நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Thursday, May 22, 2008
ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!
ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!
அப்போ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..எங்க அப்பா ரொம்ப இலக்கிய ஆர்வம் உள்ளவங்க..திடீரென்று ஒரு நாள் என்னையும் என் அக்காக்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு "ஒரு நல்ல கதை எழுதிட்டு வாங்க...யார் நல்ல கதையா எழுதிட்டு வர்றாங்களோ அவங்களுக்கு ஒரு பரிசுன்னு சொன்னாங்க...
நான் கொஞ்சம் மக்கு அப்போ...
உடனே உள்ரூமுக்குப் போய் கதவை மூடிக் கொண்டு பழைய ஆனந்த விகடன்,குமுதம்,கல்கி புத்தக மூட்டையைப் பிரித்து...நல்ல கதை வேட்டையில் இறங்கி விட்டேன் எனகென்ன தெரியும்.....எங்கப்பா சொந்தமா கதை எழுதச் சொன்னாங்கன்னு....நான் நினைத்தேன் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து எழுதணும்னு.....(என்னா மூளை???!!!!)
என் அக்காக்கள் இருவரும் ரொம்பக் குளிரா (அட ரொம்ப cool-a)இருந்தாங்க....என்னை மேலும் கீழுமாக முறைத்துக் கொண்டே இருந்தார்கள்...."அட பொறாமை" அப்படின்னு மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..
ஒரு வழியா விகடன்லே வந்த "முடிவு" கதை எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது...அதை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடிப் போய் அழகாக அப்படியே காப்பியடித்தேன்..என் செலெக்ஷன் திறமைக்கு நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.
அப்பா வந்ததும் எல்லோரும் அவங்க அவங்க கதையைக் காட்டினார்கள்.....ஒன்று கூட மனிதர்களைப் பற்றியது இல்லை...சிங்கம் ,புலி,ஆமைன்னு எல்லாக் கதாநாயகர்களும் விலங்காக இருந்தன. "சே இதுகளுக்கு இப்பிடி ஒரு ரசனையா?" என நொந்து கொண்டேன்...
இப்போ அப்பா என் கதையைப் படித்ததும்...ரொம்ப சந்தோஷப் பட்டு இதுதான் சிறந்த கதை...
"நம்ம அருணா இனிமேலிலிருந்து எழுத்தாளர் அருணா"...
அப்பிடின்னாங்க...ஒரெ பெருமை எனக்கு....அதுக்குள்ள எங்க பெரியக்கா ஓடிவந்து அந்த விகடனை எடுத்துட்டு வந்து அப்பா முன்னால் போட்டங்க....அந்தக் கதை எழுதியது யாரோ பிரபு என்றிருந்தது.அக்கா அது பக்கத்திலே
"எழுத்தாளர் அருணாகிட்ட இருந்து பிரபு திருடிய கதை" என்று பேனாவால் எழுதியிருந்தாள்....
அப்பா ஓவென்று சிரித்து
"காப்பியடித்த எழுத்தாளர் அருணாவா நீ? என்றதும்
நான் "ஙே" என்று விழித்தேன்....
இப்பிடித்தான் நான் எழுத்தாளராகினேன்!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
"காப்பியடித்த எழுத்தாளர் அருணா" வாழ்க..!
"காப்பியடித்த எழுத்தாளர் அருணா" வாழ்க..!
ஸ்கூல் எக்ஸாம்-ல எல்லாம் கூட நீ இப்பிடித்தானாமே?
எங்க அண்ணாச்சி,
அதான் உங்க அப்பாரு என்கிட்ட பல வருஷம் முன்னாடியே சொல்லிட்டாரு....
ஹி.. ஹி...!
(என்னது?
இதுல முன்பாதி உண்மை.
பின்பாதி
பொய்யி-ன்னுதான சொல்ல வர.
ரைட்...
ரைட்...)
கதா நாயகி,
திருடி,
வில்லி,
பூசாரி,
முட்டாள்
ஜெயில் பறவை
காப்பியடித்த எழுத்தாளர்
இன்னும் என்ன
என்ன
இருக்கிறது ????!!!!!
//"காப்பியடித்த எழுத்தாளர் அருணாவா நீ? என்றதும்
நான் "ஙே" என்று விழித்தேன்....
இப்பிடித்தான் நான் எழுத்தாளராகினேன்!!!!!!//
ஹா..ஹா..:))))))
ஹா ஹா ஹா
யக்கோவ் டாப்பு. இன்னா முளை போங்க :P
நன்றி கோபிநாத்!!!:))
சாம் தாத்தா said...
"காப்பியடித்த எழுத்தாளர் அருணா" வாழ்க..!
என்னவோ காப்பியடிக்கிற கூட்டத்துக்கு சங்கத் தலைவிக்கு மாதிரி வாழ்த்து சொல்றீங்க??
அன்புடன் அருணா
சாம் தாத்தா said...
ஸ்கூல் எக்ஸாம்-ல எல்லாம் கூட நீ இப்பிடித்தானாமே?
எங்க அண்ணாச்சி,
அதான் உங்க அப்பாரு என்கிட்ட பல வருஷம் முன்னாடியே சொல்லிட்டாரு....
ஹி.. ஹி...!
(என்னது?
இதுல முன்பாதி உண்மை.
பின்பாதி
பொய்யி-ன்னுதான சொல்ல வர.
ரைட்...
ரைட்...)
முன்பாதியும் ரைட் இல்லை பின்பாதியும் ரைட் இல்லை தாத்தா..முழுப் பொய்....
அன்புடன் அருணா
வருகைக்கு நன்றி ரசிகன்...வெறும் ஹா..ஹா.. :))))))தானா?
அன்புடன் அருணா
ஸ்ரீ said...//ஹா ஹா ஹா
யக்கோவ் டாப்பு. இன்னா முளை போங்க :P//
நான் கொஞ்சம் டாப்புன்னு முன்னாடியே சொல்லிருக்கோமில்லே!!!
அன்புடன் அருணா
charu said...
//கதா நாயகி,
திருடி,
வில்லி,
பூசாரி,
முட்டாள்
ஜெயில் பறவை
காப்பியடித்த எழுத்தாளர்
இன்னும் என்ன
என்ன
இருக்கிறது ????!!!!!//
அது இருக்குங்க எக்கச் சக்கமா...பார்க்கதானே போறீங்க!!!!
அன்புடன் அருணா
அருமையா, நகைச்சுவையோடு எழுதி இருக்கீங்க. மூணு பெண்களில் கடைகுட்டியா நீங்க நான் மூணு பெண்களில் மூத்தவள்.
காப்பியடித்த எழுத்தாளர் அருணா"//
ippo ethuku athellam pesittu.. ippo eluthaala aruna thaan :)
vandhutten akka :)
Dreamzz said...
காப்பியடித்த எழுத்தாளர் அருணா"//
ippo ethuku athellam pesittu.. ippo eluthaala aruna thaan :)
vandhutten akka :)
அப்பிடியா ஒத்துக்கிறீங்க்களா எழுத்தாளர்னு?வருகைக்கு நன்றி தம்பி!!
அன்புடன் அருணா
funniest flow of writing Aruna, liked it:))
//"காப்பியடித்த எழுத்தாளர் அருணா" வாழ்க..!//
Copy Adichalum Sirantha Kathaiyai therntheduthathil ungal ezhuthu thiramai therigirathu!
Vaazgha!
இந்த லொள்ளு அப்போலேந்தே இருக்கா....அவ்வ்வ்வ்வ்.....
இந்தப் பதிவ எங்கேயோ படிச்ச மாஅதிரி இருக்குதே? :)
சிறில் அலெக்ஸ் said...
//இந்தப் பதிவ எங்கேயோ படிச்ச மாஅதிரி இருக்குதே? :)//
அட இதைக் கூடவா காப்பியடிப்பாங்க?? இப்போல்லாம் நான் காப்பியடிப்பதை விட்டாச்சுங்க!!!
அன்புட அருணா
மதுமதி said...
//அருமையா, நகைச்சுவையோடு எழுதி இருக்கீங்க.//
வாங்க மதுமதி...வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!
அன்புட அருணா
Shwetha Robert said...
//funniest flow of writing Aruna, liked it:))//
Tank U..Tank U...Shweta.
ச்சின்னப் பையன் said...
//இந்த லொள்ளு அப்போலேந்தே இருக்கா....அவ்வ்வ்வ்வ்.....//
பின்ன இடையிலே வந்த லொள்ளுன்னா நினைச்சீங்க!!!
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
//Copy Adichalum Sirantha Kathaiyai therntheduthathil ungal ezhuthu thiramai therigirathu!
Vaazgha!//
வாங்க நாமக்கல் சிபி...வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!
அன்புடன் அருணா
இந்தா புடிங்க பூங்கொத்தில்ல பூந்தோட்டத்த...
உங்க எழுத்து நடை மிக அருமை.
உங்களுக்குள்ள தூங்கிகிட்டு இருக்கற இயக்குனரை தட்டி எழுப்பி உலகம் எங்கும் உள்ள முகமூடி
மனிதர்களின் அடிமனது சின்ன குழந்தை ஆசைகளை வெளிச்சமிடுங்கள்.
தனிமை நான் எழுதி இயக்கிய குறும்படத்தை பார்த்து மகிழுங்கள்.(?)
lhttp://www.youtube.com/watch?v=Zxz1thWPHkE
ஹா...ஹா...
:)))
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா