நாளை மட்டுமே
ஆயிரம் இதயங்கள் இடம் மாறலாம்
ஆயிரம் பொய்கள் பேசப் படலாம்
நாளை மட்டுமே
ஆயிரம் பூக்கள் மலரலாம்
ஆயிரம் காதலும் பூக்கலாம்
நாளை மட்டுமே
ஆயிரம் பரிசுகள் கொடுக்கப் படலாம்
ஆயிரம் பரிசுகள் வாங்கவும் படலாம்
இப்படி நாளை மட்டுமே
காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?
நாளை என்ற ஒருநாளுக்காக
காதலி/காதலன் இல்லை என ஏங்காதீர்கள்........
சரியான பாதையில் நீங்கள்!
புவியீர்ப்புக்கு எதிராக செயல்படுவதே பறத்தல்
பறத்தல் எல்லோருக்கும் வசப்படுவதல்ல........
ஈர்ப்பில் சிக்காமல் இறக்கை
விரித்துப் பறந்து பாருங்களேன்....
உணர்வீர்கள் அப்போது.....
வானம் எவ்வளவு பெரியதென்று .............
53 comments:
//புவியீர்ப்புக்கு எதிராக செயல்படுவதே பறத்தல்
பறத்தல் எல்லோருக்கும் வசப்படுவதல்ல........
ஈர்ப்பில் சிக்காமல் இறக்கை
விரித்துப் பறந்து பாருங்களேன்....
உணர்வீர்கள் அப்போது.....
வானம் எவ்வளவு பெரியதென்று .............//
அருமை....
தன்னைதானே ஏமாத்திக்கற பலருக்கு புரிஞ்சா சரி
_________________0___________________
_________________00__________________
________________0000_________________
_______________000000________________
____00_________000000__________00____
_____0000______000000______00000_____
_____000000____0000000___0000000_____
______000000___0000000_0000000_______
_______0000000_000000_0000000________
_________000000_00000_000000_________
_0000_____000000_000_0000__000000000_
__000000000__0000_0_000_000000000____
_____000000000__0_0_0_000000000______
_________0000000000000000____________
______________000_0_0000_____________
____________00000_0__00000___________
___________00_____0______00________
//இப்படி நாளை மட்டுமே
காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?
நாளை என்ற ஒருநாளுக்காக
காதலி/காதலன் இல்லை என ஏங்காதீர்கள்........
சரியான பாதையில் நீங்கள்!//
கலக்கல் வரிகள்...
வாங்க அகல்விளக்கு!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இப்படி நாளை மட்டுமே
காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?]]
கொத்து கொத்தா பூங்கொத்து
இதை மிகவும் அவசியமான பதிவாக உணர்கிறேன்.வாழ்த்துக்கள் மேடம்!
//இப்படி நாளை மட்டுமே
காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?//
ம் இதெல்லாம் எங்க அவுங்க கேக்கப் போறாங்க...
நல்லா இருக்குங்க..:)
சூப்பர்க்கா.. நான் தறேன் உங்களுக்கு பூங்கொத்து :))
வாழ்த்துகள்!
ஆசிரியப்பெருந்தகை.
உங்களுக்கோர் புதிய வந்தனம்.
//ஈர்ப்புக்கு எதிரானது பறத்தல்//
நீங்கள் படித்தீர்களா,கண்டுபிடித்தீர்களா தெரியலை.
ஆனா இது எனக்கு மிக மிக புதிய,புழங்கு விதியாக
அறிமுகமாகியிருக்கிறது.
பூந்தோட்டம் இந்தமுறையும்.
ரொம்ப புகழ்றேனா டீச்சர்.
வழ்த்துக்கள். காமராஜ்
அழகா சொல்லிருக்கீங்க அருணாக்கா. உலகப் பொருளாதரத்தின் சந்தைப்படுத்துதல் எனும் டெக்னிக்கில் இந்தக் காதலர் தினமும் சந்தைப்படுத்தப்படுவதை உணராமல் விட்டில் பூச்சிகளாய் காதலர்கள். இன்னும் அன்னையர் தினம், அப்பா தினம், இத்யாதிகளும்.
கார்க்கி..அமைதி அமைதி :))
பூங்கொத்துங்க ரொம்ப நல்லா வந்திருக்குங்க கவிதை
நாளை என்று மட்டுமில்லாமல் அன்பும் காதலும் உலகில் என்றும் தொடருட்டும்.
பறத்தல் வசப்படும் அன்பு உண்மையானால் அருணா.
நல்லாருக்குங்க டீச்சர்!
அருமையான வரிகள்.
//பறத்தல் எல்லோருக்கும் வசப்படுவதல்ல........
ஈர்ப்பில் சிக்காமல் இறக்கை
விரித்துப் பறந்து பாருங்களேன்....
உணர்வீர்கள் அப்போது.....
வானம் எவ்வளவு பெரியதென்று ............. //
ஆஹா... இதுவல்லவோ உண்மையான வாழ்த்து...
ஈர்ப்பில் சிக்காமல், இறக்கை விரித்து பறந்து இந்த உலகை ஆட்கொள்ளுங்கள்... உலகையே ஆட்கொண்டவுடன், மனம் கவர்ந்தவள் வராமலா இருக்க போகிறாள்... சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் போது, விரும்பும் யாவும் நம்மை தேடி வருமே...
அருணா... பிடியுங்கள் ஒரு பூந்தொட்டியை...
நாளை மட்டுமே (இன்று) காதல்!
சொல்லவேண்டிய கருத்து அக்கா, காதலை சொல்ல அதன் பிரியத்தை பரிமாற 265 நாள் காத்திருக்கவேண்டுமா?
கொமர்சியல் உலகின் தந்திரத்துக்குள் சிக்குவது காதலும்தான் அக்கா.
இன்றைக்கு கொடுத்தால் அது வியாபாரம்
இதயத்தில் கொடுத்தால் அது காதல்.
//வானம் எவ்வளவு பெரியதென்று ...//
நன்றாயிருக்கிறது அருணாக்கா
நன்றி அண்ணாமலையான்!
பூவுக்கு நன்றி ஷங்கர்!
நன்றி சங்கவி!
ரொம்பப் பிடித்தது அன்புடன் அருணா.
நட்புடன் ஜமால் said...
/கொத்து கொத்தா பூங்கொத்து/
வாங்கீட்டேன் ஜமால்.நன்றி!
நன்றி anto!
புலவன் புலிகேசி
/ம் இதெல்லாம் எங்க அவுங்க கேக்கப் போறாங்க.../
அதுவும் சரிதான் புலிகேசி!
நன்றி Karthik !
SanjaiGandhi™ said...
/சூப்பர்க்கா.. நான் தறேன் உங்களுக்கு பூங்கொத்து :))/
வாப்பா கடவுள்...:) வாங்கிட்டேன் பூங்கொத்து!
நன்றி பழமைபேசி!
//ஈர்ப்புக்கு எதிரானது பறத்தல்//
/நீங்கள் படித்தீர்களா,கண்டுபிடித்தீர்களா தெரியலை.
ஆனா இது எனக்கு மிக மிக புதிய,புழங்கு விதியாக
அறிமுகமாகியிருக்கிறது./
எனக்கே தெரிலை.....இயல்பாய் வார்த்தைகள் வந்து விழுந்ததுதான்!
/பூந்தோட்டம் இந்தமுறையும்./
வாங்கியாச்சு பூந்தோட்டம்!
/ரொம்ப புகழ்றேனா டீச்சர்.
வழ்த்துக்கள். காமராஜ்/
ஆமாமா...ரொம்பத்தான் புகழ்கிறீர்கள்!
கார்க்கி said...
/கார்க்கி..அமைதி அமைதி :))/
எதுவும் பொதுக்கூட்டம் ஒண்ணும் நடக்கலியே கார்க்கி! :)
நன்றி நேசமித்ரன் !
ஹேமா said...
/ நாளை என்று மட்டுமில்லாமல் அன்பும் காதலும் உலகில் என்றும் தொடருட்டும்./
அதே! அதே!
உங்கள் பதிவு அருமை
நன்றி பா.ராஜாராம்!
நன்றி இராமசாமி !
கடைசி பத்தி... அருமையா சொல்லியிருக்கீங்க. நல்லா இருக்கு கவிதை.
R.Gopi said...
/அருணா... பிடியுங்கள் ஒரு பூந்தொட்டியை.../
பிடித்துக் கொண்டேன் பூந்தொட்டியை கோபி!
நன்றி மாதேவி, சஹாராவின் புன்னகை!
தினமும் உழுதாலும் சூரியனை தொழுவது பொங்கல் திரு நாள் அன்று தானே....எப்போதும் வெடிக்க பட்டாசு கிடைத்தாலும் கொண்டாடி வெடிப்பது திபாவளி அன்றுதானே..இது காதலை கொண்டாட ஒரு நாள்...மற்றபடி நீங்கள் சொன்னது சரி இந்த ஒரு நாளில் கண்டிப்பாக சரியான காதலை தேர்ந்தெடுத்தல் கடினமே...
ரொம்பவும் நல்லா இருக்குங்க..,
நன்றி அம்பிகா!பேனா மூடி!
மிகவும் அருமையான கவிதை...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
நல்ல கவிதை ப்பா..
( அப்பறம் இந்த சனிக்கிழமை 20 ம் தேதி இரவு 7 மணிக்கு பதிவர் சந்திப்பு வர இயலுமா? )உங்க மெயில் ஐடி இல்லையே என்னிடம்..
அப்பப்பா!!!!!!!!!!!!!!!!!!!!! உங்கள் கவிதை மிகவும் அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பறத்தல் உங்களுக்கு வசப்பட்டுவிட்டதா? கவி வெளியில் தொடருங்கள்!!
u have very different way of saying things :)
அருணா'ன்னாலே அருமை தானே.. அப்புறம் வேற என்ன சொல்ல??
நனறி கமலேஷ்!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/நல்ல கவிதை ப்பா../
நன்றிப்பா!
/அப்பறம் இந்த சனிக்கிழமை 20 ம் தேதி இரவு 7 மணிக்கு பதிவர் சந்திப்பு வர இயலுமா? )உங்க மெயில் ஐடி இல்லையே என்னிடம்../
மெயில் வந்துருக்கே! 20ம் தேதி வர முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.இன்று உங்களிடம் பேசுகிறேன்.
சசிகுமார் said...
/அப்பப்பா!!!!!!!!!!!!!!!!!!!!! உங்கள் கவிதை மிகவும் அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்./
ஆஹா..வாழ்த்துக்கு நன்றி!
கவிதை காதலன் said...
/அருணா'ன்னாலே அருமை தானே.. அப்புறம் வேற என்ன சொல்ல??/
அட! அப்பிடியா???நன்றி!
"ஈர்ப்பில் சிக்காமல் இறக்கை
விரித்துப் பறந்து பாருங்களேன்"
kaadhalil eerppu dhan sakthi.
Epdi viduvadhu,eppadi parappadhu.
padikka azhagaaga irukku
nadaimuraiyil saadhyamaa?
Konjam sollunga
Thank you Sri for your nice encouraging words .
Thanks
தேவன் மாயம் said...
/பறத்தல் உங்களுக்கு வசப்பட்டுவிட்டதா? கவி வெளியில் தொடருங்கள்!!/
நன்றி தேவன்!
KParthasarathi said...
/ kaadhalil eerppu dhan sakthi.
Epdi viduvadhu,eppadi parappadhu.
padikka azhagaaga irukku
nadaimuraiyil saadhyamaa?
Konjam sollunga/
ஈர்ப்பில் இருந்து தப்பித்தல்தானே வித்தை!வித்தைகள் எப்போதும் கற்றுக் கொண்டால் வசப் பட்டுவிடும்!
நன்றி டெக்ஷங்கர் @ TechShankar
நன்றி ராமலக்ஷ்மி
//காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?
நாளை என்ற ஒருநாளுக்காக
காதலி/காதலன் இல்லை என ஏங்காதீர்கள்........
சரியான பாதையில் நீங்கள்!//
எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லம் எழுத முடிகிறது, அருமையான வரிகள் அனைத்தும்
ரொம்ப நன்றி ஆதிரை!
பிடிங்க பூங்கொத்தை,அழகா இருக்கா?everlasting flowers -அக்கா.இன்று தான் அன்புடன் அருணாவை பார்த்தேன்,எதை விடுவது,எதை பார்ப்பதுன்னு தெரியலை,அத்தனையும் வாசிக்க வேண்டும். அருமை.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா