நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, March 5, 2011

அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்...

அலமாரி திறந்து
கொள்ளையடிக்கும்
கள்ளத்தனத்துடன்
அம்மாவுக்குத் தெரியாமல்
நுகர்ந்ததுண்டு அப்பாவின்
வியர்வைச் சட்டை...

அம்மா தூங்கும் போது
அம்மாவுக்குத் தெரியாமல்
பொட்டு வைத்துப்
பார்த்ததுண்டு அம்மாவின்
நெற்றியில்...

யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் செருப்புக்குள் கால்
நுழைத்து ஒரு நடை நடந்து
பின் துடைத்து
அதே இடத்தில்
வைத்து விடுவதுண்டு

அப்பாவின் துண்டுடன் 
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...

நடு இரவில் போர்வைக்குள்
முகம் புதைத்து
அப்பா என ரகசியமாய்
அழைத்துப் பார்ப்பதுண்டு...

அப்பா புகைப்படத்தில்
வைத்த பொட்டை அழித்து
அப்பாவைத் திருப்பிக்
கொண்டுவர நினைத்ததுண்டு...

மரணமே நிகழாத வீட்டில்
இருந்து ஒரே ஒரு பிடி
கடுகு வாங்கி வர
வீதி வீதியாய் அலைந்ததுண்டு....

பசிக்கும் கொலைப்
பட்டினியில் காலி
அரிசி டப்பா பார்த்து
"என்னமோ தெரியவில்லை
இப்போலாம் பசிப்பதேயில்லை"
எனப் பொய் சொல்வதுண்டு
அம்மாவிடம்...

தூங்குவது போல நடிக்கையில்
தலை வருடும் கைகளும்
அடிக்கடி அம்மாவின் கன்னம்
நனைக்கும் நீரும் சொல்லியது....

"எனக்கு எல்லாம் தெரியுமென்று"...

46 comments:

தாராபுரத்தான் said...

அப்பாக்களின் அருமை தெரியுதுங்களா..

ஆரூரன் விசுவநாதன் said...

ஆழப் பெருமூச்சு ஒன்றையே தரமுடிகிறது. அதுசொல்லும் பல கதைகளை....ம்ம்ம்....

வாழ்த்துக்கள்

மாணவன் said...

அப்பாவின் இழப்பின் அருமையை புரிய வச்சிட்டீங்க நெகிழ்வான வரிகள்....

நேசமித்ரன் said...

நல்லாருக்குன்னு சொல்லிட்டு கடந்து போக முடியாத வரிகள்

middleclassmadhavi said...

நமக்கு எத்தனை வயசானாலும் அப்பான்னா அப்பாதான்!

மனம் திறந்து... (மதி) said...

//நுகர்ந்தது... அப்பாவின்
வியர்வைச் சட்டை...//

//அப்பாவின் துண்டுடன்...
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுதது...//

//நடு இரவில்...
அப்பா என ரகசியமாய்
அழைத்துப் பார்ப்பது...//

ஹலோ..! யார் சொன்னது? அப்பா இறந்துட்டார்னு? சுத்தப் பொய்! இன்னுமா நம்பறீங்க!
அது சரி, உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? ஒரு அப்பா இறந்துட்டார்னு சொல்லி எங்க எல்லாரையும் கொன்னுட்டீங்களே தாயீ! இது "corporal punishment" க்கும் மீறின கொடுமையா இருக்கே டீச்சர்?! :)))))))))

Ramani said...

வந்தீங்க படிச்சீங்க சும்மா
பார்த்துவிட்டுப் போகாதீங்கன்னு
எழுதியிருக்கிறீர்கள்
அப்படி சும்மா போகும்படியாகவா
கவிதை எழுதியிறிக்கிறீர்கள்
உண்மையில் படித்து முடித்த
கொஞ்ச நேரம் எனக்கு எதுவுமே ஓடவில்லை
உணர்வுகளை உலுக்கிப் போகும்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

பின்றீங்க அருணா..

பூங்கொத்துகள்..

Chitra said...

அப்பாவின் துண்டுடன்
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...


....இந்த வரிகளை வாசிக்கும் போது, ரொம்ப அழுதுட்டேன்ங்க... எங்க அப்பாவை நினைத்து......

jothi said...

சான்சே இல்லை,.. அருமை,.

ப‌ல‌ இடங்க‌ளில் விழி ஓர‌ங்க‌ள் ஈர‌மாவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை,..

பிடியுங்க‌ள் பூந்தோட்ட‌த்தை,..

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ராஜ ராஜ ராஜன் said...

மனசை என்னவோ செய்யுதுங்க...

ஆழமான கவிதை. ரொம்ப பாதிச்சிட்டீங்க.

ஹேமா said...

சொல்ல வார்த்தைகளே இல்லை டீச்சர்.அழவைத்துவிட்டீர்கள் !

பாச மலர் / Paasa Malar said...

அப்பா நினவுகள்..நெகிழ்ச்சி

பேனாக்காலம்...அது நம் நிலாக்காலம்....இது நம் மகள்களின் ஜெல்பேனாக்காலம்..

உதய்ப்பூர் புகைப்படத்தொகுப்பு...சரித்திர அழகு...ம்ம்ம்ம் பேசாம மன்னர் காலத்திலேயே வாழ்ந்திருக்கலாமோ?!

karu said...

thannai varudthi pillaikalai kaappavane thanthai.

Nesan said...

அப்பாக்களின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை பின் அந்தவெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியாது  சேரன் அற்புதமாக தவமாய்தவமிருந்து படத்தில் காட்டியிருப்பார்.இதயம் கணக்கிறது தந்தையை எண்ணி வாழ்த்துக்கள்

sakara said...

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

மெய் ம‌ற‌ந்து ர‌சிக்கும் வேளையில் சொல்வ‌த‌ற்கோ அல்ல‌து கொடுப்ப‌த‌ற்கோ ஒன்றுமில்லை!!! அருணா!!

செல்வ கருப்பையா said...

//மரணமே நிகழாத வீட்டில்
இருந்து ஒரே ஒரு பிடி
கடுகு வாங்கி வர
வீதி வீதியாய் அலைந்ததுண்டு....//

அற்புதமான கவிதை.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ... நீங்கள்தான் எனக்கு முதல் முதல் பின்னூட்டமிட்டவர். :-)

சுல்தான் said...

அப்பாவின் நினைவில் வாழும் அருமை மகளின் கவிதைக்காக பூங்கொத்து

மோகன் கந்தசாமி said...

முழுமையாக படித்து முடிப்பதற்குள் என் தாவு தீர்ந்தே விட்டது. தொண்டை கம்முகிறது. கமென்ட் போட்ட வேகத்திலேயே விலகுகிறேன் உங்கள் பதிவிலிருந்து. அருமையான கவிதை.

வசந்தா நடேசன் said...

மனதை நோகவைத்த அற்புதக்கவிதை, பகிர்ந்தமைக்கு நன்றி..

மாதேவி said...

மனத்தைத்தொடும் நினைவுகள்.

ஈரோடு கதிர் said...

இவ்வளவு கனமாய் மனதிற்குள் வலியை
இறக்கி வைக்க முடியுமா எழுத்தால்!!!

சுந்தரா said...

மனதை உலுக்கிய கவிதை அருணா.

வேற என்ன சொல்றதுன்னுகூடத் தெரியல.

டக்கால்டி said...

கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்களில் கண்கலங்கினால் எப்படி இருக்கும்?
அதனால தான் சொல்றேன், கவுண்டரை அழ வைக்காதீங்க?

அப்பாதுரை said...

என் பிள்ளை இப்படிப் பாடுமா? அதற்கான தகுதியை பெற்றிருக்கிறேனா?
சிந்திக்க வைத்தன உங்கள் வரிகள்.

goma said...

மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்

Anonymous said...

I did not open this for many days assuming that it was going to be a sentimental Tamil prose bilge. I am surprised to see a Tamil prose poem well written. About the poem:

I don't get the last 2 stanzas accurately.

Did the writer tell her mother: 'I don't have appetite nowadays", which was a lie ?

How does it connect with the overall theme of the poem: The recollections of an affectionate father and years passed under him?

Last stanza, too, is confusing: Did the writer get caressed by her mother during the pretended sleep ? Did the mother seem to say: 'I know all'?

Again, how does it get connected to the over all theme of the loss of an affectionate father ?

Barring the last two stanzas, the poem comes across an excellent elegy to a father.

I liked the first 4 as they recollect childhood pranks; I wished you confined only to childhood pranks throughout the poem.

A very good poem. With certain modifications, you may like to send it to a Tamil magazine like AV so that it will get wider readership.

thambii said...

அட அருமை

இராமசாமி said...

கவிதைய படிச்சு முடிச்ச பின்னே வாயடச்சு போயி நிக்கிறேன்... கவிதையோட ஒவ்வொரு வார்த்தையும் மனச சுத்திகிட்டே இருக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு..

tshankar89 said...

அப்பாவின் நினைப்பே ஒரு சந்தோசத்தையும் வலிமையையும் ஒன்று சேர கொடுக்க வல்லது. மிக நன்றாக எழுதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள்.
மறைந்த என் தந்தையின் நினைவலைகளை மீண்டும் அசை போடுகின்றேன்....

சங்கர நா. தியகராஜன்
நெதர்லாந்து

BONIFACE said...

என்ன சொல்றதுன்னு தெரியலைங்க,,,,நெகிழ வெச்சுட்டிங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மனதை கனக்க செய்யும் வரிகள்

நிரூபன் said...

அப்பாவின் துண்டுடன்
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...//

அருமையான வரிகள். நெஞ்சைத் தொட்டு, மன உணர்வைக் கிளறி, கண்ணீரை வரவழைக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அருணா, அழுவதற்கும் ஒரு சுதந்திரம் வேண்டும்.உங்கள் கவிதை படித்த போது அது கிடைத்தது. நான் அப்பாவுக்குக் கடிதங்கள் எழுதிவைத்திருக்கிறேன்.
என்னிடமிருந்து ஒரு உதவியும் எதிர்பார்க்காமல் கடனாளியாக்கிவிட்டுப் போனியே அப்பான்னு;(

வெகு அருமை.உங்கள் சோகம் தணியட்டும்.

Anonymous said...

அருணா
15 நாட்க‌ளுக்கு முன் புற்று நோய்க்கு அப்பாவை இழ‌ந்து த‌விக்கிறோம்.
நீங்க‌ செய்த‌ மாதிரி தான் நானும் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை பைத்திய‌ம் மாதிரி செய்கிறேன்.

சில‌ நாட்க‌ளுக்கு முன்
இ ந்த‌ வினாடி
உங்க‌ளுட‌ன் நாங்க‌ள்
என்ன‌ப்பா சொல்ல‌ நினைத்தாய்
எங்க‌ளிட‌ம்

ஊரிலிருந்து வ‌ந்த‌வுட‌ன்
சின்ன‌ப் பிள்ளை மாதிரி
என் கையைப் பிடித்துக் கொண்டாயே..


பீரோவில் க‌லையாம‌ல் உன்
ஆடைக‌ள் ம‌ட்டும்
உடை மாற்ற‌ சென்று
ச‌ட்டையை எடுத்து
அப்ப‌டியே ச‌ரிந்தேனேப்பா..

ஏய் க‌ழுத‌..
அழாத‌ன்னு சொல்லும் உன்
குர‌ல் எங்க‌ப்பா..

ஏன்ப்பா என்னைப் பார்த்து
சிரித்தாய்...?

என் பேரை ம‌ட்டும் ஏன்ப்பா
சொல்லிக் கிட்டே இருந்த‌..?

நீ இல்லாம‌ல் வீடே
ந‌ல்லால்ல‌ப்பா

நான் ஊருக்கு கிளம்பும் போது
அப்பா வ‌ரேன்ப்பா.. என‌
ச‌த்த‌மில்லாம‌ல் சொல்லி
யாருக்கும் தெரியாம‌ல்
விசும்புகிறேன்ப்பா..


திரும்ப‌ திரும்ப‌ உன்னைப்
ப‌ற்றியே நீள்கிற‌து எங்க‌ளின்
நினைவ‌லைக‌ள்..

க‌விதா

நானானி said...

பெற்றோரின் அருமை இருக்கும் போது தெரிவதில்லை. மனதைப் பிசையும் வரிகள்.
கொட்டிய வரிகளோடேயே உங்கள் சோகமும் வெளியே கொட்டட்டும்...மனம் லேசாகட்டும்.

தருமி said...

ஒரு அப்பாவாக ... அழகு.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு அருணா.

சுந்தர்ஜி said...

மிகவும் தாமதித்துவிட்டேன் நல்ல ஒரு கவிதையை முகர.

தாயுமானவனுக்காய் ஒரு தாயின் கவிதை.

மேன்மையான உணர்வுகளைச் சொல்லும் ஈரக் கவிதை அருணா.

அன்புடன் அருணா said...

மனம் திறந்து... (மதி) said...
/ ஹலோ..! யார் சொன்னது? அப்பா இறந்துட்டார்னு? சுத்தப் பொய்! /
உண்மைதான்...
/அது சரி, உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? ஒரு அப்பா இறந்துட்டார்னு சொல்லி எங்க எல்லாரையும் கொன்னுட்டீங்களே தாயீ! இது "corporal punishment" க்கும் மீறின கொடுமையா இருக்கே டீச்சர்?! :)))))))))/
அய்யய்யோ....
தாராபுரத்தான்
ஆரூரன் விசுவநாதன்
மாணவன்
நேசமித்ரன்
middleclassmadhavi
Ramani
அமைதிச்சாரல் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

பாச மலர் / Paasa Malar said...
/ உதய்ப்பூர் புகைப்படத்தொகுப்பு...சரித்திர அழகு...ம்ம்ம்ம் பேசாம மன்னர் காலத்திலேயே வாழ்ந்திருக்கலாமோ?!/
எனக்கும் அப்பிடியெ தோன்றும்!
செல்வ கருப்பையா said...
/ உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ... நீங்கள்தான் எனக்கு முதல் முதல் பின்னூட்டமிட்டவர். :-)/
அட! அப்பிடியா???
Chitra
jothi
ராஜ ராஜ ராஜன்
ஹேமா
சுல்தான்
karu
Nesan
sakara அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

டக்கால்டி said...
/கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்களில் கண்கலங்கினால் எப்படி இருக்கும்?
அதனால தான் சொல்றேன், கவுண்டரை அழ வைக்காதீங்க?/
கவுண்டருக்கும் அன்பு பாசம்,சென்டிமென்டடெல்லாம் இருக்கும்தானே டக்கால்டி
சுல்தான்
மோகன் கந்தசாமி
வசந்தா நடேசன்
மாதேவி
ஈரோடு கதிர்
சுந்தரா
அப்பாதுரை
goma அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Jo Amalan Rayen Fernando said...
/ I don't get the last 2 stanzas accurately./
Did the writer tell her mother: 'I don't have appetite nowadays", which was a lie ?
/How does it connect with the overall theme of the poem: The recollections of an affectionate father and years passed under him?/
/ Again, how does it get connected to the over all theme of the loss of an affectionate father ?/
This poem directly says about the recollection of the affectionate father but at the same time it indicates the love towards the mother , not to make her mother cry by showing her emotions.
/ A very good poem. With certain modifications, you may like to send it to a Tamil magazine like AV so that it will get wider readership./
Thank you for the advice.I've stopped sending to magazines after started writing blog.

isakki said...

oh aruna, wonderful job! hats off to u.

Rollond Rosario said...

A VERY TEARFUL

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா