நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 1, 2011

கண்ணாடி வீட்டுக்குள் குடியிருக்கிறோம்!

வாழ்வுதான் எவ்வளவு எளிதாக மாறி விட்டது.எந்தக் கொண்டாட்டமானாலும் உலகின் எந்த மூலையிலிருப்பவருடனும் உடனடியாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளலாம். கொண்டாட்ட புகைப்படங்களை எல்லா சமூக வலைத் தளங்களிலும் போட்டுக் கொண்டு சந்தோஷப்பட்டுக்கலாம். உதவி வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளலாம், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிக் கொள்ளலாம்.

இங்கே பாருங்கள் இது நான்தான்...என் இஷ்டங்கள் இவைதான்...எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்...இந்தப் படம் பிடிக்கும் என்று தெரிவித்துக் கொள்ளலாம். அப்புறம் அதே பாட்டும் படமும் யாருக்கெல்லாம் பிடிக்கிறது என்று சரி பார்த்துக் கொள்ளலாம். எனக்குப் பிடித்ததை நீங்களும் பாருங்கள் எனப் பகிர்ந்து கொள்ளலாம்.

அப்புறம் இது என் கருத்து என்று உரக்க கூவிக் கொள்ளலாம்.ஏன் என் கருத்தோடு ஒத்துப் போகவில்லையென சண்டை பிடிக்கலாம். இது எனக்குப் பிடித்திருக்கிறது என்று பிடித்தவைகளைப் பகிரலாம். இது எனக்குப் பிடிக்கவில்லையெனவும் காட்டிக் கொள்ளலாம்.

என்னோடு சிரியுங்கள் என்று ஜோக்கடிக்கலாம். என் கஷ்டங்களைச் சொல்லி அழுது தீர்க்கலாம். என்மேல் பரிதாபத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.அடுத்தவரின் மேல் கோபத்தைக் காட்டிக் குமுறிக் கொள்ளலாம். அடுத்தவரின் கேரக்டர் அஸாசினேட் செய்து கொள்ளலாம்.நட்பு நட்பு என்று உருக வைக்கலாம்....உருகிக் கொள்ளலாம்.

என்ன வாங்கினாலும் பகிர்ந்து கொள்கிறோம்.ஒரு காமெராவிலிருந்து கார் வரை வாங்கும் பொருட்களைப் புகைப்படத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.பகிர்ந்து பெருமைப் பட்டு கொள்வதற்காகவே வாங்கிக் கொள்கிறோம்.புதுப் புது இடங்களுக்குப் போய் வித விதமாய் போஸ் கொடுத்துப் புகைப்படமெடுத்துக் கொள்ளுகிறோம்.பகிர்வதற்காகவே புது இடங்களுக்குப் போகிறோம். என்னைப் பற்றி, நானைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில், மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதின் ஆனந்தம் அலாதிதான்.

ஆனால் இதில் எல்லாமே தன்னை முன்னிலைப் படுத்தியும்,நான் இப்படித்தான் என்று என் "நானை" வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்தியாகவே தோன்றுகிறது.இந்த நானில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதுவும் கேள்வி.பொதுவில் வைக்கும் அத்தனை கருத்துக்களும்,பகிர்ந்து கொள்ளும் அத்தனை எண்ணங்களும் 100 சதவிகிதம் உண்மையாகவோ,100 சதவிகிதம் பொய்யாகவும் இருந்து விடுவதில்லை.

தன்னைக் கட்டற்றவர்களாகவும்,உணர்ச்சி மிக்கவர்களாகவும் காட்டிக் கொள்வதில்தான் எவ்வ்ளோ ஆர்வம். என் இருத்தலை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தத் துடிக்கும் ஆர்வம். இது நான்....இந்த நானுக்கு இதெல்லாம் பிடிக்கும்,இதெல்லாம் பிடிக்காது என ஊருக்குச் சொல்லும் ஆசை. இந்த வெளிப்பாடு பொது இடத்தில் மெல்ல மெல்ல உங்களைப்பற்றிய ஒரு உருவத்தை நீங்கள் அறியாமலே உருவாக்குகிறது. ஒட்டு மொத்தமாக உங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் உங்கள் பலவீனமும் சேர்ந்தேதான் வெளியேறுகிறது. பொது இடங்களில் அனைவருமே நமக்கு வேண்டியவர்களாகவே இருந்து விடப்போவதில்லை.

ஆகவே உங்களை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்வதில் கொஞ்சம் கடிவாளம் போட்டுக் கொள்ளுங்கள்.இப்போதெல்லாம் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பவர்கள் உங்களைப்பற்றி அறிந்து கொள்ள இந்தமாதிரி சமூகவலைத் தளங்களை உபயோகித்துக் கொள்கிறார்கள். நீங்கள் பகிரும் பாடல்கள்,படங்கள்,வீடியோக்கள்,கருத்துக்கள்,உங்கள் நடவடிக்கைகள்,நீங்கள் நேர்முகத்தேர்வுக்குப் போகும் முன்பே உங்களைப் பாதி உருவில் அவர்களைச் சேர்ந்து விடுகிறீர்கள்.

டீனேஜ் குழந்தைகள் சாப்பாடு,தண்ணீர்,பாடம், வெளி உலகம் மறந்து சமூக வலைத்தளங்களே கதியென் இருக்கிறார்கள்.வலைத்தளங்கள் உபயோகிக்க முடியாத நேரங்களில் எப்போதும் ஒரு பதற்றம் தென்படுகிறது செயல்களில். சில சமயங்களில் நிகழ்காலத்தில் வாழ மறந்து ஃபேஸ் புக்கிற்காக வாழவும் ஆரம்பித்து விடுகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

எல்லாவற்றிலும் ஒரு வரைமுறை இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நினைவு படுத்தவும் செய்யுங்கள். ஒரு பெற்றோர், ஏன் எந்த நேரமும் இணையத்திலிருக்கிறாய் எனக் கேட்டதற்கு விபரமான பிள்ளை சொல்லியிருக்கிறது. இப்போலாம் எல்லா நோட்ஸும் ஆன்லைனில்தான் மேம் தருகிறார்கள் என்று. திடீரென்று ஒருநாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் பெண் சொன்னாள்..."அம்மா இஷா ஃபேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்காளான்னு பாருங்க....கொஞ்சம் ஹோம் வொர்க் டிஸ்கஸ் பண்ணணும்"நான் ஙே!

மாலன் சொன்னது போல "கொஞ்சம் கொஞ்சமாக நாம் கண்ணாடி வீட்டுக்குள் குடிவந்து விட்டோமோ என்றுதான் தோன்றுகிறது..கல் வீடுகள் எதையும் தாங்கும் சக்தி கொண்டது.கண்ணாடி வீட்டுக்குத் தாங்கும் சக்தி கிடையாது உடைந்து விடும்."கையாள வேண்டும் கவனமாக.

60 comments:

Ramani said...

அருமையான தலைப்பு
படைப்பைப் போலவே
உள்ளிருந்து கல் எறிந்தாலும்
வெளியிலிருந்து கல் எறிந்தாலும்
உடையப்போவது கண்ணாடிதானே
நம் வாழ்க்கைக் கண்ணாடியும் அப்படித்தானே!
நல்லபதிவு.தொடர வாழ்த்துக்கள்

நசரேயன் said...

பூங்கொத்து

கலாநேசன் said...

பூங்கொத்து...

மனம் திறந்து... (மதி) said...

கண்ணாடி வீடு என்பதை விட கண்ணாடிச் சாலைகள், தடங்கள், தளங்கள் அடங்கிய கண்ணாடி உலகம் உருவாக்கப் படுவதாகவே எனக்குப் படுகிறது! நான் செல்லும் இடமெல்லாம் நான் தெரிய வேண்டும், மற்றவர்களும் ஏறக் குறைய என்னைப் போன்றே தோன்ற வேண்டும், மற்றவர்களும் அப்படியே நினைப்பதால் பெரும்பான்மையினருக்கு என்னைப் பிடிக்கும், பிடிக்க வேண்டும் என்ற போக்கைப் பார்க்க முடிகிறது. நீங்கள் சொன்னபடி, நிஜத்தைப் பிரதிபலிக்கும் திறன் வாய்ந்த இந்தக் கண்ணாடிகளின் உண்மை நிலை இதுதான்: ஒரு புறம் எதிரில் வைக்கப் பட்ட நிஜத்தை மட்டுமே பிரதிபலித்து ஒரு மாய பிம்பத்தையும் , மறுபுறம் ஒளி ஊடுருவ முடியாத, சிவந்த பாதரசப் பூச்சையும் ஏந்தி நிற்கின்றன. இது எந்த அளவு ஆரோக்கியமானது, நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் என்பன கோடிப் பொற்காசுகளைப் பரிசாகப் பெறவல்ல கேள்விகளாய் விசுவ ரூபம் எடுத்திருக்கின்றன!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அம்மா இஷா ஃபேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்காளான்னு பாருங்க....கொஞ்சம் ஹோம் வொர்க் டிஸ்கஸ் பண்ணணும்"//

why blood ..same blood..
ஙே!:)

shreyas said...

பெங்களூரில் உள்ள எல்லா பூங்கொத்தும் இன்று உங்களுக்கெ.

மாணவன் said...

தலைப்பே கட்டுரையின் சிறப்பை சொல்கிறது யதார்த்த வரிகளில் சூப்பர்

வாழ்த்துக்களும் பூங்கொத்துகளுடன்... மாணவன் :)

VELU.G said...

யதார்த்தமான உண்மைகள்

சிலவிஷயங்களை கம்பி மேல் நடப்பதைப் போல சர்வ ஜாக்கிரதையாத்தான் கையாள வேண்டியிருக்கிறது

புதுகைத் தென்றல் said...

ஆமாம்,

ஸ்டேடஸ் மெசெஜ் கொடுக்காவிட்டால் ஏதோ பெறும் குற்றம் செஞ்சது போல மருகுவதைப் பார்த்திருக்கிறேன்.

அக்கறையுடனான பகிர்வுக்கு நன்றி.

இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடட்டுமா?
நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலில் ஆரம்பித்து பதிவு முடியும் வரை விடாமல் வாசிக்க வைக்கும் வசீகர எழுத்து...

சுந்தரா said...

//கல் வீடுகள் எதையும் தாங்கும் சக்தி கொண்டது.கண்ணாடி வீட்டுக்குத் தாங்கும் சக்தி கிடையாது உடைந்து விடும்."கையாள வேண்டும் கவனமாக.//

பெற்றவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம்...

மிக நல்ல பதிவு அருணா.

பூங்கொத்து!

புதுகைத் தென்றல் said...

தமிழ்மண ஆசிர்யருக்கு வாழ்த்துக்கள்.

பூங்கொத்து

Chitra said...

.கண்ணாடி வீட்டுக்குத் தாங்கும் சக்தி கிடையாது உடைந்து விடும்."கையாள வேண்டும் கவனமாக.

....தெளிவான கருத்து. நல்ல பதிவுங்க... பிடிங்க பூங்கொத்து! :-)

தவறு said...

சரியா சொன்னீங்க அருணா..

Jo Amalan Rayen Fernando said...

Social networking is not that bad as you make out to be.

The urge to listen, to care, to share is as old as humanity itself. It is in fact the very basis of human civilistion to come together as a community, then go on constructing societies and civilisations.

Today the rapidly developing technlogy has helped the primitive urge to be known to all. That made you concerned.

I have a son who has face book entry. He discusses with his classmates, not only subjects, but also, all items that fancy him or his classmates, for e.g the Lady Gaga.

He scored 9.6 in X. He is doing brilliantly well in his class XI in all subjects. He is happy and confident.

I and my wife never interfer with his online behaviour or habits. I also read many horror stories about teenagers getting trapped by online tricksters. When we told him about that, he said: "I know abt that more in detail than you both. I can take care of myself. Please take care of yourselves"

Trust your child. Give adequate freedom. Facilitate an atmoshere of informtion at home. Let them explore life. The powers of judging the right and wrong should be developed in them. We, as parents, are not full of wisdom. So, we need to show where such wisdom will be available - both on line and off line.

In your case, you are treating a 9th class girl, your daughter, as a child. She is not. She is an individual, in her own right, and deserves to be treated with full recognition and responses as such. When you respond to her, it should be like you respond to an adult.

By treating our grown up children like adults, we instil in them confidence which enhances their self esteem and self concept. The result will be happier one, namely, they will take responsibility for their own actions, right as well as wrong. If wrong, they know why it is so; and why it should not be repeated.

My wife says, when our son is around at home, we need not worry. He will guide us !

Wordsworth wrote: Child is the father of man.

Your daughter should grow to become your mother soon.

I disagree with your over cautiousness. I agree only to an extent that soical networking can be lethal for immature minds. Whether your child is mature or immature depends upon what you are. Not what society is. To forbid a 9th class child from discussing with her classmater online abt her subjects, or even her fancies, is not a mature conduct.

Harsh words! Let me see whether it gets to see light here.

Thx.

ஆர்.சண்முகம் said...

பூங்கொத்து

மாதேவி said...

"கவனமாகக் கையாள வேண்டும்" மிகவும் சரி.

"ஹோம் வொர்க் டிஸ்கஸ் பண்ணணும்" ஆமாம் எல்லாம் இப்படித்தான் ஆகிவிட்டது.

துளசி கோபால் said...

ஒரே ஒரு நன்மை. வேஷம் போடத்தேவை இல்லை. எல்லாம் பளிச்!!!!!

ஹுஸைனம்மா said...

//டீனேஜ் குழந்தைகள் சாப்பாடு,தண்ணீர்,பாடம், வெளி உலகம் மறந்து சமூக வலைத்தளங்களே கதியென் இருக்கிறார்கள்//

டீச்சர், சின்னவங்க மட்டுமா, பெரியவங்களே அப்படித்தானே இருக்காங்க? பிளாக், பஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், எதுவும் இல்லைன்னா மொபைல் ஃபோன்...

அமைதிச்சாரல் said...

//கல் வீடுகள் எதையும் தாங்கும் சக்தி கொண்டது.கண்ணாடி வீட்டுக்குத் தாங்கும் சக்தி கிடையாது உடைந்து விடும்."கையாள வேண்டும் கவனமாக//

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அருணா.. உங்களுக்கு மைசூர் பிருந்தாவனத்தையே தரலாம்..

எம்.எம்.அப்துல்லா said...

பூங்கொத்து.

N. SARATHIKANNAN said...

மிக சரியான பதிவு. சமுக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் இணையும் இன்றைய இளைய தலைமுறை பக்கத்துக்கு வீட்டாரை தெரியாமல் இருப்பது கொடுமை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மிக நல்ல பதிவு அருணா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//டீனேஜ் குழந்தைகள் சாப்பாடு,தண்ணீர்,பாடம், வெளி உலகம் மறந்து சமூக வலைத்தளங்களே கதியென் இருக்கிறார்கள்.வலைத்தளங்கள் உபயோகிக்க முடியாத நேரங்களில் எப்போதும் ஒரு பதற்றம் தென்படுகிறது செயல்களில். சில சமயங்களில் நிகழ்காலத்தில் வாழ மறந்து ஃபேஸ் புக்கிற்காக வாழவும் ஆரம்பித்து விடுகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

எல்லாவற்றிலும் ஒரு வரைமுறை இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நினைவு படுத்தவும் செய்யுங்கள். ஒரு பெற்றோர், ஏன் எந்த நேரமும் இணையத்திலிருக்கிறாய் எனக் கேட்டதற்கு விபரமான பிள்ளை சொல்லியிருக்கிறது. இப்போலாம் எல்லா நோட்ஸும் ஆன்லைனில்தான் மேம் தருகிறார்கள் என்று. திடீரென்று ஒருநாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் பெண் சொன்னாள்..."அம்மா இஷா ஃபேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்காளான்னு பாருங்க....கொஞ்சம் ஹோம் வொர்க் டிஸ்கஸ் பண்ணணும்"நான் ஙே!//

அருமையான அலசல்;
மிக அனுபவ பூர்வமான வரிகள்!; இன்றைய தலைமுறையினர் மலசலகூடத்துக்குள் கூட மடிக்கணனியுடன் போக முற்படுவது மிக வேதனை.
இப்போதையால் அவர்கள் இழப்பதை உணரவில்லை. பெற்றோரும் உணர்த்தக் கூடியநிலையில் இல்லை.
சிலர் இப்போதையில் சிக்கியுள்ளார்கள்.
இங்குள்ள பிள்ளைகள் பல இணைய இணைப்பும் கணனியும்; கைத்தொலைபேசியும் வருமுன் பெற்றோருடன் வெளியே செல்வதை விரும்பி அழுதார்கள்.
ஆனால் இன்று எந்தப்பிள்ளையும் ; ஆனந்தமாக பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு; கதவை அடித்துச் சாத்துகிறது.உடன் வரும்படி கேட்டால் அழுகிறது.
இதை விடக் கொடுமையுண்டா?
மிகுந்த சிக்கலான காலக்கட்டம்....இதில் இருந்து எத்தனை பேர் கடப்பார்கள். என்பது பதில் அற்ற கேள்வி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த பதிவுக்கு பூக்கொத்தல்ல; ஒரு பூந்தோட்டமே தரலாம்.
வெறும் கும்மிகளில் கூடமாகிவிட்ட பதிவுலகில் சமூக சிந்தனைமிக்க பதிவு.
தொடரவும்.

பயணமும் எண்ணங்களும் said...

நல்ல பதிவு,..

இங்கே கற்றதும் பெற்றதும் அதிகம்.. முக்கியமா பெரியார் , கம்யூனிசம் பற்றியெல்லாம் இங்கு வந்தபின்பே அறிந்தேன்..

40 வயது வரை தெரியாத விடயமெல்லாம் 2 வருடத்திலேயே தெரிந்தது..


இணையம் எனக்கு மிக நல்ல தோழி.. என்ன விஷயமென்றாலும் இவளிடம் கேட்பேன். மருத்துவம் , சமையல் , எமர்ஜென்சி எல்லாம்..

குழந்தைகளுக்கான படிப்பு சம்பந்தமாகவும் மிக உபயோகமாக..


கத்தி போல.. நம் விருப்பம் எப்படி உபயோகிக்கிறோம் என்று..

வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
/ அக்கறையுடனான பகிர்வுக்கு நன்றி. இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடட்டுமா?/
அட!தாராளமா!
நன்றி!

Priya said...

தெளிவான கருத்து, மிக சிறப்பா எழுதி இருக்கிங்க.

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நேர்த்தியான நடையில் வாழ்க்கையின் அர்த்தம் விளக்கம் சிறந்ததொரு படைப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி அருணா . நட்சத்திரப் பதிவருக்கு என் வாழ்த்துக்கள் .

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நல்லதொரு தேவையான அலசல் அருணா....அழகான தலைப்பு பேசுவது அழகான வாழ்க்கைக் குறிப்பு..

Jaleela Kamal said...

மிக அருமை எல்லாம் நிஜமே

சி.கருணாகரசு said...

மிக தரமான கட்டுரை.... ரொம்ப ஆய்ந்தறிந்து எழுதியிருக்கிங்க..... உங்ககிட்ட கல்வி நிறுவனத்தை அல்ல.... கல்வித்துறையையே கொடுக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பகிர்வு அருணா.

ஷர்புதீன் said...

பூங்கொத்து

நிரூபன் said...

ஆனால் இதில் எல்லாமே தன்னை முன்னிலைப் படுத்தியும்,நான் இப்படித்தான் என்று என் "நானை" வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்தியாகவே தோன்றுகிறது.//

இன்று மனிதர்களில் பலர் தற் பெருமை பேசிப் பேசியே தமது காலத்தை ஓட்டுகிறார்கள். பிறர்கென மனிதர்கள் வாழ்ந்தது அந்தக் காலம். தமக்கென மனிதர்கள் வாழ்வது இந்தக் காலம்.
உங்களின் இப் பதிவு இன்றைய இளைஞர்களின் போக்கினையும், தற்கால தொழில்நுட்ப சூழலின் பின் விளைவுகளையும் யதார்த்தமாகச் சொல்லி நிற்கிறது. சமூகத்திற்கு வேண்டிய ஒரு விடயம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அப்பாதுரை said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.
இப்பொழுது தான் கவனித்தேன். மீண்டும் வந்து படிக்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

அபாரமான எழுத்து. தேர்ந்த சிந்தனைகள். மிக நல்ல கட்டுரை டீச்சர்.

மதுரை சரவணன் said...

arumaiyaana kannaadi.... samuka akkaraiyudan eluthappattap padaippu.vaalththukkal

அம்பிகா said...

அருமையான கட்டுரை. தெளிவான சிந்தனை. நன்றி அருணா.

சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

சுரேகா.. said...

அருமையான , தெளிவான கட்டுரை..! தேவையானதும் கூட..! ஆகவே..பூங்கொத்து!

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

ஹேமா said...

தலைப்பிலேயே கதை சொல்லி முடித்த கெட்டித்தனம்.பூங்கொத்துத்தான்.வேற வழியேயில்லை டீச்சர் !

வினையூக்கி said...

Congratulations Tamilmanam Star

சுல்தான் said...

பொதுவாக வெளிவரும் 'நான்'களில், 'நான்' உண்மையில் இருப்பதை விடவும் என்னை எப்படி உலகம் அறிய வேண்டும் என்பதுதான் இருக்கிறது. அதிலே சில அவர்களுக்கு பாதகமாக வாய்ப்பு இருக்கிறது எனவே கல் வீடும் கண்ணாடியும்.

படிக்க சுவையான எழுத்து நடை உங்களுடையது.

அன்புடன் அருணா said...

Jo Amalan Rayen Fernando said...
/ Social networking is not that bad as you make out to be./

I've never mentioned it is!

/ The urge to listen, to care, to share is as old as humanity itself. It is in fact the very basis of human civilistion to come together as a community, then go on constructing societies and civilisations./

Right and nothing wrong in it!

/ Today the rapidly developing technlogy has helped the primitive urge to be known to all. That made you concerned./

It was a concern towards the younger generation.

/ I have a son who has face book entry. He discusses with his classmates, not only subjects, but also, all items that fancy him or his classmates, for e.g the Lady Gaga./

My daughter does and she has twitter and face book accounts too! where is the harm?

/ He scored 9.6 in X. He is doing brilliantly well in his class XI in all subjects. He is happy and confident./
My daughter too is a top scorer of the class!She too is happy and confident!

/ I and my wife never interfer with his online behaviour or habits. /
Did I say that we interfere in her online activities?

/I also read many horror stories about teenagers getting trapped by online tricksters. When we told him about that, he said: "I know abt that more in detail than you both. I can take care of myself. Please take care of yourselves"/
I've never said her these stories but believe that she can take care of herself!

அன்புடன் அருணா said...

Jo Amalan Rayen Fernando said...
/Trust your child. Give adequate freedom. Facilitate an atmoshere of informtion at home. Let them explore life. The powers of judging the right and wrong should be developed in them. We, as parents, are not full of wisdom. So, we need to show where such wisdom will be available - both on line and off line.//
hi hi hi!I'm basically a life skill teacher for adolescents! At least believe a person in education Industry for so many years and in administrative level handling 1500 students and parents may know all these things better

/ In your case, you are treating a 9th class girl, your daughter, as a child. She is not. She is an individual, in her own right, and deserves to be treated with full recognition and responses as such. When you respond to her, it should be like you respond to an adult.By treating our grown up children like adults, we instil in them confidence which enhances their self esteem and self concept. The result will be happier one, namely, they will take responsibility for their own actions, right as well as wrong. If wrong, they know why it is so; and why it should not be repeated.
/
I think you have in your mind that you know better than others...If anything told new or which I was not knowing then I would have taken it as a learning experience....but nothing new and these things I've been telling the parents more or less every day.
So wrong tick!

/ My wife says, when our son is around at home, we need not worry. He will guide us !/
what are you trying to say????
Wordsworth wrote: Child is the father of man.
/Your daughter should grow to become your mother soon./
A very new concept :)

/ I disagree with your over cautiousness./
you don't have to agree with my opinion!
/I agree only to an extent that soical networking can be lethal for immature minds. /
I've also written this only for those who use it in an immatured way!
/Whether your child is mature or immature depends upon what you are. .Not what society is./

I've never said this article is written for my daughter....and please don't worry about my or my daughter's maturity level.
I think the society is made of individuals...me and you!

/To forbid a 9th class child from discussing with her classmater online abt her subjects, or even her fancies, is not a mature conduct./
Do not teach me about matured conduct....Did I mention I forbid her to be online????Try to see the real sense of this article!

/ Harsh words! Let me see whether it gets to see light here.
Thx./
ya thank god! you have realized that harsh words.
Understand the real sense of the article and it is not against internet.Nowhere it is mentioned it is wrong to be in social net working sites. It is just stating that be careful about your online activities.
Understand the words properly
"அம்மா இஷா ஃபேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்காளான்னு பாருங்க....கொஞ்சம் ஹோம் வொர்க் டிஸ்கஸ் பண்ணணும்"நான் ஙே!
The meaning hidden is.... students do use it in a positive way and "ஙே" expression is to say that I was surprised...not worried.So don't bother about my daughter and her freedom and wisdom!
This comment was stored as a spam.....so late reply!

ஈரோடு கதிர் said...

||என் இருத்தலை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தத் துடிக்கும் ஆர்வம். ||

மிக மிகச் சரியே!!!

இந்த ஆர்வத்தை பலநேரம் வியாதியாகவே உணர்கிறேன்

ரவிச்சந்திரன் said...

பூங்கொத்து!

நட்சத்திர வாழ்த்துகள்!

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கட்டுரை.. நட்சத்திரத்துக்கு வாழ்த்துகளும்!

அன்புடன் அருணா said...

நன்றி Ramani !
நன்றி நசரேயன் !
நன்றி கலாநேசன்!
மனம் திறந்து... (மதி) said...
/இது எந்த அளவு ஆரோக்கியமானது, நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் என்பன கோடிப் பொற்காசுகளைப் பரிசாகப் பெறவல்ல கேள்விகளாய் விசுவ ரூபம் எடுத்திருக்கின்றன!/
அதுதானே கேள்வி மதி!
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
shreyas said...
/பெங்களூரில் உள்ள எல்லா பூங்கொத்தும் இன்று உங்களுக்கெ./
ஆஹா!!!நன்றி!
நன்றி மாணவன் !
VELU.G said...
/சிலவிஷயங்களை கம்பி மேல் நடப்பதைப் போல சர்வ ஜாக்கிரதையாத்தான் கையாள வேண்டியிருக்கிறது/
உண்மைதான் வேலுஜி!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல்
சி.பி.செந்தில்குமார்
சுந்தரா
Chitra
தவறு அனைவருக்கு நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு.

பிடிங்க பூங்கொத்தை.

அன்புடன் அருணா said...

துளசி கோபால் said...
/ ஒரே ஒரு நன்மை. வேஷம் போடத்தேவை இல்லை. எல்லாம் பளிச்!!!!!/
என்னாங்க இப்பிடிச் சொல்றீங்க?நல்லாவே நடிக்கலாமே கருத்துக்களில்!

ஹுஸைனம்மா said...
/ டீச்சர், சின்னவங்க மட்டுமா, பெரியவங்களே அப்படித்தானே இருக்காங்க? பிளாக், பஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், எதுவும் இல்லைன்னா மொபைல் ஃபோன்.../
அதே அதே!

அமைதிச்சாரல் said...
/ மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அருணா.. உங்களுக்கு மைசூர் பிருந்தாவனத்தையே தரலாம்./.
பிருந்தாவனத்துக்கு சொந்தக்காரர் சண்டைக்கு வந்து விடுவார் அமைதி!
N. SARATHIKANNAN said...
/சமுக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் இணையும் இன்றைய இளைய தலைமுறை பக்கத்துக்கு வீட்டாரை தெரியாமல் இருப்பது கொடுமை/
உண்மைதான்!
ஆர்.சண்முகம் எம்.எம்.அப்துல்லா
மாதேவி ஜெஸ்வந்தி - Jeswanthy அனைவருக்கும் நன்றி!

துளசி கோபால் said...

என்னப்பா அருணா, வாழ்நாளெல்லாம் நடிச்சுக்கிட்டே இருக்க முடியுமா?
நாம் நாமாக இருக்கவேணாமா?

அப்படி நடிக்கவும் நினைவாற்றல் அபாரத்தேவையா இருக்குமே!

அன்புடன் அருணா said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said.../
/மிகுந்த சிக்கலான காலக்கட்டம்....இதில் இருந்து எத்தனை பேர் கடப்பார்கள். என்பது பதில் அற்ற கேள்வி!/
கடக்க நாம்தான் உதவ முடியும் என்று பிடிவாதமாக நம்பிக் கொண்டிருக்கிறேன்!
பயணமும் எண்ணங்களும் said...
/கத்தி போல.. நம் விருப்பம் எப்படி உபயோகிக்கிறோம் என்று../
ரொம்ப சரியாகச் சொன்னீங்க!
Priya
!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
பாச மலர் / Paasa Malar
Jaleela Kamal அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

சி.கருணாகரசு said...
/. உங்ககிட்ட கல்வி நிறுவனத்தை அல்ல.... கல்வித்துறையையே கொடுக்கலாம்./
அய்யய்யோ! பார்த்து கல்வித்துறை மந்திரி சண்டைக்கு வரப் போறார்!

ராமலக்ஷ்மி
ஷர்புதீன்
நிரூபன்
அப்பாதுரை
செ.சரவணக்குமார்
மதுரை சரவணன்
அம்பிகா
சின்னக்குட்டி
சுரேகா..
ஹேமா
வினையூக்கி
சுல்தான் said...
/ பொதுவாக வெளிவரும் 'நான்'களில், 'நான்' உண்மையில் இருப்பதை விடவும் என்னை எப்படி உலகம் அறிய வேண்டும் என்பதுதான் இருக்கிறது. /
ரொம்ப சரி!
அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

ஈரோடு கதிர் said...
/இந்த ஆர்வத்தை பலநேரம் வியாதியாகவே உணர்கிறேன்/
மருந்து நம் கையில்தான் கதிர்!
ரவிச்சந்திரன்
"உழவன்" "Uzhavan"
T.V.ராதாகிருஷ்ணன்
கோமதி அரசு அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

துளசி கோபால் said...
/ என்னப்பா அருணா, வாழ்நாளெல்லாம் நடிச்சுக்கிட்டே இருக்க முடியுமா?
நாம் நாமாக இருக்கவேணாமா?
அப்படி நடிக்கவும் நினைவாற்றல் அபாரத்தேவையா இருக்குமே!/
இதுவும் சரிதான்....ஆனால் சில விஷயங்களைக் கூர்ந்து பார்க்கும் போது அவ்வளவையும் நம்புவதும் கடினமாகவே இருக்கிறது!! :(

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா