நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, May 7, 2008

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு கவிதை எழுதும் முன்......
ஒரு பெண்ணைப் புரியும் முன்.....
ஒரு ஆணைத் திருத்தும் முன்....
ஒரு தவறைச் செய்யும் முன்.....
ஒரு தப்பைத் திருத்தும் முன்....

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு மலரைப் பறிக்கும் முன்....
ஒரு மழைக்கு ஒதுங்கும் முன்....
ஒரு மெழுகுவர்த்தியை அணைக்கும் முன்....
ஒரு காதல் கடிதம் எழுதும் முன்...
ஒரு காதலைச் சொல்லும் முன்....

இரு கொஞ்சம் செத்து விட்டு வருகிறேன்.....

7 comments:

சாம் தாத்தா said...

என்ன தலைப்புடா சாமி இது?

இந்த கமென்ட் போடுமுன்...
இரு...
இந்த அருணாப் பொண்ணு மண்டை மேலயே ஒண்ணு போட்டுட்டு வரேன்.

யப்பா...!
Dreamzz பேராண்டி...!
ரசிகா...!
அறிவுச்சீவியாரு...!
எங்கப்பா போயிட்டீங்க...?

இந்தக் கொடுமைய கேக்க ஆளே இல்லையா?

ரொம்ப நாள் கழிச்சு....
நமக்கு வேண்டியவங்க வலைப்பூவெல்லாம் எப்பிடி இருக்குதுன்னுப் பாக்க வந்தா...

இங்க என்னடான்னா...
ஒரு பெரிய டரியலே நடந்துருக்குது.

சரி...! சரி...!

போனாப் போவட்டும்...
அருணாக் கண்ணு...!

வரியா...!

நாம ரெண்டு பேரும்...
செத்து...
செத்து...
விளையாடலாமா?

ஹி...! ஹி...!

ரசிகன் said...

கொஞ்சம் நாள் ஒழுங்காதானே இருந்திங்க ?.. மறுபடி ஏன்? ஏன்? ஏன்?

இறக்கப்போறேன் அது இதுன்னு ஆரம்பிச்சாச்சா?

ஏன் இந்த (தற்க்)கொலைவெறி அருணா?:P.

aruna said...

சாம் தாத்தா said...

//ரொம்ப நாள் கழிச்சு....
நமக்கு வேண்டியவங்க வலைப்பூவெல்லாம் எப்பிடி இருக்குதுன்னுப் பாக்க வந்தா..//

Aruna said...

ரொம்ப சோம்பேறி ஆகிட்டீங்க தாத்தா....அப்பப்போ ஏதாவது எழுதக் கூடாதா?
அன்புடன் அருணா

ரசிகன் said...
கொஞ்சம் நாள் ஒழுங்காதானே இருந்திங்க ?.. மறுபடி ஏன்? ஏன்? ஏன்?
இறக்கப்போறேன் அது இதுன்னு ஆரம்பிச்சாச்சா?
ஏன் இந்த (தற்க்)கொலைவெறி அருணா?:P.

Aruna said...

இந்தக் கொலை வெறி வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பதால்....இன்றிலிருந்து ரசிகன் "கொலைவெறி ரசிகன்" என்று அறியப் படுவாராக!!

நிஜமா நல்லவன் said...

இருங்க கொஞ்சம் படித்துவிட்டு வருகிறேன்.......

நிஜமா நல்லவன் said...

சில நேரங்களில் செத்துவிட்டு வருவது கூட சுகமானது தான்.....

நிஜமா நல்லவன் said...

///Aruna said...
இந்தக் கொலை வெறி வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பதால்....இன்றிலிருந்து ரசிகன் "கொலைவெறி ரசிகன்" என்று அறியப் படுவாராக!!///


எங்க மாம்ஸ்க்கு நல்ல பட்டம் கொடுத்து இருக்கீங்க. நன்றி அருணா.

''கொலைவெறி ரசிகன்'' மாம்ஸ் வாழ்க.

சந்தோஷ் said...

nalladhai seyya saagavendiya avasiyam illayea....
namakku pudikkadhavatrai seyyum mun saagalam veru vazhi illai endru....
ungal kavidhaiyil pala nalla vishayangal irukkiradhee!

santhosh

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா