நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, February 8, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்--2

"என்னப்பா...........நியு காலனியிலிருந்து ஹோலி க்ராஸ் போறதுக்கா 60 ரூபா....பார்த்துக் கேளுப்பா.."
புதுசா ரிக்க்ஷாலே போறீங்களாம்மா?...வழக்கமா கேக்கறதுதாம்மா...எதிர்காத்துலே அழுத்த வேண்டாமா????
இப்படி ரிக்க்ஷாலே ஏறும் போதெல்லாம்

"மனுஷன் மனுஷனை இழுத்துட்டுப் போற வண்டிலே ஏர்றது எனக்குப் பிடிக்கறதில்லை அதனாலே ரிக்க்ஷாலே ஏறாதீங்க" அப்படீன்னு அப்பா சொல்றதும்,

" அப்புறம் இதுதான்னு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்ட அவங்க இப்பிடி எல்லாரும் நினைச்சா எப்பிடிப்பா சாப்பிட முடியும்னு" அவள் சொல்றதும் நினைவு விளிம்பில் எட்டிப் பார்க்காமல் போனதில்லை. கொஞ்சம் குற்ற உணர்வோடுதான் அவள் உட்கார்ந்து போவாள் .
"அரிசி பருப்பு எல்லாம் வெலையேறிப் போச்சும்மா.."
இவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்

"எல்லாரும் வண்டிலே மோட்டார் வச்சுக்கறாங்களே? நீயும் வச்சுக்க வேண்டியதுதானே"
ஆமாம்மா அதுக்குன்னு தனியா பணம் புரட்டணுமே.....தினம் கிடைக்கிறது வாயுக்கும் வயிற்றுக்கும்தான் பத்தறது..இதுலே எங்கிட்டு மோட்டார் வைக்கிறது?"
அநியாயமா பணம் கேக்குறதுக்கு நியாயம் சொல்வது போலவேயிருந்தது அவன் பேச்சு.
வீட்டு முனை வந்ததும், "இங்கே இறங்கிக்கோங்கம்மா......மேடாயிருக்கு"என்றான்
"60 ரூபா கேக்குறே....இப்பிடி பாதிலே இறக்கி விட்டா எப்பிடி? "
"ரெண்டு எட்டுதாம்மா....இறங்கிக்கோங்க..."
"வீட்டுக்குக் கொண்டு விட்டா 60 தரேன்...இங்கே இறங்கிக்கறதுன்னா 50தான் தருவேன்."
"அட என்னம்மா இப்பிடிப் பத்து ரூபாய்க்குப் பிரச்சினை பண்றே?"முணுமுணுத்தவாறே....வண்டியை நிறுத்தினான்........
"சொல்லச் சொல்ல இப்பிடி வம்பு பண்ணறே...பாதிலேயே இறக்கி விடறியே??? உங்களையெல்லாம் போலீஸ்லேதான் புடிச்சுக் கொடுக்கணும்..."என்றவாறு 50 ரூபயைக் கொடுத்து விட்டு விடு விடுவென்று நடந்தாள்..
"எம்மா கட்டுபடியாகாதும்மா...... "என்பதைக் காதில் வாங்காமல் நடந்து விட்டாள்...
கோபத்துடனே நடந்தாள்.

வீட்டு முன்னே ஒரே கூட்டம்...என்ன ஏதோ என்று பதறியபடி போனால்..........மகன் நடுவில் ஆஆஆஆன்னு அழுது கொண்டிருக்க பக்கத்து வீடு எதிர் வீடுன்னு எல்லாரும் அங்கேதான்.....
"அய்யோ எம்புள்ளைக்கு என்னாச்சு?"
என்னான்னே தெரிலை ரவியம்மா.....திடீர்னு கீழே விழுந்தான் வாயில் வேற நுரையாய் வருது...."
"அய்யோ...ரவீ, ரவீ என்னப்பா செய்யுது? கண்ணைத் தொறந்து பாருப்பா..."
"எதுனா பூச்சி பொட்டு கடிச்சுருச்சோ...?"
யாராவது தண்ணி கொண்டாங்க"
"யாராவது ஆட்டோ கொண்டாங்க"
ஆளுக்கொரு பக்கம் கத்தக் கத்த பதற்றம் அதிகமாகிக் கொண்டே போயிற்று.
"நகருங்க..நகருங்க...அய்யே கொஞ்சம் காற்று வரவிடும்மா.....தள்ளிக்க"
"அய்யே பாம்பு கடிச்சிருக்கும்மா...சீக்கிரம் இந்தா காலைப் பிடி...தூக்கு......தள்ளுங்க...நீ ஏறிக்கம்மா....எம்மா நீயும் துணைக்கு ஏறிக்கோம்மா........"என்றவாறே நொடியில் வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரி.....டாக்டர்....மருந்து...மாத்திரை...ஊசி..........வாங்கி...........அவ்வளவு ஆர்ப்பாட்டமும் முடிந்து 5 நிமிடம் லேட்டாயிருந்தாக் கூடப் பிள்ளையைப் பார்த்திருக்க முடியாது"ன்னு டாக்டர் சொல்லி நிமிரும் போது கண்ணிலிருந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.......

கொஞ்சம் நிதானத்துக்கு வந்து நிமிர்ந்த போது.............அந்த ரிக்க்ஷாக்காரன் நின்று கொண்டிருந்தான்"இவன் என்ன பண்றான் இங்கே?"என்ற கேள்வியோடு பக்கத்து வீட்டம்மாவிடம் கேட்ட போது " அட இவனில்லைன்னா புள்ளை இல்லே இன்னிக்கு புள்ளையை அள்ளி வண்டியில் போட்டுச் சரியான நேரத்துக் கொண்டு வந்து சேர்த்தது இவந்தான்......... பணம் கொடுத்து அனுப்பு" என்றாள்.

கொஞ்சம் தயக்கத்தோட..."ரொம்ப நன்றிப்பா.இந்தா இதை வச்சுக்கோ" என்றாள்
"அடப் போம்மா பிள்ளை உயிருக்குப் பயமில்லையே..பொழைச்சுக்கிச்சா? அதான் முக்கியம்"என்றவாறு பளிச் சிரிப்புடன் வெளியேறினான்.........


39 comments:

ஆ.ஞானசேகரன் said...

அருணா,... கலக்கிட்டிங்க போங்க...

அன்பே சிவம்தான் பாருங்க.....
வாழ்த்துகள்

காமராஜ் said...

அருணா,
ரொம்ப கலங்கடிச்சிட்டீங்க.
ஒரு சிறுகதையை அப்டியே சுருங்கச்சொல்ற சொற்கட்டு நிறைந்ததிந்த பதிவு.எனக்கும் ரொம்ப நாளாச்சு ரிக்சா ஏறி. அந்த அப்பா சொன்ன அதே காரணம்தான்.மனசுகேக்கல அருணா.
இந்த மாதிரிச்சனங்கள் எல்லோரிடத்திலும் இப்படியொரு கதை இருக்கும்.அப்படிக்கதை இல்லாட்டி அவனும் யாரையாவது ஏமாற்றி வசதியாகிவிடுவான்.மண்ணெண்னெய் விற்கும் ராமரண்ணாச்சி இன்னும் அதே அகலக்கேரியர் சைக்கிளிலோடு சுத்துப்பட்டியெல்லாம் எதுகாத்தில் போராடுகிறார்.
இந்த ஊரில் எத்தனை மேனேஜர் ஓனராகிருக்காங்க,எத்தனை ற்றைவர் பல கார்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள்.எத்தனை டீமாஸ்டர்கள் ஓட்டல் அதிபரானார்கள்,எத்தனை உதவியாளர்கள் தீப்பெட்டி கமிஷன் அதிபரானார்கள் அவர்களிடம் வெரும் உழைப்பு மட்டுமில்லை கூட ஏதோ வேறு எதோ இருந்தது.

தெய்வம் 'உண்மை' என்று தானறிதல் வேண்டும். இந்த நம்பிக்கைகள் தான் இப்போ நிறைய்யத்தேவைப்படுகிறது.

அதை இந்தப்பதிவு சொல்கிறது.

புலவன் புலிகேசி said...

அருணா நீங்களும் என்னைப் போலத்தானா? மனிதத்தில் கடவுள் தேடும் ரகமா...வருங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுளை கண்டறிந்து அரக்க குணங்களை அழிப்போம்..

pudugaithendral said...

மனிதம் தான் தெய்வம்

Paleo God said...

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

இந்தாங்க புடிங்க ஒரு நந்தவனம்..:))

அருமை..:))

na.jothi said...

பூங்கொத்து வாங்கிக்குங்க உங்களுக்கும்
ரிக்க்ஷாக்காரருக்கும்

na.jothi said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

ஷங்கருக்கு ஒரு ரிப்பீட்டேய்

Rajeswari said...

very nice

KParthasarathi said...

Wow.A very nice story well narrated.Thanks Aruna

ஹுஸைனம்மா said...

:-D

R.Gopi said...

அருணா... சமீபத்தில் இவ்வளவு நெகிழ்வான எழுத்து படிக்க வில்லை...

மனித நேயம் பணம் பார்த்து வருவதில்லை... இன்னமும், நிறைய “மனிதர்கள்” இருப்பதால் “மனித நேயம்” தழைக்கிறது... அந்த நேயத்தை பணம் என்றும் விலை கொடுத்து வாங்க முடியாது....

படித்து மனசு கனமானது உண்மை....

உங்கள் இருவருக்கும் ஷங்கர் சொன்னது போல் ஒரு “நந்தவனம்” பரிசாக........

sathishsangkavi.blogspot.com said...

அருணா., கலக்கிட்டிங்க...

சந்தனமுல்லை said...

இந்த இடுகையும் காமராஜ் அண்ணாவின் பின்னூட்டமும் - கலங்க வைக்கின்றன...மனதில் ஒட்டிக்கொண்டன!

sri said...

your posts always capture the reality, practicality and humanity together. Lovely writing. I always swing between choosing to help or not, for example I try hard not to bargain and give whatever they ask, but more often they take such people for granted :) crazy world! :)

கோபிநாத் said...

அருமை..;)

Karthik said...

Superb one ma'am! :)

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/அருணா,
ரொம்ப கலங்கடிச்சிட்டீங்க.
ஒரு சிறுகதையை அப்டியே சுருங்கச்சொல்ற சொற்கட்டு நிறைந்ததிந்த பதிவு/
இவ்வ்ளோ பாராட்டுக்கு உரியதுதானா?தெரியவில்லை....நன்றி காமராஜ்!

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/வருங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுளை கண்டறிந்து அரக்க குணங்களை அழிப்போம்../
கண்டிப்பா முயற்சிப்போம் புலிகேசி!நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி புதுகைத் தென்றல், ஹுஸைனம்மா,ராஜேஸ்ரி,பார்த்தசாரதி சார்!

மாதேவி said...

"மனிதம்" மனத்தைத் தொட்டது.

ஜீவன்சிவம் said...

யதார்த்தமான கதை. கடவுளை கண்டுகொண்டேன்

அண்ணாமலையான் said...

பிரமாதம்

அன்புடன் அருணா said...

ஷங்கர்.. said...
/ இந்தாங்க புடிங்க ஒரு நந்தவனம்..:))/

ஜோதி said...
/பூங்கொத்து வாங்கிக்குங்க உங்களுக்கும்
ரிக்க்ஷாக்காரருக்கும்/
கார்க்கி said...
/ஷங்கருக்கு ஒரு ரிப்பீட்டேய்/
ரெண்டு நந்தவனமும், ஒரு பூங்கொததும் வாங்கியாச்சு ஷங்கர்,கார்க்கி,ஜோதி!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் இப்படித்தான் கற்றுகொள்கிறேன்...

பிரின்ஸ் உங்ககிட்ட படிக்கிற பசங்க லக்கி...

ஹேமா said...

மனிதம் தேடவேண்டாம் எங்கேயும்.
ஏழ்மைக்குள் !
அருணா கை குடுங்கப்பா.

Sanjai Gandhi said...

செம டச்சிங் அக்கா. க்ரேட்..

அன்புடன் அருணா said...

நன்றி Sangkavi
நன்றி சந்தனமுல்லை

அன்புடன் அருணா said...

Srivats said...
/I always swing between choosing to help or not, for example I try hard not to bargain and give whatever they ask, but more often they take such people for granted :) crazy world! :)/
Really crazy world Sri! Even I've experienced the same.Anyways thanx for the nice comment!

அன்புடன் அருணா said...

Thanx Gobinath and Karthik!

அன்புடன் அருணா said...

நன்றி மாதேவி,ஜீவன்சிவம்,அண்ணாமலையான் `!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ம்ம் இப்படித்தான் கற்றுகொள்கிறேன்...
பிரின்ஸ் உங்ககிட்ட படிக்கிற பசங்க லக்கி.../
அய்யோ ரொம்ப புகழாதீங்க வசந்த்!

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி ஹேமா!இந்தாங்க கையைப் பிடிங்க!

அன்புடன் அருணா said...

வாப்பா சஞ்செய்!புடிச்சிருந்தா சரி!

மந்திரன் said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை ....
எல்லாரும் என்னிடம் இருந்து உங்கள் பாராட்டை திருடி விட்டார்கள் என்றே நெனைக்கிறேன் ..
தொடருங்கள் ..
தொடர்ந்து வருவோம் ..

கௌதமன் said...

பூங்கொத்து

அன்புடன் அருணா said...

மந்திரன் said...
/ என்ன சொல்வது என்று தெரியவில்லை ....
எல்லாரும் என்னிடம் இருந்து உங்கள் பாராட்டை /
திருடி விட்டார்கள் என்றே நெனைக்கிறேன் ./புதுவிதமான பாராட்டு மந்திரன்!

அன்புடன் அருணா said...

kggouthaman said...
/பூங்கொத்து/
வாங்கீட்டேன்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா