நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, March 19, 2008

அன்றொரு நாளில் முட்டாளாகிட்டொமில்லே!!!!கல்லூரிக் காலங்களில் வம்புக்கும்,சிரிப்புக்குமா பஞ்சம்?அப்பிடித்தான் ஆரம்பித்தது தமிழ் வகுப்பு.அன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி.முட்டாள்கள் தினம்.

ஒவ்வொரு வகுப்பின் ஆரம்பத்திலும் ஒரு சின்ன ப்ரேயருடன் ஆரம்பமாகும்.அப்பிடி ப்ரெயர் நடந்து கொண்டு இருக்கும் போது வகுப்பின் ஒரு வால் ஒன்று மெதுவாக தமிழாசிரியையின் பின்னால் சென்று ஒரு பேப்பரில் "நான் ஒரு முட்டாளுங்க!" என்று எழுதி பின் பண்ணி விட்டாள்...என் நாக்கில் சனிதான்..... அதற்கு அப்போதுதானா தண்ணீர் தாகம் எடுத்திருக்க வேண்டும்..நான் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தவள் "அடடா இதென்ன கலாட்டா" என்று அந்தப் பேப்பரை எடுத்துவிட நினைத்து மெதுவாக பின்னால் போய் அந்தப் பேப்பரில் கையை வைத்து.....அட! இதென்ன ?ப்ரேயர் முடிந்து தமிழாசிரியைத் திரும்பி ....ஒரே ஒரு வினாடிக்குள் தமிழாசிரியையின் கைகளில் என் கைகளும் ,என் கைகளுக்குள் அந்த முட்டாள் பேப்பரும்...

"There was no question of any questions you know?"

எந்தவிதமான கேள்விகளோ,விசாரணையோ,விளக்கத்துக்கோ இடமில்லாமல் நான் தான் கையும் களவுமாகப் பிடி பட்டிருக்கிறேனே....
தமிழாசிரியை ஒன்றும் பேசாமல் அமைதியாக என் சேலையில் அந்தப் பேப்பரை பின்னால் மாட்டி விட்டு ....ஒவ்வொரு வகுப்பாக ஒரு நாள் முழுவதும் வலம் வரச் சொன்னாங்க..பார்த்துக்கிட்டு இருந்த நம்ம சக ஜீவ ராசிகளெல்லாம் "என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டியேன்னு" ஒரு பார்வையோடு தேமேன்னு உட்கார்ந்துக்கிட்டு இருந்ததுகள்!


அப்புறமென்ன?திரு திருவென்று முழித்துக் கொண்டு.... ஒரு கையால் அந்தப் பேப்பரை மறைத்துக் கொண்டு.......முகம் முழுவதும் டன் டன்னாக அசடு வழிந்துக் கொண்டு........பிரின்ஸி பார்த்தால் என்ன ஆகும் என்று பயந்து பயந்து ஒளிந்துக் கொண்டு....அப்பப்பா "எனக்கு மட்டும் ஏனிப்படி? உருப்படியா ஒண்ணு பண்ண விட மாட்டீங்களாடா?" அப்பிடின்னு ஒரு தினுசாக செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கல்லூரியில் அன்னிக்கு முழுவதும் முட்டாளாகிட்டோமில்லெ!!!

35 comments:

Divya said...

Ha ha ha!

iyo paavum aruna neenga........ipdi sothapiteengley!!

வினையூக்கி said...

ஹாஹாஹா

நிவிஷா..... said...

\\There was no question of any questions you know?"\\

is it??

nice post arunakka:)

natpodu
Nivisha

கோபிநாத் said...

;)))

ஆகா இன்னும் எம்புட்டு இருக்கு!?

இனி உங்களை ஆகிட்டோமில்லே அருணா என்ற பெயர் தான் சரி ;))

ஸ்ரீ said...

:))அடுத்து என்ன ஆகப்போறீங்க?

Dreamzz said...

ROFL!!

//இனி உங்களை ஆகிட்டோமில்லே அருணா என்ற பெயர் தான் சரி ;))//
repeatu!

அழு மூஞ்சி... said...

எங்க அம்மா அவங்க காலேஜுல வேலை செஞ்சப்ப இதே மாதிரி ஒரு பொண்ணுக்கு, திருப்பி ரிவிட் அடிச்சதா சொல்லுவாங்க.

ஒரு வேளை அது நீங்கதானோ?

அய்யோ
பாவமே
பழி ஓரிடம்,
பாவம் ஓரிடம்னு ஆயிப்
போச்சே?

அழு மூஞ்சி... said...

எனக்கு உங்களைத் தெரியும்.

நான் உங்களைப் பாத்திருக்கேன்.

அழு மூஞ்சி... said...

வர வர ரொம்ப அறுவைத் திலகமா ஆயிட்டு வரீங்கப்பா.

Try to change this...
ஆயிட்டோமில்ல... series.

It looks a little bit "mono type."

aruna said...

//Divya said...
Ha ha ha!
iyo paavum aruna neenga//

நான் ரொம்பப் பாவம்தான் திவ்யா எப்பவுமே!
அன்புடன் அருணா

aruna said...

//வினையூக்கி said...
ஹாஹாஹா//

//நிவிஷா..... said...
nice post arunakka:)//

நன்றி நிவிஷா,வினையூக்கி!!
அன்புடன் அருணா

aruna said...

//கோபிநாத் said...
;)))

ஆகா இன்னும் எம்புட்டு இருக்கு!?//

இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு கோபிநாத்!!
அன்புடன் அருணா

aruna said...

கோபிநாத் said...
இனி உங்களை ஆகிட்டோமில்லே அருணா என்ற பெயர் தான் சரி ;))

//Dreamzz said...
ROFL!!

//இனி உங்களை ஆகிட்டோமில்லே அருணா என்ற பெயர் தான் சரி ;))//
repeatu!//

புதுசா ,நல்லா இருக்கு "ஆகிட்டோமில்லெ அருணா" பேரு...கோபிநாத், ட்ரீம்ஸ்!!
அன்புடன் அருணா

aruna said...

//ஸ்ரீ said...
:))அடுத்து என்ன ஆகப்போறீங்க?//

அடுத்து என்ன ஆகப் போறேனா?????அதுதானே சீக்ரெட் ஸ்ரீ... ...
அன்புடன் அருணா

aruna said...

அட வாங்க அழுமூஞ்சி! வேற பேர் கிடைக்கலியா?

//அழு மூஞ்சி... said...
எங்க அம்மா அவங்க காலேஜுல வேலை செஞ்சப்ப இதே மாதிரி ஒரு பொண்ணுக்கு, திருப்பி ரிவிட் அடிச்சதா சொல்லுவாங்க.//
ஒரு வேளை அது நீங்கதானோ?

Aruna said....
அது உங்கம்மாவாக இருந்தாலும் இருக்கும்...

//அழு மூஞ்சி... said...
எனக்கு உங்களைத் தெரியும்.
நான் உங்களைப் பாத்திருக்கேன்.//

Aruna said...
அட...அப்பிடியா நீங்க என்னைப் பார்த்து இருக்கீங்களா?????
நான் உங்களைப் பார்க்கலையே!!

//அழு மூஞ்சி... said...
வர வர ரொம்ப அறுவைத் திலகமா ஆயிட்டு வரீங்கப்பா.
Try to change this...
ஆயிட்டோமில்ல... series.
It looks a little bit "mono type."//

Aruna said...
அப்பிடியா இடையில் கொஞ்சம் கவிதைப் பக்கம் போகட்டுமா??
அன்புடன் அருணா

sathish said...

ஹாஹா...

இன்னும் எத்தன அவதாரங்கள் எடுத்தீங்க அருணா??

கலக்குங்க :))

Anonymous said...

mmm

Anonymous said...

appadiya..?
wait and see.

Anonymous said...

naan oru muttaalungoa!

Anonymous said...

neengaL aththanai appaaviyaa?

Anonymous said...

Munaivar. muttal AruNaa avargaL vaazhga!

Anonymous said...

Eththanaik kaalamthaan Emaatruvaar indha naattilae?

aruna said...

நிராதரவன் said...
mmm
appadiya..?
wait and see.
naan oru muttaalungoa!
neengaL aththanai appaaviyaa?
Munaivar. muttal AruNaa avargaL vaazhga!
Eththanaik kaalamthaan Emaatruvaar indha naattilae?
Aruna said....
varugaikkum vaazththukkum munaivar muttal pattaththiRkum n-anRi...
anbudan aruna.

ரசிகன் said...

சூப்பருங்கோ...
கலக்கல்...:)))))))))))

அந்த பேப்பர ஒட்டிக்கிட்டு ,கிளாஸ்ல உக்காந்திருந்த போது அருணாவோட முகம் பரிதாபமா எப்டி இருந்திருக்கும்ன்னு நெனைச்சா பாவமா இருந்தாலும்,அன்னைக்கு லவ்லெட்டர் மோசடி பண்ணதுக்கு ,சரியான பதிலடின்னு ஜாலியா இருக்கு :)))))))
அருணா திட்டாதேப்பா.. :))

ரசிகன் said...

//அழு மூஞ்சி... said...

எனக்கு உங்களைத் தெரியும்.

நான் உங்களைப் பாத்திருக்கேன்.//

அதுக்கு எதுக்கு அழுவனும் அழு மூஞ்சி :P

ரசிகன் said...

//அழு மூஞ்சி... said...

எனக்கு உங்களைத் தெரியும்.

நான் உங்களைப் பாத்திருக்கேன்.//

இதுக்கெல்லாம் பயப்படலாமா அழுமூஞ்சி?..அழப்படாது அட....:P:))))))

ரசிகன் said...

தோழி “அன்றோரு நாள்” அருணா வாழ்க வாழ்க..:)))))

aruna said...

ரசிகன் said...
சூப்பருங்கோ...
கலக்கல்...:)))))))))))

அந்த பேப்பர ஒட்டிக்கிட்டு ,கிளாஸ்ல உக்காந்திருந்த போது அருணாவோட முகம் பரிதாபமா எப்டி இருந்திருக்கும்ன்னு நெனைச்சா பாவமா இருந்தாலும்,அன்னைக்கு லவ்லெட்டர் மோசடி பண்ணதுக்கு ,சரியான பதிலடின்னு ஜாலியா இருக்கு :)))))))
அருணா திட்டாதேப்பா.. :))

Aruna said.....
அடப்பாவி!! ஒரு நல்லது பண்ண விட மாட்டீங்களாப்பா??
நல்லதுக்கு எப்பவுமே காலமில்லை ரசிகா!!
அன்புடன் அருணா

ரசிகன் said...
//அழு மூஞ்சி... said...

எனக்கு உங்களைத் தெரியும்.

நான் உங்களைப் பாத்திருக்கேன்.//

//அதுக்கு எதுக்கு அழுவனும் அழு மூஞ்சி :P//

//இதுக்கெல்லாம் பயப்படலாமா அழுமூஞ்சி?..அழப்படாது அட....:P:))))))//

Aruna said....
ஆமாமா இதுக்கெல்லாமா அழுவுறது?அழுமூஞ்சி?
பாவம் ரசிகன் வருத்தப் படறாருல்லே?? கண்ணீரைத் துடைசுக்கோப்பா!!
அன்புடன் அருணா


ரசிகன் said...
தோழி “அன்றோரு நாள்” அருணா வாழ்க வாழ்க..:)))))

Aruna said....
அட இதுக்கெல்லாமா ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது?? ஐயோ உங்க அன்புத் தொல்லைக்கு அளவே இல்லையாப்பா??
அன்புடன் அருணா

Srivats said...

he he super!

college times nenachaley sandhosham dhaan.

Oru naal mudalvar ayitomla apdeennuu kuda oru post poduveengala ?

aruna said...

அதுக்கு முதல்ல ஒருநாள் முதல்வராகணுமே...முயற்சி பண்ணிர வேண்டியதுதான் Srivats!!!!!!!
அன்புடன் அருணா

மங்களூர் சிவா said...

ஹா ஹா
கலக்கல்

அந்த தெய்வம் தமிழாசிரியை வாழ்க!!

:)))))))

மங்களூர் சிவா said...

/
அந்த பேப்பர ஒட்டிக்கிட்டு ,கிளாஸ்ல உக்காந்திருந்த போது அருணாவோட முகம் பரிதாபமா எப்டி இருந்திருக்கும்ன்னு நெனைச்சா
/

அவ்வ்வ்வ்வ்வ்

என் சுரேஷ் said...

நண்பர்களே,

அருணாவின் வலைப்பூவை தினமும் ரசிக்கும் நம்மை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்று அவருடைய வலைப்புவில நமமுடைய பெயர்களும், பெயர்களுக்குள் நமது வலைப்பூக்களின் விலாசமும் எழுதியுள்ளார்கள்..

இதற்கு நன்றி தெரிவித்து
அருணா- ரசிகர் மன்றம் என்று ஒன்றை ஆரம்பிப்போமா!!!:-)

ஜி said...

ada... Muttaalnu sollikirathula ambuttu perumaiyaa?? ;)))

ovvoru pathivulaiyum onnonna aayitte vareenga... aduththu??

cheena (சீனா) said...

செய்யாத தவறுக்குத் தண்டனை என்பது ஏற்கனவே தண்டனையில் தப்பிய தவறுக்கு எனக் கொள்ள வேண்டும்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா