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

20 comments:

+VE Anthony Muthu said...

அட! தினம் ஒரு பதிவா.? ஜாலிதான். தினம் ஒரு கதை படிக்கலாம். வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள்... ஸேம் டூ யூ.

ஆ.ஞானசேகரன் said...

//"அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!!

அனைருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!//


எப்படி???????

ஆ.ஞானசேகரன் said...

தீபாவளி வாழ்த்துகல்

சந்தனமுல்லை said...

:-)

பித்தனின் வாக்கு said...

/ அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!! ///
ஹாஹாஹா இதுதான் தீபாவளி கணவனின் நிலை. நல்லா தமாசா இருந்தது. நல்ல வேளை உங்க கூட வந்த லேட்டுதான். ஒழுங்க துணி எடுக்க விடமாட்டிங்கனு திட்டாலயே.

rajan RADHAMANALAN said...

வாழ்த்துக்கள்!!!
http://kondralkaatru.blogspot.com/

அன்புடன் அருணா said...

+VE Anthony Muthu said...
/அட! தினம் ஒரு பதிவா.? ஜாலிதான். /
அட...லீவுல்லே... அதனாலே தினம் பதிவு போட முடியுது!!!!

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை , ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

நன்றி பிததனின் வாக்கு,Rajan Rathamanalan!

Karthik said...

:))

தீபாவளி வாழ்த்துக்கள் மேம்!!

R.Gopi said...

பத்தே நிமிடத்தில் தீபாவளி ஷாப்பிங்....

தலைப்பையே நம்ப முடியலியே... ஹா....ஹா...ஹா...

//காலையில் 11 மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங்........மணி 5 இன்னும் முடியலை.//

அதானே பார்த்தேன்... 5 மணிக்குள்ள ஷாப்பிங் முடியறதாவது...

//"உங்களுக்கு இன்னும் ட்ரெஸ் எடுக்கலியே........."
ம்ம்ம்ம்....அந்த நினவாவது இருக்கேன்னு சந்தோஷப் படறதுக்குள்ளே

"அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!!//

ஹா...ஹா...ஹா... வெறும் ப‌த்தே ப‌த்து நிமிஷ‌ம்தானா?? ஙே...

என்குறிப்பு : என் தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவிற்கு வ‌ருகை தந்து சிற‌ப்பு ப‌ரிசை பெற்று சென்ற‌மைக்கு ந‌ன்றி...

"ஸ்பெஷ‌ல் தீபாவ‌ளி ப‌ரிசு" வேண்டுவோர் இங்கே வ‌ர‌வும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

அன்புடன் அருணா said...

வாப்பா கார்த்திக்!.....தீபாவளி வாழத்துககள்!

KParthasarathi said...

romba nandraagavum vedikkaiyaagavum irukku.There is a natural humour and wit in your writings.
Happy Deepavali to you and your family

Anonymous said...

ஹாஹஹஹஹா பத்து நிமிஷமாவது தந்தாங்களே? சீக்கிரம் எடுங்கப்பா.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி கோபி!...நீங்க கொடுத்த தீபாவளி பரிசை வைத்துதானே தீபாவளி ஷாப்பிங்கே போனோம்!!!

R.Gopi said...

//அன்புடன் அருணா said...
வாழ்த்துக்கு நன்றி கோபி!...நீங்க கொடுத்த தீபாவளி பரிசை வைத்துதானே தீபாவளி ஷாப்பிங்கே போனோம்!!!//

Many thanks for your sportiveness Aruna Madam.. It was just for FUN, FUN and FUN only.

அன்புடன் அருணா said...

நன்றி தமிழரசி !

அன்புடன் அருணா said...

.Gopi said...
/ It was just for FUN, FUN and FUN only./
That's understood gobi!

பா.ராஜாராம் said...

:-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அது எங்க தலையெழுத்து.. என்னா பண்றது.?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா