நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, December 9, 2010

மழையும் மழை சார்ந்த நிகழ்வுகளும்--2

முகம் நனைக்காமல் சில்லெனத் தூவும் புள்ளி மழை...
புள்ளி வைத்து ஒரு சின்ன வட்டம் போடும் சின்ன மழை.
சுள்ளென்ற தெறிப்போடு ஒரு துளியை உயர வைத்து அதிர்ந்து அடங்கும் ஒரு மழை...வரும் போதே சீறிச் சட்டென ஒரு துளியால் அறைந்து விடும் ஒரு பெருமழை.
மழையினூடே நனைவது ஒருவகை சுகம் என்றால் நனையாமல் மழை சார்ந்த நிகழ்வுகளை ரசிப்பது ஒரு சுகம். அதில் சில...
முதல் துளியைத் தவிர்க்க அவசர அவசரமாய் அத்தனை ஊறுகாய் வாளிகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டினால் மூடும் தள்ளுவண்டி வியாபாரிக்கு உதவும் பூக்காரப் பாட்டியைப் பிடித்தது....


தண்ணீரில் சீறி பைக்கில் வந்த தாடிக்காரன் தேங்கிக் கிடக்கும் மழைநீரை ஒட்டி குட்டி ரெயின் கோட் போட்ட பூக்கள் பார்த்து வேகம் குறைத்து மெதுவாகப் போனது பிடித்தது.....

நின்று போன ஸ்கூட்டியைத் தண்ணீருக்குள் தள்ள முடியாமல் அந்தப் பெண் தள்ள ஓடி வந்து உதவிய வாழைப்பழ வண்டிக்காரனைப் பிடித்தது.

ஒரே குடைக்குள் மூன்று பேர் நின்றிருந்தும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இன்னொரு தோழியை...."நீயும் வாடி" என்று சேர்த்துக் கொண்ட தோழியர் கூட்டம் பிடித்தது....


அக்காவும் தங்கையுமாயிருக்கலாம்....கைகோர்த்தபடி ஒவ்வொரு தண்ணீர்த் தேக்கத்திலும் குதித்து...ஒவ்வொரு மரமாய் உலுக்கி மரமழை அனுபவித்த குட்டீஸை ரொம்பப் பிடித்தது.

"சூப்பரா ஒரு டீ குடிக்கலாம் வாடா" எனத் தோள் மேல் கையைப் போட்டபடி போகும் இளைஞர்களையும் பிடித்தது.....

ஸ்கூட்டரியில் விரைந்த ஒரு ஜோடியின் துப்பட்டா சக்கரத்துக்கு அருகாக பறப்பதைக் கண்ட பைக்கில் போன ஒரு இளைஞன் "ஏங்க உங்க துப்பட்டா....கவனம் என்று போகிற போக்கில் எச்சரித்தது பிடித்தது...


அதைவிடவும் சரியான இடத்தில் நின்று மக்களை ஏற்றி இறக்கிச் சென்ற பேருந்து ஓட்டுநரைக் கூட அன்று ரொம்பப் பிடித்தது...


மழையில் மனிதர்கள் அழகானவர்களாயும் மனிதர்களாகவும் இருந்தது நிரம்பப் பிடித்தது.

21 comments:

Anonymous said...

மழை தரிசனம் பார்த்த நேரத்தில் மனிதம் பார்த்த நிமிடங்கள் :)
பூக்காடு உங்களுக்கு!

ராமலக்ஷ்மி said...

//மழையில் மனிதர்கள் அழகானவர்களாயும் மனிதர்களாகவும் இருந்தது நிரம்பப் பிடித்தது.//

மழையையும் மழை நிகழ்வுகளையும் அப்படியே காட்சியாக்கியிருக்கும் இப்பதிவு எங்களுக்கும் நிரம்பப் பிடிக்கிறது அருணா.

துளசி கோபால் said...

அப்ப மனிதம் வளர்வது மழையில்தானா?

தண்ணி ஊத்தி வளர்க்க வேண்டி இருக்கோ என்னவோ:-)))))

சாந்தி மாரியப்பன் said...

//மழையினூடே நனைவது ஒருவகை சுகம் என்றால் நனையாமல் மழை சார்ந்த நிகழ்வுகளை ரசிப்பது ஒரு சுகம்//

அட.. ஆமாங்க :-)))

@ துளசியக்கா :-))))))))))

Chitra said...

ஒரே குடைக்குள் மூன்று பேர் நின்றிருந்தும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இன்னொரு தோழியை...."நீயும் வாடி" என்று சேர்த்துக் கொண்ட தோழியர் கூட்டம் பிடித்தது....

...How sweet!

கிறுக்கன் said...

உங்கள் எழுத்துக்கள் ரொம்ப பிடிச்சது அருணா

பூங்கொத்துக்கள் பிடிங்க!!!!!!!

pichaikaaran said...

எல்லாம் பிடித்தாலும் எனக்கு அதிகம் பிடித்தது இது


ஏங்க உங்க துப்பட்டா....கவனம் என்று போகிற போக்கில் எச்சரித்தது பிடித்தது...

ஹுஸைனம்மா said...

//மழையினூடே நனைவது ஒருவகை சுகம் என்றால் நனையாமல் மழை சார்ந்த நிகழ்வுகளை ரசிப்பது ஒரு சுகம்//

நல்ல விஷயங்கள் மட்டுமே பளிச்சென்று தெரிந்ததில் மகிழ்ச்சி..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மழையின் கருணை நிறைந்த திவலைகள் எல்லோர் மீதும் தெளிக்கப்பட்டு உலகமே அன்பு மயமாகிவிடுகிறதோ? அற்புதம் அருணா

pudugaithendral said...

மழை பெஞ்சு முடிச்சதுக்கப்புறம் ஊரே அழகான மாதிரி எனக்குத் தோணும்.

மழையில் மனிதர்கள் அழகானவர்களாயும் மனிதர்களாகவும் இருந்தது நிரம்பப் பிடித்தது.//

அழகான வரிகள்.

Karthik said...

அட்டகாசம். :)

சத்ரியன் said...

அருணா,

மழையை.....ரொம்பவும் பிடித்தது.

Deepa said...

இடுகை அழகோ அழகு! பூங்கொத்து அருணா.
தலைப்பைப் பார்த்தவுடனே சட்டென்று ஓட்டுப் போட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான மழையில்
அன்பானவர்களாக எல்லாரையும்
கண்டுகொண்ட உங்களுக்கு பூங்கொத்துக்கள்.:)

அம்பிகா said...

மிக அருமை. ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பதிவு.
பூங்கொத்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ்.. மழையின் சாரல் சிலிர்ப்பாய் என் உள்ளத்தில்.. மழை காட்சி தருணங்களை மறக்க இயலாது. அருமையான பகிர்வு அருணா.

skamaraj said...

ஆமாங்க.... மழை பூமியின் கசடுகளை மட்டுமல்ல மனதிலிருந்தும் அடித்துக்கொண்டுபோய்விடுகிறது.அந்த நேரம் யார் மீதும் வெறுப்பு வந்தபாடில்லை.ஈரம் எல்லா இடத்திலும்.யோசிக்க வச்சுட்டீங்க. நல்ல ஈரமான பதிவு.ரொம்ப இடவெளிக்குப்பிறகு நல்லா இருக்கீங்ளா அருணா.

அன்புடன் அருணா said...

Balaji saravana said...
/பூக்காடு உங்களுக்கு!/
பூக்காடுக்கு நன்றி Balaji
நன்றி ராமலக்ஷ்மி
துளசி கோபால் !
/அப்ப மனிதம் வளர்வது மழையில்தானா?/அப்படியாவது வளராதான்னு நப்பாசைதான்!
நன்றி அமைதிச்சாரல்!
நன்றி Chitra !

vinu said...

அதைவிடவும் சரியான இடத்தில் நின்று மக்களை ஏற்றி இறக்கிச் சென்ற பேருந்து ஓட்டுநரைக் கூட அன்று ரொம்பப் பிடித்தது...


cute paaaaaaaaaaaaaa

அன்புடன் அருணா said...

கிறுக்கன் said...
/உங்கள் எழுத்துக்கள் ரொம்ப பிடிச்சது அருணா/
ரொம்ப நன்றிங்க!
நன்றி பார்வையாளன்
நன்றி ஹுஸைனம்மா
சுந்தர்ஜி said...
/மழையின் கருணை நிறைந்த திவலைகள் எல்லோர் மீதும் தெளிக்கப்பட்டு உலகமே அன்பு மயமாகிவிடுகிறதோ? .
அதேதான் சுந்தர்ஜி
நன்றி புதுகைத் தென்றல் !
நன்றி Karthik !

Paul said...

ரொம்ப அழகான பதிவு.. ரசித்து படித்தேன்..!! :) குறிப்பாக அந்த கடைசி வரி..!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா