கொஞ்சம் ஆயாசமாக இருந்தது...எழுதுவதற்கு எதுவும் இல்லாதது போல ஒரு வெறுமை.அல்லது எழுதப் பிடிக்காமல்போனது.............
காரணங்கள்........"பிரபலம் ஆகவேண்டும் என்றும், வித்தியாசமாக எழுதுகிறேன் என்றும்,அடுத்தவரை நோகடிக்கும் எழுத்துக்கள், திருட்டு போகும் எழுத்துக்கள்,திணிக்கப் படும் கருத்துக்கள், சபை நாகரீகம் மீறி எழுதுவது, பொதுவில் படிக்க முடியாதவை என இவற்றுள் எதுவாகவும், இவை எல்லாமாகவுமாகவும் கூட இருக்கலாம். இவை எழுத்து மீது ஒரு எல்லையில்லா வெறுப்பை ஏற்படுத்தி விட்டது போல......
கொஞ்ச நாள் எழுதாமலிருக்கலாம்.........நான் என்ன செய்கிறேன் என்பதை விட....நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதே என்னை நிறைக்கும் அதிர்வுகளாகிப் போனதில் மெல்லிய அதிர்ச்சிதான். அதுவே நானென்ற அகங்காரத்தின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் அல்லது அதுவே சாதாரண சம்பிரதாயங்களின் ....ஆரம்பமாக இருந்திருக்கலாம்
மனதிற்குள்ளேயான எனக்கும் எழுத்துக்கும் இடையே நடந்த விரிசல்களில் யார் ஜெயிக்கப் போவது?அல்லது இந்தப் பிணக்கு தொடருமா தெரியாது.......எவ்வளவு நாள்......????அதுவும் தெரியாது.
புத்தகக் கண்காட்சி பற்றிப் படித்துப் படித்து போக முடியாத வெறுப்பினாலோ என்னவோ கோபமாக வருகிறது.இங்கே போக முடிந்த புத்தக நிலையத்தில் பார்த்த ஆங்கில,ஹிந்தி புத்தகங்களின் மீது எரிச்சலாக வந்தது.
எதற்கும் இருக்கட்டும் படிக்கலாம் என்று எடுத்து வைத்த புத்தகம் திறக்கப்படாமல் கிடந்தது...........தேநீர் தொடப்படாமல் ஆறிக் கொண்டிருந்தது......மனதும்தான்.
தாங்க முடியாத குளிரின் அதிகாலை கண்ட வெயில் போல் நம்பிக்கையளிக்கிறது சிற்சில நிகழ்வுகள்.............இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
47 comments:
நம்பிக்கைதானே வாழ்க்கை மனம் தளராதீர்கள் எழுதுங்கள்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! அன்புடன் அருணா.
\\மாதேவி said...
நம்பிக்கைதானே வாழ்க்கை மனம் தளராதீர்கள் எழுதுங்கள்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! அன்புடன் அருணா.//
அதே அதே!இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
ஹா ஹா ஹா ஹா இப்போதைக்கு இவ்ளோதான்.. நீங்க தொடர்ந்து எழுதுனா மீதி..
பொங்கலோ பொங்கல்...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
happy
pongal
மனதை இலேசாக்குங்கள் அருணா.எதையும் பெரிதாக நினைக்கவேணாம்.சுலபமாய்ப் பாருங்கள்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! :))
இந்தப்பதிவை அருணாவுக்கானதாக நினைக்கவில்லை.
எழுதுகிற குறிப்பாக, வலையெழுதுகிற எல்லோரது இடைவெளியை
பிரதிநிதித்துவப்படுத்துவதான பதிவு இது.அந்த மகாகவிகூட கொஞ்ச காலம்
எழுத்துடன் கோபித்துக்கொண்டு தனித்திருந்தான். பின்னால் 'வராய் மணிப்பெயர் காதலி' என மீளத்தொடங்கினான். பிரிந்தவர் கூடிய வேகத்துடன். இதையே எங்கள் அன்பு ஆசான் எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமியும் சொல்லியிருக்கிறார். தினம் காலையில் எழுந்து முகம் கழுவுகிற மாதிரி எழுதவே முடியாது. இது முழுக்க முழுக்க மனசு சம்பந்தப்பட்டது. இந்தப்பதிவை ஆசிரியர் இன்னும் கூடுதலாக எழுதியிருக்கலாம்.
அப்புறம் அருணா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
காமராஜின் கருத்தை நானும் சொல்லிக்கிறேன்.
பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...
அருணா மேடம்...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
என் பொங்கல் சிறப்பு பதிவை இங்கே படியுங்கள்....
பொங்கலோ பொங்கல்
http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html
எல்லாவற்றையும் பற்றி நினைத்து கவலைப்படாமல், தொடர்ந்து எழுதுங்கள்.... படிக்க நாங்கள் காத்திருக்கிறோமே.....
இனிய பொங்கல் தின வாழ்த்துகள் அருணா
என்ன ஆச்சு மேடம்?
கூல் டவுன் கூல் டவுன்
பொங்கல் வாழ்த்துகள்...
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
என்ன ஆச்சு டீச்சர்? எது ஆனாலும் எழுத்த விட்டுராதீங்க........... நாம இருக்கோம்..........
தைத்திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய நலன்கள் அனைத்தையும் கொண்டுவரட்டும்
என் வாழ்த்துக்கள்.....:)
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
cool down aruna madam :))
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்!!
மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதைக் கட்டிப்போட்டு வழிக்குக் கொண்டுவர உங்களால் முடியும். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் எழுத்திற்கு மேலும் பல சுவையான விடயங்கள் உண்டல்லவா? பிடித்ததைப் பற்றிக் கொள்ளுங்கள்.
தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
நன்றி மாதேவி,முத்துலெட்சுமி/muthuletchumi
நம்பிக்கையளிப்புக்கு!
நன்றி அண்ணாமலையான்
நன்றி ramasamy kannan
நன்றி வினோத்கெளதம்
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி கலகலப்ரியா
நன்றி Priya
நன்றி கோபிநாத்
என்ன ஆச்சு அருணா? ஏன் இந்த விரக்தி.? மனதை மாற்ற முயலுங்கள். நீங்கள் எழுதுவதால் பெறும் திருப்தி உங்களுடையது. அதை யாரும் திருட முடியாது.
விரைந்து வாருங்கள். பூங்கொத்து வாங்க நான் காத்திருக்கிறேன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
எழுதுவது என்பது அத்தனை எளிதல்ல எனும் அழகிய பாடம்.
நானும் அவ்வப்போது எழுத்துக்கு சற்று இடைவெளி விடுவது உண்டு.
hi aruna.. long time no comments.. how r u..! happy pongal..!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
காமராஜ் said..../தினம் காலையில் எழுந்து முகம் கழுவுகிற மாதிரி எழுதவே முடியாது. இது முழுக்க முழுக்க மனசு சம்பந்தப்பட்டது./
புரிதலுக்கு நன்றி காமராஜ்.
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி Sangkavi .
நன்றி R.Gopi
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி திகழ்
நன்றி மாதவராஜ்
நன்றி Gowripriya
நன்றி ஹுஸைனம்மா
R.Gopi said.../ எல்லாவற்றையும் பற்றி நினைத்து கவலைப்படாமல், தொடர்ந்து எழுதுங்கள்.... படிக்க நாங்கள் காத்திருக்கிறோமே...../
நன்றி கோபி!
கார்க்கி said...
/என்ன ஆச்சு மேடம்?
கூல் டவுன் கூல் டவுன்/
Ok Ok karkki.Thanx!
காற்றில் எந்தன் கீதம் said...
/என்ன ஆச்சு டீச்சர்? எது ஆனாலும் எழுத்த விட்டுராதீங்க........... நாம இருக்கோம்........../
நன்றி காற்றில் எந்தன் கீதம்!
ஜெஸ்வந்தி said...
/என்ன ஆச்சு அருணா? ஏன் இந்த விரக்தி.? மனதை மாற்ற முயலுங்கள். நீங்கள் எழுதுவதால் பெறும் திருப்தி உங்களுடையது. அதை யாரும் திருட முடியாது./
நன்றி ஜெஸ்வந்தி, நீங்கள் சொல்வது உண்மைதான்
Dr.எம்.கே.முருகானந்தன் said...
/மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதைக் கட்டிப்போட்டு வழிக்குக் கொண்டுவர உங்களால் முடியும்/
நன்றி முருகானந்தன் சார்.
சக்தியின் மனம் said...
/hi aruna.. long time no comments.. how r u..! /
Fine thank you! I' a bit busy.'ll comment soon!
நன்றி இயற்கை !
அருணா, என்னது இது?
இப்ப மனது வெறுமையாக இருந்த்தால் புதிதாக ஆரம்பியுங்கள் :))
வேறு தளம், வேறு வடிவம்.. அதுக்கு ஏன் எழுதாமல் இருக்கணும் ..
//மயில் said...
அருணா, என்னது இது?
இப்ப மனது வெறுமையாக இருந்த்தால் புதிதாக ஆரம்பியுங்கள் :))
வேறு தளம், வேறு வடிவம்.. அதுக்கு ஏன் எழுதாமல் இருக்கணும் ..//
அதே அதே. தோணினது எல்லாத்தையும் எழுதணும் அப்படின்ற அவசியம் இல்லைதான். ஆனா எழுதறது மூலம் கிடைக்கும் ஏதோ ஒண்ணு அதை ஏன் இழக்கணும் .
You wont know, just how much your words inspire us, me. I love ur writing so please dont stop doing tht. I too felt a void these days but I am carrying on, as suggested by you, tough times would come and go but we should last :) Happy pongal. May you visit the next book exhibition and buy to ur hearts content.
p.s enna maari books pidikkumnu solli erundha vaangi anupi eruppen :) if u want something please ask :) more than happy to be at ur service.
அன்புக்கு நன்றி மயில் & தாரணி !
Thank you Sri for those kind words and sure I'll atleast try to keep on writing!Thanx again for the blessings to visit book exhibition.
/if u want something please ask :) more than happy to be at ur service./
I'm wordless for these words.If there is one thing that keeps me working besides my own obvious passion is these kind words.Thank You!
பூங்கொத்து தருகின்றோம். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வெளிப்படுத்துதல் என்பது தவிற்க முடியாத ஒன்று.ஒரு விஷயம் சொல்வார்கள்...
நிறைய படித்து விட்டு எழுதாமல் இருப்பது மலச்சிக்கல் போன்றது.ஒன்றுமே படிக்காமல் எழுத முற்படுவது வயிற்று போக்கை போன்றது.இரண்டுமே நலத்திற்கு கேடானது.
தனிச்சை நிகழ்வுகள் தவிற்க முடியாது ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து.ஆதலால் உங்களால் எழுதாமல் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து(ம்),(வேண்டுகோளும்)
வாழ்த்துக்கள் தோழர்.அருணா...
இந்த நிலையும் கடந்து போகும் மேடம்!
எனக்கும் இப்படிதான் தோணுது மேம். எழுதவே தோணல. :(
ஜெய்ப்பூர் லிட்டரரி பெஸ்டிவல் தொடங்கிடுச்சில்ல?
//கொஞ்ச நாள் எழுதாமலிருக்கலாம்.........நான் என்ன செய்கிறேன் என்பதை விட....நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதே என்னை நிறைக்கும் அதிர்வுகளாகிப் போனதில் மெல்லிய அதிர்ச்சிதான். அதுவே நானென்ற அகங்காரத்தின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் அல்லது அதுவே சாதாரண சம்பிரதாயங்களின் ....ஆரம்பமாக இருந்திருக்கலாம்//
எல்லோருக்கும் நேரும் மன பகிரல்.
அடுத்த பொங்கள் வாழ்த்துக்கள்!
:-)
பூங்கொத்துக்கு நன்றி வேலன்!
Anto said....
/ஆதலால் உங்களால் எழுதாமல் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து(ம்),/
நானே அப்படித்தான் நினைக்கிறேன் Anto !கருத்துக்கு நன்றி!
இந்த நிலையும் கடந்து போகவேண்டும் ந்பதுதான் என் ஆசையும் அமித்தம்மா!
Karthik said...
/எனக்கும் இப்படிதான் தோணுது மேம். எழுதவே தோணல. :(/
அடடா....எழுதுப்பா! அதான் படிக்க நாங்க இருக்கோமே!
/ஜெய்ப்பூர் லிட்டரரி பெஸ்டிவல் தொடங்கிடுச்சில்ல?/
ஆமாமா....தொடங்கியாச்சு கோலாகலமா!
பா.ராஜாராம் said...
/ எல்லோருக்கும் நேரும் மன பகிரல்./
ம்ம்ம் அதுவே!
நன்றி பா.ராஜாராம்!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா