நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Friday, August 28, 2009
உறவுகளைச் சேமிப்போம்!!!
என்னாது "கல்யாணமா?..நோ சான்ஸ்..நீ மட்டும் போயிட்டுவாம்மா."
"என்னங்க என்தங்கை கல்யாணத்துக்குக் கூட வர முடியாம அப்பிடி என்ன வேலை?"
"உனக்கென்னம்மா தெரியும்?....தலைக்கு மேல வேலை இருக்கு."
"ஆமாமா எனக்கென்ன தெரியும்?போனவாரம் உங்க தம்பி பொண்ணுக்குக் மொட்டை போட்டு காது குத்துறதுக்கும் போகலை....."
என்னம்மா "மொட்டை போட்டு காது குத்துறதுல்லாம் ஒரு விஷயமா? இதுக்கெல்லாம் போய் லீவ் போடமுடியுமா?"
"இப்பிடி எதுக்குமே போகாம எனக்குத்தான் கெட்டபேர்..ஏதோ நாந்தான் உங்களைப் போகவிடாமல் புடிச்சு வச்சுருக்க மாதிரி என்னைப் பேசுறாங்க"
இங்கே பாரும்மா மற்றவங்களை மாதிரி ...மாசம் பத்தாயிரம் ரூபாய் வாங்கலை....மாசம் பொறந்தா முப்பதாயிரம் ரூபாய் வாங்குறேனாக்கும்...என்னாலே இப்பிடி நினைச்ச நேரமெல்லாம் லீவ் போடமுடியாது....
இதை எல்லோருக்கும் சொல்லிப் புரிய வை.... "
"சரிங்க...இதெல்லாம் பரவாயில்லங்க....உங்க நெருங்கிய நண்பன் குமார் விபத்துலெ இறந்ததுக்குக் கூட ஒரு நடை ஊருக்குப் போயிட்டு வர முடியலை இல்லை?"
"அய்யோ என்னடி புரியாதவளா இருக்கே?...எனக்கு அந்த குமாரைத்தான் தெரியும்...அவனே இல்லைங்கறப்போ அங்கே போய் யார்கிட்டே என்னத்தைக் கேக்க?இதுக்கு லீவ் வேற போடச் சொல்லறே?"
ஆறு மாசத்துக்கு அப்புறம்...
"மிஸ்டர் கண்ணன்...இது தவிர்க்க முடியாதது..."
சார் இந்த ஆஃபீஸ்க்காக நான் உயிரையே கொடுத்திருக்கேன் சார்......... என்னைப் போய்...."
I'm helpless Mr. Kannan.."
எல்லாத்தையும் இந்த ஆஃபீஸ்க்காக நான் இழந்திருக்கேன் சார்"
"You were paid for that Mr.Kannan"
உலகமே இருண்டது....என்னையா வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள்....எப்படியெல்லாம் ஓடி ஓடி உழைத்தேன்..என்னையா?"
சவிதா...ரொம்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு...வா...ஊருக்குப் போய் எல்லோரையும் பார்த்துட்டு வரலாம்"
சவிதா புருவம் உயர்த்திப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்...
அட?? கண்ணனா?எப்பிடிப்பா இருக்கே...பார்த்து எவ்வ்ளோ நாளாச்சு..எவ்வ்ளோ இளைச்சுப் போயிருக்கே...வேலை வேலைன்னு ...உடம்பைக் கவனிச்சாதானே???..கண்ணா...
கண்ணான்னு....வீடு அமர்க்களப்பட்டது... பாசமலர்கள் சூழ்ந்து கொண்டன....சொர்க்கம் இதுதானோ???
அதற்காகவா இதை இழந்தேன்....இழப்பின் வலி இதயத்தைத்தாக்கி கண்ணில் கண்ணீர் கரை கட்டியது... கண்ணன் இத்தனை நாள் இழந்த சொர்க்கத் தருணங்களுக்காகக் கதறி அழுதான்.
வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............
வாருங்கள்.......இன்று முதல் உணர்வுகளைப் பகிர்வோம்......உறவுகளைச் சேமிப்போம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
அருமையான சிந்தனை பிரின்ஸ்
பிடிங்க பூங்கொத்துக்கள்
அழகா சொல்லியிருக்கீங்க அருணா,
வேலை வேலை வேலை வேலைக்கு இல்லை வேளை!!!
//வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............
//
சத்தியமான வார்த்தைகள்.
உறவுகளை சேமிக்கச் சொன்ன உயர்ந்த கருத்துக்கள் என் உள்ளத்தில் உரமாய் விழுந்து கிடக்கிறது. நல்ல பதிவை நயமாகச்சொல்லி நம்பிக்கையூட்டிய உங்களுக்கு நன்றி
17 பூங்கொத்துக்கள்!! :)
//வாருங்கள்.......இன்று முதல் உணர்வுகளைப் பகிர்வோம்......உறவுகளைச் சேமிப்போம்!!!//
நல்ல பகிர்வுங்க
நல்லாருக்கு அருணா!! :-)
பூங்கொத்து :)
அருமையான இடுகை. பிடியுங்கள் பூங்கொத்தை!
டீச்சர், சூப்பர்
உறவுகள் என்றாலே வெறுப்பவர்களுக்கு நல்ல அட்வைஸ்...
இந்த நவ நாகரீக காலத்தில் மிக மிக தேவையான விடயத்தை அழகாக எடுத்து சொல்லியிருக்கீங்க
பூங்கொத்துகள்
யதார்த்தமான வார்த்தை.எல்லோருக்கும் பொருந்தும்.நான் கூட அ்ப்படித்தான் அசடாக இருந்தேன். எப்படி இவ்வளவு அழகாக எழுத முடிகிறது?பூங்கொத்துகள் உங்களுக்குதான்
பூங்கொத்து
நட்சத்திரம் முன்னுது டீச்சர்!
வாங்கிட்டேன் பூங்கொத்தை ...வசந்த்
வாங்கிட்டேன் பூங்கொத்தை ...T.V.Radhakrishnan
புதுகைத் தென்றல் said...
// வேலை வேலை வேலை வேலைக்கு இல்லை வேளை!!!//
ரொம்ப சரி புதுகை!
நன்றி அப்துல்லா!
இடைவெளிகள் said...
/நல்ல பதிவை நயமாகச்சொல்லி நம்பிக்கையூட்டிய உங்களுக்கு நன்றி//
நன்றி இடைவெளிகள் முதல் வருகைககும் கருத்துககும்..
Karthik said...
//17 பூங்கொத்துக்கள்!! :)//
அதெனனப்பா 17பூங்கொத்துக்கள்!!என்ன கணக்கு புரிலியே?????
பூங்கொத்துக்கு...நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
பூங்கொத்துக்கு...நன்றி குடந்தை அன்புமணி
ஆ.ஞானசேகரன் said...
// நல்ல பகிர்வுங்க//
நன்றி ஞாசேகரன்...!
கார்க்கி said...
//டீச்சர், சூப்பர்//
நன்றி மாணவனே!
அமுதா கிருஷ்ணா said...
/உறவுகள் என்றாலே வெறுப்பவர்களுக்கு நல்ல அட்வைஸ்.../
வாங்க அமுதா...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ரொம்ப அழகா உறவுகளோட அன்பை சொல்லியிருக்கீங்க...
மனசில் நிற்கும் பதிவு,.. அட்டகாசமான உதாரணம்
well said.. ! :-)
......(நபியே!) நீர் கூறும்: 'உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!"........(42:23)
அருமையாய் சொல்லி இருக்கீங்க ; நட்பும் உறவும் தான் ஒருவன் வாழ்நாளில் சம்பாரிக்கும் மிக பெரிய சொத்து
முடிவு இப்படித்தான் இருக்கும்னு யூகிக்க முடியாதபடி எழுதி இருந்தீங்க... அதுக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு...அருணா...
உண்மைதான்... வேலை வேலை என்று இருந்துவிட்டு வாழ்வில் எத்தனை எத்தனை சுகங்களை இழக்கிறோம்... நாம்...என்று நன்றாக புரியவைத்து இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் அருணா..... அதுவும் இந்த வரிகள் ரொம்ப தீர்க்கம்...
//வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............//
சூப்பர்........
//அதெனனப்பா 17பூங்கொத்துக்கள்!!என்ன கணக்கு புரிலியே?????
சும்மா பூங்கொத்துனு சொன்னா, ஈஸியா தேங்க்ஸ் சொல்லிடுவீங்க. இப்ப யோசிக்க வெச்சேன்ல?? :))
//வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............
வாருங்கள்.......இன்று முதல் உணர்வுகளைப் பகிர்வோம்......உறவுகளைச் சேமிப்போம்!!!
//
உடனே ஃப்ளைட் டிக்கெட் அனுப்பவும்.
இபப்டிக்கு
தம்பி.
அடடா என்னே அறிவுரைக்கதை.! ஹிஹி.. நல்லாருந்தது.
உன்னதமான படைப்பு
Arumayana sirukadhai , it was very refreshing to read it, we earn for living and we shouldnt forget it. Your writing is enriching lives! keep writing!
நன்றி சுந்தரி...!
நன்றி ஜோதி!
நன்றி கலகலப்பிரியா!
முதல் வருகைகும் கருத்துககும் நன்றி Gifariz !
Karthik said...
// இப்ப யோசிக்க வெச்சேன்ல?? :))//
அடப்பாவி..சும்மாவே எப்பவும் நான் யோசிசசுட்டுத்தான் இருக்கேன்....இதுலே இப்பிடி வேற யோசி்க்கணுமா???
SanjaiGandhi said...
//உடனே ஃப்ளைட் டிக்கெட் அனுப்பவும்.//
,தம்பிச்செட்டிப்பட்டிககு ஒரு ஃப்ளைட் டிக்கெட் பார்சேல்ல்ல்ல்!
ஆதிமூலகிருஷ்ணன் said...
//அடடா என்னே அறிவுரைக்கதை.! ஹிஹி.. நல்லாருந்தது.//
ஏதோ உள்குத்து மாதிரித் தெரியுதே!!!
Srivats said...
/ Your writing is enriching lives! keep writing!/
Thanx Srivats! Done!
டம்பி மேவீ said...
// நட்பும் உறவும் தான் ஒருவன் வாழ்நாளில் சம்பாரிக்கும் மிக பெரிய சொத்து//
ம்ம்ம் உங்களுக்குப் புரியுது டம்பி மேவீ!!!
நன்றி கோபி!
அருமையான பகிர்வு அருனா, இந்தாஙக் பூங்கொத்தை வாங்கிக்கங்க
""அய்யோ என்னடி புரியாதவளா இருக்கே?...எனக்கு அந்த குமாரைத்தான் தெரியும்...அவனே இல்லைங்கறப்போ அங்கே போய் யார்கிட்டே என்னத்தைக் கேக்க"
என்று கண்ணன் அவரின் நண்பருடைய உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.வாரிகளில் வேன்டுமானால் முற்றுப்புள்ளி இருக்கலாம் வாழ்க்கையில் இருக்க கூடாது. என்பதனை இந்த கட்டுரை எனக்கு உண்ர்தியது. ஆனால் இந்த காலகட்டத்தில் வேலையில் இருக்கும் சிலர் அடிக்கடி விடுமுறை எடுப்பது என்பது கடிணம்.அதற்க்காகவே காலம் நமக்கு உற்வுகளை சேமிக்க அருமையான கண்டுபிடிப்புகளை நமக்கு அளித்துயிருக்கிறது.அதன் வாயிலாக நாம் நம் உறவுகளை சேமிக்கலாம்.
அன்புடன் ஜீவகன்...,
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா