நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, March 28, 2008

அன்றைக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே!!!!அந்தப் போலீஸ் ஜீப்பில் ஒரே இட நெருக்கடி...பின்னே என்ன?ஆறு பேர் உட்கார்ந்து போற இடத்திலே பன்னிரண்டு பேரை அடைச்சு வச்சா எப்பிடி?? ஆனாலும் ஒரே அமர்க்களம்தான் போங்க....வேற யாரு நாங்கதான்...??ஜெயிலுக்குப் போறமேன்னு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல்..அத்தனை பேரும் பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தோம்!...அட நீங்க வேற!! ஒரு இன்டர் காலேஜ் போட்டிக்காக எங்க கல்லூரி நிர்வாகம் பாதுகாப்புக் கருதி ஏற்பாடு பண்ணின வண்டிதான் இந்த போலீஸ் ஜீப்!!நல்ல வேளை நாய் வண்டி வரல்லையேன்னு கொஞ்சம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம்....

போற வழிலெ கொஞ்சம் பின் அது இதுன்னு வாங்க வேண்டி இருந்ததால் இடையில் வண்டியை நிறுத்தி ரெண்டு பேர் மட்டும் இறங்கிப் போக நாங்க எல்லொரும் வண்டியிலேயே இருந்தோம்...கல்லூரிப் பெண்கள் போலீஸ் ஜீப்பில் காம்பினேஷன் கொஞ்சம் வினோதமாக இருந்ததனால் ஒரே கூட்டம் கூடிருச்சு...

அதிலே ஒரு பெரிசு என்னைப் பார்த்து "என்னம்மா என்ன ஆச்சு?" அப்பிடின்னு ரொம்ப சீரியஸாக் கேக்க நானும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு
"பரீட்சையில் காப்பி அடித்தோம் தாத்தா இதுக்குப் போய் ஜெயில்ல போடப் போறாங்க "என்றேன்.பெரிசு விடாமல்"எந்தப் போலீஸ் ஸ்டேஷன்?"என்றது...
வாய்க்கு வந்தபடி "சிதம்பர நகர் போலீஸ் ஸ்டேஷன்"என்று அழுற மாதிரி சொன்னேன்...அதிசயம் என்னன்னா....கூட இருந்ததுக அத்தனையும் சிரிக்காமல் இருந்ததுதான்....

அப்புறம் ? எனக்கெப்பிடிங்க தெரியும்?அந்தப் பெரிசுக்கு எங்க அப்பாவைத்
தெரியும்னு? அது போய் எங்க அப்பாகிட்ட ஊதின சங்குலெ என் சொந்தக்காரங்க எல்லாம்
" சித்தி வந்திருக்காக.......
சித்தப்பு வந்திருக்காக...மாமா வந்துருக்காக.......
அத்தை வந்துருக்காக....பெரியப்பா வந்திருக்காக......
பெரியம்மா வந்திருக்காக.......
அம்மா மின்னல் அருணா நீ எப்பம்மா வருவேன்னு கவலையான முகத்தோட உட்கார்ந்திருந்தாங்க....வேறென்ன நான் ஜெயிலுக்குப் போனதைக்
கொண்டாடத்தான்.....இது ஒண்ணும் தெரியாமல் போட்டியிலே ஜெயிச்ச சந்தோஷத்துலே அதே சனி பிடித்த போலீஸ் ஜீப்பிலே வந்திறங்கியதைப் பார்த்த அம்மா முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டு ஓ வென்று அலறியழ...ம்ம்ம்ம் அதுக்கப்புறம்........

நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...என்னங்க ஜெயிலுக்குப் போறேன்னு சொல்றதிலே இவ்வளோ வில்லங்கமா?...
ஆனால் அன்றொரு நாள் நான் ஜெயிலுக்குப் போகலையே!!!

31 comments:

வினையூக்கி said...

:) :) :)

கோபிநாத் said...

தசாவதாரம் கமலை கூட மிஞ்சிடுவிங்க போல இருக்கு...அடிச்சி ஆடுங்க;))

\\நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...\\

அதை படிக்க தானே நாங்க இருக்கோம்..;))

மங்களூர் சிவா said...

நல்லா பண்ணிருகக்காங்கய்யா பாதுகாப்பு!!

:)))))))

தமிழ் குழந்தை said...

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

நாடோடி இலக்கியன் said...

//வந்தீங்க...படிச்சீங்க......
சும்மா பார்த்துட்டு போகாதீங்க.....
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க...........
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க....
//
super..!
:)

Dreamzz said...

சூப்பரு ... நல்லா இருங்க!

ரசிகன் said...

அடடா.. இப்டி ஒரு பதிவு எழுதறதுக்காகவே உண்மையிலேயே ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தா..(அட..காந்தி ஜெயந்திக்கு சாக்கலேட் குடுக்கவாவது:P )ஒரு ரியாலிட்டி டச் கிடைச்சிருக்கும்ல்ல..
(ஏன் உனக்கு இந்த கொலைவெறின்னு கேக்கறது யாருப்பா??? :P:P:P)
:)))))))

ரசிகன் said...

//தமிழ் குழந்தை said...

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!//

என்னது கருத்தா?.. அவ்வ்வ்வ்வ்
கொழந்த,பதிவை படிச்சிட்டுதான் சொல்லறிங்களா?:p

என்ன கொடுமை அருணா இது?:)))))

ரசிகன் said...

//அது போய் எங்க அப்பாகிட்ட ஊதின சங்குலெ என் சொந்தக்காரங்க எல்லாம்
" சித்தி வந்திருக்காக.......
சித்தப்பு வந்திருக்காக...மாமா வந்துருக்காக.......
அத்தை வந்துருக்காக....பெரியப்பா வந்திருக்காக......
பெரியம்மா வந்திருக்காக.......
அம்மா மின்னல் அருணா நீ எப்பம்மா வருவேன்னு//

ஹாஹ்ஹா... ரசிச்சு சிரிச்சேன்ப்பா.. சூப்பரு:))))

sathish said...

:) நல்ல கூத்து பொங்க! தொடருங்க தொடருங்க....

புருனோ said...

//என்னங்க ஜெயிலுக்குப் போறேன்னு சொல்றதிலே இவ்வளோ வில்லங்கமா?...//

ஹி ஹி... இதே மாதிரி ஸ்ட்ரைக் அப்ப போலிஸ் வேனில் போய் எங்கள் கல்லூரி மானவன் ஒருவன் வீட்டின் டின் வாங்கியது நினைவிருக்கிறது :) :) :)

என் சுரேஷ் said...

"பெரிசு" என்பதற்கு பதில்
முதியோர்/பெரியவர்/ஒரு தாத்தா என்று குறிப்பிட்டிருக்கலாம்.

சுவாரசியமும் தேவை தான்!

நல்ல பதிவு, நல்ல தொடராக அழகாக எழுதுகிறீர்கள், வாழ்த்துகள்

ஒரு போலீஸ் ஜீப்பில் யார் சென்றாலும் அவர்களை குற்றவாளிகளாக இன்னமும் நமது சமுதாயம் பார்க்கு அவலநிலையை உங்களது இந்த அனுபவம் பதிவு செய்கிறது.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து உங்களின் அடுத்த பதிவு இருக்கட்டும்.

தோழமையுடன் - என் சுரேஷ்

Vetty Officer said...

Soooperappu!!!
ini Arunavum Rowdyngo Rowdyngo Rowdyngo
;)

aruna said...

வினையூக்கி said...
//:) :) :)//

Aruna said...
நன்றி வினையூக்கி!!!!

கோபிநாத் said...
தசாவதாரம் கமலை கூட மிஞ்சிடுவிங்க போல இருக்கு...அடிச்சி ஆடுங்க;))

Aruna said...
அடிச்சு ஆடத்தானே போறோம்!! பார்த்துக்கிடே இருங்க!

\\நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...\\

அதை படிக்க தானே நாங்க இருக்கோம்..;))

அட நீங்க ஒருத்தராவது படிக்க இருக்கீங்க்களே!!
அன்புடன் அருணா

aruna said...

மங்களூர் சிவா said...
நல்லா பண்ணிருகக்காங்கய்யா பாதுகாப்பு!!

:)))))))

aruna said..
பின்ன சும்மாவா??
:)))))))

Dreamzz said...
சூப்பரு ... நல்லா இருங்க!

நன்றி!! Dreamz

aruna said...

sathish said...
//:) நல்ல கூத்து பொங்க! தொடருங்க தொடருங்க....//

Aruna said...

தொடர்வேன் ......தொடர்வேன் .....
அன்புடன் அருணா

aruna said...

புருனோ said...
//ஹி ஹி... இதே மாதிரி ஸ்ட்ரைக் அப்ப போலிஸ் வேனில் போய் எங்கள் கல்லூரி மானவன் ஒருவன் வீட்டின் டின் வாங்கியது நினைவிருக்கிறது :) :) :)//

Aruna said...
அட அப்பிடியா??
அன்புடன் அருணா

aruna said...

Vetty Officer said...
//Soooperappu!!!
ini Arunavum Rowdyngo Rowdyngo Rowdyngo
;)//
aruna said...
நன்றிங்கோ..நன்றிங்கோ....நன்றிங்கோ...Vetty Officer
அன்புடன் அருணா

என் சுரேஷ் said...
//"பெரிசு" என்பதற்கு பதில்
முதியோர்/பெரியவர்/ஒரு தாத்தா என்று குறிப்பிட்டிருக்கலாம்.//

Aruna said...
சும்மா சுவாரசியத்திற்காக எழுதியதுங்க !!!!
அன்புடன் அருணா


ஒரு போலீஸ் ஜீப்பில் யார் சென்றாலும் அவர்களை குற்றவாளிகளாக இன்னமும் நமது சமுதாயம் பார்க்கு அவலநிலையை உங்களது இந்த அனுபவம் பதிவு செய்கிறது.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து உங்களின் அடுத்த பதிவு இருக்கட்டும்.


Aruna said....
கண்டிப்ப்பாக முயற்சி பண்ணுவேன் சுரேஷ் !!!!
அன்புடன் அருணா

aruna said...

ரசிகன் said...
//அடடா.. இப்டி ஒரு பதிவு எழுதறதுக்காகவே உண்மையிலேயே ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தா..(அட..காந்தி ஜெயந்திக்கு சாக்கலேட் குடுக்கவாவது:P )ஒரு ரியாலிட்டி டச் கிடைச்சிருக்கும்ல்ல..
(ஏன் உனக்கு இந்த கொலைவெறின்னு கேக்கறது யாருப்பா??? :P:P:P)
:)))))))//

Aruna said...
வேற யாரு ?? எனக்குத்தான் அந்தக் கொலை வெறி ரசிகன்!!!

ஹாஹ்ஹா... ரசிச்சு சிரிச்சேன்ப்பா.. சூப்பரு:))))

Aruna said...
Tank u!!! tank u!!!!

ரசிகன் said...
//தமிழ் குழந்தை said...

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!//

என்னது கருத்தா?.. அவ்வ்வ்வ்வ்
கொழந்த,பதிவை படிச்சிட்டுதான் சொல்லறிங்களா?:p

என்ன கொடுமை அருணா இது?:)))))

Aruna said...
என்னப்பா யார் கிட்டேயும் போய் சொல்லக் கூடாதுன்னு ஒரு கருத்தைச் சொல்லிருக்கேனே ரசிகன் ? உங்களுக்கு புரியலையா?
அன்புடன் அருணா

Divya said...

நல்லாயிருக்கு அருணா........ஐ மீன் பதிவு நல்லாயிருக்கு, முதுகில் 'டின்' கட்டியதையும் பதிவில் எழுதியிருந்தா, இன்னும் ரசிச்சிருப்போமில்ல???

அடுத்த என்ன அவதாரம்???? அறிந்துக்கொள்ள ஆர்வத்துடன் வெயிட்டீங்கஸ்!!

பாச மலர் said...

நல்லா எழுதுறீங்க...எழுதுங்க..
நாங்கள்லாம் ரசிக்கிறோமில்லே!

வினையூக்கி said...

அட, டெம்ப்ளேட் மாத்திட்டீங்க... ஒவ்வொரு ரைட்டப்புக்கும் படம் போட்டு இருக்கீங்க கலக்குங்க

Srivats said...

he he romba nalla erukku.. kudave jeepla vandha anubavam ;)

ennum enna enna agaporeegalo

SanJai said...

ஹாஹாஹாஹா... பயங்கரமா சிரிக்க வச்சிட்டிங்க..

//நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...//

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்கு மட்டும் மெயில் பண்ணூங்க.. ( நான் அதை பதிவா போட்டுடறேன்.. :P )

SanJai said...

//அதிசயம் என்னன்னா....கூட இருந்ததுக அத்தனையும் சிரிக்காமல் இருந்ததுதான்....//

ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.. :))

aruna said...

SanJai said...
ஹாஹாஹாஹா... பயங்கரமா சிரிக்க வச்சிட்டிங்க..

//நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...//

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்கு மட்டும் மெயில் பண்ணூங்க.. ( நான் அதை பதிவா போட்டுடறேன்.. :P )

சஞ்சய் ,,உங்களுக்கு மெயில் பண்ணிட்டா அப்புறம்....என் பதிவுக்கு மேட்டருக்கு எங்கே போறது?
அன்புடன் அருணா

ஜி said...

:)))

vaazththukkal.... innoru naalukaaga :)))

cheena (சீனா) said...

நகைச்சுவையின் உச்சம் - நல்வாழ்த்துகள்

Sudharsan said...

ஹ்ம்ம்ம்ம்...(ஏக்க பெருமூச்சு தான் ).போலீஸ் ஜீப்-ல எல்லாம் ஏறி இருக்கீங்க ....வீட்டுல டின் வேற கட்டியிருக்காங்க ...அடுத்தது என்ன தேர்தல் தானே?
அசத்துறிங்க ....அசத்துங்க .....

ஹேய்ய்ய்ய் அருணா ரவுடி தானுங்கோவ் ...கண்ஃபார்ம் ஆயிடுச்சுங்கோவ் !!!
--

---ஷமி
( http://sudharsang.blogspot.com )

கட்டபொம்மன் said...

// ஏற்பாடு பண்ணின வண்டிதான் இந்த போலீஸ் ஜீப்!!நல்ல வேளை நாய் வண்டி வரல்லையேன்னு கொஞ்சம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம்....//

ஒரு நாள் கூத்துக்குகே இப்படின்னா நாங்க அதில தினமும் போறோம் எங்களுக்கு எப்படியிருக்கும்


கட்டபொம்மன்

kattapomman.blogspot.com

Vijayasarathi said...

வாய்பே இல்லீங்க...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா