நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 2, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1


படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!

47 comments:

பூங்குன்றன்.வே said...

இது தானே தினசரி வாழ்க்கையின் குறியீடுகள்.நல்லா இருக்கு கவிதை!!!

அன்புடன் அருணா said...

பூங்குன்றன்.வே said...
/.நல்லா இருக்கு கவிதை!!!/
இதைக் கவிதை மாதிரின்னு சொல்லலாம் பூங்குன்றன்!நன்றி!

தேவன் said...

/// ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது ///

காட்டுக்கு போய்டுங்களேன் !!!

ராமலக்ஷ்மி said...

//கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................//

ஆமாம் அருணா அதென்னவோ அசையாமலேதான் இருக்கிறது:)!

//ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!//

பிரின்ஸ்பல் லீவில் இருக்கிறீர்களா:)?

நல்லாயிருக்கிறது கவிதை!

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு மேடம்

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிசிருக்கு டீச்சர்!கவிதை போட்டி தொடங்கியாச்சு,வாங்க களத்துக்கு..

வெளியில் இருந்து வீட்டை பார்ப்பது போல் இருக்கு கவிதை.

அ.மு.செய்யது said...

நீங்க வீட்டிலயே இருங்க..!! போரடிச்சாலும் பரவாயில்லை.

அப்ப தான் எங்களுக்கு இந்த மாதிரி நல்ல கவிதை கிடைக்கும்ல.

( பொய்ய் !!! அப்படின்னு பின்னாடிருருந்து யாரும் சொல்லல )

Ungalranga said...

நல்ல கவிதை மா..!!

ஆனா பாருங்க கடைசி வரியில தான் எனக்கு உறைச்சிது..ஹாஹாஹா!!

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு டீச்சர்.

அன்புடன் அருணா said...

கேசவன் said
/காட்டுக்கு போய்டுங்களேன் !!!/
அதுசரி!

Karthik said...

லீவா? என்ஜாய்! :) :)

எம்.எம்.அப்துல்லா said...

//கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு //

இரசித்தேன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................//

ரசனை பிரின்ஸ்

நல்லாருக்கு...

ஹேமா said...

வித்தியாசமான சிந்தனை அருணா.இதுதானே வாழ்க்கை.எதை வெறுக்க !எதை அணைக்க !

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி! ராஜஸ்தான் கவர்னர் இறந்ததற்காக ஒருநாள் எதிர்பாராத விடுமுறை!

மேவி... said...

வித்தயசமா எழுதி இருக்கீங்க .......

"பூங்குன்றன்.வே said...

இது தானே தினசரி வாழ்க்கையின் குறியீடுகள்"

சார் நீங்க என் பிளாகை பற்றிய சொல்லி இருக்கீங்க ?????

ஆ.ஞானசேகரன் said...

//கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!//


வித்தியாசமாக இருக்கு,...

விடுப்பில் இருப்பதாக தெரிகின்றது

Rajeswari said...

எனக்கும்
போரடிக்குது....
என்ன
பண்ணலாம்????

கவிதை(மாதிரி)நல்லா
இருக்கு...

காற்றில் எந்தன் கீதம் said...

\\கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!\\
நானும் சமயங்களில் உணர்ந்த மனநிலை :))))

ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்

கல்யாணி சுரேஷ் said...

எப்படிங்க உங்களால மட்டும் இதெல்லாம்....... கலக்கிட்டீங்க போங்க.

புலவன் புலிகேசி said...

தினசரி வாழ்க்கை வீட்டின் பார்வையில் அருமைங்க...கலைந்திருந்தால்தான் வீட்டிற்கே அழகுங்க அருணா....

லெமூரியன்... said...

\\வீட்டிலிருப்பது போரடிக்கிறது!//

கஷ்டம்தான்.......வேற போக்கிடம் இல்லையே??? என்ன பண்றது??? :-)

கவிதை நல்லா இருக்கு...!

Maddy said...

Niraya bore adikkattum!illaina ithumaathiri nalla kavithaigal vittukulla nadakarathu eppo varum???

அன்புடன் அருணா said...

நன்றி! S.A. நவாஸுதீன்
நன்றி! செ.சரவணக்குமார்
நன்றி!காற்றில் எந்தன் கீதம்

ரங்கன் said...
/ஆனா பாருங்க கடைசி வரியில தான் எனக்கு உறைச்சிது..ஹாஹாஹா!!/
அச்சோ!

அன்புடன் அருணா said...

பா.ராஜாராம் said...
/ரொம்ப பிடிசிருக்கு டீச்சர்!கவிதை போட்டி தொடங்கியாச்சு,வாங்க களத்துக்கு../
ம்ம் குதிச்சாச்சு களத்துலே!

அன்புடன் அருணா said...

Karthik said...
/லீவா? என்ஜாய்! :) :)/
ராஜஸ்தான் கவர்னர் இறந்ததற்காக ஒருநாள் எதிர்பாராத விடுமுறை!

அன்புடன் அருணா said...

அ.மு.செய்யது said...
( பொய்ய் !!! அப்படின்னு பின்னாடிருருந்து யாரும் சொல்லல )/
சொல்லாட்டியும் பொய்னு புரியுது!!!!!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
/இரசித்தேன் :)/
தமிழ்மண நட்சத்திரத்துக்கு இதையெல்லாம் ரசிப்பதற்கு நேரம் இருக்கா??

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ரசனை பிரின்ஸ்/
நன்றி வசந்த்!
ஹேமா said...
/ வித்தியாசமான சிந்தனை அருணா.இதுதானே வாழ்க்கை.எதை வெறுக்க !எதை அணைக்க !/
அதேதான் ஹேமா!இது இல்லாமெ இருக்கவும் முடியாது!

அன்புடன் அருணா said...

டம்பி மேவீ said...
/வித்தயசமா எழுதி இருக்கீங்க ......./
நன்றிப்பா!!
ஆ.ஞானசேகரன் said...
/விடுப்பில் இருப்பதாக தெரிகின்றது/
ராஜஸ்தான் கவர்னர் இறந்ததற்காக ஒருநாள் எதிர்பாராத விடுமுறை!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/எனக்கும் போரடிக்குது....என்ன பண்ணலாம்????/
அதைத்தானே யோசிச்சுட்டிருக்கேன்!

அன்புடன் அருணா said...

கல்யாணி சுரேஷ் said.../ எப்படிங்க உங்களால மட்டும் இதெல்லாம்....... கலக்கிட்டீங்க போங்க./
அட இதெல்லாம் கலக்கலா கல்யாணி?

தமிழ் உதயம் said...

கிடைத்த போது ஏற்று கொள் தயங்குவோம்... கிடைக்காத போது ஏங்கி தவிப்போம்...

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/தினசரி வாழ்க்கை வீட்டின் பார்வையில் அருமைங்க...கலைந்திருந்தால்தான் வீட்டிற்கே அழகுங்க அருணா..../
ம்ம்.....இது நல்லாதான் இருக்கு...இருந்தாலும் கலைந்து கிடக்கும் வீடு கொஞ்சம் உறுத்தலாதான் இருக்கு!!

லெமூரியன்... said...
/ கஷ்டம்தான்.......வேற போக்கிடம் இல்லையே??? என்ன பண்றது??? :-)/
அதானே வேற வ்ழி???

அன்புடன் அருணா said...

Maddy said...
/Niraya bore adikkattum!illaina ithumaathiri nalla kavithaigal vittukulla nadakarathu eppo varum???/
அடப் பாவமே! இதுவேறயா?

Rajan said...

சூப்பரு !..

நல்லா இருக்குங்க !

அருள்னேசன் said...

I came to say 'hello' but

//ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது//

என்னக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள்!.

உலகத்தின் மிகச்சிறிடய வடிவம் அல்லது நகல் தானே வீடு. உலகம் பெரிய குப்பைகளாலும், சண்டைகளாலும்....இன்னும் அத்தனையாலும் நிறைந்தது இல்லயா அக்கா. வெளியே இருப்பதை விட வீடு எவ்வளவோ பெட்டர்!

நான் சொல்வது சரியா அக்கா,

விளக்கம் எல்லாம் சரி, ஏனண்டா நமக்குத்தான் இப்ப வீடே இல்லயே, அதனால இப்பிடித்தோன்றுகிறதோ என்னவோ...

- அருள்நேசன் -

அன்புடன் அருணா said...

tamiluthayam said...
/கிடைத்த போது ஏற்று கொள் தயங்குவோம்... கிடைக்காத போது ஏங்கி தவிப்போம்.../
ரொம்ப சரி!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
/சூப்பரு !..
நல்லா இருக்குங்க !/
அட வாங்க ராஜன்!

அன்புடன் அருணா said...

அருள்னேசன் said...
/ I came to say 'hello' but/
Hello!

/விளக்கம் எல்லாம் சரி, ஏனண்டா நமக்குத்தான் இப்ப வீடே இல்லயே, அதனால இப்பிடித்தோன்றுகிறதோ என்னவோ.../

ம்ம்ம்....பதில் சொல்ல முடியவில்லை அருள்நேசன்.மனம் வலிக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

இதோ பூங்கொத்து வாங்கிகோங்க அருணா.

காமராஜ் said...

அருணா உங்களையெல்லாம் பார்க்காத நாட்கள் நெறிஞ்சி மேவிய நடைபாதைகள் அல்லது இருக்கைகளாகிப்போனது. வெளிக்காற்று இல்லாத வாழ்வு சிறைதான் அது சொர்க்கமேயானாலும். அந்த மனநிலையை அப்படியே பிரதியெடுக்கிறது அருணாவின் கவிதை. அதுவும் ஒரு வாத்தியாருக்கு வீடு சர்வ நிச்சயமாய் போரடிக்கவேண்டும்.
அருள் நேசன் பின்னூட்டம் வேறுதளத்தில் இருந்து கண்ணீர் உடைக்கிறது. நல்லா இருக்கீங்களா அருணா.

Thamira said...

ரசனை. ஆனால் போரெல்லாம் அடிக்கலை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன் மலிக்கா!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/நல்லா இருக்கீங்களா அருணா./
நலமே....என்ன ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ரசனை. ஆனால் போரெல்லாம் அடிக்கலை./
வீடா? கவிதையா?

சேவியர் said...

//வீட்டிலிருப்பது போரடிக்கிறது! //

வீட்டில் இருப்பது போரடிக்கும் போது, வீடாய் இருங்கள் !!!!!

உள்ளுக்குள் கலைக்கப்படும் சிந்தனைகள், அடுக்கப்பட்டு கவிதைகளாகும் :D

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா