நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, December 31, 2010

இது போதுமா???

வேண்டும் என்னும் போது மழை தூற மழை நிரம்பிய ஒரு மரம்...
வேண்டுவதெல்லாம் தர ஒரு குப்பியிலடைபட்ட ஒரு பூதத்தின் விடுதலை உங்களால்....
வாசிக்க வாசிக்க முடியவே முடியாத ஒரு பிடித்த நாவலாசிரியரின் ஒரு நாவல்....
எண்ணுகிற திசையில் வாழ்வைத் திருப்பிக் கொள்ளும் சவுகரியம்....
மனதைத் துள்ள வைக்கும் மனதுக்கினிய இசை எந்நேரமும் .....
திரும்புகிற பக்கமெல்லாம் ஆத்மார்த்தமான நட்புகள்.......
இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
இவையத்தனையையும் பெற்றுக் கொள்ளுங்கள் இந்தப் புது வருஷத்திலும்...அடுத்தடுத்து வரும் வருடங்களிலும்!!!
படம்:Google:Thanks!

13 comments:

Gowripriya said...

2011 இனிதாய் அமைய வாழ்த்துகள் மேடம்

பார்வையாளன் said...

நன்றி

ராமலக்ஷ்மி said...

//இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
//

உண்மைதான்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா:)!

மாணவன் said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.. :-)

KParthasarathi said...

மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
2011 உங்களுக்கு ஓர் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். சந்தோஷங்களை உருவாக்கி, பிறரை சந்தோஷபடுத்தி நாமும் சந்தோஷமாக இருப்போம்.எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்

கே. பி. ஜனா... said...

நன்றி! அருமையான வாழ்த்து! உங்களுக்கும் அதே!

Madumitha said...

போதும்.
போதும்.
எதேஷ்டம்.

சத்ரியன் said...

உங்களுக்கும் எல்லாமும்!

வாழ்த்துகள்.

vinu said...

nandri ungal vaalthu palikkattum ungalludaiya 2011-ilum; vaalthukkal

R.Gopi said...

மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா மேடம்...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலையுலக தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

கார்த்திகைப் பாண்டியன் said...

அழகா சொல்லி இருக்கீங்க..:-)))

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்ங்க..:-))

குட்டிப்பையா|Kutipaiya said...

வாழ்த்துக்கள் அருணா!

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா