நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, May 30, 2008

சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...
சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...

சிட்டுக் குருவியின் வாலில்
வாழ்க்கையைக் கட்டி விட்டு
வேடிக்கை பார்த்தேன்......
மேலே...கிழே.....
அங்கும்..... இங்கும்....
சிறகை விரித்துப் பறந்தது...

சமையலறையும்...சமையலும் இல்லை.
பணத்துக்காக ஓடும் வேலை இல்லை
தினசரிக் குளியல்,செய்தித் தாள்
படிக்கும் வேலை இல்லை...
டி.வி பார்க்கும் கால அட்டவணை இல்லை

பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....
நீயா.... நானா ...சண்டை இல்லை..
ஓடிக் கொண்டே இருக்கும் அவசரம் இல்லை.

சுதந்திரம்...............விடுதலை...
சுதந்திரக் காற்றே மூச்சு......
பிறந்தால் பறக்கும் குருவியாக....
சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக....
பிறந்து பறக்க வேண்டும்...

எண்ணங்கள் சிறகடிக்க.....
மின்விசிறியைச் சுழல விட
....
அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்
சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..
அந்தச் சிட்டுக் குருவி
என் வாழ்க்கையுடன்....

10 comments:

Divya said...

\\பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....\\


intha lines than enakku romba pedichiruku Aruna:)))

ஜி said...

Nice one!!!

Intha kavithaiya vatchithaan Kuruvi padam eduthathaa oorukkulla solraangale.. unmaiyaa?? :))

ஜி said...

Comment pottathu vanthuchaa illaiyaanu theriyala... :(((

Nice one!!

Aruna said...

பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இவை எதுவும் திவ்யாவுக்கு இல்லமல் போவதாக!!
அன்புடன் அருணா

Aruna said...

//ஜி said...
Nice one!!!

Intha kavithaiya vatchithaan Kuruvi padam eduthathaa oorukkulla solraangale.. unmaiyaa?? :))//

அப்பிடியா? ராயல்டி வாங்கணுமே!!!ஆனாலும் ரொம்ப சொதப்பினதுக்காக கேஸ் போடலாம்னு இருக்கேன்..

அன்புடன் அருணா

Aruna said...

//ஜி said...
Comment pottathu vanthuchaa illaiyaanu theriyala... :(((
Nice one!!//

வந்துச்சே! வந்துச்சே!! Tank U!! Tank U!!
அன்புடன் அருணா

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

Shwetha Robert said...

very diff & nice poem Aruna:)

ச்சின்னப் பையன் said...

கவிதை...-))))

கடைசியில் //அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்
சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..//
:-((((((

அனுஜன்யா said...

அருணா,

இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். இந்த கவிதை பிடித்திருக்கிறது. மேலும் கவிதை எழுதுங்கள். என் வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி. முடிந்தபோதெல்லாம் வரவும்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா