நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 22, 2011

எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

முதல் நாள் அம்மா வலுக்கட்டாயமா அழ அழ என்னை விட்டுட்டுப் போன உடனே உங்க கையைத்தானே மேம் பிடிச்சுக்கிட்டேன். அதை எப்போதும் பிடிச்சுட்டேயிருக்கணும்னு ஆசையாதான் இருந்துச்சு. ஆனா நீங்க உடனே என் கையை விட்டுட்டு உங்க நோட்புக்கை எடுத்து வச்சுட்டு ஏதோ எழுதப் போனீங்களே டீச்சர் அன்னியிலிருந்து உங்கமேல ஒரே கோபமா வந்துச்சு டீச்சர். முதல் நாள் டாய்லெட் போன போது ஆயாம்மா கோபமா ட்ரெஸ் கழற்றி விட்டதனாலே எனக்கு ஆயாம்மா பிடிக்கவே பிடிக்காது.

என்னிக்காவது நாங்க சொல்ற மாதிரி எங்களை விளையாட விட்டுருக்கீங்களா? எப்பவும் நீங்க நினைக்கிற, சொல்லுற விளையாட்டைத்தானே விளையாடச் சொல்றீங்க... எனக்கு என்னிஷ்டம் போல விளையாடணும்னு ஆசைஆசையா இருக்கும். அப்புறம் எனக்கு ரவிகிட்டேயும்,மலர் பக்கத்திலேயும்தான் உக்கார்ந்துக்கணும்னு ஆசை... நீங்க க்ளாஸ்லே வந்தவுடனே ரொம்ப பேசறீங்கன்னு எங்களை ஆளுக்கொரு மூலைக்கா உக்கார வச்சுருவீங்க.. எனக்கு அழுகை அழுகையா வரும். அப்புறம் எனக்கு அவசரமா டாய்லெட் போணும்னாலும் உடனே அனுப்பமாட்டீங்க...அப்பவும் எனக்கு அழுகை அழுகையா வரும

ஸ்கூலுக்கு வந்தவுடன் அம்மா நினைப்பா வரும்....உடனே பிஸ்கெட் சப்பிடணும்னு இருக்கும். அதான் முடியாதே பெல் அடிச்சப்புறம்தான் லன்ச் பாக்ஸ் திறக்கணும்னு சொல்வீங்க. தண்ணி குடிக்கணும்னா எல்லாரும் லைன்லே போய்தான் குடிக்கணும்.கலரடிக்கணும்னு இருக்கும் போது எழுதச் சொல்வீங்க. எழுதணும்னு இருக்கும் போது விளையாடச் சொல்வீங்க.விளையாடணும்னு இருக்கும் போது ஓரல்ஸ் சொல்லச் சொல்வீங்க.

ஆர்ட் ஆக்டிவிடி நான் நல்லா பண்ணமாட்டேங்கிறேன்னு நீங்களே பண்ணி நோட்டில ஒட்டிர்றீங்க......எனக்கு அதை நானே செய்யணும்னு ஆசையா இருக்கும். நான் அழுதா உடனே சுவர் பக்கம் திரும்பி நிக்கச் சொல்லி பனிஷ் பண்ணுறீங்க. நீங்க பக்கத்து க்ளாஸ் மேம் கிட்டே நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது மேம்.

A for appleனுதான் சொல்லணுமா ?A for Air னு சொல்லக்கூடாதா? எனக்கு எப்பதான் மழை வரும்னு இருக்கும் கப்பல் செய்து விளையாடாலாம்னு இருக்கும்.நீங்க Rain Rain go away பாடச் சொல்வீங்க

உங்க மேஜை கிட்டே வந்து நின்னு உங்ககிட்டே பேசிட்டேயிருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும் மேம். நீங்கதான் உடனேயே "go to your place" அப்படீன்னு சொல்லிருவீங்களே. சொன்னவுடனே கேட்கணும் உங்களுக்கு .இல்லைன்னா நீங்க கோபமாக் கத்திருவீங்க. அது எனக்கு ரொம்ப பயம். நீங்க கோபமாயிருக்கும் போது நாங்கல்லாம் கப்சிப்னு இருந்துடுவோம்....இல்லாட்டி அடி விழுந்துருமே...

உங்களைப் பற்றி இந்த ஒரு வருஷத்துலே இவ்வ்ளோ புரிஞ்சு வச்சிருக்கேனே நீங்க என்னைப் பற்றி எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

25 comments:

கலாநேசன் said...

sensible question.

Arun Ambie said...

நீங்க எல் கே ஜி குழந்தையோட அம்மாவா? டீச்சரால் இவ்வளவு உணர்வுப் பூர்வமாக யோசிக்க முடியும் என்று தோன்றவில்லை. Superb!!

middleclassmadhavi said...

சூப்பர்!

மழலையில் எழுதியிருந்தால் இன்னும் ரசிக்கலாம்!

சங்கவி said...

:)))

அமுதா கிருஷ்ணா said...

ஹே..சூப்பர்..ஒரு ஸ்கூல் குழந்தையின் பார்வை.

மோகன் குமார் said...

படிக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு. பதிவில் கொண்டு வந்ததற்கு நன்றி. இத்தகைய உணர்வுகள் அநேகமாய் தெரியாமலே போய் விடுகிறது !

உலக சினிமா ரசிகன் said...

சிறுமியின் உளவியல் பார்வையில் வந்த மிக அற்ப்புதமான பதிவு.

அமைதிச்சாரல் said...

நல்ல கேள்விதான் அருணா..

பசங்களோட உணர்வுகள் உன்னிப்பா வெளிப்பட்டிருக்கு.

மாணவன் said...

ஒரு குழந்தையின் மனநிலையை நெகிழ்வோடு பதிவு செஞ்சிருக்கிங்க மேம் அருமை :)

Hanif Rifay said...

அழகாய் ஒரு பதிவு... அவர்களின் வுலகமே தனி.... எழுத்தில் கொண்டு வந்ததற்கு நன்றிகள் பல...

ஹேமா said...

டீச்சர்...உங்க சின்ன வயசு அனுபவமா.
பிடிங்க பூங்கொத்து !

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு அருணா. யோசித்துப் பார்த்தால் நாமும் சிறுவயதில் சிந்தித்திருப்போம் இது போல. நம் குழந்தைகளும் கூட சொல்லக் கேட்டிருப்போம். அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.

ஈரோடு கதிர் said...

சவுக்கடி!

Anonymous said...

It seems vaiko is telling to JJ

அன்புடன் அருணா said...

Arun Ambie said...
/ நீங்க எல் கே ஜி குழந்தையோட அம்மாவா? டீச்சரால் இவ்வளவு உணர்வுப் பூர்வமாக யோசிக்க முடியும் என்று தோன்றவில்லை. Superb!!/
எல்லோரும் டீச்சர்களைப் ப்ற்றி இப்படித் தப்பாவே நினைத்தால் எப்படி?
middleclassmadhavi said...
/மழலையில் எழுதியிருந்தால் இன்னும் ரசிக்கலாம்!/
நானும் அப்படியே நினைத்தேன்!
சங்கவி
அமுதா கிருஷ்ணா
கலாநேசன் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

மோகன் குமார்
உலக சினிமா ரசிகன்
அமைதிச்சாரல்
மாணவன்
Hanif Rifay
ஹேமா
ராமலக்ஷ்மி
ஈரோடு கதிர் அனைவருக்கும் நன்றி!

ஸ்ரீராம். said...

ஆறுமாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை மனம் விட்டு பேசச் செய்ய வேண்டும். எண்ணங்களைத் தூண்டி விட்ட பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

பள்ளிக்குழந்தையின் பார்வையில் வித்தியாசமான அனுபவம். பகிர்வுக்குப் பாராட்டுக்க்ள்.

குட்டிப்பையா|Kutipaiya said...

very nice perspective!!

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ It seems vaiko is telling to JJ/
அய்யய்யோ இதென்ன புதுக் கதையா இருக்கு!!???

அன்புடன் அருணா said...

ஸ்ரீராம்.
இராஜராஜேஸ்வரி
குட்டிப்பையா|Kutipaiya நன்றிங்கப்பா!

இரா.எட்வின் said...

அன்பின் அருணா,
வணக்கம். எனக்கும் குழந்தைகளின் வெளிதான்.அற்புதமானப் படைப்பு. நிறையப் பேசுவோம்

அன்புடன் அருணா said...

இரா.எட்வின் said...
/அன்பின் அருணா,
எனக்கும் குழந்தைகளின் வெளிதான். நிறையப் பேசுவோம்/
க்ண்டிப்பா பேசலாம் சார்!

ஷர்புதீன் said...

பூங்கொத்து :)

ILA(@)இளா said...

Super

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா