நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, August 29, 2009

கடவுள்...........108


இது என் நண்பரின் மெயில் மூலம் அறிந்து கொண்டது...
பாண்டிச்சேரியிலிருந்து கோயம்பத்தூருக்குப் பஸ்ஸில் போகும்போது..திடீரென்று விபத்து அடிபட்டதில் ஒரு பொண்ணும் அதன் குழந்தையும் (15 மாதம்)பயங்கரமாக அடிபட்டிருந்தார்கள் ....குழந்தை பேச்சு மூச்சில்லாமலிருந்தது....முதல் உதவிப் பெட்டி பஸ்ஸில் இல்லை...

நேரம் நடு இரவு 12:57...உடனடியாக அந்த நண்பர் 108-க்கு த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொல்லி முடிக்கும் போது 1:02 நிமிடம்....ஒரு நிமிடத்துக்குள் 108-லிருந்து ஃபோன் வந்தது.....மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து விபரம் சொல்லி முடிக்க மூன்று நிமிடம் ஆனது....மணி 1:08-க்கு ஆம்புலன்ஸ் வந்து கொண்டு இருப்பதாக தகவல் மீண்டும் 108-லிருந்து..

1:17-க்கு ஆம்புலன்ஸ் வந்து உடனடியாக மருத்துவ உதவி கொடுத்துக் குழந்தைக்கு நினைவு திரும்பியது.....பெண்ணுக்கும் உடனடி மருத்துவ உதவி கிடைததது....இதில் அதிசயம்.....அந்த நண்பரைத் தவிர யாருக்குமே EMRI-108 (EMRIEmergency Management and Research Institute) சேவையைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை...அவசர காலத்தில் மின்னல்வேக உதவி அளிக்கிறது இந்த EMRI-108 ......

இது ஒரு எடுத்துக்காட்டுதான்....எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்தவிதமான உதவியென்றாலும் மின்னல்வேக நடவடிக்கைதான்.................18நிமிடங்களுக்குள் உதவி கிடைததுவிடும்..........................இந்த எண் சேவை தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,குஜராத்,ராஜஸ்தான்,அஸ்ஸாம்,மேகாலயா,மத்தியப் பிரதேசம்,கோவா,உத்தராகான்ட் ஆகிய இடங்களில் உள்ளது.திடீர் விபதது,குற்றங்களைப் பதிவு செய்ய,மற்றும் தீ விபத்து போன்ற சமயங்களில் கடவுளாகக் கை கொடுக்கிறது....108!!!

எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்...."108"

36 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்...."108" /

நினைவில் நிற்கும் படி சொன்னீர்கள்...

R.Gopi said...

நானும் ச‌மீப‌த்தில் கேள்விப்பட்டேன் அருணா... இதை அனைவ‌ரும் வ‌கையில் ப‌திவேற்றிய‌ உங்க‌ள் முய‌ற்சி பாராட்டுக்குறிய‌து...

வாழ்த்துக்க‌ள்....

R.Gopi said...

நானும் ச‌மீப‌த்தில் கேள்விப்பட்டேன் அருணா... இதை அனைவ‌ரும் அறியும் வ‌கையில் ப‌திவேற்றிய‌ உங்க‌ள் முய‌ற்சி பாராட்டுக்குறிய‌து...

வாழ்த்துக்க‌ள்.... மீண்டும் ஒருமுறை.....

நினைவில் தங்கி விட்ட ஒரு எண் 108 (பிள்ளையாருக்கு எவ்ளோ 108 போட்டு இருக்கோம்... தோப்புக்கரணம்தான்....)

தமிழ் அமுதன் said...

மிக்க நன்றி பதிவிற்கு!!! எனக்கும் இப்போதுதான் தெரிகிறது ''108'' பற்றி! மேலும் பலருக்கு தெரிய படுத்துகிறேன் !!! அவசியமான பதிவு !!!

Karthik said...

thanks for the info ma'am..:)

நட்புடன் ஜமால் said...

108 புதிய தகவல் - நன்றி பூங்கொத்து

Sanjai Gandhi said...

எனக்கும் மெயில் வந்தது.. இது நிஜமாக்கா?

நிஜமா நல்லவன் said...

தகவலுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

நல்ல தகவல் அருணாஜி. 108 என்கிற எண்ணுக்கு விஞ்ஞானப் பூர்வமாயும், மெய்ஞானப் பூர்வமாயும் சிக்நிபிகன்ஸ் உண்டு!

http://kgjawarlal.wordpress.com

*இயற்கை ராஜி* said...

பூங்கொத்து

குறை ஒன்றும் இல்லை !!! said...

நலல பகிர்வு.. நன்றி..

கானா பிரபா said...

தகவலுக்கு நன்றி ஆனா எனக்கு உபயோகப்படாது ;-)

அன்புடன் அருணா said...

முனைவர்.இரா.குணசீலன் said...
// நினைவில் நிற்கும் படி சொன்னீர்கள்...//
நன்றிங்க....குணசீலன்

Ezhilan said...

ஆபத்துக்கும் அவசரத்திற்கும் உதவும் முக்கியமான தகவல். நன்றி.

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/ வாழ்த்துக்க‌ள்.... மீண்டும் ஒருமுறை...../
ம்ம் ரெண்டு தடவையும் வாங்கியாச்சு..

அன்புடன் அருணா said...

ஜீவன் said...
// மேலும் பலருக்கு தெரிய படுத்துகிறேன் !!! அவசியமான பதிவு !!!//
செய்யுங்க...செய்யுங்க..

அன்புடன் அருணா said...

Karthik said...
/thanks for the info ma'am..:)/
Anytime kaarthik!!!

அன்புடன் அருணா said...

SanjaiGandhi said...
//எனக்கும் மெயில் வந்தது.. இது நிஜமாக்கா?//
ஓரிருவரிடம் கேட்டறிந்தலிருந்து நிஜமாகததான் இருக்குமென நினைககிறேன் சஞ்சய்...

Sundari said...

A very useful information...Thanks for sharing it

அன்புடன் அருணா said...

kgjawarlal said...
//108 என்கிற எண்ணுக்கு விஞ்ஞானப் பூர்வமாயும், மெய்ஞானப் பூர்வமாயும் சிக்நிபிகன்ஸ் உண்டு!//
சீக்கிரம் வர்றேன்...உங்க வலைப்பூவுக்கு.

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/108 புதிய தகவல் - நன்றி பூங்கொத்து/
பூஙகொத்துக்கு நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

108 நன்றிகள்

அன்புடன் அருணா said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
/நலல பகிர்வு.. நன்றி../
நன்றி.குறை ஒன்றும் இல்லை..

அன்புடன் அருணா said...

நிஜமா நல்லவன் said...
//தகவலுக்கு மிக்க நன்றி!
உங்களுக்கும்...மிக்க நன்றி

அன்புடன் அருணா said...

கானா பிரபா said...
/தகவலுக்கு நன்றி ஆனா எனக்கு உபயோகப்படாது ;-)/
உங்களுக்கு உதவவில்லையென்றாலும் மற்றவர்களுக்குச் சொல்லலாமே கானா???
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
/பூங்கொத்து/
வாங்கீட்டேன்!!!

அன்புடன் அருணா said...

நன்றி மேஜோ!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/108 நன்றிகள்/

108 நன்றிகளு்க்கு 108 நனறிகள்!

ஆ.ஞானசேகரன் said...

///எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்...."108"//

மிக்க நன்றிங்க

Information said...

இவ்வளவு விரைவாகவா!

அன்புடன் அருணா said...

Thanx Sundari!

அன்புடன் அருணா said...

My pleasure Gnanasekaran...!

அன்புடன் அருணா said...

Information said...
//இவ்வளவு விரைவாகவா!//
ஆமா Information !!!!

விக்னேஷ்வரி said...

தகவலுக்கு நன்றி.

S.A. நவாஸுதீன் said...

ஜீவனின் வலைச்சரப்பதிவு மூலம் வருகிறேன். மிக மிக பயனுள்ள பதிவு. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

S.A. நவாஸுதீன் said...

பூங்கொத்து

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா