நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 14, 2009

ரெண்டாவதாக.....

இரண்டாவது என்பது எவ்வ்ளொ வலி தரக் கூடியதுன்னு அனுபவிச்சாதான் புரியும்.
இந்தா....... அக்காவின் சட்டை பாவாடையில் ஆரம்பித்து ஸ்லேட்,பேனா, ஷூ,தொப்பி,சைக்கிள்,புத்தகம்....இப்பிடி இரண்டாவதாக அவளிடம் தஞ்சம் கொண்டிருந்த பொருட்கள் அதிகம்.அவை மேல் அவளுக்கு எப்போதும் இது தன்னுடையது என்னும் உணர்வு வந்ததேயில்லை.அந்தப் பொருட்களில் அக்காவின் நிழல் விழுந்து விடுகிறது.அக்காவின் வாசம் அந்தப் பொருட்களில் நிறைந்திருக்கும்.

முதல் என்பதற்கு மட்டும் ஏன் அப்படி ஒரு வசீகரம்?
முதல் டீச்சர்,முதல் பேனா,முதல் கடிகாரம்,முதல் புடவை, முதல் கடிதம்,முதல் பரிசு,முதல் மழை,முதல் காதல்,...இப்படி நிறைய முதல்கள் நினைவுப் பெட்டகங்களூடே தங்கிவிட.......இரண்டாவது டீச்சர், இரண்டாவது பேனா,இரண்டாவது கடிகாரம்,இரண்டாவது புடவை,இரண்டாவது கடிதம்,இரண்டாவது பரிசு,இரண்டாவது மழை,இரண்டாவது காதல்.....இப்படி ரெண்டாவதை நினைவடுக்குகளில் தேடித்தான் பாருங்களேன் ஒன்றும் அகப்படாது....

"ம்ம்ம்....ரெண்டாவதும் பெண்ணா?"
அப்படிப் பிறந்தவள்தான் அவள்.....முதல் எல்லாமே அவளுக்கு ஞாபகம் இருப்பதில்லை...........ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுமில்லை வைத்துக் கொள்ளப் பிடிப்பதுவுமில்லை...வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவைகள்தான் மனதில் பிடிவாதமாக நினைவில் தங்கிவிடும் போல.......

அவள் மட்டும் தன்னுடைய முதல்களை மறந்து ,ரெண்டாவதுகளைப் பத்திரப் படுத்தத் தொடங்கினாள்.


"அப்பாடா......முதல் மனைவியாகத்தான் போகிறேன்......இருந்தாலும் அந்த வீட்டின் ரெண்டாவது மருமகளாகத்தான்.........ஹ்ம்ம்"........என நினைத்துக் கொண்டே அம்மாவிடம் அவள் தன் உறுத்தலைச் சொன்னாள்...............

அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............

49 comments:

ராமலக்ஷ்மி said...

ரெண்டாவது என்பதிலான வருத்தம் இயல்பே எனினும் மகளிடம் அம்மா அத்தனை காலம் கழித்து பகிர்ந்திடும் உண்மை மனதில் வலி. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அருணா.

கார்க்கிபவா said...

:(((

எனக்கும் அப்படித்தான். தாடி வச்ச மெளண்ட்பேட்டன், விடைகள் எழுதிய கணக்கு புக், செயின் லூசான சைக்கிள்னு கடுப்பா இருக்கும்.

லெமூரியன்... said...

ரெண்டாவதை பற்றிய வலிகளை சொல்லி காலிலேயே பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா ஆக்கிடீங்களே டீச்சர்....!

இது தகுமோ??? இது முறையோ???

:-(

pudugaithendral said...

இரண்டாவதா பொறக்கறதுதான் சுகம்ன் நான் நினைக்கிறேன். என் அனுபவம் அது! தம்பி திட்டு கூட அதிகம் வாங்கியதில்லை. நீதான் பெரியவ நீதான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும், இப்படி நான் நிறைய்ய விட்டுக்கொடுத்திருக்கேன்.

:(( ஆனாலும் உங்கள் பதிவில் அந்த தாயின் வலி...
சொல்ல வார்த்தையே இல்லை

பூங்கொத்து அருணா

V.N.Thangamani said...

ஐந்தாவது மூன்றாவது எல்லாம் இருக்கும்போது , இரண்டாவதுக்கு அழுதால் ஞாயமா ?

காற்றில் எந்தன் கீதம் said...

கடைசி வரிகளின் வலி நெஞ்சில் நிற்கிறது......
நல்லா இருக்கு டீச்சர்

Rajeswari said...

கடைசி வரியை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம்..

கருத்து நன்று!

Beski said...

நமக்கு எல்லாம் மொதல்லதான். ஆனா ரெண்டாவதா இருக்குறதுலயும் ஒரு நல்லது இருக்கு...

எனக்கு சைக்கிள் கிடச்சது 10 வயசுல... அதே சைக்கிள் தம்பிக்குப் போனது 8 வயசுல...
பைக் 20 வயசுல, அதே பைக்க அவனும் 17 வயசுல ஓட்ட ஆரம்பிச்சுட்டானே...

இப்படி எல்லாம், என்ன விட அவனுக்கு ரெண்டு வயசு முன்னாடியே கிடச்சது...

//Rajeswari said...
கடைசி வரியை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம்..//
பத்தாவது பொண்ணு, ஆறாவது தாரம், அவள் கண்களில் சுனாமியாகக் கண்ணீர்... இப்படி வச்சுக்கலாமா?

S.A. நவாஸுதீன் said...

இரண்டாவதாய் இருப்பதில் இத்தனை எண்ணங்களா. அழகா சொல்லி இருக்கீங்க.

கடைசியில் முடிவு அழுத்தம் இருந்தாலும் சட்டென்று கூறியதுபோல் இருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

//அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............//

இந்த வரிகளில் மனது ஏனோ வலிக்கிறது...........

கல்யாணி சுரேஷ் said...

//அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....//

என்ன madam இப்படி பண்ணிட்டீங்க? கண் கலங்க வச்சுட்டீங்களே.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//"நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....//
ம் என்ன‌ சொல்ற‌து டீச்ச‌ர்.
இந்த‌ வாய்ப்புமில்லன்னா நெற‌ய‌ பேர் முதிர் க‌ன்னிக‌ளாக‌வே வாழ‌ வேண்டியிருக்கும்.
Something is better than Noting.

சந்தனமுல்லை said...

:-((( hmm..! என் தம்பிதான் நினைவுக்கு வருகிறான்! ஆனாலும், 'சின்னபசங்களுக்கு பெரியவங்கதான் விட்டுக்கொடுக்கணும்'னு, அவங்க செலக்ட் செஞ்சது போக மீதிதான் கிடைக்கறஅராஜகத்தையும் யாராவது சொல்லுங்கப்பா! :-))

கலகலப்ரியா said...

touchy aruna...:(

Karthik said...

ப்ச், ரொம்ப நல்லாருக்கு. ஆனா கஷ்டப்படுத்தற மாதிரி. :(

thiyaa said...

அப்பாடா ...
அருமை

தமிழ் உதயம் said...

மெளன வலி தான் இது. ஆனால் இப்பொதெல்லாம் எந்த குழந்தையும் இரண்டாவதை ஏற்று கொள்வதில்லை.

வினோத் கெளதம் said...

அருமைங்க..

Thamira said...

புதுகைத்தென்றலை வழிமொழிகிறேன்.!

Priya said...

"அதி பிரதாபன்" சொன்ன மாதிரி "நமக்கு எல்லாம் மொதல்லதான். ஆனா ரெண்டாவதா இருக்குறதுலயும் ஒரு நல்லது இருக்கு...".....ஏன்னா நானும் முத‌ல்தான், ஆனா ந‌ம்ம‌ கிட்ட‌ க‌த்துக்கிட்டு, ரெண்டாவ‌துக்கு ரொம்ப‌ தெளிவாயிடுறாங்க‌.

RaGhaV said...

இந்த பதிவு நல்லாயிருக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

பிரின்ஸ் ரொம்ப யதார்த்தமான விஷயங்களை சுலுவாக சொல்லுகிறீர்கள் சொன்ன விஷயங்கள் பாதிக்குதோ இல்லியோ பதிஞ்சு போய்டுது...

பூங்கொத்து...!

MSK / Saravana said...

//Karthik said...
ப்ச், ரொம்ப நல்லாருக்கு. ஆனா கஷ்டப்படுத்தறமாதிரி. :(//

ரிப்பீட்டிக்கிறேன் அக்கா..

புலவன் புலிகேசி said...

நான் கூட வீட்டில் 2வது தான்...ஆனா செல்லப்பிள்ளைங்க...நல்லா இருந்துது அருணா..

கமலேஷ் said...

ரொம்ப அழகா ரசிக்கும் படி இருக்கிறது உங்களின் எழுது நடை...
வாழ்த்துக்கள்..

அண்ணாமலையான் said...

சுவராஸ்யம் உங்கள் எழுத்தில் சும்மா பூந்து புறப்படுது. பட்டய கெளப்புறீங்க..

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க பதிவு... நல்ல சிந்தனை.

Princess said...

ஒரே சோகம்..
2nd child is more kool by the way

நட்புடன் ஜமால் said...

நான் ஐந்தாம் மகன்(நான்காவது ஆண் பிள்ளை)

எல்லா பழைய சட்டைகள்,பேண்ட்டுகள், ஷூக்கள் கூட எனக்குத்தான்

அவர்களுக்கு இல்லாத ’முதல்’கள்

1) ஆங்கில பள்ளிக்கூடம்
2) கணினி
3) சொந்த சம்பாத்தியத்தில் திருமணம்(இது ஒன் & ஒன்லி)

------------

பூங்கொத்து

ராமலக்ஷ்மி said...

மற்றவருக்கு இல்லாத முதல்களையும் கூடவே எண்ணிப் பார்த்திருக்கும் ஜமாலுக்கும் தருவோம் ஒரு பூங்கொத்து, குறிப்பாக ஒன் அண்ட் ஒன்லிக்கு!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
நன்றி கார்க்கி!
நன்றி லெமூரியன்... !

நன்றி புதுகைத் தென்றல்
/ இரண்டாவதா பொறக்கறதுதான் சுகம்ன் நான் நினைக்கிறேன். என் அனுபவம் அது! தம்பி திட்டு கூட அதிகம் வாங்கியதில்லை. நீதான் பெரியவ நீதான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும், இப்படி நான் நிறைய்ய விட்டுக்கொடுத்திருக்கேன்./

அட இதுவேறயா!!
/ பூங்கொத்து அருணா/
வாங்கீட்டேன்!

நன்றி வி.என்.தங்கமணி,
நன்றி காற்றில் எந்தன் கீதம்

Rajeswari said...
/கடைசி வரியை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம்../

சொல்லியிருக்கலாமோ!

அன்புடன் அருணா said...

அதி பிரதாபன் said...
/நமக்கு எல்லாம் மொதல்லதான். ஆனா ரெண்டாவதா இருக்குறதுலயும் ஒரு நல்லது இருக்கு.../
அதுவும் சரிதான்!

நன்றி S.A. நவாஸுதீன் !
நன்றி Sangkavi!
நன்றி கல்யாணி சுரேஷ்!

அன்புடன் அருணா said...

க‌ரிச‌ல்கார‌ன் said.../
ம் என்ன‌ சொல்ற‌து டீச்ச‌ர்.
இந்த‌ வாய்ப்புமில்லன்னா நெற‌ய‌ பேர் முதிர் க‌ன்னிக‌ளாக‌வே வாழ‌ வேண்டியிருக்கும்.
Something is better than Noting./
ரொம்ப சரியா சொன்னீங்க!

தேவன் மாயம் said...

முதலில் பிறப்பது கொடுமைங்க!!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/ ஆனாலும், 'சின்னபசங்களுக்கு பெரியவங்கதான் விட்டுக்கொடுக்கணும்'னு, அவங்க செலக்ட் செஞ்சது போக மீதிதான் கிடைக்கறஅராஜகத்தையும் யாராவது சொல்லுங்கப்பா! :-))/
சொல்லிரலாம் கவலைப் படாதீங்க!

கலகலப்ரியா
/touchy aruna...:(/
நன்றிம்மா!

Karthik said...
/ப்ச், ரொம்ப நல்லாருக்கு. ஆனா கஷ்டப்படுத்தற மாதிரி. :(/
அப்பிடியா நன்றிப்பா!

நன்றி தியாவின் பேனா !

அன்புடன் அருணா said...

tamiluthayam said...
/மெளன வலி தான் இது. ஆனால் இப்பொதெல்லாம் எந்த குழந்தையும் இரண்டாவதை ஏற்று கொள்வதில்லை./
உண்மைதான்!

நன்றி! வினோத்கெளதம்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!
நன்றி Priya

அன்புடன் அருணா said...

நன்றி RaGhaV!

நன்றி வசந்த்! பூங்கொத்து...வாங்கீட்டேன்!!

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//Karthik said...
ப்ச், ரொம்ப நல்லாருக்கு. ஆனா கஷ்டப்படுத்தறமாதிரி. :(//

//ரிப்பீட்டிக்கிறேன் அக்கா./
அட!சரவணா! அதிசயமாயிருக்கு!

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/நான் கூட வீட்டில் 2வது தான்...ஆனா செல்லப்பிள்ளைங்க...நல்லா இருந்துது அருணா../
ஆமாமா....ரெண்டாவதெல்லாம் செல்லப்பிள்ளைங்களும்தான்!நன்றி!

கமலேஷ் said...
/ரொம்ப அழகா ரசிக்கும் படி இருக்கிறது உங்களின் எழுது நடை...
வாழ்த்துக்கள்../
நன்றி கமலேஷ்!

அண்ணாமலையான் said...
/சுவராஸ்யம் உங்கள் எழுத்தில் சும்மா பூந்து புறப்படுது. பட்டய கெளப்புறீங்க../
நன்றிங்க அண்ணாமலையான்!

பித்தனின் வாக்கு said...

// அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்.............. //
அருமையான ஆறுதல், ஆனால் இதுவரையில் மகளிடம் காட்டாத முகம் கண்ணீராய் வருகின்றது. நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள்.
முதல் என்ன இரண்டு என்ன எல்லாம் நம் மனதில் தான் இருக்கின்றது.

அன்புடன் அருணா said...

நன்றி சி. கருணாகரசு !
நன்றி கடையம் ஆனந்த்!
நன்றி Princess !

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/நான் ஐந்தாம் மகன்(நான்காவது ஆண் பிள்ளை)
எல்லா பழைய சட்டைகள்,பேண்ட்டுகள், ஷூக்கள் கூட எனக்குத்தான்/
பொறுமைக்குப் பூங்கொத்து!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/மற்றவருக்கு இல்லாத முதல்களையும் கூடவே எண்ணிப் பார்த்திருக்கும் ஜமாலுக்கும் தருவோம் ஒரு பூங்கொத்து, /
நானும் கொடுத்துட்டேன் பூங்கொத்து!நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

பித்தனின் வாக்கு said...
/முதல் என்ன இரண்டு என்ன எல்லாம் நம் மனதில் தான் இருக்கின்றது./
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் பித்தனின் வாக்கு!

Chitra said...

அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்.........".........இது "முதல்" தர பதிவு. நல்லா இருக்குங்க.

திருவாரூர் சரவணா said...

நாம் வருத்தம் என்று நினைக்கும் விஷயங்கள் எல்லாம் தூசு என்று நினைக்கும் வகையில் சிலருக்கு வழிகளே வாழ்க்கையை அமைந்திருக்கும் என்ற உண்மையை கடைசி வரிகள் உணர்த்துகின்றன.

காமராஜ் said...

அருணா எவ்வளவு அழகாய்க் கதை சொல்லுகிறீர்கள்.தப்பிக்க முடியவில்லை,கண்கலங்க வைக்கிறீர்கள்.

எனக்கு இப்பிடி உனக்கு எப்படியெல்லாம் இதில் இல்லை.வலி வலிதான்.

அம்மாக்கள் க்ரேட் அருணா. சொல்லப்படாத கதைகளின் ஆவணக் காப்பகம் அவர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பங்கள் நமக்கும் இது போன்ற அனுபவமுண்டு என்று நினைக்கவைத்தாலும் கடைசி வரிகள் மனம் கனக்கச்செய்தது.

அன்புடன் அருணா said...

நன்றி சித்ரா,சரண்,காமராஜ்,அமித்தம்மா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா