நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, February 2, 2010

இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு....

எனக்கு நல்லா நினைவிருக்கு......முன் பல் விழுந்தது .........வகுப்பறையில் தான்.வாயில் ரத்தம் வந்ததும் உயிர் போவது போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதும்...."என்ன இதுக்குப் போய் அழுதுக்கிட்டு?"போ தோட்டத்தில் பல்லை மண்ணில் புதைத்துவிட்டு வாயைக் கழுவிட்டு வா"என அதட்டிய முத்தம்மா டீச்சர் கண்ணுக்குள்ளேயெ நிக்கிறாங்க.

மண்ணுக்குள் பல்லைப் புதைக்கும் போதே..." ரத்தம் வேற வருது.....ம்ம்ம் நாளைக்கு லீவ் போட்டுட வேண்டியதுதா"ன்னு மனசுக்குள்ளே நினைச்சேன்.

வீட்டுக்கு வந்ததும் அழுதுட்டே அம்மாகிட்டே சொன்னதும்......நாளைக்கு லீவ் போட விடணுமேனு கொஞ்சம் அதிகமாவே அழுதேன்
"பல்லை எங்கே போட்டே"ரெட்டை வால் அக்காங்கதான் கேட்டாங்க.....
"எங்க டீச்சர் மண்ணுக்குள்ளே புதைக்கச் சொன்னாங்க..."
"அச்சச்சோ...... புதைச்சுட்டியா?"
"ஆமா...என்ன இப்போ?"
உன் பல்லை வானம் பார்த்துச்சா?
"அப்படீன்னா"
"வானத்துக்குப் பல்லைக் காட்டினியா?"
நான் அப்படியொன்றும் பத்திரமாகக் கொண்டு போகாததால்
" ஆமா ஏன்?" அப்படீன்னேன்.
"சரி அவ்வ்ளோதான் !உ னக்குப் பல்லே முளைக்காது!"
"அய்யோ"
"ஆனா பரவாயில்லை நல்லவேளை மண்ணுலே புதைச்சிட்டே"
"ஏனாம்??"
"கொஞ்ச நாள்லே பல் மரம் முளைக்கும்...அதுலேருந்து பறிச்சு ஒட்ட வச்சுக்கோ!....அது வரைக்கும் ஓட்டைப் பல்லிதான்!" இப்படி ரெட்டை வாலுங்க என்னை ஓட்டறது தெரியாமே நானும் "அப்பிடியா" அப்பிடீன்னு முழிச்சுட்டு
தினமும் பள்ளியில் புதைத்த பல்லுக்குத் தண்ணி கூட ஊத்திருக்கேன்னா பாருங்க!

இதென்ன? சப்போட்டா பழம் சாப்பிட்டுக் கொட்டையை முழுங்கிட்டேனேன்னு அழுதப்போ ......இந்த ரெட்டை வாலுங்க
"ஹேஏஏஏஏஏஏ..... உம்மேல சப்போட்டா மரம் நாளைக்கு முளைக்கும் ...நாங்க ஜாலியா பழம் பறித்துச் சாப்பிடுவோமேன்னு கத்துச்சுங்க...."
மரம் முளைச்சுடுமோன்னு அன்னைக்கு முழுசும் தூங்காம இருந்திருக்கேன்னா பாருங்க!

என் பொண்ணு முன் பல் விழுந்தப்போ பல்லைப் பஞ்சில் சுத்தி அவ்வ்ளோ ஸ்மார்ட்டா "I've lost my front tooth.Shall I dispose this mom" அப்படீன்னு கேட்ட போது

அய்யோ நாம இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு வெக்க வெக்கமா வருது!


57 comments:

KParthasarathi said...

unga anubhavamdhan enakkum.Chinna vayasula indha maadhiri madatthanama nambindu pallai maraitthu pudhaitthu irukkomae nnu ninaicchaa sirippudhan varradhu.
ungal0da posts are really great and hilarious

சின்ன அம்மிணி said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

யக்கா, இப்பவும் நீங்க அப்பாவிதான் :)

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அருணா நிறைய்ய தடவை நாம இப்பை ஈ. வா இருந்திருக்கோமேன்னு நினைக்க வெக்கறாங்க பசங்க.

வீட்டுல பல்புகள் சேர்ந்து போச்சு. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

T.V.Radhakrishnan.. said...

:-))

ராமலக்ஷ்மி said...

:))! என்னையும் இப்படித்தான் சின்ன வயதில் ஓட்டுவாங்க அண்ணனுங்க.

R.Gopi said...

//என் பொண்ணு முன் பல் விழுந்தப்போ பல்லைப் பஞ்சில் சுத்தி அவ்வ்ளோ ஸ்மார்ட்டா "I've lost my front tooth.Shall I dispose this mom" அப்படீன்னு கேட்ட போது

அய்யோ நாம இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு வெக்க வெக்கமா வருது!//

**********

ஹா...ஹா...ஹா... குட்டீஸ் ஆல்வேஸ் ச்சோ ஸ்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்...

சரி... சரி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு....நாமதான் எப்போவுமே “ஙே”தானே...

நல்லா இருக்கு பதிவு....

சந்தனமுல்லை said...

:-)))

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா - ரசிச்சேன்.

////வீட்டுல பல்புகள் சேர்ந்து போச்சு. :)////

இதுவும் டாப்பு.

ஜெஸ்வந்தி said...

நல்ல பதிவு அருணா. என் பொண்ணுங்களைப் பார்த்து இப்படி என்னை நினைத்து வெட்கப் பட்ட சந்தர்ப்பங்களும் அவர்களுக்காகப் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கு . ரசித்தேன்.

கோபிநாத் said...

சூப்பர் ஙே ;)))

அண்ணாமலையான் said...

சூப்பரப்பு...

ஷங்கர்.. said...

அய்யோ நாம இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு வெக்க வெக்கமா வருது!//
-----------
இல்லைங்க அப்ப குழந்தையாகவே இருந்திருக்கோம்..:))
-----------
ஙே... பழச கிளறிய கோழி..:))

ராஜன் said...

// "I've lost my front tooth.Shall I dispose this mom" அப்படீன்னு கேட்ட போது//

கனவெல்லாம் பலிக்குதேன்னு ஹம்மிங் கேட்டுருக்குமே !

ராஜன் said...

////மரம் முளைச்சுடுமோன்னு அன்னைக்கு முழுசும் தூங்காம இருந்திருக்கேன்னா பாருங்க!///

ச்சோ ச்சோ ச்சோ !

ராஜன் said...

//தண்ணி கூட ஊத்திருக்கேன்னா பாருங்க!// நீங்க ரொம்ப நல்ல நல்லவங்க மேடம்

ராஜன் said...

//என அதட்டிய முத்தம்மா டீச்சர்//

முத்தே முத்தம்மா ...........................................!

ராஜன் said...

//"வானத்துக்குப் பல்லைக் காட்டினியா?"//

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவியே !

Srivats said...

LOL arumayana writing, now a days kids are more informed than we ever was LOL, she is such a cutie, and u watered ur teeth LOL!!

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹஹ ரசிக்கும்படி இருந்தது. இப்ப உள்ள புள்ளைங்ககிட்டருந்து நாம பல விசயங்கள் கத்துக்கலாம் ரொம்ப ஸ்மார்ட்.

நீங்க மட்டுமில்ல எல்லாருமே இந்த பருவத்துல "ஙே"'' முழிச்சவங்கதான்...என்ன நீங்க வெளிய சொல்லிட்டீங்க...அவ்வளவுதான்..

Rajeswari said...

ha ha..nalla irukku!!

V.Radhakrishnan said...

ஹா ஹா, அறிவு வளர்ச்சி ஆச்சரியமல்ல.

Maddy said...

அப்போ நீங்க பெரிய பண்ணையரம்மா ன்னு சொல்லுங்கோ!!! முப்பத்தி ரெண்டு பல்லுக்கு முப்பத்தி ரெண்டு மரம் இல்லெ வளர்ந்திருக்கும்!!! சோ! நீங்க பழ பண்ணையாரம்மா!!

ஹுஸைனம்மா said...

//வீட்டுல பல்புகள் சேர்ந்து போச்சு//

ஹி..ஹி..

ஹேமா said...

அருணா...சிரிச்சிட்டேன் சத்தமா.உங்களை
விடக் கேவலமா "ஙே"ன்னு இருந்திருக்கேன் நான்.சொன்னா வெட்கம்.

பா.ராஜாராம் said...

;-)))

ஆடுமாடு said...

'பல்'பா இருந்திருக்கோம். அந்த வயசுல எல்லாருமே அப்படித்தான். என் பையன், ஆடிட்டிருந்த பல்லை புடிங்கிட்டு, இந்தாங்க பல்லுன்னு சொன்னான்... என்ன சொல்வீங்க?

புலவன் புலிகேசி said...

உங்க பொண்ணு புத்திசாலிங்க....

மாதேவி said...

:) நல்ல படமும் போட்டு விட்டீர்களே.

anto said...

அழகான பதிவு...எனக்கும் இது போன்ற அநூபவம் உண்டு.அழகான அந்த பள்ளி நாட்களை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி மேடம்!

கிச்சான் said...

சிறு வயது பற்றியோ அல்லது சிறு குழந்தைகள் பற்றியோ .....எழுதுகிறவர்களும் சரி ..படிக்கிறவர்களும் சரி
குழந்தைகளவே மாறிவிடுகின்றனர்

என்னையும் என் ஊராட்சி ஒன்றிய பள்ளிகூடத்துக்கு..

உங்கள் பதிவு அழைத்து சென்று விட்டது..
நன்றி!!

பிரியமுடன்...வசந்த் said...

உன் பல்லை வானம் பார்த்துச்சா?
"அப்படீன்னா"
"வானத்துக்குப் பல்லைக் காட்டினியா?"//

ஹா ஹா ஹா....

பிரின்ஸ் சின்ன குழந்தையில நடந்தது எல்லாம் ஞாபகம் வருது ஆமா...

கார்க்கி said...

ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே ஙே

ஆ.ஞானசேகரன் said...

//அய்யோ நாம இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு வெக்க வெக்கமா வருது!//

அட ஆமாங்க அருணா,...
வெக்க வெக்கமா வருது!!!!!!!!!!!

அன்புடன் அருணா said...

நன்றி KParthasarathi sir!
நன்றி சின்ன அம்மிணி !
எம்.எம்.அப்துல்லா said...
யக்கா, இப்பவும் நீங்க அப்பாவிதான் :)
அப்பாடா! உங்களுக்காவது புரியுதே!
புதுகைத் தென்றல் said...
/ வீட்டுல பல்புகள் சேர்ந்து போச்சு. :)/
விற்பனைக்கு விடுங்க!
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி T.V.Radhakrishnan..
ராமலக்ஷ்மி said...
/ :))! என்னையும் இப்படித்தான் சின்ன வயதில் ஓட்டுவாங்க அண்ணனுங்க./
உங்களையுமா?:(

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/ சரி... சரி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு....நாமதான் எப்போவுமே “ஙே”தானே.../
அது சரி கோபி!

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி கோபிநாத்
நன்றி அண்ணாமலையான்

கண்ணகி said...

தய் எட்டடின்னா குட்டி பதினாறடியல்லோ.....ஙே.....ஙே

அன்புடன் அருணா said...

ராஜன் said...
/ கனவெல்லாம் பலிக்குதேன்னு ஹம்மிங் கேட்டுருக்குமே !/
கேட்டுச்சு! கேட்டுச்சு!

ராஜன் said...

//தண்ணி கூட ஊத்திருக்கேன்னா பாருங்க!// நீங்க ரொம்ப நல்ல நல்லவங்க மேடம்
பாருங்க! உங்களுக்கு இப்போதுதான் தெரியுது!

அன்புடன் அருணா said...

ஷங்கர்.. said...
/ஙே... பழச கிளறிய கோழி..:))/
அதுக்குத்தானே இந்த பதிவே!

அன்புடன் அருணா said...

Thanx for that lovely comment Sri!

வேலன். said...

நம்மைவிட நம் குழந்தைகள் புத்திசாலிகள்...வாழ்க வளமுடன்,வேலன்.

அன்புடன் அருணா said...

நாஞ்சில் பிரதாப் said...
/ஹஹஹஹ ரசிக்கும்படி இருந்தது. இப்ப உள்ள புள்ளைங்ககிட்டருந்து நாம பல விசயங்கள் கத்துக்கலாம் ரொம்ப ஸ்மார்ட்./
ஆமாமா!

நன்றி Rajeswari !
நன்றி V.Radhakrishnan!

அன்புடன் அருணா said...

Maddy said...
/அப்போ நீங்க பெரிய பண்ணையரம்மா ன்னு சொல்லுங்கோ!!! முப்பத்தி ரெண்டு பல்லுக்கு முப்பத்தி ரெண்டு மரம் இல்லெ வளர்ந்திருக்கும்!!! சோ! நீங்க பழ பண்ணையாரம்மா!!/
அதுசரி!நன்றி maddy!

அன்புடன் அருணா said...

ஹேமா said...
/அருணா...சிரிச்சிட்டேன் சத்தமா.உங்களை
விடக் கேவலமா "ஙே"ன்னு இருந்திருக்கேன் நான்.சொன்னா வெட்கம்./
அட பரவாயில்லை சொல்லுங்க ஹேமா!!

அன்புடன் அருணா said...

ஆடுமாடு said...
/ என் பையன், ஆடிட்டிருந்த பல்லை புடிங்கிட்டு, இந்தாங்க பல்லுன்னு சொன்னான்... என்ன சொல்வீங்க?/
என்னா சொல்ல முடியும்? ஙே!

அன்புடன் அருணா said...

நன்றி ஹுஸைனம்மா
நன்றி பா.ராஜாராம்
நன்றி புலவன் புலிகேசி
நன்றி மாதேவி

ராகவன் said...

Dear Aruna,

very nice it is... eendra pozhudhir peridhuvakkum...

anbudan
ragavan

அன்புடன் அருணா said...

நன்றி கிச்சான்,Anto!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ பிரின்ஸ் சின்ன குழந்தையில நடந்தது எல்லாம் ஞாபகம் வருது ஆமா.../
வரவழைக்கத்தானே பதிவே!

அன்புடன் அருணா said...

ஙே!!!!!!!!!!!!!!!நன்றி கார்க்கி!

அன்புடன் அருணா said...

நன்றி ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

கண்ணகி said...
/ தாய் எட்டடின்னா குட்டி பதினாறடியல்லோ.....ஙே.....ஙே/
அட இதுவேறயா?

அன்புடன் அருணா said...

நன்றி ராகவன்! வேலன்!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சுவையான அனுபவம். ஞாபகங்களைக் கிளறியது.
எனது பாட்டனார் பல் விழுந்தால் "கீரி கீரி எனது பல்லை வைத்துக் கொண்டு உனது பல்லைத் தா" என கரையான் புற்றில் போட வேண்டும் என்பார்.
அப்பதான் கூரிய பல் வருமாம்.
முக்கிய குறிப்பு
நான் அறிய அவருக்குப் பல்லே இருந்ததில்லை!!

SUFFIX said...

ஹா ஹா. நானும் இது மாதிரி பல்லை மண்ணில் புதைச்சது உண்டு, அது மாதிரி ஏதாச்சும் பழத்தின் விதையை விழுங்கி விட்டால், அந்த மரம் வயித்துக்குள்ளேயிருந்து முளைச்சிடும் நினைச்சி அழுவாச்சியா இருந்தது ஒரு காலம்...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா