சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்கள்....
பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்....போராட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்......
உண்ணாவிரதங்களை முடித்து வைத்தார்கள்......
மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........
காகிதங்கள் பல கையெழுத்திட்டார்கள்....
இதில் கேசம் சரியில்லை
இதில் ஒளி சரியில்லையென
புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு
வலைப் பூக்களில் வலையேற்றப்பட்டன...............
ஈழத்தமிழர்களின் தலையெழுத்தும்
சரியில்லைதான்............
40 comments:
:((
சில புகைப்படங்களை பார்க்கும்போது வருத்தமே மிஞ்சியது நம்ம ஊர்க்கார கோமாளிகளை நினைத்து...!
//இதில் கேசம் சரியில்லை
இதில் முகம் தெரியவில்லை
இதில் ஒளி சரியில்லையென
புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு//
இதுதான் முக்கியமாக இருக்கிறது:(! நல்ல கவிதை அருணா.
சிரித்து சால்வை போத்தும்போது கொலை வெறி வந்துச்சிங்க... நல்ல சாவே கிடைக்காது பாருங்களேன்!
பிரபாகர்.
உண்மை தான்!
:(((
நல்ல வேளை புகைப்படங்கள் பார்க்கவில்லை.
என்ன செய்வது எல்லாமே அரசியல்,
அரசியல் மட்டும் அரசியலாக இல்லை.
நல்ல கவிதை மேடம். எப்போதும் போல.
மனித மனங்கள் செத்துப்போனதற்குத் தலையெழுத்து என்ன செய்யும் நண்பரே...
Eezha thamizhargalin thalai ezhutthum sari yillai dhaan endru padikkum podhu varuttham dhaan minjugiradhu
ஈழத்தமிழர்களின் தலையெழுத்தே ...சரில்லன்னு எழுதுங்க தோழி.
:(((
ஆயில்யன் said...
/சில புகைப்படங்களை பார்க்கும்போது வருத்தமே மிஞ்சியது நம்ம ஊர்க்கார கோமாளிகளை நினைத்து...!/
அதே வருத்தம்தான் கவிதையாக.....ஆயில்யன்
நம்ம தலை எழுத்தும் தான்.. :(
:((
:(
அடங்காத ரெளத்திரம் மட்டும்...
கலக்கிட்டீங்க, மேடம்!
தமிழ், தமிழர், இது எல்லாம் எங்கள் சொத்துக்கும் சோத்துக்கும் தான் வேண்டும். ஈழத் தமிழனோ, இந்தியத் தமிழனோ, எக்கேடு கேட்டால் என்ன, எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் இருந்தால் போதும்.
- இது அரசியல் வ்யாதிகளின் நினைப்பு.
எங்கேயோ, எவனோ, எப்படியோ போகட்டும், எனக்கு இலவச டி.வி.யும் (அதில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியும்) கவரும் (அதில் கொஞ்சம் பணமும்) இருந்தால் போதும்.
- இது மர(மற அல்ல)த் தமிழனின் நிலை.
மிக மிக கேவலமான நிலை.
உங்கள் (என்னுடையதும்தான்) இறைவன் இவ்வுலகைக் காக்கட்டும்!
நன்றி கார்க்கி,வால்பையன்!
//மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........//
இவர்கள் எண்ணப் பேசலாம் என்று மட்டும் தான் யோசிப்பர்கலேத் தவிர, எப்படி தீர்க்கலாம் என யோசிக்க மாட்டார்கள்.......
hmm... Unmai thaan
;-(((
உங்க வருத்தம் புரிகிறது பிரபாகர்....
அதே ராமலக்ஷ்மி!
நன்றி கார்த்திக்.....
நன்றி பிரியமுடன் வசந்த்!
காமராஜ் said...
/அரசியல் மட்டும் அரசியலாக இல்லை./
எவ்வ்ளோ உண்மை....நன்றி காமராஜ்.
முனைவர்.இரா.குணசீலன் said...
/மனித மனங்கள் செத்துப்போனதற்குத் தலையெழுத்து என்ன செய்யும் நண்பரே.../
இதுவும் சரிதாங்க....
:-(
அதே வருத்தம்தான் எனக்கும் பார்த்தசாரதி சார்...
அதே ஹேமா....
வாங்க அப்துல்லா
வாங்க கார்த்திக்,சஞ்செய்,வசந்த்!
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/ உங்கள் (என்னுடையதும்தான்) இறைவன் இவ்வுலகைக் காக்கட்டும்!/
என் இறைவன் ,உங்கள் இறைவன் நம் இறைவன் ...யாராவது அவர்களைக் காக்கட்டும்!
ஈழத்தமிழர்களின் தலையெழுத்தும்
சரியில்லைதான்............
வாங்க புலவன் புலிகேசி, முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நன்றி Rajalakshmi Pakkirisamy !
நன்றி T.V.Radhakrishnan !
நன்றி rajan RADHAMANALAN , ஞானசேகரன்!
:-)
மனசாட்சிய கழட்டி வெச்சிட்டு வாழப் பழகறது எப்டின்னு இவங்க கிட்டதான்(அரசியல்வாதிகள்) கேட்டு படிக்கணும்..
ரொம்ப வருத்தமா இருக்குங்க தமிழர்களோட தலைஎழுத்த நெனைச்சா(இங்கயும் சேர்த்துதான் சொல்றேங்க)
//சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்கள்....
பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்....
போராட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்......
உண்ணாவிரதங்களை முடித்து வைத்தார்கள்......
மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........
காகிதங்கள் பல கையெழுத்திட்டார்கள்....//
அருணா,
அன்பாய் கூட "இப்படி" செருப்பால் அடிக்கலாம் தான்...! அவர்களில் எவனும் உப்பிட்டு உண்பதில்லையே. என்ன செய்யலாம்...?
நன்றி கலகலப்பிரியா, லெமூரியன்!
சத்ரியன் said...
/அருணா,அன்பாய் கூட "இப்படி" செருப்பால் அடிக்கலாம் தான்...!/
அன்பாய் அடித்தாலாவது கேட்பார்கள் என்றுதான் சத்ரியன்.....
:)))))
நன்றி பித்தனின் வாக்கு & விக்னேஷ்வரி
http://pudugaithendral.blogspot.com/2009/11/blog-post_05.html//
கோத்து விட்டாச்சு. சீக்கிரம் பதிவு போடுங்க
போட்டுர்றேன்...நீங்க சொலலி கேக்காம இருப்போமா தென்றல்??????
நல்லா கூப்பிட்டு முச்சந்தி வச்சு அடிக்கிறதுக்கு பதில் இப்படி ப்ளாக்ல வச்சு பளேர் விட்டதுக்கு ஒரு வாழ்த்து.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா