இன்று முதல் தமிழ்மண நட்சத்திரம். தமிழ்மணத்தில் பதியத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த காலம் நினைவுக்கு வருகிறது.
வளைகாப்புக்கு எடுத்த ஃபோட்டோ ரோலை அவங்க பேன்ட்லே வச்சுட்டு அப்பிடியே தண்ணிக்குள்ளெ தோய்க்கப் போட்டா என்ன ஆகும்?அது ஒரு தடவை...
திடீர்னு நைனிதால் போய் ஒரு வாரம் இருக்க வந்த வாய்ப்பு.எல்லாம் ரெடி.லீவே கொடுக்காத பள்ளியிலிருந்து லீவும் கிடைச்சாச்சு.வீட்டுக்குப் பொய் வண்டியில் ஏறவேண்டியதுதான் பாக்கி........படியிறங்கும் போது வழுக்கி விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி...அது இதுன்னு...ம்ம்ம்...
புது வீட்டு பால்காய்ப்பு விழாவை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துட்டு ஸ்டூடியோலே போய் உள்ளே ரோலே இல்லைன்னு தெரிஞ்சா எப்பிடி இருக்கும்?இது இன்னொரு தடவை...
அப்படி ஒரு ராசி நம்ம ராசி!
வலைச்சர ஆசிரியரா இருக்கும் போது சீனா சார் வலைச்சர வலைப்பூவுக்குள் நுழைய முடியாத படி ஏகக் குழப்பம்....அப்புறம் ஒரு வாரத்துக்கு தினமும் தொடர்ந்து மின்சாரத்தடை.அதையும் மீறி எப்பிடியோ ஒரு வாரத்தை ஓட்டியாச்சு.
திரட்டி நட்சத்திரமா இருந்தப்போ பி.எஸ்.என்.எல் சதி செய்து இணையம் படுத்துக் கொண்டது.இன்டெர்னெட் கஃபே போய் ஒருவழியாக முடித்துக் கொண்டாயிற்று.
இப்போ சரி நட்சத்திரமாகப் போறோமேன்னு கொஞ்சம் அழகு படுத்தலாமேன்னு டெம்ப்ளேட் மாற்றி விட்டுப் பெருமையாப் பார்த்தா.....தமிழ்மண ஓட்டுப் பட்டையைக் காணோம்.இண்ட்லி ஓட்டுப் பட்டையையும்தான்........ம்ம் ஒருவழியா எல்லாத்தையும் திரும்பிக் கண்டுபபிடிச்சு வெட்டி ஒட்டி, வெச்சுட்டு இருக்கற அழகே போதும்னு முடிவு செய்தாச்சு...ம்ம் இனி நான் ரெடி ...நீங்க ரெடியா??
வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி!
பிரியம் சுமக்கும் உயிர்கள்
பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பாதையில் அவ்வப்போது மனதை நெகிழ்த்தும் நிகழ்வுகளும்,இப்படியான உலகத்திலேயா இருக்கிறோம் என்னும் எண்ணத்தை வரவழைக்கும் நிகழ்வுகளும் நிக்ழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.அவற்றையும் கண்டும் காணாமல் சில நேரமும்,கண்ணில் நீருடன் சிலநேரமும் கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.இது கண்ணில் நீருடன் கடந்து சென்ற ஒரு நிகழ்வு.
குழந்தைகளிடம் இரக்க குணத்தை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லம் இப்படி அழைத்துச் செல்வது வழக்கம்.அங்கு செல்லும் நாளுக்கு முன்னதாகவே குழந்தைகளிடம் அவர்களுக்குக் கொடுக்க் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வரவும் (சோப்,பிஸ்கெட்,இனிப்பு) சொல்லி எடுத்துக் கொண்டு செல்வதும் வழக்கம்.
அங்கு முதியோர்களிடம் த்னித்தனியாகக் குழந்தைகளைப் பழகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்து சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துவது வழக்கம்.சிலநேரங்களில் குழந்தைகள் அவர்களின் பெயர் வாங்கி வந்து தீபாவளி, வருட பிறப்பு அன்று வாழ்த்து அட்டை அனுப்பவும் செய்வார்கள்.
ஒன்பது, பத்தாவது வகுப்புக் குழந்தைகளே அங்கே ஒரு அசாதரணமான அமைதியுடன் இருப்பார்கள்.அவர்கள் அந்த முதியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை உணரவைக்கும் மௌனமாக அது இருக்கும்.மற்றபடியான் பிக்னிக்,சுற்றுலா எல்லாம் மாணவர்களுடன் நான் செல்வதில்லையென்றாலும் இந்த நிகழ்வுக்கு நான் கூடச் செல்வது வழக்கம்.கண்ணில் நிற்காமல் வழியும் நீருடனும்,கிழிந்த சட்டையுடனும்,சுருங்கிய தோலுடனும்,தலை நிறைய பனி பொழிந்தது போன்ற வெண்முடியுடனும்,பற்கள் கொட்டிப் போன பொக்கை வாயுடனும் விதம் விதமாக பெரியவர்கள்.
இருந்தாலும் எல்லோரின் கண்ணிலும் அணைபுரண்டு பெருக்கெடுத்தோடும் பிரியம் மட்டும் நிறைந்து இருக்கும்.கொடுப்பது ஒரு சோப்பென்றாலும் அதைக் குழந்தைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதில்தான் எவ்வளவு ஆனந்தம்.உடனே பிரியம் தெரிவிக்கும் ஒரு உச்சி முகர்தல்.கைகளோடு கைகளைச் சேர்த்துக் கொள்ளும் போது தொற்றிக் கொள்ளும் பிரியம் சுமக்கும் ஒரு வெம்மை.
எப்போதும் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாகத்தான் இருந்து விடுவதுண்டு.ராகுல் பத்தாவது வகுப்பு மாணவன்.முதியோரில்லத்தை விட்டு வெளி வந்தவுடன் என்னிடம் அவசரமாக வந்து ஒரு சின்ன காகிதத்தைக் கொடுத்தான்.அதில் நடுங்கும் விரல்களால் எழுதிய ஒரு செல் நம்பர்."மேம் அவர் இந்த நம்பரை யாருக்கும் தெரியாமல் கொடுத்து "இது என் மகனோட நம்பர்.இந்த நம்பருக்கு ஒரே ஒரு தடவை ஃபோன் செய்து "உங்க அப்பா சாரி சொல்லச் சொன்னார்.அவர் இங்கே சந்தோஷமாயில்லேன்னு சொல்லச் சொன்னார்" அப்படீன்னான்.
நான் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்,வருத்தமாகவும் கொஞ்சம் குழம்பிய நிலையிலும் இருந்தேன்.சரி என்று வாங்கி வைத்து விட்டு வேலைகளை முடித்து விட்டு பலமுறை யோசித்து விட்டு அந்த நம்பருக்கு ஃபோன் செய்தேன்.
எடுத்தவுடன்....."உங்க அப்பா இருக்கும் முதியோரில்லத்தில் உங்க அப்பாவைப் பார்த்தேன்..."இவ்வ்ளோதான் சொன்னேன்.உடனே கட் செய்யப்பட்டது.மீண்டும் மீண்டும் ஃபோன் செய்யும் போதும் கட் செய்யப்பட்டது.பின்னர் எடுக்கப்படவேயில்லை.
மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு.
53 comments:
//மீண்டும் மீண்டும் ஃபோன் செய்யும் போதும் கட் செய்யப்பட்டது.பின்னர் எடுக்கப்படவேயில்லை. //
என்ன சொல்றதுன்னே தெரியல.. இப்படியும் மனிதர்கள்.. இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்
ஆஹா, டீச்சரா இந்த வாரம்? வாழ்த்துகள் டீச்சர்!
முதல் இடுகை..
ஐயோன்னு இருக்கு டீச்சர்.
//மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு//
:-(
வாழ்த்துக்கள் டீச்சர்
ஆஹா, டீச்சரா இந்த வாரம்? வாழ்த்துகள் டீச்சர்!
பூங்கொத்து !!
பிடியுங்கள் பூங்கொத்தை. நட்சத்திர வாழ்த்துக்கள் அருணா!
மனதைப் பிசையும் பகிர்வு:(! ஒரு அத்தியாவசியமான இடுகையுடன் தொடங்கியிருக்கிறீர்கள் வாரத்தை. தொடருங்கள்.
வாழ்வின் அர்த்தங்களை சொல்லும் இந்தப் பகிர்வு நிறைய அசைபோட வைக்கிறது.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
பிடியுங்கள் என் ப்ரொஃபைலில் இருக்கும் பூங்கொத்தை!! அதாங்க, எனக்குப் பிடிச்சிருக்கு உங்க பதிவு!
வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்து(க்)கள் அருணா.
மார்ச் கடைசி வாரம் அந்தப் பக்கம் வரும் திட்டம் இருக்கு. முடிந்தால் சந்திக்க விருப்பம்.
Congrats.
I remember to have opened your blog and read sometimes.
I look forward to blogposts written from the following angles:
As a teacher
As a emancipated woman
As a mother
As a wife
As a Tamilian living in an Hindi speaking State
The implications of my above expectations is that life should be seen from all angles as far as we can.
Hopefully
க்ளாஸ்...வாழ்த்துக்கள்...
அருணா எந்த தடங்கலும் இல்லாமல் வாரத்தை சிறப்பியுங்கள்.. பூங்கொத்து ..
\\மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு.//
ஆனா செடிக்கு இவ்ளோ வலிக்காது நமக்குத்தான் வலிக்கிறது அநியாயத்துக்கு.. இதோ அடுத்தவருக்கு நிகழ்வதும் வலிக்கின்றதே..
தமிழ்மண நட்சத்திரம் - அருமையான விஷயம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
இந்த வார நட்சத்திரத்தில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..
வாழ்த்துக்கள் மேடம்
ஆஹா...
நட்சத்திர பதிவர்க்கு வாழ்த்துக்கள்.
//மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு//
இதை என்னன்னு சொல்றது... எல்லாவற்றையும் கடக்கவே பழகிய மனது, கடைசியில் சொன்னதுபோல்...
நட்சத்திர வாழ்த்துக்களும்..
//உங்க அப்பா சாரி சொல்லச் சொன்னார்.அவர் இங்கே சந்தோஷமாயில்லேன்னு//
திடமாயிருக்கும் வயதில் கொள்ளும் சில இறுமாப்புகள், முதுமை காலத்தில்தான் தளர்கிறது. அப்படி கொண்ட ஒரு இறுமாப்பு தளர்ந்த பின்னும், இன்னொருவரின் இறுமாப்பாய் நிற்கிறது. அவருக்கும் தளரும் காலம் வரும்.
நட்சத்திர வாழ்த்துகள்.
நட்சத்த்திர வாழ்த்துகள் அருணாமேடம்..
//குழந்தைகளிடம் இரக்க குணத்தை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லம் இப்படி அழைத்துச் செல்வது வழக்கம்.//
//மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு.//
டீச்சர்! நல்ல பார்வை, நல்ல பதிவு, நல்ல பகிர்வு! நன்றி! நட்சத்திர வாழ்த்துக்கள்!
இதே எண்ண ஓட்டத்தில் அமைந்த "வாழ்க்கை... ஒரு பார்வை!" எனும் என் கவிதை(?!) உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்! சுட்டி இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_30.html
வாழ்த்துக்கள் டீச்சர்
வாழ்த்துக்கள்
அருணா மேடம்...
இந்த பதிவிற்காக உங்கள் வீடு முழுவதையும் பூங்கொத்துகளால் நிரப்பனும்னு தோணுது..
ராகுல் அந்த ஒரு தினத்தில் நிறைய படித்திருப்பான்னு தோணுது..
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் அருணா
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்குறிஞ்சி
தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்குறிஞ்சி
நட்சத்திர வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!!!!
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
வாழ்த்துக்கள் அருணா!
டீச்சர்....பூங்கொத்தோடு வாழ்த்தும் !
வாழ்த்துகள்
ஆசிரியைக்கு மாணவனின் வாழ்த்துக்களும் பூங்கொத்தும்...
நட்சத்திரம் மென்மேலும் ஜொலிக்க வேண்டும் :)
மனதைக் கனக்கவைக்கிறது அந்தச் சம்பவம்
வாழ்த்துக்கள்!
"வீட்டின் ஜன்னல் திறந்து காற்றை வரவழைக்கும் உத்தி போல மனதினைத் திறந்து எண்ணங்களைக் கொட்ட வாய்ப்பு இந்த வலைப்பூ".
உங்களது அறிமுகத்தில் சொன்னது எனக்கும் பொருந்தும். தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும் எண்ணங்களின் ஓட்டத்திற்கு விரல்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
உங்களது எண்ணங்கள் குறித்து படித்துவிட்டு பகிர்கிறேன்.
வாழ்த்துக்கள் அருணா,.. வழக்கம் போல் நல்ல படைப்பாய் வழங்குங்கள்
பூங்கொத்து எப்போதும் எல்லோர்க்கும் தரும் அருணாவுக்கு...பூங்கொத்துடன் நட்சத்திர வாழ்த்துகள்!
சுமக்கும் பிரியங்கள் அருமை.....பிரியங்கள் சுமையாகும்போது.......
நட்சத்திர வார வாழ்த்துக்கள் !!
அருமையாக தொடங்கியிருக்கிறீர்கள்.
நட்சத்திர வாழ்த்துகள் டீச்சர்.
வாழ்த்துகள். அசத்துங்க
**
பதிவு மனதை கனக்க செய்கிறது. கடைசி வரை அந்த பையனோடு பேச முடியலையா?
சிறுவர்களை முதியோர் இல்லம் அழைத்து செல்வது அற்புத பணி. தொடருங்கள்.
வாழ்த்துகள்!!
நட்சத்திர வாழ்த்துகள் ப்ரின்ஸ்
நட்சத்திர டெம்ப்ளேட் அழகு...!
பூங்கொத்து என்ற வார்த்தையை படிக்கும் போதெல்லாம் உங்கள் பெயர் நினைவுக்கு வரும்.
நட்சத்திர வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி, இன்று தான் முதன் முதலாக உங்களின் இவ் வலைப் பூவைத் தரிசிக்க வருகிறேன். தமிழ்மணத்தில் நட்சத்திரமாக கண் சிமிட்டுவதற்கு வாழ்த்துக்கள். உங்களின் இப் பதிவின் இறுதி வரிகளை வார்த்தைகளைக் கட்டிப் போடுகின்றன. அந்த முதியோர் இல்ல தொலைபேசி அழைப்பும் அதன் பின்னரான உரையாடலும்.. யதார்த்தமான எழுத்தோவியங்களின் பிரதிபலிப்பு.
நட்சத்திர வாழ்த்துகள்...
துளசி கோபால் said...
/நட்சத்திர வாழ்த்து(க்)கள் அருணா./
நன்றி மேம்!
/மார்ச் கடைசி வாரம் அந்தப் பக்கம் வரும் திட்டம் இருக்கு. முடிந்தால் சந்திக்க விருப்பம்./
கண்டிப்பா சந்திக்கலாம்.முன்கூட்டியே விபரம் தெரிவியுங்கள்.வாங்க!வாங்க!
நட்சத்திர வாழ்துகள்.
ரொம்ப லேட் மேடம்.
இருப்பினும் அன்பு வாடாத வாழ்த்துக்கள்.
ஜெய்லானி said...
/ என்ன சொல்றதுன்னே தெரியல.. இப்படியும் மனிதர்கள்.. இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்/
கண்டிப்பாய் பதில் சொல்லும் ஜெயிலானி!
நன்றி பா.ராஜாராம்
நன்றி பார்வையாளன்
நன்றி ஷர்புதீன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி மாதவராஜ்
நன்றி middleclassmadhavi
நன்றி அமுதா கிருஷ்ணா
Anonymous said...
/ /The implications of my above expectations is that life should be seen from all angles as far as we can./
Surely! Could have written your Sir/Mam!
நன்றி மணிஜீ......
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ஆனா செடிக்கு இவ்ளோ வலிக்காது நமக்குத்தான் வலிக்கிறது அநியாயத்துக்கு.. இதோ அடுத்தவருக்கு நிகழ்வதும் வலிக்கின்றதே../
அதுவேதான் முத்துலட்சுமி!
நன்றி Chitra
நன்றி # கவிதை வீதி # சௌந்தர்
நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி அம்பிகா
உண்மைதான் க.பாலாசி !
நன்றி ஹுஸைனம்மா
நன்றி அமைதிச்சாரல்
மனம் திறந்து... (மதி) said...
/ இதே எண்ண ஓட்டத்தில் அமைந்த "வாழ்க்கை... ஒரு பார்வை!" எனும் என் கவிதை(?!) உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்! /
நன்றி ...படித்தேன்..பிடித்தது!
நன்றி VELU.G
நன்றி செந்தழல் ரவி
Gowripriya said...
/இந்த பதிவிற்காக உங்கள் வீடு முழுவதையும் பூங்கொத்துகளால் நிரப்பனும்னு தோணுது../
நன்றி Gowripriya நிரப்புங்க!
நன்றி கண்மணி/kanmani
இணைப்புக்கு நன்றி தமிழ்குறிஞ்சி
நன்றி சந்தனமுல்லை
☼ வெயிலான்
அபி அப்பா
ஹேமா
திகழ்
மாணவன்
ஈரோடு கதிர்
ஊரான்
jothi
நசரேயன்
பாச மலர் / Paasa Malar
புருனோ Bruno
செ.சரவணக்குமார்
மோகன் குமார்
gulf-tamilan
ப்ரியமுடன் வசந்த்
ஜோதிஜி said...
/பூங்கொத்து என்ற வார்த்தையை படிக்கும் போதெல்லாம் உங்கள் பெயர் நினைவுக்கு வரும்./
அட! அப்பிடியா!!?
நிரூபன்
கே.ஆர்.பி.செந்தில் அனைவருக்கும் நன்றி!
நன்றி அரசூரான் !
எஸ்.காமராஜ் said...
/ரொம்ப லேட் மேடம்.
இருப்பினும் அன்பு வாடாத வாழ்த்துக்கள்./
லேட்டானா என்ன? வாழ்த்துதான் முக்கியம்!
மிக அருமை,உங்களிடம் நிறைய வாசிக்க வேண்டும்,வாழ்த்துக்கள்.டெம்ப்ளேட்டும் அழகாக ஜொலிக்கிறது.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா