நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, December 29, 2009

படிக்கும் இயந்திரங்கள்

அது ஒரு மூன்று பேர் அமரும் இருக்கை.அவர்கள் அங்கே வந்து உட்கார்ந்த நேரத்திலிருந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்..........அம்மா,அப்பா,ஒரு சின்ன தேவதை.கடந்து போன ஒரு பழ வியாபாரியிலிருந்து, பேருந்தில் எழுதியிருக்கும் திருக்குறள் வரைக்கும் அவ்வ்ளோ அழகாக குழந்தைக்கு எடுத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே வந்தார்கள்....கவனித்துக் கொண்டே வருவது சுகமாக இருந்தது.

பஸ் ஆற்றைக் கடந்த போது ஆற்றின் வரலாறு.............பாலத்தைக் கடக்கும் போது...........பாலம் கட்டும் வித்தை, மரம்,மலை,குகை பற்றி ........இப்படி பஸ் பயணம் ஒரு வகுப்பறையாக மாறிப் போயிருந்தது.அந்தக் குட்டி தேவதையும் அலுக்காமல் சலிக்காமல் கற்றுக் கொண்டே வந்தது. நானும் என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படி இருந்தால் எவ்வ்ளோ நல்லாருக்கும் என்று கனவுலகத்தில் மிதந்து கொண்டே அந்தக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.......எனக்கும் அந்த பஸ் வகுப்பறையில் படிப்பது பிடித்தேயிருந்தது.....

தடைப் பட்டது பாடம்....ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது............நிறைய பேர் ஏறினார்கள். அம்மாவும் அப்பாவும் அவசரமாகச் சொன்னார்கள்..........
"செல்லம் நல்லா நகர்ந்து உட்கார்ந்துக்கோ ... வேற யாராவது வந்து உட்கார்ந்துரப் போறாங்க........"

படிக்கும் பாடங்கள் குழந்தைகளை மனிதனாக்கவேண்டுமேயன்றி
படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில் பிடிவாதமாயிருக்கும் எனக்கு ஒரு பயம் கலந்த கவலை வந்தது

கால்கள் இருக்கும் பிரக்ஞையில்லாமல் இன்னும் தவழச் சொல்லிக் கொடுப்பதுதானே நாம் கற்றுக் கொண்டது என்னும் பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டேன் ........மனது வலித்தது.......

32 comments:

திருவாரூர் சரவணா said...

தான் எதையாவது இழந்து மற்றவருக்கு கொடுக்கும் அளவுக்கு தியாகியாக வேண்டாம். அருகில் இருப்பதை எடுக்க ஏறி வருபவர்களை எட்டி உதைக்காமல் இருக்க குழந்தைகளை நாம் பழக்கினால் போதும்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

குழ‌ந்தைக‌ளை இய‌ந்திர‌மாக‌ மாற்றுப‌வ‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் தான்

நட்புடன் ஜமால் said...

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மன்னில் பிறக்கையிலே

அவர் நல்லவராவதும் ...

அண்ணாமலையான் said...

மூன்று பேர் இருக்கையில் எத்தனை பேர் உட்கார வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? மேலும் மூன்று பேர் அமரும் இருக்கையில் பயனச்சீட்டு வாங்கி செல்லும் 3 பேர்தானே பயனம் செய்ய முடியும்? அந்த பெற்றோரை தவறு சொல்லாதீர்கள்.(அவர்கள் டிக்கெட் வாங்கியிருந்தால்)

sathishsangkavi.blogspot.com said...

குழந்தைகள் பிறக்கும் போது நல்ல குழந்தைகள் தான்
பெற்றோர்கள் வளர்ப்பில் தான் இருக்கிறது அதன் முன்னேற்றம்....

வால்பையன் said...

பிறருக்கு உதவாதே என்ற எண்ணமே பெரியவர்களிடமிருந்து தான் சிறுவர்களுக்கு தொற்றுகிறது!

கார்க்கிபவா said...

//அண்ணாமலையான் said...
மூன்று பேர் இருக்கையில் எத்தனை பேர் உட்கார வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? மேலும் மூன்று பேர் அமரும் இருக்கையில் பயனச்சீட்டு வாங்கி செல்லும் 3 பேர்தானே பயனம் செய்ய முடியும்? அந்த பெற்றோரை தவறு சொல்லாதீர்கள்//

ஆஹா.. :)))

ராமலக்ஷ்மி said...

//படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில்//

சரியான சிந்தனை அருணா.

Gowripriya said...

//கால்கள் இருக்கும் பிரக்ஞையில்லாமல் இன்னும் தவழச் சொல்லிக் கொடுப்பதுதானே நாம் கற்றுக் கொண்டது//

arumai...

மணி said...

வால் பையனின் கருத்தே எனக்கும் தோன்றியது.

RaGhaV said...

//மனது வலித்தது//

:-((

S.A. நவாஸுதீன் said...

///"செல்லம் நல்லா நகர்ந்து உட்கார்ந்துக்கோ ... வேற யாராவது வந்து உட்கார்ந்துரப் போறாங்க........"

படிக்கும் பாடங்கள் குழந்தைகளை மனிதனாக்கவேண்டுமேயன்றி
படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில் பிடிவாதமாயிருக்கும் எனக்கு ஒரு பயம் கலந்த கவலை வந்தது///

உண்மைதான். அருமையா சொல்லிட்டீங்க மேடம். உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்.

Thamira said...

மிக மிக அருமையானதொரு பகிர்வு.!

காமராஜ் said...

//படிக்கும் பாடங்கள் குழந்தைகளை மனிதனாக்கவேண்டுமேயன்றி
படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில் பிடிவாதமாயிருக்கும் எனக்கு ஒரு பயம் கலந்த கவலை வந்தது//

மருத்துவர்கள்,தொழில்நுட்பவல்லுநர்கள்,விஞ்ஞானிகள்,படைவீரர்,மதிநுட்பம் மிகுந்தோர்,அரசுஊழியர்,.....
எல்லோரும் உபரியாக கிடக்கிறார்கள். ஆனால் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அரிதாகித் தேவையாகிறார்கள்.
அருணா= ஆசிரியர்+மனுஷி.

ஹேமா said...

அருமையாய் தொடங்கி முடித்திருக்கிறீர்கள்.
அனுபவம்.உண்மைதான் பெற்றவர்கள்தான் வழிகாட்டிகள்.என்றாலும் வளர வளர எம்மாலும் சரி பிழைகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான பதிவு அருணா. பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோர் தான் . அவர்கள் தங்களையறியாமல் இடும் தரமில்லாத வித்துக்கள் இளம் உள்ளங்களில் இலகுவாக வேர்விட்டு விடுகின்றன.
புத்தாண்டு வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

நல்ல சிந்தனை டீச்சர்.

ny said...

படிச்சதும் நடக்க வைச்சுட்டீங்க !
...
(அப்புறம், மறந்துட்டு "முதல் வருகைக்கு நன்றி'' ன்னெல்லாம் போட்றாதீங் :)

கே.பாலமுருகன் said...

//கால்கள் இருக்கும் பிரக்ஞையில்லாமல் இன்னும் தவழச் சொல்லிக் கொடுப்பதுதானே நாம் கற்றுக் கொண்டது //

அருமையான அவதானிப்பு அருணா. பிரக்ஞையைத் தொலைத்துவிடுவதும்கூட சமூக பொதுபுத்தியென நிறுபப்பட்டிருக்கிறது.

புலவன் புலிகேசி said...

இது போன்ற பெற்றோர்களால் குழந்தகளுக்கு மனிதம் புரியாமல் போய் விடுகிறது...

ப்ரியமுடன் வசந்த் said...

பெற்றவர்கள் சில நேரம் அறியாமாலே நல்ல விஷயங்களோடு சில அற்பவிஷயங்களையும் கற்றுத்தந்துவிடுகிறார்கள் என்ன செய்ய இது அறிந்து செய்கின்ற பிழையா இல்லை அறியாமல் செய்கின்ற தவறா?

நல்லதொரு பார்வை பிரின்ஸ்...!

அன்புடன் அருணா said...

சரண் said...
/அருகில் இருப்பதை எடுக்க ஏறி வருபவர்களை எட்டி உதைக்காமல் இருக்க குழந்தைகளை நாம் பழக்கினால் போதும்./
அதே!அதே!சரண்!
உண்மைதான் க‌ரிச‌ல்கார‌ன் !
புரிதலுகு நன்றி ஜமால்!
அண்ணாமலையான் said...

/மூன்று பேர் இருக்கையில் எத்தனை பேர் உட்கார வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?/
என் கவலை நியாயமாகவே தெரிகிறது....

அன்புடன் அருணா said...

நன்றி சங்கவி!
அதேதான் வால்!
வாங்க கார்க்கி!
நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி மணி!
நன்றி கௌரி!
நன்றி ராகவ்!

அன்புடன் அருணா said...

S.A. நவாஸுதீன் said...
/ உண்மைதான். அருமையா சொல்லிட்டீங்க மேடம். உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்./
நன்றி நவாஸுதீன்!

அன்புடன் அருணா said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்,சரவணகுமார்!

அன்புடன் அருணா said...

kartin said...
/படிச்சதும் நடக்க வைச்சுட்டீங்க !
...
(அப்புறம், மறந்துட்டு "முதல் வருகைக்கு நன்றி'' ன்னெல்லாம் போட்றாதீங் :)/
நன்றி நடந்ததற்கு.....
எப்பவாவது வந்தா இப்படித்தான் மறந்து போய் "முதல் வருகைக்கு நன்றி''ன்னு போட்டுருவேன்....

அன்புடன் அருணா said...

ஹேமா said...
/என்றாலும் வளர வளர எம்மாலும் சரி பிழைகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது./
நன்றி ஹேமா.
ம்ம்ம் வளர்வது வரை விதைப்பது பெற்றோரே!

ஜெஸ்வந்தி said...
/ பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோர் தான் . அவர்கள் தங்களையறியாமல் இடும் தரமில்லாத வித்துக்கள் இளம் உள்ளங்களில் இலகுவாக வேர்விட்டு விடுகின்றன./
உண்மைதான் ஜெஸ்வந்தி.

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/மருத்துவர்கள்,தொழில்நுட்பவல்லுநர்கள்,விஞ்ஞானிகள்,படைவீரர்,மதிநுட்பம் மிகுந்தோர்,அரசுஊழியர்,.....
எல்லோரும் உபரியாக கிடக்கிறார்கள். ஆனால் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அரிதாகித் தேவையாகிறார்கள்./
அதேதான் என் கவலையும் காமராஜ்.....

அன்புடன் அருணா said...

நன்றி கே.பாலமுருகன்!
நன்றி புலவன் புலிகேசி!
நன்றி பிரியமுடன்...வசந்த் !

Romeoboy said...

எனக்கு ஒரு சீட் இருக்குமா ??

sri said...

very realistic ellai aruna? I see the humanity go deep to the ground when survival of the fittest begins, esp cases like this where ppl push to get into the bus or get a seat .. better life and education can only change these things

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா