நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Tuesday, May 13, 2008
இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!
தென்றல் புயல் எனத் திமிறும்
காற்றின் திமிர்.....
பூமியைத் துளைக்கும்
விதை வித்தை....
கோள்களை நெருங்க விடாத
சூரியனின் தகிப்பு....
மனதைக் குளிர்விக்கும்
மழையின் இனிமை...
காற்றுக்கே தலையசைக்கும்
மலரின் மென்மை.....
விரிந்து கிடக்கும்
வான் போல் மனது....
மீண்டும் மீண்டும் கரையுடன்
சேரும் கடலலை போல் உழைப்பு....
என்றேனும் எதுவேனும் எனக்குத்
தர வேண்டும் என்றால் இறையே.....
இவையத்தனையும் தா....
அல்லெங்கில்
ஒன்றும் வேண்டிலன்....
இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சூப்பருக்கா கவிதை எழுத கிளம்பிட்டீங்களா? அருமை. "அன்றொரு நாள் அருணா" ல இருந்து கவிதை அருணா ஆகிட்டீங்க. வாழ்த்துக்கள் :)
;)) thanx Gopinath....
ஸ்ரீ said...
//சூப்பருக்கா கவிதை எழுத கிளம்பிட்டீங்களா? அருமை. "அன்றொரு நாள் அருணா" ல இருந்து கவிதை அருணா ஆகிட்டீங்க. வாழ்த்துக்கள் :)//
மறுபடியும் "அன்றொரு நாள் அருணா"வா வருவொமில்லே...அப்பிடி லேசுலே விட்டுருவொமா??
அன்புடன் அருணா

Really nice one
அருமை!அருமை!!
தொடர்ந்து எழுதுங்கள்.
எழுதிக்கொண்டே இருங்கள்.
ஆல்பர்ட்
So nice:))
nice ...
aruna..please check your counter...உங்க பதிவை திறந்தால் பாப் அப் விளம்பரம் மற்றும் எதோ இன்ஸ்டால் ஆகுது ...
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா