நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, March 3, 2008

அப்பப்போ வில்லனாவோமில்லே!!!

அது கல்லூரிக் காலம்.எல்லோரும் "எனக்கொரு boy friend வேண்டும்...வேண்டும்னு ஏங்கும் காலம்.இந்த விடுதிப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் டே ஸ்காலர்ஸை
மடக்குவாங்கன்னு தெரியாது....எல்லாம் லெட்டர் எழுதி அவுட் போஸ்ட் பண்ணக்
கொடுக்கலாம்னுதான்...ஏன்னா விடுதி வார்டன் லெட்டரைப் படிப்பாங்கன்னுதான்...
எனக்கு எப்பவுமே ஒரு கேள்வியுண்டு...அப்பிடி வார்டனுக்குத் தெரியாமல் என்னதான் எழுதணும் வீட்டுக்குன்னு?..ஏன்னா போஸ்ட் பண்ணும்போது "விடுதி பற்றி அம்மாவுக்கு எழுதிருக்கேன்...வார்டன் படிச்சா அவ்வளவுதான்" ...அப்பிடின்னு டையலாக் வேற.

இப்பிடித்தான் அந்தப் பொண்ணு என்கிட்டயும் ஒரு லெட்டரைக் கொடுத்து போஸ்ட்
பண்ணச் சொன்னது...அவ்வளவுதான் எனக்கு அதை படிக்கத் தாங்க முடியாத ஒரு ஆவல்.வீட்டுக்குக் கொண்டு வந்த பின்பு...இதென்ன பெரிய தப்பா? ராணுவ ரகசியமா?
அப்பிடி என்னதான் எழுதிருக்குன்னு பார்க்கப் போறேன்...மற்படியும் ஒட்டி அனுப்பப் போறேன்...இதிலென்ன தப்பு? உலகத்திலே என்னன்னமோ தப்பெல்லாம் பண்றாங்க...இது கூடப் பண்ணக் கூடாதா?....என்று மனதில் நினைத்துக் கொண்டு.....
"தப்பு....தப்பு ...செய்யாதே...செய்யாதே"..என்று மிரட்டிய மனசாட்சியை.....
"அட அடங்குடா ..." என்று பதிலுக்கு விரட்டிவிட்டு...மெல்ல மெல்ல ஓரம் கிழிந்து விடாத படி தண்ணீர் தொட்டுத் திறந்தேன்

"அன்புள்ள அம்மா.,
நான் நலமே...அங்கு எல்லோரும் நலமா?...

"ஐயோ பாவம் ..அம்மாவுக்குத்தான் எழுதியிருக்கிறாள்"...என்று கொஞ்சம் (ரொம்பவே)ஏமாற்றத்துடன் மேலே படித்த என்னை ஒரேயடியாக ஏமாற்றியது அந்தக் கடிதம்.
அட அது ஒரு அருமையான காதல் கடிதமுங்க!
"அன்பே...பொன்னே...மானே.."போங்க எனக்கு வெட்கமாக இருக்கிறது!!!! இதற்கு மேல எழுத......கடைசியாக ஒரு வரி
"அடுத்த வாரக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும்போது "அம்மாவுக்கு சனிக்கிழமை காலை வருவதாகச் சொல்லி விடுகிறேன்...வெள்ளி மாலையே கிளம்பிடுவேன்...பாளையங்கோட்டை காளிமார்க் பக்கத்தில் நில்லு ....OK? I'm waiting for that day dear..............................என்றிருந்தது...

எனக்கு நானே அந்தத் தப்பைச் செய்வது போலிருந்தது.கை டப டப வென்று அடித்தது..அடடா....பட படவென்றுதான் அடித்தது.வேர்த்து வேர்த்து வழிந்தது....
இப்போ இதை போஸ்ட் பண்ணவா வேண்டாமா?ன்னு ஒரே மண்டைக் குழப்பமாக இருந்தது....கடிதத்தை மடித்து வைத்து விட்டு"ஒரே யோசனை..என்ன பண்ணலாம்?

அடியே ராணி...நீ இவ்வளவுதானாடி? என்று கேட்கலாமா?....
நேரா விடுதி வார்டன்கிட்ட கொடுக்கலாமா?
கல்லூரி முதல்வரிடம் கொடுக்கலாமா?
பேசாம அம்மாகிட்ட காட்டிரலாம்???
எதுவுமே புரியவில்லை....ஆனால் இவர்கள் அத்தனை பேரை விட என் மேல் எனக்கிருந்த நம்பிக்கைதாங்க ஜெயிச்சுது!!!!
நானே சமாளிக்கலாம்னு முடிவு பண்ணி ......
அந்தக் கடைசி வரிகளை பேனாவால் அடித்தேன்..கீழே
"இந்த லெட்டர் எங்கள் கையில் கிடைத்த நிமிடமே ராணியை கல்லூரியிலிருந்து நீக்கியிருக்க முடியும்.ஆனாலும் ஒரு படிக்கிற பெண்ணின் வாழ்க்கையை பாழ் பண்ண விரும்பவில்லை...இது கடைசி வாய்ப்பு.இனி அவளைப் பார்க்கவோ,அவளுடன் பேசவோ முயற்சி பண்ணினால் அவளைக் கல்லூரியிலிருந்து நீக்கி அவள் அப்பா அம்மாவிற்குத் தெரியப் படுத்துவோம்.
இப்படிக்குக் கல்லூரி முதல்வர்
Sr.Rita
என்று கையெழுத்திட்டு ஒட்டி அனுப்பி விட்டேன்..

அப்புறம் அந்த வாரக் கடைசியில் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பின்பு முதல் கடைசி வருடம் முடிக்கும் வரை ராணி என்னுடன் பேசவே இல்லை..
அவள் காதலை(காதல்தானா அது????)கட் பண்ணியதால் நான் வில்லனா?(வில்லியா?)அல்லது அதிலிருத்து காப்பாற்றியதால் கதாநாயகியா???....எனக்குத் தெரியலை...நீங்கதாங்க சொல்லணும்.....சொல்லுங்க ப்ளீஸ்

எப்படியிருந்தாலும் காதலுக்கு வில்லனாயிட்டோமில்லெ!!!!!!!

27 comments:

Dreamzz said...

அது அவர்களது உண்மையான காதலா இல்லையா என்பதை பொருத்து... ஹிஹி... தப்பு செய்யறவங்களை, தடுத்தாலும், வேற வழியில செய்ய போறாங்க.. நல்லவங்க, நீங்க தடுத்தும் ஒன்னும் ஆக போறதில்லை! சோ....

Dreamzz said...

நீங்க காதலுக்கு வில்லியோ இல்லையோ... அந்த பெண்ணுக்கு நல்ல தோழி!

ராணி said...

அடியே எத்தினி பேரு கிளம்பியிருக்கீங்க இது மாதிரி!?!?!?

மங்களூர் சிவா said...

//
Dreamzz said...

நீங்க காதலுக்கு வில்லியோ இல்லையோ... அந்த பெண்ணுக்கு நல்ல தோழி!
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

கோபிநாத் said...

ஆகா..

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!

அப்பப்போ வில்லனாவோமில்லே!!!

இன்னும் எத்தனை பாக்கி இருக்குங்க!! ;))

கோபிநாத் said...

\\Dreamzz said...
நீங்க காதலுக்கு வில்லியோ இல்லையோ... அந்த பெண்ணுக்கு நல்ல தோழி!\\

ரைட்டு ரீப்பிட்டேய்ய்ய்ய்...

ILA(a)இளா said...

அடப்பாவி.. இப்படியா சின்னஞ்சிறுசுகளை ஏமாத்துறது????

பாச மலர் said...

நல்ல தோழி..

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

இன்னாமே இப்டி பண்ணிட்டியே. இந்த வேர்ல்டுல லவ்வுறது அவ்வளவு பெரிய தப்பா?

aruna said...

//Dreamzz said...
நீங்க காதலுக்கு வில்லியோ இல்லையோ... அந்த பெண்ணுக்கு நல்ல தோழி!
மங்களூர் சிவா,கோபிநாத் said...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
பாச மலர் said...
நல்ல தோழி..//

அருணா சொன்னது
நன்றி...நன்றி Dreamzz,மங்களூர் சிவா,கோபிநாத்,பாச மலர் என்னை நல்ல தோழின்னு சொன்னதுக்கு!

ராணி said...
அடியே எத்தினி பேரு கிளம்பியிருக்கீங்க இது மாதிரி!?!?!?

அருணா சொன்னது
ஓ! நீங்கதான் அந்த ராணியா?
ஆனால் நான் பேரை மாற்றில்ல வைச்சுருக்கேன்!!


கோபிநாத் said...
ஆகா..

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!

அப்பப்போ வில்லனாவோமில்லே!!!

இன்னும் எத்தனை பாக்கி இருக்குங்க!! ;))//

அருணா சொன்னது
இந்தத் தொடர் தொடரும் ....நிறைய ஸ்டாக் வைச்சுருக்கோம்லெ!!


//ILA(a)இளா said...
அடப்பாவி.. இப்படியா சின்னஞ்சிறுசுகளை ஏமாத்துறது????//

அருணா சொன்னது
அதுங்க மட்டும் பெற்றவங்களை எமாற்றலாமா?

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...
//இன்னாமே இப்டி பண்ணிட்டியே. இந்த வேர்ல்டுல லவ்வுறது அவ்வளவு பெரிய தப்பா?//

அருணா சொன்னது
லவ்வுறது தப்பில்லைப்பா...ஆனாலும் அதுக்கு ஒரு எல்லைக் கோடு இருக்கே! அதைத் தாண்டும்போதுதான்பா தப்பாயிடுது!
அன்புடன் அருணா

sathish said...

எப்டிங்க!!! அடுத்தவங்க பெட்டிய தோறக்குரீங்க! அடுத்தவங்க கையெழுத்த போடுறீங்க! உங்களுக்குள்ள பல வித்தைகள் வச்சிருக்கீங்க போங்க!!

srivats said...

Anbudan aruna,
Neenga vandhu comment pannadhula romba romba sandhosham. kandippa you will get all that you wish, god sent you nothing but angels.
I am right now in Singapore, been here from december, So not in regular scribe work, however I do keep in touch with some of the volunteers. Lets see what we can do together to create a difference in others life.:)

ஸ்ரீ said...

காதலுக்கு வில்லியா என ஆராய எனக்கு தெரியவில்லை. அவர்கள் சூழல் தெரியாத காரணத்தால். ஆனால் "ஓரம் கிழிந்து விடாத படி தண்ணீர் தொட்டுத் திறந்தேன்" இதை படித்ததில் இருந்து கன்பார்ம் வில்லத்தனம் என தெரிகிறது. ஏன்னா சாதாரணமா இவ்ளோ அறிவு வராது யாருக்கும். தப்பை கூட சரியா தவறு இல்லாமல் செய்ததற்கு ஒரு சபாஷ்.

ஜீவா said...

:( :( :(----------------

:) :) :)------------

:( :( :(

வேறென்ன சொல்ல.

அருட்பெருங்கோ said...

சரியாத் தப்பாங்கறதெல்லாம் அந்தந்த சூழ்நிலையப் பொருத்த விசயம்.

நாங்களும் இப்படி கடிதங்களப் படிச்சிருக்கோம். ஆனா வில்லத்தனம்லாம் பண்ணத்தெரியல... ரொம்ப எளகின மனசு இல்லையா? ;-)

கதிர் said...

உங்கள் செயல் மிகவும் பாராட்டதக்கது. இன்றைய இளைய சமுதாயம் துடுப்பு இழந்த படகாக தடுமாறுகின்றது. உங்களை போன்ற சிலர் நிச்சயம் தெவை.
கதிர்.

Divya said...

நீங்கள் செய்தது நிச்சயம் 'வில்லத்தனமானது' அல்ல.....

அடுத்தவர் கடிதத்தை படித்தது, அநாகரிகமானதாக இருந்தாலும், உங்கள் தோழியை ஒரு பெரும் தவறிலிருந்து தடுத்திருக்கிறீர்கள்.

aruna said...

அருட்பெருங்கோ said...
சரியாத் தப்பாங்கறதெல்லாம் அந்தந்த சூழ்நிலையப் பொருத்த விசயம்.

//நாங்களும் இப்படி கடிதங்களப் படிச்சிருக்கோம். ஆனா வில்லத்தனம்லாம் பண்ணத்தெரியல... ரொம்ப எளகின மனசு இல்லையா? ;-)//

பெரியவுங்க எல்லாம் வந்திருக்கீங்க!
வருகைக்கு நன்றி அருள்!
அன்புடன் அருணா

aruna said...

கதிர் said...
//உங்கள் செயல் மிகவும் பாராட்டதக்கது. இன்றைய இளைய சமுதாயம் துடுப்பு இழந்த படகாக தடுமாறுகின்றது. உங்களை போன்ற சிலர் நிச்சயம் தெவை.
கதிர்.//

உங்களை போன்ற சிலர் நிச்சயம் தேவை என் செய்கைகளை ஊக்குவிக்க!!!
வருகைக்கு நன்றி கதிர்!
அன்புடன் அருணா

aruna said...

Divya said...
//நீங்கள் செய்தது நிச்சயம் 'வில்லத்தனமானது' அல்ல.....

அடுத்தவர் கடிதத்தை படித்தது, அநாகரிகமானதாக இருந்தாலும், உங்கள் தோழியை ஒரு பெரும் தவறிலிருந்து தடுத்திருக்கிறீர்கள்.//

நன்றி திவ்யா
அன்புடன் அருணா

srivats said...

waitin for ur next post

ரசிகன் said...

அவ்வ்வ்வ்வ்... என்னோட பின்னூட்டத்தைக் கானோம்?..
எங்க போச்சு? எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்..ஆமா.. கிர்ர்ர்ர்ர்...

aruna said...

ஏய்!!! பின்னூட்டம் போட்டாதானே வரும்? இந்த அழுகாச்சி ஆட்டமெல்லாம் இங்க செல்லாது!
அன்புடன் அருணா

ரசிகன் said...

//aruna said...

ஏய்!!! பின்னூட்டம் போட்டாதானே வரும்? இந்த அழுகாச்சி ஆட்டமெல்லாம் இங்க செல்லாது!
அன்புடன் அருணா//

கிர்ர்ர்ர்......
என்ன நீ? நம்ப மாட்டேங்குற?.. நெசமாத்தான்ப்பா...:)
உன்னிய திட்டி வேற போட்டேனா? அதான் டவுட்டா இருக்கு..
சாம் தாத்தா இந்த அநியாயத்த வந்து கேளுங்க:)))))

கொலைவெறியுடன் ரசிகன்...

aruna said...

//என்ன நீ? நம்ப மாட்டேங்குற?.. நெசமாத்தான்ப்பா...:)
உன்னிய திட்டி வேற போட்டேனா? அதான் டவுட்டா இருக்கு..
சாம் தாத்தா இந்த அநியாயத்த வந்து கேளுங்க:)))))//

கொலைவெறியுடன் ரசிகன்...
இந்த கொலை வெறிக்கெல்லாம் அசர மாட்டோமில்லே!!
அதென்ன சாம் தாத்தாவை சப்போர்ட்டுக்கு கூப்பிடறே?
இதுக்கெல்லாம் பயந்துருவோமா என்ன?
ஆனாலும் சாம் தாத்தாவைக் கூப்பிடு!!!
அவர் வலைப்பூவை விட்டு விட்டு வேற எதிலோ ரொம்ப
பிஸியான மாதிரித் தெரியுதுப்பா!!
அன்புடன் அருணா

வினையூக்கி said...

:)))

சாம் தாத்தா said...

தோ வந்துட்டேண்டா...
பேராண்டி...?

ஆமா...! என்னம்மா அருணா.. இது...?

என் பேரன் ரசிகனை மட்டுமில்லாம,
என்னையும் கூட சேத்து வம்புக்கு இழுத்திருக்கே?

பிச்சிப்புடுவேன்...
பிச்சு. (செல்லமாதாண்டா கண்ணு)

இரு..
இரு..
நான் போயி..
பஞ்சாயத்துக்கு ஆள் கூட்டியாறேன். (ஹி..! ஹி...!)

ஆமா...
இந்த ஆயிட்டோம்ல...
தொடர்ல லேட்டஸ்ட்டா பூசாரியாயிட்டே...!

அடுத்ததா என்னவா ஆவப் போற.?

என் காதுல மட்டும் சொல்லேன்.
நான் ஆருக்கிட்டையும் சொல்ல மாட்டேன்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா