அந்த அம்மாவும் அப்பாவும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள்.....
"நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்டிக்கா (strict) இருக்கணுங்க...கொஞ்சம் கூட மேனஸ் (manners)இல்லைங்க பையன்கிட்டே..."
"சொல்லுங்க...அப்படி என்ன பண்றான் உங்க பையன்?"
"பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ரிமோட்டை எடுத்து வச்சுக்கிட்டு எங்களை ஒரு சீரியல் பார்க்க விடமாட்டேங்குறான்.....அவனே டி.வி பார்த்துக்கிட்டிருக்கிறான்"
இதுக்கு நாங்க எப்பிடி ஸ்டிக்கா இருக்கறதுன்னு நான் ஙே!!!!
அடுத்த அம்மா அப்பாவின் கவலை....
"என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்...எதைச் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்யறான்....கொஞ்சம் கண்டிக்கக் கூடாதாங்க...,...""அப்படி என்ன செய்யறான்?"எப்பவும் செல் போனில் எதையாவது பண்ணிக்கிட்டிருக்கான்....செல் ஃபோனின் செட்டிங்கை மாத்திக்கிட்டேயிருக்கான்..சமயத்துலே நானே ஃபோன் பேச முடியாத படி எதையெதையோ பண்ணி வச்சுடறான்...கொஞ்சம் சொல்லிக் கண்டிச்சு வைங்க..."
இதுக்கு நாங்க எப்பிடி கண்டிப்பா இருக்கறதுன்னு நான் ஙே!!!!
மற்றொரு வழக்கு...
"மேடம்...இவங்க அப்பா ஊருக்குப் போகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு 50 ரூபா கேட்டு அடம் பிடிக்கிறான்...ரெண்டு நாள் அவங்க அப்பா வீட்டிலே இருந்தாலும் ஏம்பா நீங்க டூர் போகலையான்னு கேட்கறான் மேடம்....கொஞ்சம் சொல்லி வைங்க..."
எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...??????
34 comments:
சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தாயே..!
எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...??????]]
விடுங்க பாஸ் - இதெல்லாம் ஜகஜம் தானே
பல்பு அதிகமாக வைத்திருக்கும் பதிவர்ன்னு உங்களுக்கு ஒரு விருது கொடுத்திடலாம் ...
:-)
கிளாஸ் டீச்சர் சந்தித்த மேலும் ஒரு வினோத வழக்கு:
“வெஜிடபிள் பொரியல் டிபனுக்குக் குடுத்தா சாப்பிடமா
திருப்பி எடுத்திட்டு வந்திடறாள்.எப்படி உடம்பு சேரும்.
கொஞ்சம் கவுன்சிலிங் பண்ணுங்களேன் இவளுக்கு”
:)))))
//"நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்டிக்கா (strict) இருக்கணுங்க...கொஞ்சம் கூட மேனஸ் (manners)இல்லைங்க பையன்கிட்டே..."//
இவிய்ங்களுக்கு பஸ்ட் / மொதல்ல டூசன் எடுங்க மேடம்....
//இதுக்கு நாங்க எப்பிடி ஸ்டிக்கா இருக்கறதுன்னு நான் ஙே!!!!//
படிச்சு முடிச்ச உடனே நானும் "ஙே"......
//எப்பவும் செல் போனில் எதையாவது பண்ணிக்கிட்டிருக்கான்....செல் ஃபோனின் செட்டிங்கை மாத்திக்கிட்டேயிருக்கான்..//
அதிரடி விஞ்ஞானிதான்....
//இதுக்கு நாங்க எப்பிடி கண்டிப்பா இருக்கறதுன்னு நான் ஙே!!!! //
நானும்தேன் "ஙே"
//ரெண்டு நாள் அவங்க அப்பா வீட்டிலே இருந்தாலும் ஏம்பா நீங்க டூர் போகலையான்னு கேட்கறான்.//
இவ்ளோ சின்ன வயசுலேயே எவ்ளோ வில்லத்தனம்??
//எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...?????? //
இந்த மாதிரி புள்ளைய்ங்கள மேய்ச்சா, நீங்க எப்போவுமே "ஙே"தான்... உங்க வேலைதான் எவ்ளோ கஷ்டம்...??
உங்க புண்ணியத்தில் நாங்கள் இன்று கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை "ஙே"... இதை மறக்க முடியுமா??
//பல்பு அதிகமாக வைத்திருக்கும் பதிவர்ன்னு உங்களுக்கு ஒரு விருது கொடுத்திடலாம் .//
டபுள் ரிப்பீட்டேய்
vedikkaiyana vinodhamaana anubhavangal.
Without telling ஙே,advise them they should bring up the children better.
ஹி..ஹி. எங்க அம்மா, 'வீட்ல சாப்பிடவே மாட்டேங்குறான். கொஞ்சம் சொல்லுங்க'னு கூட சொல்லியிருக்காங்க. :)))
Enna panrathu, yaar pechaiyum kekkatha vaandugal, teacher mattumey intelligent, avanga sonna thaan keppomnu irukuthunga....vera vali!
hahaha... what else i cant reply than this.. :) funnny
Positive Anthony Muthu said...
//சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தாயே..!//
சிந்த்திச்சுருவோம்...!!
ஸ்டிக்க கையில் எடுக்க வேண்டியதுதான் போல.. பேரண்ஸ்க்கு:-))
நட்புடன் ஜமால் said...
//பல்பு அதிகமாக வைத்திருக்கும் பதிவர்ன்னு உங்களுக்கு ஒரு விருது கொடுத்திடலாம் ...//
விருதுதானே...வாங்கிடடாப் போச்சு!
நன்றி...யாசவி
நன்றி...தமிழ் பிரியன்
R.Gopi said...
//உங்க புண்ணியத்தில் நாங்கள் இன்று கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை "ஙே"... இதை மறக்க முடியுமா??//
நான் கூட எழுத்தாளர் ராஜேந்திரகுமாரிடமிருந்து கற்றுக் கொண்டது...ஙே!!!
பள்ளியோடத்துல கவனிக்க மாட்டங்குறான், வகுப்பை கட் பண்றான், பேசிட்டே இருக்கான், வாத்திய கலாய்க்குறான்னு அவங்கள கூப்டு நீங்க ஸ்டிக்கா இருக்கச் சொல்றீங்கள்ள. பதிலுக்கு பதில் சரியா போச்சி. அவங்க ஙே கு யாரு பதில் சொல்றது!:))
நீங்க வாங்கற பல்பு எல்லாம் வச்சி ஒரு பெரிய பல்பு கடையே வைக்கலாம் போல. அடுத்த வாட்டி பாப்பா ஊருக்கு வரும் போது குடுத்துவிடுங்க. நான் கடை போடறேன். :))
கார்க்கி said...
//பல்பு அதிகமாக வைத்திருக்கும் பதிவர்ன்னு உங்களுக்கு ஒரு விருது கொடுத்திடலாம் .//
// டபுள் ரிப்பீட்டேய்//
ஓ டபுள் விருதா!!! கொடுங்க!!!கொடுங்க!!!
ஙே...
//ரெண்டு நாள் அவங்க அப்பா வீட்டிலே இருந்தாலும் ஏம்பா நீங்க டூர் போகலையான்னு கேட்கறான் மேடம்....கொஞ்சம் சொல்லி வைங்க...//
ஹ ஹ ஹா
கலக்கல் பிரின்ஸ்
KParthasarathi said...
//vedikkaiyana vinodhamaana anubhavangal.
Without telling ஙே,advise them they should bring up the children better.//
அச்சோ...உங்ககிட்டதான் இப்பிடி...ஙே...advise தானே அதெல்லாம் சூப்பரா சொல்வேனாக்கும்...
"பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ரிமோட்டை எடுத்து வச்சுக்கிட்டு எங்களை ஒரு சீரியல் பார்க்க விடமாட்டேங்குறான்.....அவனே டி.வி பார்த்துக்கிட்டிருக்கிறான்"
அய்யோ பாவம் தான் பெற்றோர்கள்
வானம்பாடிகள் said...
// பதிலுக்கு பதில் சரியா போச்சி. அவங்க ஙே கு யாரு பதில் சொல்றது!:))//
இப்பிடி ஒரு ஙே! இருக்கோ????
’டொன்’ லீ said...
//ஙே...//
நானும் ஒரு ஙே!!!
அப்பா,அம்மாக்களுக்கு அவங்க பிள்ளைகள் கவலை மட்டும்தான். ஆனால் உங்களுக்கோ அம்புட்டு பிள்ளைகள் கவலையும்.... !! :))
நானும்கூட ஒரு ’ஙே!!!’
:))
ஙே ;)))
ஹிஹி.. இதுக்கே இப்டின்னா எப்டி.. வெயிட் பண்ணுங்கோ.. ரொம்ப தமாஷா இருக்கும்..
ungalukku scrumptious blog award koduthirukkaanga.. kashtappattu thookkindu vanthu nammaa pakkathla vachchirukken.. vanthu eduthundu pongo ma'am..!
பிடிச்சிருக்கு, இந்தாங்க என் முதல் பூங்கொத்து/பின்னூட்டம் ;)
//எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...??????//
அய்யோ பாவம்....
இது மாதிரி அடிக்கடி "ஙே" பதிவு போடுங்க மேடம்
படிக்க சுவாரஸ்யமா இருக்கு :))))))
oru kuzhandha valakaradhula 50% parents 50% teachers pangu erukkunn, responsibiltya push panradhukku eppa erukkara parentku solli tharavey vendam, enna pannalum teacher thitradhukunnu oru kuttam erukkadhaan seyyudhu
on other hands its funny :) ennadhan soneenga ;)
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா