நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, February 10, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

 இது யூத்ஃபுல் விகடனில்.......
ஒரு வீட்டில்
ரோஜாத் தோட்டம்


ஒரு வீட்டில்
ஜன்னலில் பூமரம்


ஒரு வீட்டில்
ஒளிந்து கொள்ளும் கதவிடுக்கு


ஒரு வீட்டில்
மூன்று சக்கர சைக்கிள்


ஒரு வீட்டில்
பரணில் செப்பு


ஒரு வீட்டில்
கூடிப் பேசும் கல்முற்றம்


ஒரு வீட்டில்
செல்லச் சிட்டுக் குருவியின் கூடு


ஒரு வீட்டுச் சுவரில்
அப்பாவின் தலைமுடி எண்ணெய்


இப்படி இருப்பை உணர்த்துதலுக்கு
எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் போல...


இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...


வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்


மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'

மீண்டும் ஒரு மாற்றம்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

40 comments:

+Ve Anthony Muthu said...

//மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'//

தேடல்தானே வாழ்க்கை. அருமை. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை அருணா.

//இப்படி இருப்பை உணர்த்துதலுக்கு
எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் போல...

இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...//

அருமை.

pudugaithendral said...

இந்த வாடகை வீட்டை விட்டு வந்த பின்னாடியும் மனசுல அந்த வீடு நிக்கும். மறக்கவும் முடியாம நாம் இருந்த அந்த வீட்டை ஒரு தடவை பாத்தா நல்லாயிருக்கும்னு தோணும் வேற. கிளறி விட்டுட்டீங்க.

இப்படிக்கு நாடோடி கூட்டத்தில் ஒரு கூட்டமாக ஊர் ஊராக சுற்றி வீடு தேடி அமரும்

புதுகைத் தென்றல்

குடந்தை அன்புமணி said...

நானும் இந்த ரகம்தான்... நல்லாருக்கு...

Paleo God said...

நானும் ஒரு நாடோடிதான்..:)) (எலி வளை தயாராகிக்கொண்டிருக்கிறது ,,:)

உங்க பக்கம் வந்து பார்த்தா அட என்னோடதும் குட் ப்ளாக்ல.. :)

வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்ங்க..

Rajan said...

//ஒரு வீட்டில்
ஒளிந்து கொள்ளும் கதவிடுக்கு//

சூப்பர் ! ரொம்ப நல்லா இருக்குங்க

sathishsangkavi.blogspot.com said...

//வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்//

என் நிலமையும் இதுதான்...

Rajeswari said...

nice.. vethanai kalantha vaarthaigal..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாயிருக்கு அருணா. பூங்கொத்து .

புல்லட் said...

உண்மைதான்.. ஹ்ம்ம்! :(

R.Gopi said...

//வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்

மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'

மீண்டும் ஒரு மாற்றம்...
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்! //

*******

மிக பிரமாதம் அருணா... படித்து கொண்டே வந்த போது, கடைசியில் அருமையாக முடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்...

பிடியுங்கள் ஒரு பெரிய பூங்கொத்து...

வெள்ளிநிலா said...

mam,if u have intersted pls send your postal adress., i will post our blogger's magazine to you! for further details pls read my blog, thanking you!

காமராஜ் said...

எல்லாவற்ரையும் விழுங்கி
ஏப்பம் விடுகிறது
ரெண்டு வரிகள்.

செல்லச்சிட்டுக்குருவி
அப்பாவின் தலைமுடி எண்ணெய்..

ரொம்ப நாள் ரீங்காரமிடும்
கவிதையின் இலக்கணப்படி.
பூங்கொத்தென்ன ?
பூந்தோட்டமே.

அன்புடன் அருணா said...

நன்றி Antony,ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
/மறக்கவும் முடியாம நாம் இருந்த அந்த வீட்டை ஒரு தடவை பாத்தா நல்லாயிருக்கும்னு தோணும் வேற. கிளறி விட்டுட்டீங்க./
ரொம்ப சரி தென்றல்!

அன்புடன் அருணா said...

நன்றி கார்க்கி, குடந்தை மணி

அன்புடன் அருணா said...

ஷங்கர்.. said...

/ நானும் ஒரு நாடோடிதான்..:)) (எலி வளை தயாராகிக்கொண்டிருக்கிறது ,,:)/
எலி வளைககு வாழ்த்துக்கள்
/உங்க பக்கம் வந்து பார்த்தா அட என்னோடதும் குட் ப்ளாக்ல.. :)/
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

நன்றி ராஜன்,சங்கவி!

Toto said...

அழகான‌ க‌விதை.

-Toto

Karthik said...

nalla irukku. vazhthukkal. :))

Unknown said...

நல்லா இருக்குங்க..,

அன்புடன் அருணா said...

நன்றி ராஜேஸ்வரி,ஜெஸ்வந்தி!

அன்புடன் அருணா said...

வாங்க புல்லெட்..முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்ட்டேன் கோபி! நன்றி!
Thanx vellinila.I'll read your blog and get back to you.

அன்புடன் அருணா said...

பூந்தோடடத்தி்ற்கு நனறியோ நன்றி காமராஜ்!

அன்புடன் அருணா said...

நன்றி நேசமித்ரன்....!

அன்புடன் அருணா said...

வாங்க ToTo!.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Dr.Rudhran said...
/well written/
Thanx Sir.I'm honoured.

அன்புடன் அருணா said...

Thank you karthik!

மாதவராஜ் said...

//இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...

வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்
//

அருமைங்க. ரசித்தேன்.

அன்புடன் அருணா said...

நன்றி பேனா மூடி!

Unknown said...

//இப்படி இருப்பை உணர்த்துதலுக்கு
எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் போல...

இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...

வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்

மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'

மீண்டும் ஒரு மாற்றம்...
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!//

அழகான வரிகள்...எனக்கும் இந்த வலிகள் கிடைத்ததுண்டு...

அம்பிகா said...

ரொம்ப புடிச்சிருக்குங்க.
செல்ல சிட்டுக்குருவி...
இந்தாங்க... பூங்கொத்து.

அன்புடன் அருணா said...

நன்றி மாதவ்ராஜ்,anto,அம்பிகா!

KParthasarathi said...

Eppadi ivvalavu azhagaaga ellorum anubhavikkira sambavangalai ungalaal ezhudhamudigiradhu?Vaarthaigalum migavum nandraaga vizhundhulladhu.

பா.ராஜாராம் said...

அபாரம் டீச்சர்!

எல்லோருக்கும் தருகிற உங்களின் பூங்கொத்து,உங்களுக்கும்!

மந்திரன் said...

எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தாலும் எதுவும் அழிவதில்லை நமது நினைவுகளில் ..
புரிதலுடன் கூடிய நல்ல நடை .
நானும் கவிதை எழுதலாம் என்று நினைக்கும் போது உங்கள மாதிரி சில பேர் இந்த மாதிரி கவிதை எழுதி என்னை அடிக்கடி வெட்கப்பட செய்கிறீர்கள் ..
----------------------------
"நான் இறக்க போகிறேன் - அருணா "-பெயர் காரணம் என்னவோ ?

அன்புடன் அருணா said...

நன்றி பார்த்தசாரதி சார்! ராஜாராம் சார் பூங்கொத்து வாங்கீட்டேன்!

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி மந்திரன்!
/"நான் இறக்க போகிறேன் - அருணா "-பெயர் காரணம் என்னவோ ?/
ஒரு விசேஷமான காரணமும் இல்லைங்க. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வைத்ததுதான்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா