நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 9, 2009

நான் ஙே வாகியதும்.....ஙே வாக்கியதும்.1

வண்டி வாங்கிய புதிது.எப்போதும் அவங்கதான் பெட்ரோல் டாங்க் நிரப்பி விட்டு வருவார்கள்.அன்று அவங்க வீட்டிலில்லாத நேரம்...வேற வழியில்லாமல் நானே பெட்ரோல் போடப் போனேன்.

வேர்த்து வழிந்தது..எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
"என்னடா இது ஏன் பெட்ரோல் போடுபவன் என் வண்டிப் பக்கம் வரவேயில்லை?"என யோசனையாயிருந்தது...

நான் நின்ற இடத்தில் வண்டிகளும் வந்து நிக்கவில்லை காலியாகத்தானிருந்தது.
எனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் பெட்ரோல் நிரப்பிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோபத்துடன்.."இங்கே வாப்பா"என்று கத்தினேன்.
"என்னம்மா ஸ்கூட்டிக்கு டீசல் போடப் போறீங்களான்னான்?"
நான் ஙே!
டீசல் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறேன்!

47 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகச் சிறிய ஆனால் எதிர்பாராத முடிவுடன் கூடிய நகைச்சுவை (உங்கள் " ஙே " எங்களுக்கு "ஆகா").

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா.....அப்பறம் டீசல் போட்டீங்களா...???

பூங்குன்றன்.வே said...

நல்ல சிரிப்பை வரவழைச்சீங்க மேம்.குட்டிகதை நல்ல இருக்கு.

சந்தனமுல்லை said...

:-))) it happens

சின்ன அம்மிணி said...

:) Funny

T.V.Radhakrishnan said...

:-)))

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா ஹா.....! நின்னது டீசல் போன்ற இடத்துல....இதுல இங்கே வாபானு அதிகாரமா ஒரு சவுண்ட் வேறயா???

Rajeswari said...

டீசல் போட்டுட்டு ஒரு ரவுண்டு வரவேண்டியதுதானே....என்னமோ போங்க வித்தியாசமா திங்க் பண்ண வேண்டாமா????

புதுகைத் தென்றல் said...

:))டீசல் போட்டுட்டு ஒரு ரவுண்டு வரவேண்டியதுதானே....//

அதானே. சூப்பர் கார் மாதிரி சூப்பர் பைக் ஆகியிருக்கும்.

கல்யாணி சுரேஷ் said...

:))))) Superb Aruna Mam.

ஹுஸைனம்மா said...

:-))

தாரணி பிரியா said...

ஹி ஹி நான் TVS XL க்கு ஆயில் வேண்டாமுன்னு சொல்லி இருக்கேனே :).

எம்.எம்.அப்துல்லா said...

:0))

Sangkavi said...

ஏன் ஸ்கூட்டி டீசல் போட்டா ஓடாதா................?

வால்பையன் said...

அங்கெல்லாம் எதுக்கும் போறிங்க!

ஸ்கூட்டி தண்ணியிலயே ஓடுமே!?

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. தலைப்பும் சூப்பர்

செ.சரவணக்குமார் said...

ரைட்டு!!

கார்க்கி said...

ஹாஹாஹா.. இது என் சொந்த தயாரிப்பு.. டீசலிலும் ஓடும்ன்னு ஏதாச்சும் சொல்லி எஸ்கேப் ஆக வேண்டியதுதானே டீச்சர்

அன்புடன் அருணா said...

ஆகாவாக இருந்தா சரிதான் பெயர் சொல்ல விருப்பமில்லை !

அன்புடன் அருணா said...

நன்றி சின்ன அம்மிணி!முல்லை,ராதாகிருஷ்ணன்!

அன்புடன் அருணா said...

லெமூரியன்... said...
/ ஹா ஹா ஹா ஹா.....! நின்னது டீசல் போன்ற இடத்துல....இதுல இங்கே வாபானு அதிகாரமா ஒரு சவுண்ட் வேறயா???/
அது நம்ம கடமையாச்சே!

Rajeswari said...

/ டீசல் போட்டுட்டு ஒரு ரவுண்டு வரவேண்டியதுதானே....என்னமோ போங்க வித்தியாசமா திங்க் பண்ண வேண்டாமா????/
அட....செய்து பார்த்திருக்கலாமே!

அன்புடன் அருணா said...

நன்றி பூங்குன்றன்.வே .!
புலவன் புலிகேசி said...
/ஹா ஹா ஹா.....அப்பறம் டீசல் போட்டீங்களா...???/
போட்டாச்சு..போட்டாச்சு..!

Karthik said...

ஹிஹி உங்க ஸ்டுடென்ட்ஸ் யாரும் அங்க இருக்கலையே? :)))

ரங்கன் said...

நல்ல வேளை கேஸ் ஸ்டேஷன் பக்கத்தில் போய் நின்னுகிட்டு ஒரு லிட்டர் போடுங்கன்னு சொல்லாம போனீங்க..!!

அன்புடன் அருணா said...

நன்றி அப்துல்லா,ஹுஸைனம்மா,கல்யாணி சுரேஷ்!

Srivats said...

super it happened to me also :P

tamiluthayam said...

சின்ன விஷயத்தில் தான் -பெரிசாய் கோட்டை விட்டு விடுகிறோம் - ஒரு ஜாலியான பகிர்வு, பதிவு.

டம்பி மேவீ said...

ஹா ஹா ஹ எ ஹா

சூப்பர் ..... வாத்தியாரே இப்புடி ......

அண்ணாமலையான் said...

வண்டின்னதும் நான் என்னமோ மாருதி ஸ்விஃப்ட்னு நெனச்சேன்.போனா போதுமொத்தத்துல பங்க்லதான் நின்னீங்க.. அதனால தப்புல்ல....

rajan RADHAMANALAN said...

இதே வேலைய நான் ஒருநாள் பண்ணி என் பின்னாடி இன்னொருத்தனும் பைக்குல வந்து நின்னான் ... பங்க்ல இருந்த சின்ன பையன் காறித் துப்பாத குறை தான் !

Priya said...

ஹா ஹா ஹா......Superb!

Mr. Zero said...

Hmm... Very Good!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பதிவுக்கு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.

தாரணி பிரியா said...
ஹி ஹி நான் TVS XL க்கு ஆயில் வேண்டாமுன்னு சொல்லி இருக்கேனே//
எக்ஸ்ட்ரா பெட்ரோலோட எதையோ கலந்து பணம் புடுங்கப்பாக்கிறான்னு டவுட் வந்திருக்குமே. ஹிஹி.. நானும் அப்பிடித்தான் நினைச்சேன், சின்ன வயசுல... இவ்வளவுக்கும் பின்னாடி ஆட்டோமைபைல் படிச்ச அறிவாளி நான்.

Maddy said...

Ithellaam Arasiyala sagajamappa!!! Gowndamani sstyle-la avarukku pathil sonneengalaa?

RaGhaV said...

:-)))

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
/ஹி ஹி நான் TVS XL க்கு ஆயில் வேண்டாமுன்னு சொல்லி இருக்கேனே :)/
நாமெல்லாம் ஒரு க்ரூப்பாத்தானே இருக்கோம் தாரணி!.

எம்.எம்.அப்துல்லா said...
:0))

நன்றி for the :0))

Sangkavi said...
/ஏன் ஸ்கூட்டி டீசல் போட்டா ஓடாதா/
அடடா முயற்சி செய்து பார்த்திருக்கலாமே!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
/அங்கெல்லாம் எதுக்கும் போறிங்க!
ஸ்கூட்டி தண்ணியிலயே ஓடுமே!?/
அட இது எனக்குத் தெரியாம போச்சே!

S.A. நவாஸுதீன் said...
/ஹா ஹா ஹா. தலைப்பும் சூப்பர்/
நன்றி S.A. நவாஸுதீன்!
நன்றி செ.சரவணக்குமார் !

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
/ஹாஹாஹா.. இது என் சொந்த தயாரிப்பு.. டீசலிலும் ஓடும்ன்னு ஏதாச்சும் சொல்லி எஸ்கேப் ஆக வேண்டியதுதானே டீச்சர்/
நல்ல ஐடியாவா இருக்கே கார்க்கி!

அன்புடன் அருணா said...

Karthik said...
ஹிஹி உங்க ஸ்டுடென்ட்ஸ் யாரும் அங்க இருக்கலையே? :)))
அய்யோ இப்போ இது வேற டென்ஷன் ஆரம்பிச்சிருச்சே!

அன்புடன் அருணா said...

Srivats said...
/super it happened to me also :P/
hahaha....I'm happy that these things happen to only elite people!

அன்புடன் அருணா said...

ரங்கன் said...
/நல்ல வேளை கேஸ் ஸ்டேஷன் பக்கத்தில் போய் நின்னுகிட்டு ஒரு லிட்டர் போடுங்கன்னு சொல்லாம போனீங்க..!!/
அபபோ கேஸ் ஸ்டேஷன் அறிமுகமாகலை ரங்கன்!
tamiluthayam said...

/சின்ன விஷயத்தில் தான் -பெரிசாய் கோட்டை விட்டு விடுகிறோம் - /
அதே! அதே!

டம்பி மேவீ said...
/சூப்பர் ..... வாத்தியாரே இப்புடி ....../
டம்ப்ரீஅதோட நிறுத்துங்க!மேல சொல்லாதீங்க!

SanjaiGandhi™ said...

:)))))))))))))))

அன்புடன் அருணா said...

அண்ணாமலையான் said...
/வண்டின்னதும் நான் என்னமோ மாருதி ஸ்விஃப்ட்னு நெனச்சேன்./
அச்சோ!


rajan RADHAMANALAN said...
/இதே வேலைய நான் ஒருநாள் பண்ணி என் பின்னாடி இன்னொருத்தனும் பைக்குல வந்து நின்னான் ... பங்க்ல இருந்த சின்ன பையன் காறித் துப்பாத குறை தான் !/
அட...நீங்களுமா?????

நன்றி Priya
நன்றி Mr. Zero முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

Maddy said...
/Ithellaam Arasiyala sagajamappa!!! /
அப்படித்தான் மனசைத் தேற்றிக் கொள்கிறேன்!

நன்றி RaGhaV !

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/பதிவுக்கு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்./
அட !

/எக்ஸ்ட்ரா பெட்ரோலோட எதையோ கலந்து பணம் புடுங்கப்பாக்கிறான்னு டவுட் வந்திருக்குமே. ஹிஹி.. நானும் அப்பிடித்தான் நினைச்சேன், சின்ன வயசுல... இவ்வளவுக்கும் பின்னாடி ஆட்டோமைபைல் படிச்ச அறிவாளி நான்./
அட ந்த அறிவுக்கே இவ்வ்ளோ விவரமா????:)

அன்புடன் மலிக்கா said...

அருணா அந்த :ஙே: சூப்பர்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா