நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, February 24, 2010

எது விரதம்?

"ராணி நாளைக்குச் சீக்கிரம் வந்துரு...அய்யாவும் நானும் விரதம்...என்னாலே ஒண்ணுமே பண்ண முடியாது. ரகு வெளிலே பார்த்துப்பான்."
"சரிங்கம்மா" என்ற ராணி அம்மா ஏதாவது தருவாங்கன்னு காத்துக் கொண்டு இருந்தாள். ரெண்டே கொய்யாப் பழத்தைக் கையில் கொடுத்துவிட்டு"நாளைக்கு விரதம்னு எல்லாம் கொஞ்சமா செய்ததுலே எதுவும் மிஞ்சலை ராணி.....இன்னிக்குப் பழம்தான்" என்று சொல்லி நகர்ந்தாள்.
                                         ராணிதான் வீட்டில் மூத்தவள்.மூன்று தங்கைகள்.அப்பா அம்மா இதெல்லாம் சினிமாவில், கதைகளில் வருபவர்கள் அவளைப் பொறுத்தவரை.எப்போயிருந்துன்னு நினைவே இல்லாத நாளிலிருந்து இப்படி வீட்டு வேலை பார்த்துதான் தங்கைகளைக் காப்பாற்றுகிறாள்.

                                                                                ராணி தங்கச்சிங்களுக்கான மிஞ்சிய சாப்பாட்டுக்காக பெருநம்பிக்கையுடன் காத்திருந்தவளுக்கு வீட்டில் இவள் வருகைக்காகக் காத்திருக்கும் மூன்று வயிறுகளும் நினைவுக்கு வந்து மனதை அழுத்தியது.வீட்டில் ஒருமணி அரிசியோ எதுவும் கிடையாது ....மாசக் கடைசி.ஏற்கெனவே அட்வான்ஸ்லேதான் ஓடிக் கொண்டிருக்கு.....அம்மாகிட்டேயும் எப்படிக் கேட்க என்று நடந்தாள்.வழியெல்லாம் ராத்திரிப் பொழுதை எப்பிடி ஓட்ட என்று ஒரே கவலை...கால் கிலோ அரிசி கடனாக செட்டியார் கடையில் வாங்கி தண்ணீர் நிறைய ஊற்றிக் கஞ்சி வடிக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுததாள்.கடைசியில் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் கஞ்சியையும் தம்ளர் தம்ளராய்த் த்ண்ணீரையும் குடித்துப் படுத்தாள்.
                                                  விடிஞ்சதும் கருப்புக் கருப்பட்டிக் காபியைத் தொண்டையில் இறக்கிக் கொண்டையை முடிந்து கொண்டு "ஏய் சுமதி தங்கச்சிங்களைக் கிளப்பி நீயும் பள்ளிக்கூடம் போங்க....மதியம் சத்துணவு சாப்புட்டுக்கோங்க" என்றவாறே வேக வேகமாக நடையைப் போட்டாள்....ஏற்கெனவே நேரமாச்சு....அம்மா சத்தம் போடுவாங்க....அம்மாவுக்கும் அய்யாவுக்கும் விரதம் வேற..."என்று நினைத்தவாறே எட்டி நடையைப் போட்டாள்.


                                 முற்றம் தெளித்துக் கோலம் போட்டு ,வீட்டைக் கழுவி, முன்னால் பின்னால் பெருக்கி எல்லாப் பாத்திர பண்டங்களையும் கழுவி,குத்து விளக்கைத் தேய்த்துக் கழுவி,மாலை போட்டு நிமிர்ந்த போது அம்மாவும் அய்யாவும் குளித்துப் பூஜைக்கு ரெடியாகியிருந்தார்கள்.ஒரு பொழுது சாப்பாடு என்றால் அன்று விசேடமாகச் சமைக்கவேண்டும்...............அவசர அவசரமாக காய் வெட்டிச் சமையலை முடித்து விட்டுப் பூஜை முடிவதற்காய்க் காத்திருந்தாள். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும்....

                                                                                        வயிறு காலியாக அமிலமாய் எரிந்தது.முந்தைய நாளும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...அப்படியே பூஜையறை வாசலில் தூணைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.கீழே விழுந்து விடக் கூடாதென்று இன்னும் இறுக்கமாகத் தூணைப் பிடித்துக் கொண்டாள்.

                                          காயத்ரி மந்திரம் இப்போதுதான் ஆரம்பித்திருந்தார்கள்.அம்மா மந்திரம் சொல்லிக் கொண்டே சாமிக்கு இலை வைத்துப் பரிமாற ஆரம்பித்திருந்தாள்.பருப்பின் மேல் நெய் விட நெய்க் கிண்ணம் எடுக்க எழுந்தவள் கொஞ்சம் தடுமாறினாள்.

" ராணி அம்மா விரதம்னு தெரியாதா....காலைலேருந்து பல்லுலே தண்ணி கூடப் படாமெ, சாப்பிடாம  விரதம் இருக்காங்களே...நாமளே எடுத்துக் கொடுக்கலாம்னு தோணறதா?.... எல்லாம் சொல்லணுமா?....இப்புடி உக்கார்ந்து வேடிக்கை பார்க்குறியே??.....போ...அம்மா கேக்குறதெல்லாம் எடுத்துக் கொடு... விரதமும் அதுவுமா நீ ஏம்மா அடுப்படிக்கும் பூஜையறைக்குமாய் அலையுறே?நீ அலையாமெ ஒரு இடத்துலே உக்காரும்மா......எல்லாம் ராணி செய்வா" என்றார் அய்யா .
அம்மா சாமிக்கு இலையில் கரண்டி நிரம்பp பருப்பின் மேல் நெய் ஊற்றினாள்.
படத்தில் முருகன் அழகாகச் சிரித்துக் கொண்டான்.

34 comments:

+Ve Anthony Muthu said...

hm..! :-(

அண்ணாமலையான் said...

ரைட்டு

R.Gopi said...

நல்ல எழுத்து நடை.... படிக்கும் போது, படைப்பினூடே ஒன்றி விட்டேன்...

ராணிக்கு ஒரு வாய் சாப்பாடு ஊட்டி விட்டு விடலாம் என்னும் அளவு நெகிழ்வாக இருந்தது...

வாழ்த்துக்கள் அருணா... பிடியுங்கள் பூங்கொத்து....

Anonymous said...

பூங்கொத்து

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...விரதம்னு சொல்லிக்கிட்டு சிலர்..சொல்லாம சிலர்! :-(

Anonymous said...

கதையல்ல நிஜம்...

ராமலக்ஷ்மி said...

எது விரதம் என நன்றாகக் கேட்டிருக்கிறீர்கள்.

pudugaithendral said...

பூங்கொத்துக்கள்

ஹுஸைனம்மா said...

:-))

lakshmi said...

that is the sad tale of probably most of the maids across...

ஹேமா said...

என்ன சொல்லன்னு தெரில அருணா.
இயல்பாயிருக்கு நிகழ்வு.

மாதேவி said...

இயல்பான நடையில் நிஜத்தைக் கூறியுள்ளீர்கள்.:(

அன்புடன் அருணா said...

நன்றி +Ve Anthony Muthu !
நன்றி அண்ணாமலையான் !

அன்புடன் அருணா said...

பூங்கொத்து....வாங்கீட்டேன்....... நன்றி கோபி!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன் அம்மிணி,புதுகைத் தென்றல் !!

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

ஸ்மைலிக்கு நன்றி இயற்கை, ஹுஸைனம்மா!

sri said...

It kills everytime I read ur words, SO much to the reality ! We treat our maid with quite a respect, and always see to taht she is been fed and her kids have been taken care, but there are places it goes like what you have writtern here. Manasu valikudhu!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/ஹ்ம்ம்...விரதம்னு சொல்லிக்கிட்டு சிலர்..சொல்லாம சிலர்! :-(/
உண்மைதான்!

காமராஜ் said...

அருணா வணக்கம்.
ஊர் வந்தாச்சு.
வந்ததும் ப்ளாக் முகத்தில் தான் முழிச்சேன்.

பசி கொடிது.அதுவும் அடுத்தவேளை சோத்துக்கு என்ன செய்ய
எனும் நினைப்பு இப்போதைய பசிக்கு விஸ்வரூபம் கொடுக்கும்.
இந்த 110 கோடி ஜனத்திரளில் அப்படி மனிதர்கள் அதிக சதமானம். அவர்களின் சார்பாக கொத்துக் கொத்தாய் வாழ்த்துக்கள்.

மந்திரன் said...

இந்த கதையில் மனிதர்களிடம் குறை ஒன்றும் இல்லை . சூழ்நிலை தரும் தண்டனை கொடூரமானதுதான் .
கையில் 1௦,௦௦௦ இருந்த போதும் சாப்பிட முடியாமல் பசியில் மயங்கிய அனுபம் உண்டு எனக்கு . நாம் நினைப்பதை விட கொடுமையானது பசி .
அருமையான கதை . ஆமாம் , கடைசியில் முருகனை குற்றவாளி என்று சொல்ல வருகிறீர்களா ?

Unknown said...

நல்லா இருக்கு....,

அன்புடன் அருணா said...

தமிழரசி said...
/கதையல்ல நிஜம்.../
நன்றிங்க தமிழரசி!
ராமலக்ஷ்மி said...
/எது விரதம் என நன்றாகக் கேட்டிருக்கிறீர்கள்./
நன்றிங்க ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

lakshmi said...
/that is the sad tale of probably most of the maids across.../
Wow Lakshmi here!Thanx lakshmi.

அன்புடன் அருணா said...

ஹேமாவுக்கும், மாதேவிக்கும் நன்றிகள் பல!

அன்புடன் அருணா said...

Srivats said...
/It kills everytime I read ur words, SO much to the reality !Manasu valikudhu!/
Thanx Sri! Same here!

ராகவன் said...

அன்பு அருணா,

எப்படி இருக்கிறீர்கள்?

உங்களை சந்தித்து திரும்பியதையும், உள்ளங்கையில் இன்னும் மிச்சமிருக்கும் வென்பொங்கலையும் பேசிக்கொண்டே இருக்கிறார், காமராஜ்... உங்களுக்கு எழுத வேண்டிய பின்னூட்டத்தை என் பதிவில் போட்டு இருக்கிறார், இன்னும் மயக்கத்தில் இருக்கும் காமராஜ்! உங்களுக்கு எழுதிய அதே பின்னூட்டம் என் பதிவிலும்.
விரதமும் பசியும் வேறு வேறு என்பது அழகாய் வந்திருக்கிறது உங்கள் பதிவில்.
வாழ்த்துக்கள்.
அன்புடன் ராகவன்

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/வந்ததும் ப்ளாக் முகத்தில் தான் முழிச்சேன்./
நல்லது....ஆமாமா ப்ளாக் படிப்பது இப்போவெல்லாம் ஒரு போதையாகவே ஆகிவிட்டதுதானே!
/ அவர்களின் சார்பாக கொத்துக் கொத்தாய் வாழ்த்துக்கள்./
வாங்கீட்டேன் காமராஜ்.

அன்புடன் அருணா said...

மந்திரன் said...
/அருமையான கதை . ஆமாம் , கடைசியில் முருகனை குற்றவாளி என்று சொல்ல வருகிறீர்களா ?/
நம்மால் ஏதும் முடியாத கையாலாகாத்தனம் மிஞ்சும் போது கடவளைத்தானே குற்றம் சொல்வோம் மந்திரம்!

ஆடுமாடு said...

விரதம்?

அன்புடன் அருணா said...

ராகவன் said...
/அன்பு அருணா,
எப்படி இருக்கிறீர்கள்?/
நலமே.

/உங்களை சந்தித்து திரும்பியதையும், உள்ளங்கையில் இன்னும் மிச்சமிருக்கும் வென்பொங்கலையும் பேசிக்கொண்டே இருக்கிறார், காமராஜ்.../

வெண்பொங்கல் அங்கேயும் வந்து சேர்ந்தாச்சா?
/விரதமும் பசியும் வேறு வேறு என்பது அழகாய் வந்திருக்கிறது உங்கள் பதிவில்./
கருத்துக்கு நன்றி ராகவன்!

அன்புடன் அருணா said...

நன்றி பேனா மூடி!

அன்புடன் அருணா said...

ஆடுமாடு said...
/ விரதம்?/
அவ்வளோதானா ஆடுமாடு?

மணிவேலன் said...

யார் விரதமிருக்கா???

ராணி பெயரளவில் மட்டுமே :(

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா