நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 27, 2010

சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!

சும்மாவாச்சுக்கும் சும்மாயிருப்பதைத் 
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும் 
மனம் லயிக்கவில்லை

எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....

சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி 
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...

ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும் 
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...


எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல் 
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப் 
பார்த்துக் கொண்டே

கொஞ்சம் எழுத்துக்களைச் 
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச் 
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல் 
தன்னையே உருவாக்கிக் 
கொண்டது இந்தக் கவிதை ...

24 comments:

மாணவன் said...

//சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்//

சும்மா நச்சுன்னு இருக்குங்க கவிதை....

இந்தாங்க பூங்கொத்து எடுத்துக்குங்க..

மாணவன் said...

//எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....//

அழகான ரசனையுடன் அருமையான வரிகள்....

தொடரட்டும் உங்கள் பொன்னான கவிதைப் பணி

Gowripriya said...

நல்லா இருக்கு :)

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

சும்மாயிருப்பதென்பது முடியாத காரியமாயிற்றே அருணா மேடம் :-))

அன்புடன் நான் said...

சும்மா கலக்கிட்டிங்க.....

அன்புடன் நான் said...

கவிதைக்கான களம் புதிது.... பாராட்டுக்கள்.
வாங்கிகங்க பூக்காடு.

ஈரோடு கதிர் said...

அழகான கவிதைங்க!

ஹேமா said...

சும்மா இருக்கும்போதுதான் நிறைய வேலை இருக்கும்.அழகான பூங்கொத்து அருணா !

kamaraj said...

தூங்குகிற நேரத்தை ச்சிந்திக்கிற நேரம் என்று சொல்லுவார்கள் தோழன் மாதுவும் கார்த்தியும். ஆனாலும் நினைவுகள் அசைபோடும் இந்த சும்மா நேரம் பல உன்னதமான தருணங்களை முன்கொண்டுவந்து சிலாகிக்கப்பண்ணும்.கொஞ்சம் எழுதவும்கூட.

அன்புடன் அருணா said...

நன்றி மாணவன், Gowripriya!

வேலன். said...

கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச்
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல்
தன்னையே உருவாக்கிக்
கொண்டது இந்தக் கவிதை//
கவிதை அருமை....
(கொஞசம் வார்த்தைகளை சேர்த்தும் பிரித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்.நன்றாக இருக்கின்றதுங்களா?)
வாழ்க வளமுடன்.
வேலன்.

Paul said...

ஹ்ம்ம்.. :)

தமிழ் said...

அருமை

பூங்கொத்து

மங்குனி அமைச்சர் said...

good one

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அங்கதான் ஆரம்பிக்குது அருணா.இசையும் புத்தகமும் மழையும் தேநீரும் கைவிட்ட பிறகும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பைப் பாட்துட்டீங்க இல்ல.அப்புறம் சும்மா இருக்குறது எப்டி?எழுத்து வார்த்தையெல்லாம் தானாச் சேரும்.அதைக் கவிதையா ப்ளாக்ல போட்டுட்டு நானா எழுதல தானா எழுதிடுச்சும்பீங்க.

சேச்சேச்சே.இந்தக் கவிதை எழுதறவங்களே இப்பிடித்தாம்ப்பா என்கிறதாம் அந்த வண்ணத்துபூச்சி.

அன்புடன் அருணா said...

sakthistudycentre.blogspot.com said...
/என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா../
பண்றோம்!பண்றோம்!
அமைதிச்சாரல் said...
/சும்மாயிருப்பதென்பது முடியாத காரியமாயிற்றே அருணா மேடம் :-))//
அதே!அதே!
பூக்காடுக்கு நன்றி சி. கருணாகரசு !

அன்புடன் அருணா said...

kamaraj said...
/ஆனாலும் நினைவுகள் அசைபோடும் இந்த சும்மா நேரம் பல உன்னதமான தருணங்களை முன்கொண்டுவந்து சிலாகிக்கப்பண்ணும்.கொஞ்சம் எழுதவும்கூட./
உண்மைதான் காமராஜ்!
வேலன். said...
(கொஞசம் வார்த்தைகளை சேர்த்தும் பிரித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்.நன்றாக இருக்கின்றதுங்களா?)
நல்லாவே இருக்கு வேலன்.
நன்றி பால் [Paul]!
நன்றி திகழ் !

அன்புடன் அருணா said...

வாங்க மங்குனி அமைச்சர்!நன்றி!
சுந்தர்ஜி said...
/சேச்சேச்சே.இந்தக் கவிதை எழுதறவங்களே இப்பிடித்தாம்ப்பா என்கிறதாம் அந்த வண்ணத்துபூச்சி./
அட! இது நல்லாருக்கே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதுசரி நீங்க ஃப்ரீயா இருக்கும் போது தான் கவிதை உருவாகுதா :))

Anonymous said...

en veedu polave azhagu ungAL veedum kavithaiyum :)

KParthasarathi said...

சும்மா இருக்கும்போதே இவ்வளவு நேர்த்தியாக கவிதை உருவாகினால் நீங்க எழுத உட்கார்ந்தால் இன்னும் எவ்வளவு ஒசத்தியாக இருக்குமென்று யோசிச்சு பார்த்தேன்.!!
எனது இனிய புது வருஷ வாழ்த்துக்கள்

நிஷாந்தன் said...

செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....

அருமையான வரிகள் ...!

மென்மேலும் தங்களின் கவிதை
வரிகளை வாசிக்க ஆவல் .

- நிஷாந்தன்

http://nisshanthan.blogspot.com

R.Gopi said...

//கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச்
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல்
தன்னையே உருவாக்கிக்
கொண்டது இந்தக் கவிதை .//

********

அதனால் தானோ என்னவோ, இவ்வளவு அருமையான வரிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது இந்த கவிதை...

வாழ்த்துக்கள் அருணா மேடம்...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா