நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, October 15, 2009

கடவுளைக் கூட சேர்த்துக்க மாட்டோம்...வாணி அந்தப் பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தாள்......மெல்ல எழுந்து அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய் அதைத் தடவினாள்.....ஆயுதம் பிடித்துக் கொண்டிருந்தக் கைகளில் சிறியதாய் ஒரு கீறல்.கிட்டே போய் பார்த்தால் மட்டுமே தெரியக் கூடிய சின்னக் கீறல்..மனது கொஞ்சமாய் வலித்தது.....

எவ்வளவு பிடித்து வாங்கிய சிலை..இப்படிக் கீறல் விழுந்துடுச்சேன்னு வருத்தமாய் இருந்தது.அம்மா சொல்வாங்களே.....உடைந்த சிலையை வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.....பரவாயில்லை ...இருந்துவிட்டுப் போகட்டும் என வீட்டின் பின்கட்டில் தட்டுமுட்டுச் சாமான்களுடன் அந்த அழகுப் பிள்ளையாரைக் கொண்டு வைத்தாள்.

சாயங்காலமாய் வந்த தோழியிடம் இதைப் பற்றி சொல்லி வருத்தப் பட்டாள்...."ஆமாமா...எங்க அம்மா கூட சொல்வாங்க ...வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.."

"இப்போ இதை எங்கே வைப்பது..?அதான் பின்கட்டில் தூக்கிப் போட்டு விட்டேன்.."என்றாள் வாணி.

"வீட்டிலேயே இருக்கக் கூடாது வாணி..இதிலே பின்கட்டிலே என்ன? முன்கட்டிலே என்ன? "

"சாமி சிலையாச்சே? வெளியில் போட முடியுமா?...ஆனாலும் மனசு உறுத்திகிட்டே இருக்கு...இதை வீட்டில் வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோன்னு"

ஒண்ணு செய்யலாமா?.....பேசாமல் இதை நம்ம தெருமுனையிலே இருக்குற பார்க்குக்குப் பக்கதில் இருக்கும் மண்மேட்டில் வைத்துவிட்டு வந்துரலாம்"

"அப்படி வைக்கலாமா " என்றாள் பரிதாபமாய்.

"இதிலென்ன இருக்கு சிலைதானே? வாணி."

இருவருமாய் ஒருமாதிரி விழித்துக் கொண்டே சிலையைக் கொண்டு போய்...ஏதோ திருடப் போவது போல அரையிருட்டாய் ஆனவுடன் அந்த மணல் மேட்டில் வைத்துவிட்டு ஏதோ சாதனை செய்தது போல வீட்டிற்கு வந்தார்கள்...........

வாசலிலேயே வருண் "என்னையும் எங்கேயாவது கொண்டு வைச்சுடுவீங்களாம்மா?" என்றான் போலியோவினால் ஊனமான கைகளைக் காட்டி........

26 comments:

சந்தனமுல்லை said...

:((

+VE Anthony Muthu said...

டச்சிங்கான முடிவுதான். ஆந்திர மகிள சபாவில், நிறைய சிறுவர்களை இப்படிச் சந்தித்திருக்கிறேன்.

பெற்றோர்களால் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் இப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

Anonymous said...

:(

rajan RADHAMANALAN said...

:(

Karthik said...

கஷ்டமான கதையா இருக்கே!! :((

எனிவே, தீபாவளி வாழ்த்துக்கள் மேம்! :)

ராமலக்ஷ்மி said...

உருக்கம்!

பிரியமுடன்...வசந்த் said...

மனிதனுக்கு ஏற்படும் கீறல்களை சரிபண்ண முடியாத கடவுளை வீட்டை விட்டு துரத்தியதுதான் சரி...

அன்புடன் அருணா said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி,சந்தனமுல்லை, rajan RADHAMANALAN !

R.Gopi said...

//வாசலிலேயே வருண் "என்னையும் எங்கேயாவது கொண்டு வைச்சுடுவீங்களாம்மா?" என்றான் போலியோவினால் ஊனமான கைகளைக் காட்டி........ //

அருணா... இதை சாதாரணமாக படிக்க ஆரம்பித்தேன்...

கடைசியில வச்சீங்க பாரு ட்விஸ்ட்... யப்பா... களுக்கென்று கண்ணில் தானாக நீர் வந்தது....

ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க மேடம்...

பிடியுங்கள் ஒரு பூந்தொட்டி.......

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு அருணா madam. இருந்தாலும் கடைசி வரியில கலங்க வச்சுட்டீங்க.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு அருணா. Strong feeling said in a nice way.

Anonymous said...

கடைசிப்பத்தி - அந்த வருணின் கேள்வி, எல்லாவற்றையும் நிறுத்திவைத்துக் கேட்கிறது.

Rads said...

மனதை நெகிழ வைத்த, சிந்திக்கச் செய்த கதை.

வால்பையன் said...

செம டச்சிங் கதை!

kanchana Radhakrishnan said...

:-((

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

:( :(

பாலகுமார் said...

கடைசி வரி :( :(

அன்புடன் அருணா said...

நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள் உனக்கும் Karthik!

அன்புடன் அருணா said...

பூந்தொட்டிக்கு ரொம்ப நன்றி கோபி!

அன்புடன் அருணா said...

நனறி கலயாணி,வி்க்னேஷ்வரி!

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்கு. நல்ல பதிவு நன்றி.

ஊடகன் said...

//வாசலிலேயே வருண் "என்னையும் எங்கேயாவது கொண்டு வைச்சுடுவீங்களாம்மா?" என்றான் போலியோவினால் ஊனமான கைகளைக் காட்டி........ //

முடிவு சுபமாக இல்லாமல், சுமையாக இருந்தது.........

எதிர்கட்சி..! said...

):!

யாழிசை said...

நெகிழ வைக்கும் கதை

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கதை

anto said...

சிலைகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை ஆனால் அந்தக் குழந்தை....வலிக்கிறது...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா