நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூரில் தீவிரவாதமும், மனிதத்துவமும், நானும்

ஏன் அப்படிசொன்னேன் தெரியாது....
என் நட்பிடம் மே 13
அதிர்ஷ்டம் கெட்ட நாள் என்று....
அதிர்ஷ்டம் கெட்டுத்தான் போய் விட்டது..

காற்றில் வெடிகுண்டுத் துகள்கள்...
கலவரத்தில் ஓடும் கால்கள்...
ரத்தத்தின் சிகப்பு வாசனை..
காமெராவும் கையுமாய் பத்திரிக்கையாளன்....

இமைகள் விழியைக் காட்டப் பயந்து
இறுக்கமாய் மூடிக் கொள்ள
மூச்சு விட மறந்து திசை தெரியாத
பயணமானாலும் வீடு சேர்ந்தது கால்கள்.

தொலைக் காட்சிப் பெட்டி நிமிடத்திற்குப்
பத்து என்று இறந்தவர்களின்
எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போனது..
மரணத்தின் நிழல் பட்டு விலகியது என்மேல்தானா??

அடப்பாவி, வெடிகுண்டு வைத்து விட்டுத் தூரம் போய்
யாரை அழைத்தாய் தொலைபேசியில்?
அம்மா நீயும் என் குழந்தையும் நலமா என்றா?
பத்திரமாய் கவனமாய் இருங்கள் என்று சொல்லவா?

திடீரென்று தொலை பேசி அழைத்தது...
அம்மாதான்....
மகளே நீ நலமா?குழந்தைகள்?
அவர் வீட்டிலே இருக்கிறாரா? நலமா?
கவனம் வெளியே செல்ல வேண்டாம்....

அவ்வளவுதான்....நாம்...
நாமும், நம் கூடும் நலமென்றால்
சந்தோஷமே!!
அங்கே உயிரிழந்த நூறு பேரைப்
பற்றிக் கவலைப் படத்தான்
அவர்கள் அம்மா, அப்பா, மனைவி,
கணவன்,குழந்தைகள் உள்ளனரே

தீவிரவாதமும் மனிதத்துவமும்
ஒன்றையொன்று அடித்துப்
போட்டுக் கொண்டு அந்த மனித உடல்கள் மேல்
நடந்து போய்க் கொண்டே இருந்தன.....

11 comments:

வால்பையன் said...

நல்லாருக்குங்க!
பணி தொடரட்டும்
(வெளியே போகாதிங்க மனித உருவில் நிறைய மிருகங்கள்)

வால்பையன்

ரசிகன் said...

//
தீவிரவாதமும் மனிதத்துவமும்
ஒன்றையொன்று அடித்துப்
போட்டுக் கொண்டு அந்த மனித உடல்கள் மேல்
நடந்து போய்க் கொண்டே இருந்தன.....//

உண்மைதான்:)

ரசிகன் said...

//திடீரென்று தொலை பேசி அழைத்தது...
அம்மாதான்....
மகளே நீ நலமா?குழந்தைகள்?
அவர் வீட்டிலே இருக்கிறாரா? நலமா?
கவனம் வெளியே செல்ல வேண்டாம்....

அவ்வளவுதான்....நாம்...
நாமும், நம் கூடும் நலமென்றால்
சந்தோஷமே!!//

யதார்த்தம் இவ்வளவுதானே அருணா..:)

எச்சரிக்கையாய் இருக்கவும்ப்பா..:)

Aruna said...

வருகைக்கும்,அக்கறைக்கும் நன்றி வால்பையா...
அன்புடன் அருணா

Aruna said...

ரசிகன் said...
//அவ்வளவுதான்....நாம்...
நாமும், நம் கூடும் நலமென்றால்
சந்தோஷமே!!//

யதார்த்தம் இவ்வளவுதானே அருணா..:) //

Aruna said
யதார்த்தம் சிலசமயம் மனதைக் கஷ்டப் படுத்துகிறது ரசிகன்...
அன்புடன் அருணா

எச்சரிக்கையாய் இருக்கவும்ப்பா..:)
நன்றி ரசிகன்....
அன்புடன் அருணா

கோபிநாத் said...

கவனம்..;(

Aruna said...

Aruna said...
நன்றி Gopinath....
அன்புடன் அருணா

நிஜமா நல்லவன் said...

யதார்த்தங்கள் பலநேரங்களில் வலிக்கத்தான் செய்கின்றன:(

Aruna said...

உண்மைதான் நிஜமா நல்லவன்..
அன்புடன் அருணா

Sen22 said...

யதார்த்தமான வரிகள்...
நல்லாருக்குங்க!!

Aruna said...

நன்றி Sen22!! வருகைக்கும் வாழ்த்துக்கும்....
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா