நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, March 4, 2009

ம்ம்ம் இனி எப்பவும் என்னால் டைரி எழுத முடியாது....



நீல நிற டைரி....அது சேமித்து வைத்த மயிலிறகுகளையும் மழைக் காலங்களையும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் சிலு சிலுவென்று போகும்....

மீண்டும் மீண்டும் வாசித்துச் சுவாசித்த பக்கங்கள் அவை...அப்பாவிடம் அதிகம் பேசியதில்லை ...அம்மாவிடமும்தான்......தங்கையிடமும் அதிகம் பகிர்ந்ததில்லை....நீல டைரிதான் அப்பாவிடமும்,அம்மாவிடமும்,தங்கையிடமும் அதிகம் பேசியிருக்கிறது...

எனக்கும் அப்பாவுக்குமான பிணக்குகளில் நான் அதிகமாக மனம் விட்டுப் பேசுவது ,அழுவது எல்லாம் நீல டைரியிடம்தான்..கண்ணீர் தூரிகை சமயங்களில் எழுத்துக்களைக் கலைத்து அழகிய ஓவியமாக்கிவிட்டுப் போய்விடும் நீல டைரியின் பக்கங்களை...அழுது முடித்து எழுதி முடித்து மேசை மேல் வைத்து விட்டுப் போனால்....எனக்குத் தெரியும் அப்பா அதைப் படிப்பார் என்று......பிணக்குகளைத் தீர்க்கும் மந்திரக் கோலாகயிருந்திருக்கிறது நீல டைரி.......

நீல டைரி எனக்கும் அப்பாவுக்கும்,எனக்கும் அம்மாவுக்கும்,எனக்கும் தங்கைக்கும் ஒரு உணர்வுப் பாலமாகவேயிருந்திருக்கிறது. ஒவ்வொரு சண்டைக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டிருக்கும்.....ஒவ்வொரு சண்டை முடிவின் சந்தோஷச் சிலிர்ப்புக்கும் கூட பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.......என் ரகசியங்கள் குடும்பத்துக்குத் தெரிய வருவது கூட நீல டைரியினால்தான்.....

இவ்வ்ளோ ஏன்? சரண்யாவைக் குடும்பத்துக்கு அறிமுகப் படுத்தியது கூட நீல டைரிதான்...
சரண்யா பற்றிப் படித்து அம்மாவும் தங்கையும் நமட்டுச் சிரிப்புடன் கலாய்த்தது கூட நீல டைரியைப் படித்துத்தான்.....நான் தூங்குவது போல நடிக்கையில் "எப்படி எழுதிருக்கான் பாரு என் பிள்ளை ? ஒருநாள் பெரிய எழுத்தாளரா ஆகப் போறான் பாரு....."என்று சிலாகித்துப் பேசுவார்.அவருக்கென்ன தெரியும் நான் நீல டைரி தவிர வேறெதுவும் எழுதுவதில்லையென்று???

அந்த நீல டைரியைக் கையில் வைத்துத்தான் கத்திக் கொண்டிருந்தாள் சரண்யா....
"என்னங்க உங்க அப்பாவுக்கு விவஸ்தையே கிடையாதா???உங்க டைரியை எடுத்துப் படிச்சுட்டிருந்தார் இன்னிக்கு...நான் வாங்கி வச்சுட்டேன்....நமக்குள்ளே ஆயிரம் இருக்கும்.....இதை எல்லாமா படிக்கிறது?.....இந்த பேசிக் மேனர்ஸ் கூடக் கிடையாதா அடுத்தவங்க டைரியைப் படிக்கக் கூடாதுன்னு??? எனப் பட்டாசு வெடித்தாள்....
அவளுக்கென்ன தெரியும் என் உணர்வுப் பாலம் உடைந்து சுக்கு நூறாகியது????

நீல டைரி மேசை மேல் அநாதையாகக் கிடந்தது........ம்ம்ம் இனி எப்பவும் என்னால் டைரி எழுத முடியாது....

21 comments:

ஜீவா said...

பட்டென்று மனதில் ஏதோ ஒன்று இடறியது , நல்லா எழுதி இருக்கிங்க அருணா

Divya said...

Romba arumaiya irukku Aruna:))

Short & crispy!!!

கோபிநாத் said...

நல்லாயிருக்கு...ஆனா படித்து முடித்தவுடன் ஏன் எழுத முடியாதுன்னு கேள்வி வருது!? ;)

Anonymous said...

நல்லாயிருக்கு...ஆனா படித்து முடித்தவுடன் ஏன் எழுத முடியாதுன்னு கேள்வி வருது!? ;)

MSK / Saravana said...

அற்புதம்..

ரிதன்யா said...

அதானே! உங்களுக்கு எப்படி தெரியும்?

pudugaithendral said...

சிம்பிளி சூப்பர்ப் அருணா

பாராட்டுக்கள்.

மகளீர்தின வாழ்த்துக்களும்

Rajeswari said...

ஏன் எழுத முடியவில்லை ..புரியலையே .

ஆ.சுதா said...

வித்தியாசமா சிந்திச்சிரிக்கீங்க
குடும்பத்தையே டைடிதான்
கோர்க்கிரது என்பது எனக்கு சிறு இடறல்.
ஆனா படிக்க நல்லா இருக்கு.

புதியவன் said...

//நமக்குள்ளே ஆயிரம் இருக்கும்...//

இந்த ஆயிரம் என்ற வார்த்தையின் அர்த்தங்கள் உறவுகளுக்குள் வேறுபடத்தான் செய்கிறது...அருமையான எழுத்து நடை...

Karthik said...

சூப்பர்ப்...!

அன்புடன் அருணா said...

ஜீவா said...
//பட்டென்று மனதில் ஏதோ ஒன்று இடறியது , //
அச்சோ என்னாது அது?

அன்புடன் அருணா said...

Divya said...
//Romba arumaiya irukku Aruna:))
Short & crispy!!!//

thank you Divya...

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//நல்லாயிருக்கு...ஆனா படித்து முடித்தவுடன் ஏன் எழுத முடியாதுன்னு கேள்வி வருது!? ;)//

எதையோ நினைத்து எழுத, அது ஏன்னு கேள்வி கேட்டு புரியலைன்னு நீங்கல்லாம் சொல்லும் போது.....ம்ம்ம்ம் அடப் போங்கப்பான்னு ஆயிடுதுப்பா...ம்ம் ஆனாலும் சொல்றேன்...அவன் டைரி உணர்வுப் பாலமா இருந்த போது எழுதினான்...இப்போ அந்த உணர்வுப் பாலம் உடைஞ்சதனால அவனால எழுத முடியாதுன்னு...ஸ்ஸ்ஸ் அப்பாடா போதுமா?

தமிழ் மதுரம் said...

மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்.......
டயறி எழுதலாமா? இல்லையா என்று????

தமிழ் மதுரம் said...

வாழ்க்கையில் சில சந்தோசங்கள் தப்பான புரிதல்களால் இழக்கப்படுகின்றனவாம்,....

Gowripriya said...

அருமை அருணா... அழகான நடை உங்களின் எழுத்துகளில்

அன்புடன் அருணா said...

கமல் said...
//மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்.......
டயறி எழுதலாமா? இல்லையா என்று????//

ம்ம்ம் அது சரி....

அன்புடன் அருணா said...

GOWRI said...
//அருமை அருணா... அழகான நடை உங்களின் எழுத்துகளில்//

வாங்க கௌரி...நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

Anonymous said...

nalla irukku arunaa

selvi said...

romba nalla erukunga

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா