நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, December 26, 2009

பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

வருடம் முழுவதும் போட்ட சண்டைகளுக்காய்
சமரசம் பேசுவதாய்க் கூறிக்கொண்டு
மீண்டும் மீண்டும் வலிகளைப்
பிரதியெடுக்காமல் மௌனித்திருந்தேன்....

வருட இறுதியில்
என்னால் பறக்க முடிந்த
உயரம் இவ்வளவு தான் என்பதை ஏற்காமல்...........
அடுத்தகட்ட நடவடிக்கையாய்
சிறகுகளை நீவி விட்டுக் கொண்டு
இன்னும் பறக்க உயரம் தீர்மானித்தேன்......

வருட இறுதியின் உழைப்பிலிருந்து சற்றே
இளைப்பாற ஈரமாய் மென்காற்று வீசட்டும்
மழை பிடிப்பவர்களுக்காய் தனியே
பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

சம்பிரதாய வார்த்தைகளை விட்டொழித்து...........
இப்படியும் புது வருட வாழ்த்துச் சொல்லலாம்தானே!!

30 comments:

புலவன் புலிகேசி said...

சம்பிரதாயங்களை விட்டொழித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..சிறகு விரித்து பறந்து கொண்டே இருங்கள். தோல்வி வந்தாலும் துவழாதிருங்கள்..வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

நிச்சயம் இப்படியும் சொல்லாம். சொன்னதற்கு நன்றிகள். உங்களுக்கும், உங்கள் சார்ந்த அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Gowripriya said...

சொல்லலாமே.. புத்தாண்டு வாழ்த்துகள்.. :)))

நட்புடன் ஜமால் said...

சிறகுகளை நீவி விட்டுக் கொண்டு
இன்னும் பறக்க உயரம் தீர்மானித்தேன்.....]]

கொத்து கொத்தாய் பூக்கள்

மாதேவி said...

"சிறகுகளை நீவி விட்டுக் கொண்டு
இன்னும் பறக்க உயரம் தீர்மானித்தேன்......"

பாராட்டுக்கள். இதைவாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களுக்கு வெற்றிகள்கிட்டுவதில் ஆச்சரியம் இல்லை.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கார்க்கி said...

வாழ்த்துகள் டீச்சர்

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி புலிகேசி!

என். உலகநாதன் said...

நல்லா இருக்கு.

புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்.

அண்ணாமலையான் said...

மேலும் ப்ளாக்கர்களுக்கு ஓட்டு மழையாய் பொழியட்டும்...
புத்தாண்டு வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

///மழை பிடிப்பவர்களுக்காய் தனியே
பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!///

அழகு.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு.

சென்ஷி said...

நல்லாயிருக்குது. வாழ்த்துக்கள் அன்புடன் அருணா

Subankan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :))

ஹேமா said...

பிறக்கும் புதிய ஆண்டு புதிதாய் பிரத்தியேகமாகவே பிறக்கட்டும்.நல்ல செய்திகளைக் கொண்டு வரட்டும்.வாழ்த்துகள் அருணா.

+Ve Anthony Muthu said...

)-: .........ய்மாகயேத்ரபி !..ம்துத்கொங்பூ ம்ளுகக்துத்ழ்வா டுண்தாத்பு !..ல்கக்க்லக தைவிக !...ம்டமே ட்கு ரிவெ !...வ்வா

கலகலப்ரியா said...

புத்தாண்டு வாழ்த்துகள் அருணா..! பெய்யட்டும்..!

Srivats said...

your second paragraph reflects my current life! Thanks for the wishes :) have a great 2010 :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

புத்தாண்டு வாழ்த்துகள், மேடம்!

Maddy said...

பெய்யாமலே இருக்கும் எங்க ஊரில மழை விட்டு விட்டு பெய்யுதே என்ன காரணம்ன்ணு யோசிச்சேன்.இப்போ புரியுது உங்க வாழ்த்துக்கள் தான் காரணம் ன்னு.

கனவு காண் தோழி!
கற்பனைக்கும் எட்டாத கனவு காண்!
அத்துனையும் பலிக்கட்டும்
அதுவே என் விருப்பம்
புது சிந்தனை வருட வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்று. வாழ்த்துகள்.

தியாவின் பேனா said...

அருமையான இடுகை வாழ்த்துகள்
நல்ல கவிதை
தரமாக உள்ளது.
நல்ல நடை

Rajasurian said...

அருமையான இடுகை புத்தாண்டு வாழ்த்துக்கள்

R.Gopi said...

//வருட இறுதியின் உழைப்பிலிருந்து சற்றே
இளைப்பாற ஈரமாய் மென்காற்று வீசட்டும்
மழை பிடிப்பவர்களுக்காய் தனியே
பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

சம்பிரதாய வார்த்தைகளை விட்டொழித்து...........
இப்படியும் புது வருட வாழ்த்துச் சொல்லலாம்தானே!! //

******

ஆஹா... இதல்லவோ கவிதை துவமான வாழ்த்து...

பிரத்தியேகமாய் மழை பெய்ய வாழ்த்திய உங்கள் நல்ல உள்ல்ளத்திற்கு பூங்கொத்து என்ன, ஒரு பூந்தோட்டத்தையே பரிசாய் தரலாம்... பிடியுங்கள் அருணா ஒரு பூந்தோட்டம் பரிசாக...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், நண்பர் குழாம் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும், என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

என் வலைப்பக்கங்களை வருகை தந்து நீண்ட நாட்கள் ஆகிறதே அருணா மேடம்... நேரமிருப்பின் வாருங்களேன்...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Sangkavi said...

நல்லா இருக்கு மேடம்.....

வாழ்த்துக்கள்................

அன்புடன் அருணா said...

நன்றி Gowripriya
நன்றி முரளி
நன்றி ஜமால்
நன்றி மாதேவி

அன்புடன் அருணா said...

நன்றி கார்க்கி!
நன்றி என். உலகநாதன் !
நன்றி அண்ணாமலையான் !
நன்றி S.A. நவாஸுதீன் பூங்கொத்துக்கும்!
நன்றி சென்ஷி !

அன்புடன் அருணா said...

நன்றி Subankan!
றின்ந +Ve Anthony Muthu க்ங்உ லேல்டைஸ் ல்திப சுச்யாலில்சொ!
நன்றி கலகலப்ரியா
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை ...உங்களுக்கும்!

அன்புடன் அருணா said...

Maddy said...
/கனவு காண் தோழி!
கற்பனைக்கும் எட்டாத கனவு காண்!
அத்துனையும் பலிக்கட்டும்
அதுவே என் விருப்பம்/
அட!நன்றி Maddy!

அன்புடன் அருணா said...

Srivats said...
/your second paragraph reflects my current life! Thanks for the wishes :) have a great 2010 :)/
Thanx Sri! I feel it very year!

பிரியமுடன்...வசந்த் said...

பிரத்தியோகமாவே பிரயோஜனமாவே பெய்யட்டும்...

இவ்வாண்டு சிறப்பாக புத்துணர்வு ஆண்டாக அமையட்டும் பிரின்ஸ்...!

---0---(புத்தாண்டு வாழ்த்துக்கள்)---0---

ராமலக்ஷ்மி said...

அருமை, இப்படியும் சொல்லலாம்தான் அருணா:)! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா