நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 21, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-2

அந்த மழைக்கால இரவில்
திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........

யாருக்கும் நிற்காத மனிதர்கள்

எதற்கும் கவலையில்லாமல் அள்ளித் தெளிக்கும்
வார்த்தை அலங்காரங்களைச் சீரணித்தும்
மாய உலகில் வாழ்ந்து கொண்டும்
இரண்டு நாள் வீடு ரெண்டு பட்டது.... ........

இல்லாமற் போய்விடும் கவலையில்

கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக

புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!

கண் கலங்கியபடி விடை பெற்றுச்

சென்ற சில நிமிடங்களில்
உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு.............

சமயங்களில் பிரிவு கூட

விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

40 comments:

ராமலக்ஷ்மி said...

//இல்லாமற் போய்விடும் கவலையில்
கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக
புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு! //

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அருணா.

//சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!//

ம்ம். அப்படித்தான் ஆகிவிடுகிறது சமயங்களில்..:(!

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

+Ve Anthony Muthu said...

mmmm.......

I can understand!

Realllllly a very good poem.............!

நட்புடன் ஜமால் said...

அந்த மழைக்கால இரவில்திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........]]

கலக்கிடீங்க

பூங்கொத்துகள்.

--------------

சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

மிகச்சரி

இதில் கொடுமை என்னவென்றால் பல சமயங்களில் விடுதலைக்காக(?) பிரிவினை வேண்டுகின்றது

புலவன் புலிகேசி said...

//சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!//

ம் உண்மைதான்..அருமையான கவிதை அருணா...

ப்ரியமுடன் வசந்த் said...

//கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக
புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு! //

இதுதான் ஹைலைட்டட் பிரின்ஸ்..

ரொம்ப நல்லா வந்துருக்கு கவிதை...!

Gowripriya said...

very nice :)

அண்ணாமலையான் said...

பிரமாதம். உண்மைய சொல்லீருக்கிறீர்கள்.......

கமலேஷ் said...

சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

மிக அழாமான வரிகள்...
உங்களின் மொழி மிக அழகு..
வாழ்த்துக்கள்...

சகாதேவன் said...

//உறவின் வருகை, அள்ளித் தெளிக்கும் வார்த்தை, பிரிவு கூட விடுதலையாக.......//இந்த எல்லா நொடிகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டது எங்கள் சிந்துபூந்துறை வீடு. லட்சக்கணக்கான படங்கள் இருக்கும்.

பூங்குன்றன்.வே said...

//சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!//

உணர்வுப்பூர்வமான வரிகள்.எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திகொள்ளகூடிய வரிகள்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல வரிகள்........... நல்லா சொல்லியிருக்கறீங்க............

தாரணி பிரியா said...

பிடியுங்க பூங்கொத்து :)

கிறுக்கன் said...

//சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!//

ஆமா ஆமா
இடைவெளி தானே பல இதயங்களை
இணக்கமாய் இணைக்கும் பாலம்

சொற்க்களின் தேர்வு அருமை!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!
பூங்கொத்து

S.A. நவாஸுதீன் said...

///அந்த மழைக்கால இரவில்திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........///

அருமை அருமை. பூங்கொத்து

ரொம்ப அருமையா வந்திருக்கு

Karthik said...

really good one..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு.............//

ஒரு புதிய கோணம். அழகான கவிதை. ரசித்தேன்.

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி,
நன்றி Antony!
நன்றி ஜமால்!

அன்புடன் அருணா said...

நன்றி வசந்த்!
நன்றி புலி்கேசி!
நன்றி Gowripriya !

தமிழ் said...

/இல்லாமற் போய்விடும் கவலையில்
கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக
புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!
/

அருமை

அன்புடன் அருணா said...

நன்றி அண்ணாமலையான் !
நன்றி கமலேஷ்!

அன்புடன் அருணா said...

சகாதேவன் said...
/இந்த எல்லா நொடிகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டது எங்கள் சிந்துபூந்துறை வீடு. லட்சக்கணக்கான படங்கள் இருக்கும்./
நன்றி சகாதேவன் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

நன்றி பூங்குன்றன்.வே!
நன்றி சங்கவி!
நன்றி தாரணீ....பூங்கொத்து வாங்கீட்டேன்!

அன்புடன் அருணா said...

நன்றி Kirukkan!
நன்றி டி.வி ராதாகிருஷ்ணன்!

காமராஜ் said...

வீடு புரண்டு படுத்துக்கொண்டதா இல்லை,எதார்த்தம் தான். இந்தக்கவிதை யில் உங்கள் சொல்லாடல் கிரங்கடிக்கிறது.அருணா.
மனவெளியை புரட்டிப்போடுகிற எதார்த்தம் இந்தக்கவிதை முழுக்க பொதிந்து கிடக்கிறது. காட்சியின் இயக்கமும் மனவெளியின் நகர்வும் பயனிக்கிற வேறு வேறான தளங்கள் சொல்லப்பட்ட விதம் நேர்த்தி அழகு அருணா மேடம்.

சத்ரியன் said...

//சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம் //

அருணா,

அருமை..!

அன்புடன் அருணா said...

நன்றி S.A. நவாஸுதீன் !
நன்றி கார்த்திக்!
நன்றி ஜெஸ்வந்தி

அன்புடன் அருணா said...

நன்றி திகழ்!
நன்றி சத்ரியன்!

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி காமராஜ்!

மந்திரன் said...

எனக்கு கொஞ்சம் புரியல ..
ஆனால் எதோ பெருசா சொல்ல வரீங்க ..
சாரி..
நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணுறேன் ..
(என்னை மாதிரி குழந்தைகளுக்கு புரியுற மாதிரி கொஞ்சம் சொல்லுங்க ...)

அன்புடன் அருணா said...

மந்திரன் said...
/எனக்கு கொஞ்சம் புரியல ..
ஆனால் எதோ பெருசா சொல்ல வரீங்க ..
சாரி..
நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணுறேன் ./
அச்சோ புரிலியா!அடுத்த தடவை புரியற மாதிரி எழுதறேன்!
நெக்ஸ்ட் டைம் வாங்க!

thiyaa said...

ஆகா அருமை

amirdhavarshini amma said...

சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

மிக மிக பிடித்த வரிகள், சூப்பரா சொல்லியிருக்கீங்க மேம்

அன்புடன் அருணா said...

நன்றி தியாவின் பேனா,அமித்தம்மா!

தோழி said...

romba nalla irukku Aruna. Iyalba nadakkara oru visayam but azhaga present panni irukkeenga. vaazhthukkal

அன்புடன் அருணா said...

நன்றி தோழி!

அமிர்தவர்ஷினி அம்மா said...
This comment has been removed by the author.
சந்தனமுல்லை said...

வாவ்...மிகவும் ரசித்தேன் அருணா..ட்விட்டர் வழி வந்தேன்..நன்றி.

அன்புடன் அருணா said...

வாங்க சந்தனமுல்லை!நன்றி!

Thamira said...

வரவர ரொம்ப ஆழமாக எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். இந்தக்கவிதை நன்று.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா